shadow

ஜெயலலிதா வீட்டில் குவியும் பொதுமக்கள். நினைவு இல்லம் ஆகுமா ‘வேதா இல்லம்’

veda-nilayamமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள் இன்று மூன்றாவது நாளாக தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். நினைவஞ்சலி செலுத்த வரும் பொதுமக்களுக்கு அதிமுகவினர் உணவு, தண்ணீர் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தையும் பார்க்க பொதுமக்கள் அதிகளவில் குவிந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஜெயலலிதா வீடான ‘வேதா இல்லத்தின்’ வாசற்படி வரை தற்போது பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கூட்டம் கூட்டமாக வரும் அவர்கள் ஜெயலலிதாவின் வீட்டை வணங்கி செல்வதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா இல்லம்’ வீட்டை நினைவு இல்லமாக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகின்றனர். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்பட பலர் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளனர். எனவே இதுகுறித்து ஆலோசிப்பதற்காக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இன்று சசிகலாவை நேரில் சந்தித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. எந்த நேரமும் ஜெயலலிதாவின் ‘வேதா இல்லம்’ அரசுடைமையாக்கப்பட்டு நினைவு இல்லமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply