download

பணி சிறக்க உத்வேகத்துடன் செயல்படும், மேஷ ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு ராகு, புதன், சுக்கிரனின் அமர்வு சிறப்பான இடங்களில் உள்ளது. குரு பகவான், வாரமத்தியில் ஐந்தாம் இடம் வந்து, பலவித நன்மை தருவார். மனதில் இருந்த சஞ்சலம் விலகும். வாழ்வின் அர்த்தம் உணர்ந்து பணிபுரிவீர்கள். அதிக நன்மையும், மகிழ்ச்சியும் உருவாகும். பூர்வ சொத்தில் விவகாரம் விலகி, எண்ணம் நிறைவேற வாய்ப்பு வரும்.விருந்து, விசேஷத்தில் கலந்து கொள்வீர்கள். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க, உங்களின் சமயோசித செயல் உதவும். பணியாளர்கள், நிர்வாகத்தின் கூடுதல் அன்பை பெறுவீர்கள். பெண்கள் புத்தாடை, அணிகலன் வாங்க, தாராள பணவசதி துணை நிற்கும். மாணவர்கள், ஞாபகத்திறன் வளர்ந்து, கூடுதல் தேர்ச்சி பெறுவர்.

பரிகாரம்: ராமபிரானை வழிபடுவதுடன், இயலாதவர்க்கு உதவிபுரியலாம்.

செயல்களில் வசீகரம் உருவாக்க முயற்சிக்கும், ரிஷப ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு சனி, கேது, சந்திரனின் நல்லருள் பலமாக உள்ளது. ஒதுக்கி வைத்த பணியை உத்வேகத்துடன் நிறைவேற்றுவீர்கள். எதிர்ப்பு விலகி, வாழ்வில் முன்னேற புதிய வழி பிறக்கும். உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். வீடு, வாகனத்தில் கூடுதல் பயன்பாடு பெற, சிலமாற்றம் செய்வீர்கள்.புத்திரரின் மனக்குறையை கனிவுடன் கேட்டு, நிவர்த்தி செய்வீர்கள். பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். இல்லறத்துணையிடம் குடும்ப விவகாரம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் புதியவர்களின் ஆதரவு கிடைத்து, பணவரவு கூடும். பணியாளர்கள், தம் கடமை உணர்ந்து பணிபுரிவீர்கள். பெண்கள், தாழ்வு மனப்பான்மையை தவிர்த்து, குடும்பநலன் பேணிக்காக்கவும். மாணவர்கள், ஆசிரியரின் வழிகாட்டுதல் உணர்ந்து படிக்க வேண்டும்.

பரிகாரம்: விநாயகரை வழிபடுவதுடன், கோவில் யானைக்கு பழம் வழங்கலாம்.

தன்னைப்போல பிறர் நலத்திலும் அக்கறை கொண்ட, மிதுன ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு சூரியன், புதன் முழு அளவில் நற்பலன் தருவர். மனதில் தைரியம் அதிகரிக்கும். எதார்த்த செயல் சிறப்பாக அமைந்து, புகழ் பெற்றுத் தரும். சுகபோக வாழ்வு அமைந்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர் கூடுதல் அன்பு பாராட்டுவர். புத்திரரின் கவனக்குறைவை கண்டிப்பதில் நிதானம் வேண்டும். எதிர்ப்பாக நடந்தவரும், உங்களிடம் மறைமுகமாக உதவி பெற முயற்சிப்பர். இல்லறத்துணையின் உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். கூடுதல் உழைப்பால், தொழில் வியாபார நடைமுறையை சீர் செய்வீர்கள். பணியாளர்கள், கால அவகாசத்தில் இலக்கு நிறைவேற்றுவீர்கள். பெண்கள், உறவினர் குடும்ப விவகாரங்களில் கருத்து சொல்ல வேண்டாம். மாணவர்கள், புதிய பயிற்சியினால் படிப்பில் நன்மை பெறுவர்.

பரிகாரம்: சிவனை வழிபடுவதுடன், ஏழை முதியவருக்கு புத்தாடை வழங்கலாம்.

உலக நடப்புகளை அறிவதில் ஆர்வமுள்ள, கடக ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு மூன்றில் ராகு, ஐந்தில் சுக்கிரன் நற்பலன் தரும் வகையில் செயல்படுகின்றனர். வார மத்தியில், குருபகவான் சிம்மத்திற்கு வந்து, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார். விலகிய உறவினர், சொந்தம் பாராட்டுவர். சிலரது வாழ்வில் மங்கள நிகழ்வு உருவாகும். குடும்பத் தேவை நிறைவேற்ற, பணவசதி துணை நிற்கும்.புத்திரரின் சேர்க்கை, சகவாசம் அறிந்து வழி நடத்தவும். உடல் நல ஆரோக்கியம் பலம் பெறும். இல்லறத்துணை ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் உருவாகிற குளறுபடி, நல்லவர்களின் உதவியால் மாறும். பணியாளர்களுக்கு, சலுகை கிடைக்கும். பெண்கள், தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். மாணவர்கள், புரிதல் திறன் வளர்ந்து சிறப்பிடம் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம்: 29.11.14 நள்ளிரவு 12:01 மணி முதல், 30.11.14 இரவு 10:00 மணி வரை.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதுடன், வடைமாலை சாற்றி நிவேதனம் செய்யலாம்.

லட்சியம் நிறைவேற்ற மனஉறுதியுடன் பணிபுரியும், சிம்ம ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு சனி, புதன், சுக்கிரன், செவ்வாயின் அமர்வு சிறப்பான இடங்களில் உள்ளது. வார மத்தியில், குருபகவான் ஜென்மராசிக்கு வருகிறார். இதனால், எதிர்கால வாழ்வு சிறக்க, புதிய திட்டம் மனதில் உருவாகும். எதிர்பார்ப்புகளை வெல்லும் திறன் பெறுவீர்கள். குடும்பத்தேவையை தாராள பணச்செலவில் பூர்த்தி செய்வீர்கள். புத்திரர், தயக்கமின்றி நல்ல கருத்துகளை உங்களிடம் பகிர்ந்து கொள்வார். இல்லறத்துணை வழிசார்ந்த உறவினர் உதவுவர். தொழில், வியாபார வளர்ச்சியில், புதிய இலக்கு அடைவீர்கள். பணியாளர்கள், கூடுதல் வேலை வாய்ப்பு, சன்மானம் பெறுவர். குடும்ப பெண்கள், உறவினர்களை உபசரித்து நற்பெயர் பெறுவீர்கள். மாணவர்கள், புதியவர்களின் அன்பை பெறுவதில் கவனம் கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம்: 30.11.14 இரவு 10:01 மணி முதல், 2.12.14 நள்ளிரவு 1:19 மணி வரை.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதுடன், ஏழை மாணவர்களுக்கு உதவலாம்.

நண்பரின் நல்ல ஆலோசனையை மனதார ஏற்கும், கன்னி ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு சூரியன், சுக்கிரன், சந்திரன் மட்டுமே நற்பலன் தருவர். வாரமத்தியில், குருவின் இடமாற்றம் மனதில் இனம் புரியாத சஞ்சலம் உருவாக்கும். நலம் விரும்புவர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுவது நல்லது. புதிய வாய்ப்புகளை பலன் உணர்ந்து மேற்கொள்ளுங்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரரின் விருப்பத்தை ஓரளவு நிறைவேற்றுவீர்கள். வெளியூர் பயணம் செல்வதில் இருந்த ஆர்வம் குறையும். இல்லறத்துணை, உங்களின் கவுரவம் சிறக்க வழிசொல்வார். தொழில், வியாபாரத்தில் சில மாற்றம் செய்வது அவசியமாகும். பணியாளர்கள், நிர்வாகத்தின் சட்ட திட்டத்தை தவறாமல் பின்பற்றவும். பெண்கள், சேமிப்பு பணத்தில் விரும்பிய பொருளை வாங்குவீர்கள். மாணவர்கள், பாதுகாப்பு குறைந்த இடங்களில் செல்ல வேண்டாம்.

சந்திராஷ்டமம்: 2.12.14 இரவு 1:20 மணி முதல், 4.12.14 இரவு 5:57 மணி வரை.

பரிகாரம்: மகாலட்சுமியை வழிபடுவதால், பணவரவு கூடும்.

நல்ல செயல்களை மனத்துணிவுடன் மேற்கொள்ளும் துலாம் ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு இரண்டில் சுக்கிரன், மீனத்தில் கேது, அனுகூலமாக உள்ளனர். வார மத்தியில், குரு பகவான் லாப ஸ்தானத்திற்கு வருகிறார். வந்ததன் அடையாளமாக, வாழ்வில் முக்கியமான நன்மை ஒன்று தருவார். புதியவர்களின் அன்பு மனதில் நெகிழ்ச்சி தரும். வீடு, வாகனத்தில் அபிவிருத்தி பணி செய்வீர்கள். புத்திரர் உங்கள் பார்வையில் இருந்து விலகாமல் நற்பெயர் பெறுவதில் கவனம் கொள்வார். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நிறைவேறும். இல்லறத்துணை கூடுதல் அன்பு பாராட்டுவார். தொழில், வியாபாரத்தில் லாப விகிதம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள், குடும்ப நலன் பேணுவதில் அக்கறை கொள்வீர்கள். மாணவர்கள், ஒவ்வாத உணவு வகை உண்ண வேண்டாம்.

சந்திராஷ்டமம்: 5.12.14 அதிகாலை 5:57 மணி முதல், 6.12.14 அன்று நாள் முழுவதும்.

பரிகாரம்: முருகப் பெருமானை வழிபடுவதால், குடும்பத்தில் சுபநிகழ்வு உண்டாகும்.

பொதுநலப் பணிபுரிபவர்களை மனதார வாழ்த்தும் விருச்சிக ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு சுக்கிரன், செவ்வாய், ராகுவின் அமர்வு சிறப்பான இடங்களில் உள்ளது. அடுத்தவரின் பார்வையில் உங்களின் பணி, சிறப்பான தோற்றம் தரும். முருகப் பெருமானின் நல்லருளால், வாழ்வியல் நடைமுறை சிறப்பு பெறும். உடன் பிறந்தவர் உதவுவர். வீடு, வாகன பாதுகாப்பில் உரிய கவனம் வேண்டும். புத்திரரின் மனவருத்தத்தை சரி செய்வீர்கள். பூர்வ சொத்தில் பணவரவு கூடும். இல்லறத்துணையின் கருத்துக்கு ஏற்ப நடந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேற, அவகாசம் தேவைப்படும். பணியாளர், சேமிப்பு அதிகரிக்கும் நோக்கில் பணிபுரிவீர்கள். பெண்கள், நிம்மதியான வாழ்வு பெறுவர். மாணவர்கள், கூடுதல் நேரம் படித்து நற்பெயர் பெறுவீர்கள்.

பரிகாரம்: பெருமாளை வழிபடுவதுடன், இனிப்பு பதார்த்தம் நிவேதனம் செய்து, பிரசாதம் வழங்கலாம்.

எதிர்வரும் சூழல்களுக்கு ஏற்ப, திட்டமிட்டு செயல்படும் தனுசு ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு சனி பகவான், சுக்கிரன் மற்றும் சந்திரன் நற்பலன் தருவர். ஆடம்பரச் செலவில் உருவாகி, சேமிப்பு பணம் கொஞ்சம் குறையும். எதிர்கால வாழ்வின் நன்மைக்காக, சில நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள். பேசுவதில் நிதானம் வேண்டும். உடன் பிறந்தவர் உதவி வழங்குவர். நீண்டதுார பயணங்களில், பாதுகாப்பு பின்பற்றவும். புத்திரர் செயல்களில் குளறுபடி எதிர்கொள்வர். எதிரியால் வருகிற தொல்லை விலகும். இல்லறத்துணை நல்ல அன்பு, பாசம் கொள்வார். தொழில், வியாபாரம் அதிக உழைப்பால் சீராகும். பணியாளர், கடமை உணர்ந்து செயல்பட வேண்டும். பெண்கள், செலவுகளில் சிக்கனத்தை பின்பற்றுவது, நன்மை தரும். மாணவர்கள், சாகச விளையாட்டில் ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்: தன்வந்திரி பகவானை வழிபடுவதால், உடல்நலன், ஆரோக்கியம் பலம் பெறும்.

தெய்வ நம்பிக்கையுடன் பணிபுரிந்து, அதிக நன்மை பெறும் மகர ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு கேது, சூரியன், சுக்கிரன், புதனின் அமர்வு சிறப்பான இடங்களில் உள்ளது. புதிய செயல் நிறைவேற, ஆன்மிக அருள்பலம் துணை நிற்கும். தாய்வழி உறவினர், கூடுதல் அன்பு பாராட்டுவர். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். புத்திரர் உங்கள் சொல் கேட்டு நடந்து, பெருமை தேடித்தருவர். வழக்கில் சாதகத் தீர்வு பெற, அனுகூலம் உண்டு. இல்லறத்துணையின் அன்பு நிறைந்த செயல், சில நன்மைகளை பெற்றுத் தரும். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழித்து, ஆதாய பணவரவு கிடைக்கும். பணியாளர் பாராட்டு வெகுமதி பெறுவர். பெண்கள், குடும்பத்தின் பணவரவுக்கேற்ப புத்தாடை, அணிகலன் வாங்குவர். மாணவர்கள் அனுபவம் இல்லாதவர்களின் ஆலோசனையை ஏற்க வேண்டாம்.

பரிகாரம்: நவக்கிரக சன்னிதியில் வழிபடுவதால், பல நலமும் பெறலாம்.

இயலாதவர்களுக்கு உதவுவதில், முழு மனதுடன் ஈடுபடும் கும்ப ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு ஐந்து, ஏழாம் இட அதிபர்களான புதன், சூரியன் ஜீவன ஸ்தானத்தில் அனுகூலமாக உள்ளனர். அரசு தொடர்பான உதவி கிடைப்பதில், அனுகூலம் உண்டு. புதிய திட்டத்தை உரிய பரிசீலனைக்கு பின், செயல்படுத்தலாம். அக்கம் பக்கத்தவரிடம் அதிகம் பேச வேண்டாம். வாகன பயன்பாட்டை அளவுடன் மேற்கொள்வீர்கள். புத்திரரின் படிப்பு, அறிவுத்திறனில் மேம்பாடு ஏற்படும். எதிர்ப்பாளரிடம் இருந்து விலகுவது நல்லது. இல்லறத்துணையின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவதால், ஒற்றுமை சீராகும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிபெற, சில மாற்றம் செய்வீர்கள். பணியாளர், பாதுகாப்பு நடைமுறையில் கூடுதல் கவனம் பின்பற்றவும். பெண்கள், சமையலறை பணியில் பாதுகாப்புடன் ஈடுபடவும். மாணவர்கள், அதிக விலையுள்ள பொருள்களை கவனமுடன் பயன்படுத்தவும்.

பரிகாரம்: மாரியம்மனை வழிபடுவதால், குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி கூடும்.

கலகலப்பாகப் பேசும் மனப்பான்மை நிறைந்த, மீன ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு செவ்வாய், சுக்கிரனின் அமர்வு சிறப்பான இடங்களில் உள்ளது. மனதில் சஞ்சலம் விலகி, புத்துணர்வு பெறுவீர்கள். தாராள பணவரவு கிடைத்து, குடும்பத்தேவை எளிதில் பூர்த்தியாகும். அன்புக்கு உரியவர் உங்கள் பேச்சை ரசிப்பர். வீடு, வாகனத்தில் கூடுதல் பாதுகாப்பை பின்பற்றவும். புத்திரர் உடல்நலம் பலம் பெற, சத்து நிறைந்த உணவு தருவது நல்லது. விவகாரங்களில் சமரசத் தீர்வு உருவாகும். இல்லறத்துணை வழி சார்ந்த உறவினர், உதவிகரமாக நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறை, தாமதமின்றி சரி செய்யவும். பணியாளர்கள், கூடுதல் வேலை வாய்ப்பை ஏற்பதால், பணவரவு கூடும். பெண்கள், உறவினர் விவகாரங்களில், கருத்து சொல்ல வேண்டாம். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பதால், தேர்ச்சி விகிதம் சீராகும்.

பரிகாரம்: குபேரரை வழிபடுவதால், தொழில் சிறந்து பணவரவு கூடும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *