இந்த வார ராசிபலன்

weekly rasipalanமேஷம்
தற்பெருமை எங்கு முடிகிறதோ அங்குதான் ஆனந்தம் ஆரம்பமாகிறது என்பதனை அறிந்த நீங்கள் கற்றது கைமண் அளவு என்றெண்ணுபவர்கள். புதனும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால் நினைத்தது நிறைவேறும். பணம் எதிர்பார்த்த வகையில் வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வாகனத்தை சரி செய்வீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். குருபகவான் 5-ல் தொடர்வதால் வி.ஐ.பிகள் மூலம் சில காரியங்களை சாதிப்பீர்கள். வேலைக் கிடைக்கும். நட்பு வட்டம் விரியும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை வழங்குவீர்கள். சூரினும் 3-ம் இடத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக அமையும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை எடுத்து நடத்துவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். 11-ம் வீட்டிலேயே கேது நீடிப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். ஹிந்தி, மலையாளம் பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். சனி 8-ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாக தொடர்வதால் யாரையும் நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். முடிந்த வரை சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்துக் கொண்டால் நல்லது. கன்னிப் பெண்களே! உயர்கல்வி, திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சி நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். கனிவாகப் பேசி வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அலுவலகத்தை விரிவுப்படுத்துவது குறித்து யோசிப்பீர்கள். கலைத்துறையினரே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். ஈகை குணத்தால் எல்லோராலும் பாராட்டப்படும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 28, 30, 2 அதிஷ்ட எண்கள்: 6, 8 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை அதிஷ்ட திசை: கிழக்கு

ரிஷபம்
மனிதனை புரிந்து கொண்டால் அவனே ஒரு புத்தகம் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்ற பொன்மொழியை அறிந்த நீங்கள் எல்லோரிடமும் அன்பாக பழகுபவர்கள். உங்கள் தன-பூர்வ புண்யாதிபதி புதன் 2-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் தன்னம்பிக்கையால் சாதிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி, பணவரவு உண்டு. குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். ஆனால் 2-ல் நிற்கும் சூரியன் சேமிப்புகளை கரைப்பார். பணப்பற்றாக்குறையை ஏற்படுத்துவார். கண் வலி வந்துப் போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். ராசிநாதன் சுக்ரன் வலுவாக நிற்பதால் எதிர்நீச்சல் போட்டு எல்லாவற்றிலும் வெற்றி பெறுவீர்கள். பழைய நண்பர்கள் உதவுவார்கள். உங்கள் ரசனைக் கேற்ப வீட்டை அழகுப்படுத்துவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். குருவும், ராகுவும் 4-ல் நீடிப்பதால் வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். சோர்வு, அசதி வந்துப் போகும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் யோசித்து செயல்படுங்கள். சிலர் உங்களை தவறானப் போக்கிற்கு தூண்டுவார்கள். கண்டகச் சனி தொடர்வதால் மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சை, மூச்சுப் பிடிப்பு, காய்ச்சல் வந்துப் போகும். கன்னிப் பெண்களே! புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். வேலையாட்கள் கொஞ்சம் முரண்டு பிடிக்கத்தான் செய்வார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். சக ஊழியர்கள் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் அனுசரித்துப் போங்கள். கலைத்துறையினரே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். ஏமாற்றங்கள், எதிர்ப்புகளை கடக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 29, 30, 1 அதிஷ்ட எண்கள்: 1, 7 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ஆலிவ் பச்சை அதிஷ்ட திசை: தென்மேற்கு

மிதுனம்
நெருப்பு தங்கத்தையும், துன்பம் மனிதனையும் உருக்கிறது என்பதனை அறிந்த நீங்கள், இருப்பதை வைத்து வாழ்பவர்கள். சனி வலுவாக 6-ல் அமர்ந்திருப்பதாலும், ராகு 3-ல் நிற்பதாலும் நெருக்கடிகளை சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். வேற்றுமொழி, இனத்தவர்களால் உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். சூரியன் ராசிக்குள் நிற்பதால் அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். பூர்வ புண்யாதிபதி சுக்ரன் வலுவாக இருப்பதால் பிள்ளைகளின் நட்பு வட்டம் விரிவடையும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று பிரார்த்தனைகளை முடிப்பீர்கள். கடனாக கேட்ட இடத்திலிருந்து பணம் கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். 3-ல் குரு நீடிப்பதால் புதிய முயற்சிகள் தாமதமாகி முடியும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். 30-ந் தேதி வரை செவ்வாய் வக்ரமாகி 5-ல் நிற்பதால் மனக்குழப்பம், சகோதர வகையில் சங்கடங்கள், வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்துச் செல்லும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. கன்னிப்பெண்களே! பெற்றோர் உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். உத்யோகத்தில் இடமாற்றம் உண்டு. மேலதிகாரியால் மறைமுகப் பிரச்னைகள் வந்துப் போகும். கலைத்துறையினரே! உங்களின் கலைத் திறன் வளரும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 30, 1, 3 அதிஷ்ட எண்கள்: 4, 9 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், வெள்ளை அதிஷ்ட திசை: வடகிழக்கு

கடகம்
எல்லாவிதமான தவறுகளுக்கும் அடிப்படையான காரணம் அகங்காரமே, என்பதனை அறிந்த நீங்கள், அடிபணிந்து நடப்பவர்கள். குரு 2-ம் வீட்டில் நிற்பதால் செல்வம், செல்வாக்குக் கூடும். அடுத்தடுத்த விஷேசங்களால் வீடு களை கட்டும். வங்கியில் அடமானமாக வைத்திருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். சுக்ரன் சாதகமாக இருப்பதால் சுபச் செலவுகள் அதிகமாகும். கார் பழுதை சரி செய்வீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். சிலர் வீட்டை இடித்து கட்டுவீர்கள். செவ்வாய் வக்ரமானாலும் 4-ல் நிற்பதால் முன்பணம் கொடுத்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். சகோதரங்கள் உங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். ஆனால் தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உறவினர்களுக்கு மத்தியில் ஒருபடி உயர்ந்து நிற்க வேண்டுமென எண்ணுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். ராசிக்கு 12-ல் சூரியன் நிற்பதால் முன்கோபம், தூக்கமின்மை, எதிர்பாராத செலவுகள், திடீர் பயணங்கள் வந்துப் போகும். கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். ரெட்டிப்பு லாபம் உண்டு. அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியிடம் நற்பெயரை எடுப்பீர்கள். சக ஊழியர்களும் அனுசரித்துப் போவார்கள். கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். புதிய பாதையில் பயணிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 29, 30, 1 அதிஷ்ட எண்கள்: 3, 5 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், இளம் சிவப்பு அதிஷ்ட திசை: வடக்கு

சிம்மம்
அமைதி இல்லாத இடத்தில் இன்பமிருக்காது என்பதனை உணர்ந்த நீங்கள், ஆரவாரமில்லாமல் ஆனந்தமாக இருப்பவர்கள். லாப வீட்டிலேயே சூரியனும், புதனும் நிற்பதால் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். வீடு கட்ட அரசாங்கத்திடமிருந்து ப்ளான் அப்ரூவல் வந்து சேரும். குறைந்த வட்டிக்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பதவிகள் தேடி வரும். நட்பால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மதிப்பார்கள். சுக்ரன் சாதகமாக இருப்பதால் தைரியம் கூடும். கல்யாண விஷயம் சாதகமாக முடியும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அண்டை, அயலாரின் ஆதரவுப் பெருகும். 30-ந் தேதி வரை செவ்வாய் வக்ரமானாலும் 3-ல் நிற்பதால் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். ஜென்ம ராசியிலேயே குருவும், ராகுவும் தொடர்வதால் சிலர் உங்களை பற்றி அவதூறாகப் பேசுவார்கள். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழும். முதுகு வலி, வாயுத் தொந்தரவால் நெஞ்சு எரிச்சல், செரிமானக் கோளாறு, தலைச்சுற்றல், மூட்டு வலி வந்துப் போகும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். கன்னிப் பெண்களே! திறமையான வகையில் செயல்படுவீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். பழைய வேலையாட்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் இடமாற்றம், டென்ஷன், வீண் பழி வந்துச் செல்லும். சிலர் உங்கள் பெயரை தவறாகப் பயன்படுத்துவார்கள். கலைத்துறையினரே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். மனோ பலத்தால் நினைத்ததை முடிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 1, 2, 3 அதிஷ்ட எண்கள்: 2, 8 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், சில்வர் கிரே அதிஷ்ட திசை: மேற்கு

கன்னி
தங்கத்திற்கும், பித்தளைக்கு தராசு வித்தியாசம் பார்ப்பதில்லை என்ற முதுமொழியை உணர்ந்த நீங்கள் ஏற்றத்தாழ்வுகளை ஒருபோதும் நினைக்கமாட்டீர்கள். ராசிநாதன் புதன் 10-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் கற்பனை வளம் பெருகும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒருபடி உயரும். சூரியனும் 10-ல் நிற்பதால் தடைகள் நீங்கும். பதவிகள் தேடி வரும். சிலருக்கு அயல்நாட்டில் வேலை அமையும். வீட்டை மாற்றுவது, விரிவுப்படுத்திக் கட்டுவது போன்ற முயற்சிகள் வெற்றியடையும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். ராசிக்கு 12-ல் குருவும், ராகுவும் தொடர்வதால் வாகன விபத்துகள் வரக்கூடும். கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. 3-ல் சனி நீடிப்பதால் வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் உதவிகள் உண்டு. கேது 6-ல் தொடர்வதால் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். மனைவிவழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். இங்கிதமான பேச்சால் வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 28, 29, 3 அதிஷ்ட எண்கள்: 1, 7 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், மஞ்சள் அதிஷ்ட திசை: வடமேற்கு

துலாம்
அன்பை கடன் கொடு, அது உனக்கு வட்டியுடன் திரும்பக் கிடைக்கும் என்ற பொன்மொழிக்கேற்ப எல்லோரிடமும் பாசமாக பழகுவீர்கள். ராசிநாதன் சுக்ரன் 9-ல் நிற்பதால் தொலைநோக்குச் சிந்தனை அதிகமாகும். பணம் வரும். ஆடை, ஆபரணம் சேரும். உங்கள் ரசனைக் கேற்ப வீட்டிற்கு குடிப்புகுவீர்கள். புதனும் 9-ல் நிற்பதால் கௌரவப் பதவிக்கு தேர்தெடுக்கப்படுவீர்கள். பழைய நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உறவினர்கள் சிலர் உங்கள் ஆலோசனையை நாடுவார்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். 9-ம் இடத்திலேயே சூரியனும் நிற்பதால் தந்தையின் உடல் நலம் பாதிக்கும். அவருக்கு வீண் டென்ஷன், வேலைச்சுமை வந்துப் போகும். அரசாங்க அதிகாரிகளால் தொந்தரவுகள் வந்துப் போகும். 30-ந் தேதி வரை செவ்வாய் வக்ரமாகி ராசிக்குள் நிற்பதால் தாழ்வுமனப்பான்மை, சகோதர வகையில் பிரச்னைகள், சிறுசிறு நெருப்புக் காயங்கள், சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்துப் போகும். லாப வீட்டில் ராகுவும், குருவும் நிற்பதால் பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பாதச் சனி தொடர்வதால் எதிர்காலம் பற்றிய பயம், வீண் கவலைகள் வந்துப் போகும். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மேலதிகாரிக்கு ஆலோசனைகள் வழங்குவீர்கள். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். கலைத்துறையினரே! எதிர்பார்த்த நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். வெற்றிகள் தொடரும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 28, 29, 30 அதிஷ்ட எண்கள்: 5, 9 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பிஸ்தா பச்சை அதிஷ்ட திசை: தென்மேற்கு

விருச்சிகம்
நாற்காலியில் அமரத்தெரிந்தவர்கள், அதனடியிலும் அமரத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதனை அனுபவப் பூர்வமாக உணர்ந்த நீங்கள், புதனும், சுக்ரனும் சாதகமான நட்சத்திரங்களில் பயணிப்பதால் மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வளைந்துக் கொடுத்து முன்னேறப்பாருங்கள். மனைவி யதார்த்தமாக ஏதேனும் அறிவுரை சொன்னால் ஏற்றுக் கொள்ளுங்கள். பணவரவு உண்டு. ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தை காப்பாற்ற வேண்டி வரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வேலை கிட்டும். சூரியன் 8-ல் நிற்பதால் செலவுகள் அதிகமாகும். திடீர் பயணங்கள் உண்டு. ஆனால் அரசு வேலை முடியும். ராசிநாதன் செவ்வாய் 12-ல் வக்ரமாகி நிற்பதால் மூச்சுத் திணறல், தூக்கமின்மை, வீண் அலைச்சல் வந்துப் போகும். ராகுவும், கேதுவும் சரியில்லாததால் மந்தம், மறதி, ஏமாற்றம், வேலைச்சுமை, வீண் பழி வந்து நீங்கும். ஜென்மச் சனி தொடர்வதால் நாக்கில் புண், யூரினரி இன்பெக்ஷன், ஒற்றை தலை வலி, தோலில் அலர்ஜி வந்துப் போகும். ழைய கசப்பான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது டென்ஷனாவீர்கள். எதிர்மறை எண்ணங்கள் தலைத்தூக்கும். முன்கோபத்தால் பகை உண்டாகும். கன்னிப் பெண்களே! எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். வியாபாரம் சுமாராக இருக்கும். வேலையாட்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். வாடிக்கையாளர்களுடன் மோதல்கள் வரக்கூடும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளிடம் நெருக்கமும் வேண்டாம், பகையும் வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள். கலைத்துறையினரே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அலுப்பு சலிப்புக் கொள்ளாமல் ஆக வேண்டியதை பார்க்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 30, 2, 3 அதிஷ்ட எண்கள்: 2, 4 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆலிவ் பச்சை அதிஷ்ட திசை: தெற்கு

தனுசு
சிப்பிகள் அடங்கிக் கிடந்த பின்னரே அதில் முத்துக்கல் நிறைந்தன. என்ற பொன்மொழியை அறிந்த நீங்கள் பொறுமையால் புகழடைபவர்கள். குருவும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால் புதிய பாதையில் பயணிக்க தொடங்குவீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை வரும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். புது வாகனம் வாங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உங்கள் யோகாதிபதி செவ்வாய் வக்ரமானாலும் 30-ந் தேதி வரை 11-ம் இடத்தில் நிற்பதால் சகோதர வகையில் உதவிகள் உண்டு. வீடு, மனை வாங்குவீர்கள். புது வேலைக் கிடைக்கும். சூரியன் 7-ல் நிற்பதால் உடல் உஷ்ணம், வேனல் கட்டி, மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடன் செலுத்தப் பாருங்கள். ஏழரைச் சனி தொடர்வதால் திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம். புதன் சாதகமாக இருப்பதால் உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். கேது 3-ம் வீட்டில் நீடிப்பதால் உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். கன்னிப் பெண்களே! காதல் கைக்கூடும். நல்லவர்களின் நட்பால் முன்னேறுவீர்கள். வியாபாரம் தழைக்கும். வேலையாட்கள் விசுவாசமாக நடந்துக் கொள்வார்கள். புது சலுகைத் திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவருவீர்கள். சிலர் புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களுடன் பகைமை பாராட்டிக் கொண்டிருந்த உயரதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். கலைத்துறையினரே! வருமானம் உயரும். மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். புது எண்ணங்களால் புகழடையும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 29, 1, 3 அதிஷ்ட எண்கள்: 4, 6 அதிஷ்ட நிறங்கள்: நீலம், சாம்பல் நிறம் அதிஷ்ட திசை: வடக்கு

மகரம்
தொலை நோக்குச் சிந்தனையும், செயல்திறனும் வெற்றிக்கு படிக்கட்டுகள் என்பதனை உணர்ந்த நீங்கள் ஒருபோதும் ஓய்ந்து விட மாட்டீர்கள். 6-ல் சூரியன் நிற்பதால் தடைகளும், ஏமாற்றங்களும் இருந்தாலும் ஓயமாட்டீர்கள். சவால்களை சமாளிப்பீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். வழக்கு சாதகமாகும். புதனும், சுக்ரனும் ராசிக்கு 6-ல் மறைந்திருப்பதால் வீண் டென்ஷன், தொண்டை வலி, நரம்புச் சுளுக்கு, கழுத்து வலி வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் வீண் வாக்குவாதம் வந்து நீங்கும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வழக்கால் நெருக்கடிகளை சந்திப்பீர்கள். குரு 8-ல் நீடிப்பதால் ஒருவித அலுப்பு, சலிப்பு வந்துப் போகும். செவ்வாய் வக்ரமானாலும் 10-ம் வீட்டில் நிற்பதால் தாய்வழியில் ஆதாயம் உண்டு. சகோதரங்கள் உங்களை சரியாகப் புரிந்துக் கொள்வார்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். ராகுவும், கேதுவும் சரியில்லாததால் இனந்தெரியாத கவலைகள், மூச்சுத் திணறல், கணுக்கால் வலி வந்துச் செல்லும். ராசிநாதன் சனிபகவான் வலுவாக இருப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். ஹிந்தி, மலையாளம் பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளியிருங்கள். பெற்றோர் பாசமழைப் பொழிவார்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். வேலையாட்கள், பங்குதாரர்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளை வெளியிடுவதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். முயன்றுத் தவறி முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 1, 2, 3 அதிஷ்ட எண்கள்: 5, 7 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, மஞ்சள் அதிஷ்ட திசை: வடமேற்கு

கும்பம்
வாழ்க்கை என்பது கணக்கற்ற வேடிக்கைகள் நிறைந்தது என்ற பொன்மொழியை அறிந்த நீங்கள், எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்பவர்கள். சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் நீங்கள் உழைத்த உழைப்பு, சிந்திய வியர்வைக்கெல்லாம் நல்ல பலன் கிடைக்கும். பூர்வீக சொத்தைப் பெறுவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். மனைவிவழியில் ஆதரிப்பார்கள். விலகிச் சென்ற பழைய சொந்தங்களெல்லாம் உங்களின் வளர்ச்சியைக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள். நண்பர்களால் பயனடைவீர்கள். 5-ல் சூரியன் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அரசாங்க விஷயங்களில் அவசரம் வேண்டாம். 7-ல் ராகுவும், ராசிக்குள் கேதுவும் நிற்பதால் முன்யோசனையில்லாமல் அவசர முடிவுகள் எடுத்து பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். எல்லோருக்கும் நல்லது செய்து கெட்ட பெயர்தான் மிஞ்சுகிறது என்று அவ்வப்போது அலுத்துக் கொள்வீர்கள். பணம் எவ்வளவு வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் புது வீடு கட்டுவீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். வேலையாட்கள், பங்குதாரர்கள் உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் அதிருப்தி உண்டாகும். அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். கலைத்துறையினர்களே! எதிர்பார்த்த ஒப்பந்தம் தாமதமாக முடியும். காத்திருந்து காய் நகர்த்த வேண்டிய காலமிது. அதிஷ்ட தேதிகள்: 28, 30, 3 அதிஷ்ட எண்கள்: 2, 8 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளம் சிவப்பு அதிஷ்ட திசை: கிழக்கு

மீனம்
மூளையையும், கையையும் ஒன்றாய் செயல்படுத்துபவனைப் பார்த்து இவ்வுலகம் வணங்கும், என்ற பொன்மொழிபடி நடப்பவர்கள் நீங்கள்தான். ராகுவும், சுக்ரனும் வலுவாக 3-ம் வீட்டிலேயே நீடிப்பதால் தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். சாதுக்கள் உதவுவார்கள். புதன் சாதகமாக இருப்பதால் பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். சூரியன் 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். தாய்வழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும். 30-ந் தேதி வரை 8-ல் செவ்வாய் நிற்பதால் மறதி, ஹார்மோன் பிரச்னைகள் வந்துப் போகும். ஒரு சொத்தை விற்று மறுசொத்து வாங்குவீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பங்குதாரர்கள் கொஞ்சம் காரசாரமாகப் பேசினாலும் நீங்கள் விட்டுக் கொடுத்து போங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் விரைந்து முடிப்பீர்கள். மேலதிகாரியின் அந்தரங்க விஷயங்களைப் பற்றி சக ஊழியர்களிடம் பேச வேண்டாம். கலைத்துறையினரே! திறமைகள் வெளிப்படும். எதிர்பாராத திடீர் நன்மைகள் சூழும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 28, 30, 1 அதிஷ்ட எண்கள்: 1, 3 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் நீலம், ஊதா அதிஷ்ட திசை: தென்மேற்கு

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *