shadow

download (2)

சுறுசுறுப்பாக பணிபுரியும் மேஷ ராசிக்காரர்களே!

ராசிக்கு நான்கில் சுக்கிரன், ஆறில் ராகு அனுகூலமாக உள்ளனர். உறவினர்களின் அன்பு, பாசம், கிடைக்கும். நற்செயல்களால் புகழ் பெறுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டு. விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். இல்லறத் துணை அதிக அன்பு பாராட்டுவார். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர் நிர்வாகத்தின் சட்டதிட்டம் மதித்து செயல்படவும். பெண்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். மாணவர்களின் விருப்பம் நிறைவேறும்.

சந்திராஷ்டமம்: 1.6.15 மதியம் 1:17 மணி முதல் 3.6.15 இரவு 8:36 மணி வரை.

பரிகாரம்:
துர்க்கையம்மன் வழிபாடு செயலில் வெற்றி தரும்.

இனிய வார்த்தை பேசும் ரிஷப ராசிக்காரர்களே!

புகழ் ஸ்தானத்தில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் கேது அனுகூலமாக உள்ளனர். ஆரோக்கியம் மேம்படும். புதிய திட்டம் தீட்டி செயல்படுத்துவீர்கள். வீடு, வாகனத்தில் பராமரிப்பில் உரிய கவனம் செலுத்துவது நல்லது. புத்திரரின் செயல்பாடு சிறக்க உதவுவீர்கள். இல்லறத் துணையின் பாராட்டைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் படிப்படியாக முன்னேற்றம் பெறும். பணியாளர் பணிச்சுமையைச் சந்திக்க நேரிடும். பெண்கள் பொறுப்புணர்வுடன் செயல்படுவர். மாணவர்கள் வெளியிடங்களில் சுற்றுவது கூடாது.

சந்திராஷ்டமம்: 3.6.15 இரவு 8:37 மணி முதல் 5.6.15 நள்ளிரவு 1:33 மணி வரை.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மைக்கு வழிவகுக்கும்.

நல்ல அறிவுரையை ஏற்கும் மிதுன ராசிக்காரர்களே!

குரு, சுக்கிரன், சனி, புதன் அதிக நற்பலன் தருவர். நல்லவர்களின் உதவி கிடைக்கும். வார்த்தையில் வசீகரம் இருக்கும். வெளியூர் பயணம் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களிடம் எதிர்பார்ப்பு கூடும். தாயின் அன்பை பெறுவீர்கள். புத்திரர் விரும்பியதை வாங்கித் தருவீர்கள். இல்லறத் துணையின் செயல்பாட்டால் கவுரவம் காண்பீர்கள். தொழிலில் அபிவிருத்திப் பணி மேற்கொள்வீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும் பெண்கள் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பர். மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பர்.

சந்திராஷ்டமம்: 5.6.15 இரவு 1:34 மணி முதல் 6.6.13 நாள் முழுவதும்.

பரிகாரம்: முருகப் பெருமான் வழிபாட்டால் வாழ்வு வளம் பெறும்.

பிறரது நல்லகுணம் பாராட்டுகிற கடக ராசிக்காரர்களே!

சுக்கிரன், ராகு, புதன், சூரியன் செவ்வாய் வியத்தகு நற்பலன் தருவர். அரசு தொடர்பான நன்மை பெறலாம். மூத்த சகோதரர் ஆலோசனை கைகொடுக்கும். வாகனத்தில் பராமரிப்பு பணிபுரிவீர்கள். புத்திரர் வகையில் வீண்செலவைத் தவிர்ப்பது நல்லது. இல்லறத் துணையின் பாசம் கண்டு மகிழ்வீர்கள். தொழிலில் அதிர்ஷ்டவசமாக திடீர் பணவரவு கிடைக்கும். பணியாளர், தொழில் நுட்ப அறிவில் மேம்படுவர். பெண்கள், ஆடை, ஆபரணம் வாங்க யோகமுண்டாகும். மாணவர்கள், படிப்பில் உற்சாகத்துடன் ஈடுபடுவர்.

பரிகாரம்: நந்தீஸ்வரர் வழிபாடு சகல நன்மையும் அளிக்கும்.

காலத்தை பொன்போல கருதும் சிம்ம ராசிக்காரர்களே!

ராசிக்கு சூரியன், சுக்கிரனின் அமர்வு சிறப்பான வகையில் உள்ளது. முயற்சி முழுஅளவில் நன்மையைத் தரும். இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். வீடு, வாகனத்தில் அறிமுகம் இல்லாதவர்க்கு இடம் தர வேண்டாம். புத்திரரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். ஆரோக்கியம் சீர்பெற ஓய்வு அவசியம். இல்லறத் துணை பெருந்தன்மையுடன் செயல்படுவார். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பணியாளர் அக்கறையுடன் பணியாற்றுவர். பெண்கள், பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவர். மாணவர்கள் பாதுகாப்பற்ற இடங்களுக்குச் செல்வது கூடாது.

பரிகாரம்: அம்மன் வழிபாடு குடும்பத்தில் ஒற்றுமையை உருவாக்கும்.

குடும்ப பெருமையை பாதுகாத்திடும் கன்னி ராசிக்காரர்களே!

குரு, சுக்கிரன், சனி, புதன் நல்ல இடத்தில் அமர்ந்துள்ளனர். எண்ணங்களை செயலாக்குவீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். சமூகத்தில் நற்பெயர் பெறுவீர்கள். வாகன பயன்பாடு சராசரி அளவில் இருக்கும். புத்திரர் நற்சிந்தனையுடன் செயல்படுவர். இல்லறத் துணையின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும், வருமானமும் கூடும். பணியாளர் நிம்மதியாக பணிபுரிபவர். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் ஆர்வமுடன் படித்து முன்னேறுவர்.

பரிகாரம்:
ஆஞ்சநேயர் வழிபாட்டால் சிரமம் விலகும்.

தன் பலம் அறிந்து செயலாற்றும் துலாம் ராசிக்காரர்களே!

நவக்கிரகங்களில் சந்திரன், கேது மட்டுமே நன்மை தருவர். தகுதி மீறிய செயலில் ஈடுபடக் கூடாது. பேசும் வார்த்தையில் நிதானம் வேண்டும். குடும்பத் தேவை தாமதமாக நிறைவேறும். வாகனத்தில் பராமரிப்பு அவசியம். புத்திரரின் மனதில் நம்பிக்கை வளர்ப்பீர்கள். இல்லறத் துணை செயல்குறையைப் பொறுத்துக் கொள்வது நலம். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் இருக்கும். பணியாளர், பணியிடத்தில் விவாதம் பேச வேண்டாம். பெண்கள் பணப்பொறுப்பு ஏற்ககூடாது. மாணவர்கள் பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவர்.

பரிகாரம்:
விநாயகர் வழிபாடு தொழிலில் வளர்ச்சி தரும்.

நேர்மை வழியில் செயல்படும் விருச்சிக ராசிக்காரர்களே!

ராசிக்கு புதன், குரு, சுக்கிரன், ராகு நற்பலன் தருவர். மனக்குழப்பம் விலகும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். வாகன பயன்பாடு சராசரி அளவில் இருக்கும். புத்திரர்கள் உங்களின் சொல் கேட்டு நடப்பர். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். நிலுவைப் பணம் வசூலாகும். இல்லறத் துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழிலில் உள்ள அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது. பணியாளர் பணிச்சுமையைச் சந்திக்க நேரிடும். பெண்கள் குடும்ப நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள், தனித்திறனை வளர்த்துக் கொள்வர்.

பரிகாரம்: தன்வந்திரி வழிபாடு ஆரோக்கியம் தரும்.

இயன்ற அளவு பிறருக்கு உதவும் தனுசு ராசிக்காரர்களே!

ராசிக்கு சூரியன், செவ்வாய், சுக்கிரன் நற்பலன் தருவர். முன்னேறும் வாய்ப்பு உங்களைத் தேடி வரும். ஆரோக்கியம் பலம் பெறும். இயன்ற அளவு சமூகப் பணியில் ஈடுபடுவீர்கள். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். புத்திரரை கண்டிப்பதில் நிதானத்தைக் கடைபிடிக்கவும். பூர்வசொத்தால் வருமானம் கூடும். இல்லறத்துணை பாசத்துடன் நடந்து கொள்வார். தொழிலில் இடையூறுகளை சரிசெய்வீர்கள். பணியாளர் பணியிடத்தில் விவாதம் பேச வேண்டாம். பெண்கள் பணப்பொறுப்பு ஏற்பது கூடாது. மாணவர்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பர்.

பரிகாரம்: ராமபிரான் வழிபாடு மனதில் நிம்மதி தரும்.

ஆன்மிக பணிகளில் ஆர்வமுள்ள மகர ராசிக்காரர்களே!

கேது, புதன், குரு, சனி ஆதிக நற்பலன் தருவர். ஆதாய நோக்கில் ஆர்வம் கொள்வீர்கள். இஷ்ட தெய்வ அருள் துணை நிற்கும். உறவினர் வருகை மகிழ்ச்சி அளிக்கும். வாகன பயன்பாடு திருப்திகரமாகும். புத்திரரின் குறையைப் போக்க முயல்வீர்கள். பகைவர்களை இனம் கண்டு ஒதுங்குவீர்கள். இல்லறத்துணை கடமையை உணர்ந்து செயல்படுவார். தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும். பணியாளர்கள் விரைந்து பணிகளை முடிப்பர். பெண்களுக்கு நன்மை மேலோங்கும். மாணவர்கள் மனதில் புத்துணர்வு பிறக்கும்.

பரிகாரம்:
சனி பகவான் வழிபாடு தொழிலில் வளர்ச்சி தரும்.

பிறர்நலனில் அக்கறை காட்டும் கும்ப ராசிக்காரர்களே!

தினகதி சுழற்சி கிரகம் சந்திரன் தவிர, மற்ற கிரகங்கள் எதிர்மறை பலன் தரும் இடங்களில் உள்ளனர். உங்கள் நலம் விரும்புவரின் ஆலோசனையை ஏற்று நடப்பீர்கள். பொது இடங்களில் அதிக நேரம் செலவழிக்க வேண்டாம். வாகனத்தில் மிதவேகம் கடைபிடிப்பது நல்லது. புத்திரர்களின் செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கும். சத்து நிறைந்த உணவு உண்ணவும். இல்லறத்துணை வழி சார்ந்த உறவினர்களை குறை சொல்ல வேண்டாம். தொழிலில் போட்டி அதிகரிக்கும். பணியாளர்களுக்கு பணியில் குளறுபடி உருவாகலாம். பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்தவும். மாணவர்கள் படிப்பில் அக்கறை கொள்வது நல்லது.

பரிகாரம்: சிவன் வழிபாடு குடும்பத்தில் ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

பரந்த மனப்பான்மையுடன் பழகும் மீன ராசிக்காரர்களே!

செவ்வாய், சுக்கிரன், சூரியன், குரு நற்பலன் தருவர். புதியவர்களின் நட்பு கிடைக்கும். பணப் பரிவர்த்தனை திருப்திகரமாகும். சமூகப் பணியில் ஈடுபடுவீர்கள். தாய்வழி உறவினர் அன்பு பாராட்டுவர். புத்திரரின் நற்செயல் மனதை மகிழ்விக்கும். பிரச்னைகளுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். இல்லறத் துணையின் உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். தொழில் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவீர்கள். பணியாளர்கள் புதிய தொழில் நுட்பங்களை அறிவதில் ஆர்வம் காட்டுவர். பெண்கள் வாழ்வில் வசந்தம் வீசும். மாணவர்கள் திறமையை வளர்த்துக் கொள்வர்.

சந்திராஷ்டமம்: 31.5.2015 காலை 6:00 மணி முதல் 1.6.15 மதியம் 1:16 மணி வரை.

பரிகாரம்:
லட்சுமியை வழிபட்டால் வருமானம் பெருகும்.

Leave a Reply