shadow

101சமூகத்தில் பெற்ற அந்தஸ்தை, அக் கறையுடன் பாதுகாக்கும், மேஷ ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு புகழ் ஸ்தான அதிபதியாகிய புதன், பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனுடன், ஆதாய இட அமர்வில் அனு கூலமாக உள்ளார்.செவ்வாய் கூடுதல் அளவில் நற்பலன் தருகின்றார். அடகு வைத்த பொருட்களை மீட்பதற்காக, பணவசதி திருப்திகர அளவில் கிடைக்கும்.அக்கம் பக்கத்தவரின் அன்பு, ஆதரவினால் மனம் நெகிழ்வீர்கள். சிலருக்கு, புதிய வாகனம் வாங்குகிற முயற்சி நிறைவேறும். புத்திரர் அறிவுத் திறன் வளர்ந்து படிப்பில் முன்னேற்றம் காண்பர். எதிர்மறையாக இருந்த செயல், அனுகூலம் தருவதாக மாறும். இல்லறத்துணையின் கருத்துக்கு, உரிய முக்கியத்துவம் தரவேண்டும். தொழில், வியாபார நடைமுறை வளர்ச்சி சுகமாக இருக்கும். பணியாளர்களுக்கு, கூடுதல் வேலைவாய்ப்பு சம்பள உயர்வு கிடைக்கும். பெண்கள் குடும்பநலன் சார்ந்த பணிகளில் ஆர்வம் கொள்வர். மாணவர்கள், öÁளியிடம் சுற்றுவதை குறைப்பதால், படிப்பில் கவனம் வளரும்.

 

வாழ்வில் முக்கிய தேவையை நிறைவேற்றுகின்ற, ரிஷப ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு தர்மகர்ம ஸ்தான அதிபதியாகிய சனிபகவான், ராசிக்கு ஆறாம் இடமான சுக்கிரன் வீட்டிலும், சுக்கிரன் சனி வீட்டிலுமாக பரிவர்த்தனையாக அமைந்து யோக பலன் தருகின்றனர்.குரு, ராகு, சூரியன், புதனும் சிறப்பான பலன்களை வழங்குகின்றனர். உங்கள் பேச்சு, செயலில் வசீகரம் உருவாகும். புதியவர்களின் நட்பு, உதவி கிடைக்கும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும். பூர்வ சொத்தில் வளர்ச்சியும், வருமானமும் கூடும். விவகாரம் அணுகாத சுமுக வாழ்வியல் நடைமுறை இருக்கும்.

 

பணியில் தவறு நிகழ்ந்தால், உடனே சரி செய்கின்ற, மிதுன ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, இந்த வாரம் அஷ்ட ஸ்தானத்தில் உள்ள சுக்கிரன், ஆதாய ஸ்தானத்தில் உள்ள கேது நற்பலன் வழங்குகின்றனர். கடந்த நாட்களில் சரி என கருதி, எடுத்த சில முடிவுகளை, மறு பரிசீலனை செய்கிற எண்ணம் கொள்வீர்கள். உங்கள் நலனில் அக்கறை உள்ளவரின் ஆலோசனையையும் கேட்பது நல்லது. பணவரவுக்கேற்ப செலவு களை திட்டமிடுவதால் மட்டுமே, மனதில் உருவாகிற பதற்றம் குறையும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரரின் உடல் நலம் ஆரோக்கியம் பெற, மருத்துவசிகிச்சை தேவைப்படலாம். எதிர்மனப்பாங்குடன் பேசுபவரிடம் விலகுவது நல்லது. இல்லறத்துணை அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார். தொழிலில் அளவான மூலதனம், கூடுதல் உழைப்பு என்கிற நடைமுறையை பின்பற்றுவீர்கள். பணியாளர் ஒருமுகத்தன்மையுடன் பணிபுரிவதால்,
குளறுபடி வராமல் தவிர்க்கலாம். பெண்கள் குடும்பத்தேவை சிக்கன பணச்செலவில் நிறைவேற்றுவர். மாணவர்கள், புதியவரை நண்பராக ஏற்பதில் தகுந்த கவனம் வேண்டும்.இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். புதிய நிறுவனம் துவங்க அனுகூலம் உண்டு. பணியாளர் திறம்பட செயல்பட்டு பாராட்டு, வெகுமதி பெறுவர். பெண்கள், குடும்பத்தின் அத்தியாவசியத் தேவை பூர்த்தியாகி மனம் மகிழ்வர். மாணவர்கள் எளிய பயிற்சி முறையால், வியத்தகு அளவில் தேர்ச்சி விகிதம் பெறுவர்.

 

அன்பு, கருணை நிறைந்த செயலால், பிறர் மனம் கவரும், கடக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, மூன்றில் செவ்வாய், அஷ்டமஸ்தானத்தில், புதன் அனுகூல அமர்வில் உள்ளனர். மற்ற கிரகங்களில் சந்திரன் மட்டுமே, ஓரளவு உதவுகிறார்.
ஆடம்பர சிந்தனைகளினால், பணச்செலவில் தாராள குணம் பின்பற்றுவீர்கள். இதனால், சிலரது பரிகாசம் நிறைந்த பேச்சுக்களை எதிர்கொள்ள நேரிடலாம். இளைய சகோதரர் உதவிகரமாக செயல்படுவர். அறிமுகம் இல்லாதவருக்கு வீடு, வாகனத்தில் இடம் தர வேண்டாம்.
புத்திரரின் கருணை மிகுந்த செயல் பெருமை தேடித் தரும். சீரான ஓய்வு உடல்நலம் ஆரோக்கிய பலம்பெற துணைநிற்கும். இல்லறத்துணையின் கவனக்குறைவான பணிகளை பெருந்தன்மையுடன் சரிசெய்வதால், குடும்ப ஒற்றுமை வளரும். தொழிலில் வளர்ச்சிபெற, கிடைக்கிற வாய்ப்பை தவறாமல் பயன்படுத்த வேண்டும். பணியாளர், பணியிடத்தில் தேவையற்ற விவாதம் பேசக்கூடாது. பெண்கள், குடும்பத்திற்கான தேவை குறைந்த பணச்செலவில் நிறைவேற்றுவர். மாணவர்கள், அக்கறையுடன் படிப்பதால் மட்டுமே, தேர்ச்சி விகிதம் சீராகும்.

 

யதகுதி, திறமையை கவனத்தில் கொண்டு செயல்படும், சிம்ம ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, மூன்றாம் இடத்தில் சனி, ராகு, பதினொன்றாம் இடத்தில், குருபகவான் அனுகூல அமர்வில் உள்ளனர். செயல்களில் லட்சியத்தின் வெளிப்பாடு மிகுந்திருக்கும். பேசுவதில் நிதானம் பின்பற்றுவதால், நற்பெயரை பாதுகாக்கலாம். உடன் பிறந்தவர்களுக்கான மங்கல நிகழ்ச்சி நடத்த அனுகூலம் உருவாகும். வீடு, வாகன பாதுகாப்பில், கூடுதல் கவனம் வேண்டும். இஷ்ட தெய்வ அருள் பலத்தினால், புத்திரரின் எதிர்கால தேவையான பணிகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்ப்பாளரால் உருவாகிய தொந்தரவு பலமிழக்கும்.
இல்லறத்துணையின் உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை உதவும். தொழில், வியாபாரத்தில் லாப விகிதம் குறைத்து உற்பத்தி, விற்பனையில் இலக்கை அடைவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைப்பதில் தாமதம் இருக்கும். பெண்கள், கணவர் வழிசார்ந்த உறவினர் செயலை விமர்சிக்க வேண்டாம். மாணவர்கள், பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல கூடாது

 

உழைப்பின் பயனை உணர்ந்து அனுபவிக்கும், கன்னி ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு தனம், சவுபாக்ய ஸ்தான அதிபதியாகிய சுக்கிரன், ஐந்தாம் இடத்தில் அனுகூலமாக உள்ளார். ஆறாம் இடத்தில், புதஆதித்யயோக பலத்துடன் சூரியன், புதன் செயல்படுகின்றனர். மதிநுட்பத்துடன் பணிபுரிந்து, எதிர்காலத்தில் பெற வேண்டிய நன்மையை உறுதி செய்வீர்கள். உங்கள் சொல்லுக்கு மரியாதை தருபவரிடம் மட்டும், பொது விஷயம் பேசலாம். வீட்டிற்கு வரும், உறவினர்களை உபசரிப்பதில் தாமதம், தயக்கம் உருவாகாமல், உரியஅன்பு பாராட்ட வேண்டும். புத்திரர் உதவிகரமாக நடந்து கொள்வார். நிலுவைப்பணம் வசூலாகும். இல்லறத்துணை, குடும்ப நலனின் கூடுதல் அக்கறை கொள்வார். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற, தேவையான அரசு சார்ந்த உதவி கிடைக்கும். பெண்கள், பிரார்த்தனை நிறைவேறி இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள், ஆசிரியரின் கண்டிப்புக்கு ஆளாகாதவாறு படிப்பில் கவனம் கொள்ளவேண்டும்.

 

சிரம சூழ்நிலையிலும், மன உறுதியுடன் செயல்படும், துலாம் ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, ஆறாம் இட அதிபதியாகிய குரு, எட்டாம் இட அதிபதியாகிய சுக்கிரன், அனுகூல சஷ்டாஷ்டக அமர்வில் உள்ளனர். மற்ற கிரகங்களினால், வாழ்வில் உருவாகிற சிறு பிரச்னைகளை தேவகுரு, அசுருகுருவின் அருள்பலம் துணை நின்று சரி செய்யும். வெகுநாள் மனதில் இருந்த எண்ணம் செயல்வடிவமாகும். புதியவர்களின் அன்பு, உதவி கிடைக்கும். வீடு, வாகனத்தில் கூடுதல் வசதி பெற, சில மாற்றம் செய்வீர்கள்.
புத்திரரின் எதிர்கால நலனுக்கு, தேவையான பணி மேற்கொள்வீர்கள். எதிரி வியந்து பார்க்கிற அளவிலான சுமுக வாழ்வு உருவாகும். இல்லறத்துணை, உங்களின் நல்ல குணம் பாராட்டுவார். கூடுதல் உழைப்பால், தொழில், வியாபாரம் செழித்து வளரும். பணியாளர் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்வர். பெண்களுக்கு, தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள், படிப்பில், உரிய கவனம் கொள்வதற்கான சூழ்நிலை இருக்கும்.
சந்திராஷ்டமம்: 8.3. 14 இரவு 12.01 மணி முதல் 9.3.14 காலை 10.26 மணி வரை.

 

அமைதியான வாழ்வு முறையை விரும்பும், விருச்சிக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, சப்தம சுப விரய ஸ்தான அதிபதி, சுக்கிரன் மூன்றாம் இடத்தில் அனுகூலமாக உள்ளார். ராசிக்கு, ஆறாம் இடத்தில் உள்ள, கேதுவை நட்பு கிரகமான செவ்வாய் பார்க்கிறார். இதனால், சுபநிகழ்ச்சி நடத்துவதிலும், கலந்து கொள்வதிலும் ஆர்வம் கொள்வீர்கள். நண்பர்களின் ஆலோசனை உதவி, மனதில் நம்பிக்கையை அதிகரிக்கும்.
வாகனத்தில் பராமரிப்பு செய்வதால், பயணமுறை எளிதாகும். புத்திரரின் அதிருப்தி மனம் சரி செய்ய ஆறுதலாக செயல்படுவீர்கள். உடல்நல ஆரோக்கியம் சீராக இருக்கும். இல்லறத்துணை ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். புதனின் அனுகூல அமர்வு, குடும்பத்தில் மங்கல நிகழ்வை உருவாக்கும். தொழில், வியாபாரத்தில் சராசரி உற்பத்தி, விற்பனை இருக்கும். பணியாளர்கள், நிர்வாகத்தின் சட்ட திட்டம் தவறாமல், பின்பற்ற வேண்டும். பெண்கள், அத்தியாவசிய செலவுக்கு மட்டும் முன்னுரிமை தருவர். மாணவர்கள், சாகச விளையாட்டுகளில் ஈடுபடக் கூடாது.
சந்திராஷ்டமம்: 9.3.14 காலை 10.27 மணி முதல் 11.3.14 இரவு 9.35 மணி வரை

 

மனதில் நல்ல குணநலன்களை ஏற்று வாழ்ந்திடும், தனுசு ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, இரண்டாம் இடமான வாக்கு ஸ்தானத்தில், சுக்கிரன் அனுகூலமாக உள்ளார். இதனால், நீங்கள் பேசும் வார்த்தை இனியவையாக அமைந்து, பழகுபவர்களிடம் கூடுதல் மதிப்பு, மரியாதை பெற்றுத் தரும். சூரியன், குரு, சனி, ராகு அளப்பரிய நற்பலன்களை வழங்குகின்றனர்.
பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். வெளியூர் பயணத்தினால், சில நன்மை வந்து சேரும். சிலர் புதிய வாகனம் வாங்குகிற முயற்சி நிறைவேறும். புத்திரரின் செயல்களை கண்காணித்து, உரிய வழி காட்டுதல் தருவது அவசியம். பணக்கடனில், ஒரு பகுதி செலுத்துவீர்கள். இல்லறத்துணை வழி சார்ந்த உறவினர், புதிய சொந்தங்களை அறிமுகம் செய்வர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அபரிமிதமாகும். அரசியல்வாதிகள் பொறுப்பான பதவி பெற அனுகூலம் உண்டு. குடும்ப பெண்கள், விதவிதமான உணவு தயாரித்து உபசரிப்பர். மாணவர்கள், நன்றாக படித்து ஆசிரியர், பெற்றோரிடம் பாராட்டு பெறுவர்.

சந்திராஷ்டமம்: 11.3.14 இரவு 9.36 மணி முதல் 14.3.14 காலை 9.13 மணி வரை

 

நிதான வார்த்தை பேசி நற்பெயர் பெறுகிற, மகர ராசிக்காரர்களே!

உங்கள் ராசியில் உள்ள, சுக்கிரன் மற்றும் தினகதி சுழற்சி கிரகம் சந்திரன் மட்டுமே, இந்த வாரம், நற்பலன் வழங்குகின்றனர். எந்த செயலையும், உரிய பரிசீலனைக்கு பின் மேற்கொள்வது நற்பலன் பெற உதவும். புதிய இனங்களில், பணச்செலவு ஏற்படுவ தால், சேமிப்பு குறைவதும், பணம் கடன் பெறுவதுமான நிலைமை இருக்கும். அக்கம் பக்கத்தவரின் விவகாரங்களில் கருத்து கூற வேண்டாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர், உங்களின் தியாக குணத்தை உணர்ந்து கொள்வர். காலமுறை உணவுப் பழக்கம், சீரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்க உதவும். இல்லறத்துணை குடும்ப சூழ்நிலை உணர்ந்து உதவிகரமாக செயல்படுவார். தொழில், வியாபாரத் தில் உருவாகிற, இடையூறு தாமதமின்றி சரி செய்ய வும். உத்தியோகஸ்தர், பணியாளர்களை ஊக்கப்படுத்துவதால், பணி இலக்கு சீராக நிறைவேறும். பெண்கள், நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். மாணவர்கள், படிப்பில் கூடுதல் கவனம் கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 14.3.14 காலை, 9.14 மணி முதல் 15.3.14 அன்று நாள் முழுவதும்

 

அடுத்தவர் கருத்தின் நியாயம் உணர்ந்து செயல்படும், கும்ப ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு தன, லாப ஸ்தான அதிபதி சுக்கிரன் அனுகூல சஷ்டாஷ்டக அமர்வில் உள்ளவர். கேது கூடுதல் நற்பலன் வழங்குகிறார். வாழ்வில் தடையாக இருந்த, சில விஷயங்கள் விலகி நன்மை உருவாகும். உறவினர்களிடம் பேசுவதில் அலட்சிய குணம் தவிர்ப்பது நல்லது. வீடு, வாகனத்தில் திருப்திகர நிலை உண்டு. புத்திரரின் சொல்லும், செயலும் சிறப்பாக அமைந்து மகிழ்ச்சி தரும். சத்து நிறைந்த உணவு வகைகளை உண்பதால், உடல்நலம் சீராக இருக்கும். இல்லறத்துணை நல்அன்பு பாராட்டுவர். தொழிலில் வளர்ச்சி பெற, மாற்று உபாயம் பின்பற்றுவீர்கள். பணியாளர்கள், பணியிடத்தில் தேவையற்ற விவாதம் பேச வேண்டாம். பெண்கள், குடும்ப செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படுத்துவர். மாணவர்கள், புதிய பயிற்சிமுறை பின்பற்றி, திட்டமிட்ட தேர்ச்சி விகிதம் பெறுவர்

 

குடும்ப உறுப்பினர்களிடம் பாசம் மிகுந்த, மீன ராசிக்காரர்கள்!

உங்கள் ராசிக்கு ஆதாய ஸ்தானத்தில் உள்ள, சுக்கிரன் மற்றும் தினகதி சுழற்சி கிரகம் சந்திரன் மட்டுமே, இந்த வாரம் நற்பலன் வழங்குகின்றனர். பொது இடங்களில், நண்பரிடம் அதிக நேரம் பேசுவது, நிகழ்வுகளை வேடிக்கை பார்ப்பது தவிர்ப்பதால், மன அமைதி பாதுகாக்கலாம்.
பணிகள் நிறைவேற உருவாகிற, புதிய வாய்ப்பை தவறாமல் பயன்படுத்த வேண்டும். வீடு, வாகன பாதுகாப்பில், கூடுதல் கவனம் வேண்டும். மகளின் ஜாதக யோக பலம் முக்கியமான செயல் நிறைவேற துணை நிற்கும். ஓய்வு எடுப்பதற்கான நேரம் குறைவாக இருக்கும். இல்லறத்
துணையின் ஆறுதல் வார்த்தை மனதிற்கு ஊக்கம் தரும். தொழில், வியாபார நடைமுறை சிறக்க, சிலமாற்றம் பின்பற்ற வேண்டியதிருக்கும். பணியாளர் உடல்நலம் பேணுவதால், பணியில் ஆர்வம் வளரும். பெண்கள், குடும்ப நலன் சிறக்க, தேவையான பணி மேற்கொள்வர். மாணவர்கள், ஆசிரியரின் கண்டிப்புக்கு ஆளாகாதவாறு பொறுப்புணர்வுடன் படிக்க வேண்டும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *