மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய வெற்றியை மழை தடுக்குமா?

cricketமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் மழை பெறும் அபாயம் இருப்பதால் இந்தியாவின் வெற்றியை மழை தடுத்துவிடுமோ என்ற அச்சமும் நிலவி வருகிறது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 500 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளதை அடுத்து முதல் இன்னிங்ஸில் 196 ரன்கள் மட்டுமே எடுத்த மேற்கிந்திய தீவுகள் அணி நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

மழை காரணமாக தாமதமாக ஆரம்பித்த இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் அணி 15.5 ஓவர்களில் 48 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. இன்று ஒருநாள் மீதிமிருக்கும் நிலையில் அடுத்த ஆறு விக்கெட்டுக்களை இந்திய அணி இன்றுக்குள் கைப்பற்றினால் இன்னொரு இன்னிங்ஸ் வெற்றி இந்திய அணிக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *