weekly rasipalan copy copyபொறுப்புணர்வுடன் செயலை நிறைவேற்றுகிற மேஷ ராசிக்காரர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய், ராகுவுடன் அனுகூலமாக ஆறாம் இட அமர்வில் உள்ளார். வாக்கு ஸ்தானத்தில் சுக்கிரன், புகழ் ஸ்தானத்தில் சூரியன் நற்பலன் தருகின்றனர். இயல்பாக பேசும் வார்த்தை வசீகரமாக அமைந்து, பழகுபவர்களிடம் நன்மதிப்பு பெற்றுத்தரும். பணி உத்வேகமாக நிறைவேறி உபரி பணவரவு, புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். வாகனத்தில் கூடுதல் பயன்பாட்டு வசதி பெற, பராமரிப்பு மேற்கொள்வீர்கள். புத்திரரின் சொல்லும், செயலும் சிறப்பாக அமைந்து, வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். பணக்கடனில் ஒருபகுதி செலுத்துவீர்கள். இல்லறத்துணை கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார். தொழிலில் சிலமாற்றம் செய்து, வளர்ச்சி இலக்கை அடைவீர்கள். பணியாளர்கள், அதிக பொறுப்புணர்வுடன் பணிபுரிவீர்கள். பெண்கள் குடும்ப நலன் சிறந்து மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்கள் ஆசிரியரின் அறிவுரை கேட்டு செயல்படுவர்.

பரிகாரம்: துர்க்கையம்மனை வழிபடுவதுடன், ஏழை மாணவியின் படிப்பிற்கு பண உதவி வழங்கலாம்

அன்புடன் நடந்து இறைவனின் அருள் பெறுகின்ற ரிஷப ராசிக்காரர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன், ஆட்சிபலத்துடன் ராசியில் உள்ளார். ஆறாம் இடத்தில் உள்ள சனி, பதினொன்றாம் இடத்தில் உள்ள கேது அளப்பரிய நற்பலன் தருகின்றனர். உங்களின் தோற்றப்பொலிவு சிறப்பாக அமைய வேண்டும் என்பதில் கவனம் கொள்வீர்கள். கடந்த நாட்களில் எதிர்மறையாக இருந்த செயல் பலமிழந்து, நன்மை தருவதாக மாறும். திட்டமிட்டதை விட பணச்செலவு அதிகரிக்கும். வீடு, வாகனத்தில் தகுந்த பாதுகாப்பு வேண்டும்.புத்திரரின் சேர்க்கை சகவாசம் அறிந்து, நல்வழி நடத்துவது அவசியம். நிலுவைப்பணம் எளிய முயற்சியால் வசூலாகும். இல்லறத்துணை ஒற்றுமை குணத்துடன் உதவுவார். தொழில் வியாபாரம் சார்ந்த நண்பர்களால் உதவி கிடைக்கும். பணியாள்கள் தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொள்வர். குடும்ப பெண்கள், மனக்கவலைமாறி நிம்மதியான வாழ்வு பெறுவர். மாணவர்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் அளவுடன் கலந்து கொள்வது நன்மை தரும்.

பரிகாரம்: பூஜை அறையில், காமதேனு படம் வைத்து வழிபடுவதால், தொழிலில் வளர்ச்சி ஏற்படும்.

மயோசிதமாக செயல்புரிந்து சாதனை நிகழ்த்தும் மிதுன ராசிக்காரர்களே!

உங்கள் ராசிநாதனாகிய புதன், பன்னிரெண்டாம் இடத்தில் அனுகூல குறைவாக உள்ளார். இருப்பினும் குரு, சுக்கிரன் அனுகூல அமர்வில் உள்ளனர். எவரிடமும் இடம், சூழ்நிலை உணர்ந்து பேசுவீர்கள். நன்மதிப்பு மரியாதை கிடைக்கும். திருப்திகர பணவரவால், குடும்பத்தின் முக்கிய தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மிக வழிபாடு சிறப்பாக நடத்துவீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.புத்திரரின் எண்ணங்களில் புதிய சிந்தனை வளர அறிவுரை சொல்வீர்கள். வழக்கு விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற, கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்துவீர்கள். பணியாளர்கள் நற்பெயரை பாதுகாக்கும் வகையில், பணியை திறம்பட மேற்கொள்வீர்கள். பெண்கள், குடும்ப பணவரவுக்கேற்ப ஆடை அணிகலன் வாங்குவர். மாணவர்கள் விளையாட்டுகளில் சாகசம் செய்யக்கூடாது.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதுடன், பலாப்பழம் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வழங்கலாம்.

தான் செய்த உதவி குறித்து, பெருமை பேசாத கடக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு தைரிய ஸ்தானத்தில் செவ்வாய், ராகு, லாப ஸ்தானத்தில் சுக்கிரன், புதன் அனுகூலமாக உள்ளனர். மனதில் எதிர்கால வாழ்வின் வளம்பற்றிய சிந்தனை அதிகரிக்கும். புதிய வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்துவீர்கள். பணவரவில் முன்னேற்றம் உண்டு. அறிமுகம் இல்லாதவர் கேட்கும் உதவியை இயன்ற அளவில் வழங்குவீர்கள். புத்திரர், படிப்பு வேலை வாய்ப்புகளில் கவுரவமான இடத்தை எளிதில் அடைவார்.எதிரியின் நோக்கம் மறைமுகமாக இருப்பினும், உங்கள் ஞானத்தினால் உணர்ந்து கொள்வீர்கள். இல்லறத்துணை வழி சார்ந்த உறவினர்களின் உதவி உண்டு. தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி மேற்கொள்வீர்கள். பணியாளர் குறித்த காலத்தில் பணி இலக்கு நிறைவேற்றுவீர்கள். பெண்கள் உறவினர்களிடம் உருவான நல்அன்பினை பெருமிதத்துடன் ஏற்றுக் கொள்வீர்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேற புதிய திட்டமிடுதலுடன் செயல்படுவர்.

பரிகாரம்: பைரவரை வழிபடுவதால், எதிரிதரும் தொந்தரவு பலமிழக்கும்.

புதுமைக் கருத்துகளை, துணிச்சலாக வரவேற்கும், சிம்ம ராசிக்காரர்களே!

உங்கள் ராசிநாதன் சூரியன், லாப ஸ்தானத்தில் அனுகூலமாக உள்ளார். சனி, புதன் கூடுதல் நற்பலன் வழங்குகின்றனர். எவரிடமும் நிதானித்து பேசி, நற்பெயர் பாதுகாத்திடுவீர்கள். புதியவர்களின் அன்பு, வாழ்த்து கிடைக்கும். செயல்களில் சமூக அக்கறை மிகுந்திருக்கும். வாகனத்தில் பராமரிப்பு செய்வதால், பயணம் எளிதாகும். புத்திரர் படிப்பு திறன் வளர்ப்பில், முன்னேற்றம் பெற உரிய பயிற்சிக்கு ஏற்பாடு செய்வீர்கள். எதிரியினால் வரும் இடையூறு படிப்பினை, சில நன்மைகளை பெற உதவும். இல்லறத்துணையின் கவனக்குறைவான செயல்களை பொறுத்துக் கொள்வதால், ஒற்றுமை வளரும். தொழிலில் அளவான மூலதனம், அதிக உழைப்பு என்ற நடைமுறை பின்பற்றுவீர்கள். பணியாளர்கள் சராசரி வேலை வாய்ப்பும், அதற்கேற்ப சம்பளமும் பெறுவர். பெண்கள், உறவினர் குடும்ப விவகாரங்களில் கருத்து சொல்ல வேண்டாம். மாணவர்கள், பாதுகாப்பு குறைந்த இடங்களில் செல்ல வேண்டாம்.

பரிகாரம்: ராமபிரானை வழிபடுவதால், திட்டமிட்ட பணி நிறைவேறும்.

துன்பம் அடைந்தவருக்கு, கருணை மனதுடன் உதவும் கன்னி ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் சுக்கிரன், பத்தில் சூரியன், பதினொன்றில் குரு அனுகூலமாக உள்ளனர். வாழ்வில் பெறுகிற நன்மைகளின் அளவு அதிகரிக்கும். ராசியில் உள்ள செவ்வாய், தகுதி மீறிய செயலில் ஈடுபட எண்ணம் உருவாக்குவார். கவனம் தேவை. இளைய சகோதரரின் நல்ல கருத்து, உங்களை சில விஷயங்களில் வழி நடத்துவதாக அமையும். புத்திரர் வகையில், சுப நிகழ்வு தாராள பணச்செலவு ஏற்படும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். இல்லறத் துணையின் கூடுதல் அன்பு, பாசம் மனதில் நெகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த அரசு உதவி பெறலாம். பணியாளர்களுக்கு சலுகை, எளிய முயற்சியால் கிடைக்கும். பெண்கள், குடும்ப உறுப்பினர்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து செயல்படுவர். மாணவர்கள், ஞாபகத்திறன் வளர்ந்து படிப்பில் நல்ல தர தேர்ச்சி பெறுவர்.

பரிகாரம்: மகாலட்சுமி தாயாரை வழிபடுவதால், குடும்ப செலவுக்கான பணவசதி திருப்திகரமாகும்

உண்மையான செல்வம், மன அமைதி தான் என, வாழும் துலாம் ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு புதன், சுக்கிரன், தினகதி சுழற்சி கிரகம், சந்திரன் மற்றும் கேது நற்பலன் வழங்குகின்றனர். குடும்ப உறுப்பினர்களின் அன்பு, பாசம் மனதில் உற்சாகம் தரும். வீண் பேச்சு பேசுபவர்களிடம் விலகுவீர்கள். வாகன பயன்பாட்டு, சராசரி அளவில் இருக்கும். பூர்வ சொத்தில் வருகிற பணவரவை, சேமிப்பாக மாற்றுவீர்கள். உடல்நலத்தில் உரிய கவனம் வேண்டும். இல்லறத்துணை குடும்பத்தின் எதிர்கால நலனை வளர்க்கும் விதமாக செயல்படுவார். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெற, நல்லவர்களின் உதவி துணை நிற்கும். பணியாளர்கள், பெற வேண்டிய சலுகை அதிகாரியின் கருணை மனதினால் கிடைக்கும். பெண்கள், கணவரின் நல்அன்பு, பாசம் கிடைத்து நிம்மதி நிறைந்த வாழ்வு பெறுவர். மாணவர்கள், வெளியிடம் சுற்றுவதை குறைப்பதால், படிப்பில் கவனம் வளரும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதுடன், வடை மாலை சாற்றி, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கலாம்

சொந்த பணியில், அதிக கவனம் கொள்கிற, விருச்சிக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் மற்றும் ராகு, குருவின் அமர்வு சிறப்பான இடங்களில் உள்ளது. ஆதாய பலன்களை பெறுவதற்கான முயற்சியில், உத்வேகமுடன் ஈடுபடுவீர்கள். சிலரால் இருந்த எதிர்ப்பு விலகி, புதிய சூழல் உருவாகும். தம்பி, தங்கையின் நலனுக்கு, தேவையானவற்றை செய்து தருவீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். தாய்வழி உறவினர்களிடம், பழைய விவகாரம் பேச வேண்டாம். புத்திரர் உங்கள் சொல்லை, வேதம் என கருதி செயல்படுவார். நிலுவைப் பணம் வசூலாகும். இல்லறத்துணையின் உடல் நலத்தில், தகுந்த கவனம் வேண்டும். தொழில், வியாபாரத்தில் போட்டியை சமாளிக்க, இதமான அணுகுமுறை உதவும். பணியாளர், நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்ற வேண்டும். குடும்ப பெண்கள், கணவரின் கருத்துக்கு எதிராக பேச வேண்டாம். மாணவர்கள், உரிய பயிற்சியால், படிப்பில் தேர்ச்சி விகிதம் பாதுகாக்கலாம்.

பரிகாரம்: சூரியனை வழிபடுவதுடன், தந்தை வழி சார்ந்த முதியவருக்கு உதவுவதால், சில நன்மை கிடைக்கும்.

நல் உழைப்பிற்கான பாராட்டு தாமாக வருமென நம்புகிற தனுசு ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு புதன், சனி, அனுகூல பலன் தருகிற இடஅமர்வில் உள்ளனர். செயல்களின் நோக்கம் வெற்றி பெறுவதில் கண்ணும், கருத்துமாக ஈடுபடுவீர்கள். கடின வார்த்தையால் கடந்த நாட்களில் விலகிச் சென்றவரின் மனதில் உங்கள் மீதான நல்ல அபிப்பிராயம் உருவாக்குவீர்கள். வாகன பாதுகாப்பில் தகுந்த கவனம் வேண்டும். புத்திரரின் உடல்நலம் ஆரோக்கியம் பெற, சிறு அளவில் மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பாளரால் இருந்த தொந்தரவு விலகும். இல்லறத்துணை செயலில் குறை சொல்ல வேண்டாம். தொழில், உற்பத்தி, விற்பனை சிறப்பாக இருக்கும. பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும். மாணவர்கள், தன் பொறுப்பை உணர்ந்து படிப்பது நன்மை தரும்.

சந்திராஷ்டமம்: 28.6.14 நள்ளிரவு 2:24 மணி முதல்1.7.14 நள்ளிரவு 2:17 மணி வரை.

பரிகாரம்: சிவனை வழிபடுவதுடன், சிவனடியார்க்கு புத்தாடை, உணவு வழங்கலாம்.

லட்சிய உறுதியுடன் பணிகளில் ஈடுபடும் மகர ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு ஐந்து, ஆறு, ஏழு ஆகிய இடங்களில் முறையே சுக்கிரன், சூரியன், குருவின் அனுகூல அமர்வு உள்ளது. மூன்றாம் இடத்தில் உள்ள கேதுவும், நற்பலன் தருகிறார். எதிர்கால வாழ்வு வளமுடன் உருவாக சான்றோர்களின் ஆசி, உதவி கிடைக்கும். புத்துணர்வுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். சமூக நிகழ்வு இனிய அனுபவம் தருவதாக இருக்கும். வீட்டை அழகுபடுத்த கலை அம்சம் நிறைந்த பொருள் வாங்குவீர்கள். புத்திரர் நேர்மைமிகு செயலால் பெருமை தேடித்தருவார். பணக்கடனில் ஒருபகுதி செலுத்துவீர்கள். இல்லறத்துணை கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார். தொழிலில் அபிவிருத்தி பணி சிறப்பாக நிறைவேறும். பணியாளர், பணி இலக்கை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். பெண்கள், உறவினர் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி நடைபெற உதவுவர். மாணவர்கள், அதிக விலையுள்ள பொருளை கவனமுடன் பயன்படுத்தவும்.

சந்திராஷ்டமம்: 1.7.14 நள்ளிரவு 2:18 மணி முதல் 3.7.14 நள்ளிரவு 1:23 மணி வரை

பரிகாரம்:
சனி பகவானை வழிபடுவதால், தொழிலில் வளர்ச்சி உருவாகும்.

அதிக உழைப்பால் குடும்ப தேவையை நிறைவேற்றும் கும்ப ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சுக்கிரன், புதன் அனுகூலமாக உள்ளனர். மற்ற கிரகங்கள் எதிர்மறை பலன் தருகின்றனர். உறவினர்களின் ஆதரவு, உதவி மனதில் உற்சாகம் தரும். சமூக நிகழ்வுகளில் ஒதுங்கி சொந்தப்பணியில் கவனம் கொள்வது சிறப்பு தரும். வெளியூர் பயணம் பயன்அறிந்து மேற்கொள்ளலாம். வீட்டில் ஒற்றுமை, மகிழ்ச்சி நிலைத்திருக்கும். புத்திரர், உங்கள் சொல்கேட்டு நடந்து கொள்வர். விருந்து, விழாவில் அளவுடன் பங்கேற்பது நல்லது. இல்லறத்துணை, உங்களின் நல்ல செயல்களை பாராட்டுவார். தொழிலில் உருவாகிற இடையூறு தாமதமின்றி சரிசெய்ய வேண்டும். பணியாளர், பணி இடத்து சூழ்நிலை உணர்ந்து பணிபுரிவது நன்மை பெற உதவும். பெண்கள், சேமிப்பு, பணத்தில் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர். மாணவர்கள், நன்றாக படித்து, அதிக தேர்ச்சி விகிதம் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம்: 3.7.14 நள்ளிரவு 1:24 மணி முதல் 5.7.14 அன்று நாள் முழுவதும்

பரிகாரம்:
விநாயகரை வழிபடுவதால், புதிய பணிகள் எளிதாக நிறைவேறும்.

நற்செயல் புரிந்து மனதில் நிம்மதி பெறும் மீன ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சுக்கிரன், ஆட்சி பலத்துடனும், ஐந்தாம் இடத்தில் குரு உச்சபலத்துடனும் அனுகூலமாக உள்ளனர்.கடந்த நாட்களில் கிடைக்க வேண்டிய நன்மைகளை தங்கு தடையின்றி பெறுவீர்கள். அறிமுகம் இல்லாத பெண்ணுக்கு உதவுவதில் நிதானம் வேண்டும். தங்கையின் கணவர் வழி சார்ந்த உறவினர் கூடுதல் அன்பு பாராட்டுவர். பூர்வ சொத்தில் திருப்தி கர அளவில் பணவரவு கிடைக்கும். சீரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்கும். இல்லறத்துணை குடும்ப நலனில் அதிக அக்கறை கொள்வார். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற, சில மாற்றம் செய்வீர்கள். பணியாளர்கள், தம் கடமை உணர்ந்து பணியில் ஈடுபடுவர். குடும்ப பெண்கள், பிள்ளைகளின் எதிர்கால நலனுக்கு தேவையான திட்டங்களை உருவாக்குவர். மாணவர்கள், உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்பதை தவிர்க்கவும்.

பரிகாரம்: சனீஸ்வரரை வழிபடுவதால், நல்ல பலன்கள் தொடர்ந்து கிடைக்கும்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *