shadow

ரூ.100 கோடி செலவில் தமிழன்னை சிலை வைக்கும் திட்டம் என்ன ஆனது?

கடந்த 2013ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலைக்கு இணையாக தமிழ் அன்னைக்கு மதுரரயில் ரூ. 100 கோடியில் சிலை அமைக்கும் திட்டம் ஒன்றை அறிவித்தார். ஆனால் ஜெயலலிதா அறிவித்து 5 ஆண்டுகளாகியும் தமிழ் அன்னை சிலை அமைக்கும் பணிகள் இன்னும் தொடங்கவில்லை. இதுகுறித்து தமிழ் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் மக்களுக்கு தேவையான பல திட்டங்கள் நிதி இல்லாததால் கிடப்பில் இருக்கும் நிலையில் ரூ.100 கோடி தமிழன்னை சிலைக்கு செலவு செய்வது தேவைதானா? என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து தமிழ் வளர்ச்சித்துறை க.பாண்டியராஜன் கூறியபோது, தமிழன்னை சிலிஅ வைக்கும் திட்டத்தை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அரசு கைவிட்டுவிட்டதாகவும், இருப்பினும் அதற்கு மாற்றாக உலக அளவில் பேசப்படும் வகையில் தமிழன்னைக்கு சிலை வைக்க வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார்

Leave a Reply