shadow

weekly rasipalan

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

மனதில் தர்ம சிந்தனைகள் மேலோங்கும். பொருளாதாரத்தில் இருந்து வந்த சிரமங்கள் குறையும். உங்கள் செயல்கள் அனைத்தும் வெற்றி அடையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். அனாவசியப் பயணங்களைத் தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்கள் கடமை தவறாமல் உழைப்பார்கள். வேலைகளை உடனுக்குடன் முடித்து நற்பெயரெடுப்பார்கள். வியாபாரிகளைத் தேடி பணம் வரும். கூடுதலாக உழைத்து வருமானத்தைப் பெருக்குவீர்கள். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

அரசியல்வாதிகளுக்கு இடையிடையே சிறு பிரச்னைகள் தோன்றும். அதனால் கட்சித் தலைமையிடம் அனாவசிய வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். கலைத்துறையினர் மனதில் புதிய நம்பிக்கைகள் பளிச்சிடும். தொழிலில் ஆர்வத்துடன் செயல்பட்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு இருப்பார்கள். இருப்பினும் மனதில் காரணமில்லாமல் குழப்பத்தோடு இருப்பார்கள். மாணவமணிகள் கல்வியில் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 10,12.

சந்திராஷ்டமம்: இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். எதிலும் நிதானமாகச் செயல்படவும். எவரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வருமானத்தை மீறி அதிக செலவுகள் செய்ய நேரிடும். பயணங்களால் அனுகூலமான திருப்பங்களுண்டு. அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்.

உத்யோகஸ்தர்களுக்கு அலைச்சல்களும் கவலைகளும் கூடும். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். உழைப்பிற்கேற்ற வருமானம் வரும். வியாபாரிகள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கூட்டாளிகளே போட்டியாக இருப்பார்கள். விவசாயிகளுக்கு கொள்முதல் சற்று மந்தமாக இருக்கும். கால்நடைகளின் பராமரிப்புச் செலவுகள் கூடும்.

அரசியல்வாதிகள் பேச்சில் கட்டுப்பாட்டை மேற்கொள்ளவும். பயணங்களால் செல்வாக்கு உயரும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் செய்வதில் தடைகள் தோன்றும். எவரிடமும் வெளிப்படையாகப் பழக வேணடாம். பெண்மணிகள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு பெறுவர். உடல்நலத்தில் அக்கறை செலுத்துவர். மாணவமணிகள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். பெற்றோரின் ஆதரவு உற்சாகம் தரும்.

பரிகாரம்: “நமசிவாய’ என்று ஜபித்துக் கொண்டே சிவபெருமானை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 11,12.

சந்திராஷ்டமம்: இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

யோசிக்காமல் வாக்கு கொடுப்பதையோ, ஜாமீன் போடுவதையோ தவிர்க்கவும். நேர்வழியில் செய்யும் காரியங்கள் மட்டுமே வெற்றியைத் தரும். பெற்றோருடன் சிறு மனக்கசப்புகள் உண்டாகலாம். பொருளாதார நிலைமை சீராக இருந்தாலும் சிறு விரயங்களும் இருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். செய்யும் வேலைகளில் சிறு குறைகளும் உண்டாகும். வியாபாரிகள் எதிலும் கருத்துடன் செயல்பட்டால் வரவில் சங்கடம் இராது. கணக்கு வழக்குகளில் கவனம் தேவை. விவசாயிகளுக்கு மகசூல் குறையும். கடன்கள் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

அரசியல்வாதிகளின் செயல்கள் விமர்சனங்களுக்கு உள்ளாகும். கட்சி மேலிடத்திடம் கவனமாக நடந்து கொள்ளவும். கலைத்துறையினர் உழைப்புக்குத் தகுந்த பாராட்டுகளைப் பெறுவார்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகள் மதிப்பெண் பெற அதிகம் உழைக்க வேண்டும். படிப்பில் உற்சாகம் காட்டுவீர்கள்.

பரிகாரம்: அம்பாள் தரிசனம் உகந்தது.

அனுகூலமான தினங்கள்: 10,11.

சந்திராஷ்டமம்: இல்லை.

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவையான பொருள் வரவு இருக்கும். தடை கற்களைப் படிகற்களாக மாற்றி செயல்களில் வெற்றி காண்பீர்கள். எதிரிகள் ஒதுங்கி இருப்பர். மதிப்பு மரியாதைக்கு குறைவிருக்காது. உறவினர்கள் உங்கள் உதவியை நாடுவர்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெறுவர். மனதை அரித்து வந்த பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவர். புதிய சந்தைகளை நாடிச்செல்வர். விவசாயிகள் வயல் வரப்பு பிரச்னைகளில் சுமூகம் காண்பார்கள். கால்நடைகளால் லாபமுண்டு.

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்கள் அனைத்தையும் எளிதில் முடித்து வெற்றியடைவார்கள். அதனால் கட்சியில் முக்கிய பொறுப்புகளைப் பெறுவார்கள். கலைத்துறையினர் பல தடைகளைத் தாண்டி புதிய ஒப்பந்தங்கள் செய்வர். ரசிகர்களின் உணர்வை மதிக்கவும். பெண்மணிகள் கணவரிடன் நேசமாகப்பேசி பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வர். மாணவமணிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். தேவையில்லாத பிரச்னைகளில் சிக்க வேண்டாம்.

பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்து ஆத்ம ஒளி பெறுங்கள். அனுகூலமான தினங்கள்: 11,13.

சந்திராஷ்டமம்: இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வருமானத்தில் வளர்ச்சி உண்டாகும். திட்டமிட்ட வேலைகளில் வெற்றிவாகை சூடுவீர்கள். எல்லோருக்கும் உதவி செய்து பெருமையடைவீர்கள். சிறிது அலைச்சல் உண்டு. ஆகவே தக்க ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவர். சக ஊழியர்கள் பகைமை பாராட்டுவதால் எச்சரிக்கைத் தேவை. வியாபாரிகளைத் தேடி வரவேண்டிய பணம் வரும். மன உறுதியுடன் செயல்பட்டு வருமானத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். மகசூல் அதிகரிக்க நீர்பாசன வசதிகளைப் பெருக்குவீர்கள்.

அரசியல்வாதிகளின் முயற்சிகள் வெற்றி பெறும். மேலிடத்தின் உத்திரவை முடித்துக் கொடுத்து பாராட்டைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தவும். வேலையில் கருத்துடன் இருப்பது நல்லது. பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையை காண்பார்கள். மாணவமணிகளுக்கு பெற்றோரின் ஆசி உண்டு. விளையாட்டில் பெற்றி பெற அக்கறை தேவை.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 10,13.

சந்திராஷ்டமம்: இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

தெய்வ அனுகூலம் சிறப்பாக இருக்கும். சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடந்து கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உடன்பிறந்தோரால் நன்மை கிடைக்கும். எடுத்த காரியம் வெற்றிகரமாக முடியும். வாகன யோகமுண்டு. ஸ்பெகுலேஷன் துறை ஏற்றது.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெறுவார்கள். மனதிலிருந்த குழப்பங்கள் விலகும். வியாபாரிகளுக்கு கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய முதலீடுகளில் ஈடுபட்டு லாபமடைவீர்கள். இருப்பினும் அதிகம் உழைப்பீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் அதிகரிக்கும். பயிர்களில் பூச்சித் தொல்லைகள் குறையும்.

அரசியல்வாதிகளின் சேவையை அனைவரும் பாராட்டுவர். மேலிடத்தின் மூலம் புதிய பொறுப்புகள் கிடைக்கும். கலைத்துறையினரின் திறமைக்குத் தகுந்த மதிப்பும் அங்கீகாரமும் கிடைக்கும். பொருளாதாரம் சீராக இருக்கும். பெண்மணிகள் குடும்பத்தில் நிம்மதியைக் காண்பார்கள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். மாணவமணிகள் அதிக மதிப்பெண்களை அள்ளுவார்கள்.

கோரிக்கைகள் நிறைவேறும்.

பரிகாரம்: பெருமாளை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 14,15.

சந்திராஷ்டமம்: 10,11.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். பெயரும் புகழும் படிப்படியாக உயரும். உடன்பிறந்தோர் வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். அலைச்சல்கள் இருந்தாலும் எடுத்த வேலைகள் சாதகமானப் பலனைத்தரும்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளைத் திட்டமிட்டு நிதானம், பொறுமையுடன் செய்து முடிப்பர். சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் லாபகரமாக முடியும். தைரியமாக முதலீடு செய்து லாபத்தை பெருக்குவீர்கள். விவசாயிகள் நினைத்தபடி வேலைகளைச் செய்து முடிப்பர். தானிய விற்பனையும் லாபகரமாகவே இருக்கும்.

அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் அனைவரையும் திருப்தி படுத்தும். கடினமான வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். கலைத்துறையினர் உயர்ந்தவர்களைச் சந்தித்து உற்சாகமடைவர். பெண்மணிகளுக்கு கணவருடன் நிலவி வந்த கருத்து வேற்றுமை நீங்கும். மாணவமணிகள் ஆர்வமுடன் படித்து நல்ல மதிப்பெண்கள்

பெறுவர்.

பரிகாரம்: ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 10,15.

சந்திராஷ்டமம்: 12,13.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

செய்தொழிலில் ஏற்றங்கள் உண்டானாலும் சில தடைகளையும் சந்திப்பீர்கள். அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். இருப்பினும் பணவரவு நன்றாக இருக்கும். எவரையும் அலட்சியப்படுத்தாமல் உங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்ளுங்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் வளர்ச்சி காண்பீர்கள். மேலதிகாரிகள் பக்க பலமாக இருப்பார்கள். வியாபாரிகளுக்கு பொருள் விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் கிடைக்கும். புதிய வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு முயற்சிகளுக்கேற்ற பொறுப்புகள் கிடைக்கும். மேலிடத்தின் ஆதரவு உண்டு. கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் பெறுவர். பணவரவு சீராக இருக்கும். பயணங்களால் அனுகூலம் பெறுவார்கள். பெண்மணிகளின் உடல்நலனில் சிறிய அளவில் பாதிக்கும் வாய்ப்புண்டு. கணவருடன் ஒற்றுமையாக இருப்பீர்கள். மாணவமணிகள் கல்வியில் முன்னேறுவதற்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். விளையாட்டிலும் வெற்றிபெற கவனம் தேவைப்படும்.

பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 11,16.

சந்திராஷ்டமம்: 14,15.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

வரவுக்கேற்ற செலவுகள் இருக்கும். நண்பர்களின் அலட்சியப் போக்கைப் பெரிது படுத்த வேண்டாம். உடலாரோக்கியம் சிறக்கும். யோகா, பிராணாயாமம் செய்வீர்கள். உடன்பிறந்தோர் உறவுகளில் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். மனதில் தெளிவுகள் தென்படும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளைச் சீராகச் செய்து முடிப்பார்கள். உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் இருந்த சிரமங்கள் குறையும். வியாபாரத்தைப் பெருக்கும் எண்ணத்தைத் தள்ளிப்போடவும். விவசாயிகளுக்கு லாபமும் நஷ்டமும் மாறிமாறி வரும். உபரி வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளவும்.

அரசியல்வாதிகள் எச்சரிக்கையுடன் இருக்கவும். கட்சி மேலிடத்தின் உத்தரவை முனைப்புடன் நிறைவேற்றுவீர்கள். கலைத்துறையினரின் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். இனிய பயணங்கள் மேற்கொள்வீர்கள். பெண்மணிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். மாணவமணிகள் உழைப்பிற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவர்.

பரிகாரம்: துர்க்கையை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 12,15.

சந்திராஷ்டமம்: 16.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பொருளாதாரம் சீராக இருக்கும். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். வீடு மற்றும் யோகமும் உண்டாகும். சுபச் செய்திகள் வந்து சேரும். எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றலும் திறனும் பெறுவீர்கள். ஆகார விஷயங்களில் எச்சரிக்கைத் தேவை.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை குறையும். சக ஊழியர்களின் ஆதரவும் நட்பும் கிடைக்கும். வியாபாரிகள் புதிய விற்பனை யுக்திகளைப் புகுத்தி பொருள்களின் விற்பனையை பலமடங்கு பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். சந்தையில் நிலவும் போட்டிகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் எவரையும் பகைத்துக்கொள்ளாமல் இருந்து நற்பெயரை எடுப்பார்கள். மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் உங்களுக்கு அடிப்பணிவர். கலைத்துறையினருக்கு புகழும் அங்கீகாரமும் கிடைக்கும். சக கலைஞர்களின் உதவி கிடைக்கும். பெண்மணிகளுக்கு குடும்பத்தினரிடம் பாசம் அதிகரிக்கும். பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. மாணவமணிகளின் விருப்பத்தை பெற்றோர் நிறைவேற்றுவர். ஆசிரியர்கள் அனுகூலமாக இருப்பர்.

பரிகாரம்: பைரவரை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 12,16.

சந்திராஷ்டமம்: இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

திட்டமிட்ட வேலைகளில் சுறுசுறுப்புடன் ஈடுபட்டு வெற்றியடைவீர்கள். எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். குடும்ப பொறுப்புகளை சுமக்கும் தைரியம் உண்டாகும்.மதிப்பு மரியாதை வளரும்.

உத்தியோகஸ்தர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். சேமிப்பு சிறிது உயரும். வியாபாரிகள் புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும். நண்பர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடக்கவும். விவசாயிகளுக்கு லாபம் சுமாராகவே இருக்கும். புதிய சிக்கல்கள் வரும் வாய்ப்புண்டு.

அரசியல்வாதிகள் புதிய யுக்திகளைக் கையாண்டு கட்சிப்பணிகளைச் செய்வார்கள். எதிரிகளிடம் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய படைப்புகளைத் தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் படிப்பில் அக்கறை காட்டவும். வெளிவிளையாட்டுகளின் போது கவனமாக இருக்கவும்.

பரிகாரம்: ஐயப்பனை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 13,16.

சந்திராஷ்டமம்: இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

எதிர்வரும் இடையூறுகளைத் தகர்ப்பீர்கள். பிரச்னைகளில் தெளிவுகள் ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் நல்லபடியாக முடியும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். உறவினர்களின் ஆதரவு கிடைக்காது.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வார்கள். அவர்களின் பாராட்டுகளைப் பெற்று கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகளில் ஈடுபடுவார்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்பைப் பெறுவார்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். வழக்கு விவகாரங்களில் எதிர்பார்த்த வெற்றிகளைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினர் மனதிற்கினிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். ரசிகர்களின் பேராதரவைப் பெறுவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பார்கள். மாணவமணிகள் படிப்பிலும் விளையாட்டிலும் வெற்றி காண்பர்.

பரிகாரம்: குரு பகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 15,16.

சந்திராஷ்டமம்: இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *