shadow

cricketஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளை பெற்ற இந்திய அணி இன்று பெர்த் நகரில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோதி வருகிறது.

டாஸ் வென்ற மேற்கிந்திய அணி கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இந்திய அணியின் அபார பந்து வீச்சு காரணமாக மேற்கிந்திய அணி பேட்ஸ்மேன்கள் திணறியபடி ஆடி வருகின்றனர். அந்த அணியின் நான்கு முக்கிய விக்கெட்டுக்கள் சொற்ப ரன்களுக்கு விழுந்துவிட்டது. சற்று முன்பு வரை மேற்கிந்திய தீவுகள் அணி 11 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 42 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

ஸ்மித் 6 ரன்களும், கெய்லே 21 ரன்களும், சாமுவேல் 2 ரன்களும், ராம்தின் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆகியுள்ளனர். இந்திய அணியி தரப்பில் ஷமி 2 விக்கெட்டுக்களையும் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். ஒரு விக்கெட் ரன் அவுட் முறையில் விழுந்துள்ளது.

மாலை 3 மணி நிலவரப்படி மேற்கிந்திய தீவுகள் அணி 44.2 ஓவர்களில் 182 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்துவிடது. கேப்டன் ஹோல்டர் 57 ரன்களும், ஷமி 26 ரன்களும் எடுத்துள்ளனர். வெற்றி பெற 183 ரன்களே தேவை என்ற நிலையில் களத்தில் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் தவான் ஆகியோர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். மேலும் விரோத் கோஹ்லி 33 ரன்களிலும், ரஹானே 14 ரன்களிலும், சுரேஷ் ரெய்னா 22 ரன்களிலும் அவுட் ஆனதால் போட்டி டென்ஷன் ஆக மாறியது. இந்திய அணி ஒரு கட்டத்தில் ஐந்து முக்கிய விக்கெட்டுக்களை இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இந்நிலையில் களமிறங்கிய கேப்டன் தோனி, மிகவும் பொறுப்புடன் விளையாடி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். தோனி விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இந்த உலகக்கோப்பை போட்டியில் விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி நடை போட்டு 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply