shadow

download (2)

நேர்மையான நடத்தையால் அதிக நன்மை பெறும், மேஷ ராசி அன்பர்களே!

உங்களுக்கு சூரியன், செவ்வாய், சுக்கிரன், ராகு நற்பலன் தருவர். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி இருக்கும். பணிகள் திட்டமிட்டபடி நிறைவேறும். நண்பர், உறவினரின் உதவி கிடைக்கும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். பூர்வச் சொத்தில் வளர்ச்சியும், பணவரவும் கூடும்.
புத்திரர்கள், உங்கள் சொல் கேட்டு செயல்படுவர். இல்லறத் துணையின் பாசமழையில் நனைவீர்கள். தொழிலில் வளர்ச்சிக்கான பாதை உருவாகும். பணியாளர்கள், கடமையில் கண்ணும், கருத்துமாகச் செயல்படுவர். பெண்கள், குழந்தைகள் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்களுக்கு, ஞாபகத்திறன் வளரும்.

சந்திராஷ்டமம்: 28.6.15 இரவு 9:03 மணி முதல் 1.7.15 அதிகாலை 4:39 மணி வரை.

பரிகாரம்:
முருகன் வழிபாடு, தொழிலில் வளர்ச்சி தரும்.

உழைப்பில் நம்பிக்கை கொண்ட, ரிஷப ராசி அன்பர்களே!

உங்களுக்கு சுக்கிரன், சனி, கேதுவின் நல்லருள் உண்டு. சுயதிறமை மேம்படும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும். வீடு, வாகனத்தில் உரிய பாதுகாப்பு பின்பற்றவும். புத்திரர்களின் தாழ்வு மனப்பான்மை விலக, அறிவுரை சொல்வீர்கள். உடல்நிலை பலம் பெறும். இல்லறத் துணையின் கருத்தை மதிப்பீர்கள். தொழிலில், வியாபாரம் செழித்து, பணவரவு கூடும். பணியாளர்களுக்கு சலுகை, சன்மானம் கிடைக்கும். பெண்கள், கணவரின் எதிர்கால நலன் சிறக்க பாடுபடுவர். மாணவர்கள், நன்றாக படிப்பர்.

சந்திராஷ்டமம்: 1.7.15 அதிகாலை 4:40 மணி முதல் 3.7.15 காலை 10:00 மணி வரை.

பரிகாரம்: மகாலட்சுமி வழிபாடு, சகல வளமும் தரும்.

மற்றவர்கள் மனம் அறிந்து செயல்படும், மிதுன ராசி அன்பர்களே!

உங்களுக்கு, தேவகுரு வியாழன், அசுரகுரு சுக்கிரன் நற்பலன் தருவர். சோம்பலைத் தவிர்ப்பதால், பணிகள் நிறைவேறும், வீண்பேச்சு பேசுவோரிடம் விலகவும். பணவரவு அதிகம் பெற, புதிய வாய்ப்பு வரும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர்களின் செயல்களை நல்வழிப்படுத்துங்கள். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். இல்லறத் துணை, இணக்கமாக செயல்படுவார். தொழில், வியாபாரத்தில் புதியவர்களின் ஆதரவு கிடைக்கும். பணியாளர்கள், தொழில்நுட்ப அறிவில் மேம்பட்டு, சலுகை பெறுவர். பெண்களுக்கு, உறவினர் குடும்ப சுப நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் கிடைக்கும். மாணவர்களுக்கு, புதிய நண்பர்கள் விஷயத்தில் கவனம் வேண்டும்.

சந்திராஷ்டமம்: 3.7.15 காலை 10:01 மணி முதல் 4.7.15 இரவு 11.55 மணி வரை.

பரிகாரம்: தன்வந்திரி வழிபாடு, ஆரோக்கியம் தரும்.

வெற்றி அடைய ஆர்வமுடன் பணிபுரியும், கடக ராசி அன்பர்களே!

உங்களுக்கு சுக்கிரன், ராகு நற்பலன் தருவர். பேச்சு, செயலில் வசீகரம் உருவாகும். பணநிலையில் ஓரளவு சுணக்கம் இருக்கும். உடன் பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள். வாகன பராமரிப்பு செலவு குறையும். புத்திரர்கள், விரும்பிய பொருள் கேட்டு பிடிவாதம் செய்வர். உடனிருந்து இடையூறு செய்வோரை அறிந்து விலகிக் கொள்ளுங்கள். முக்கிய செலவுகளுக்காக, கடன் பெறுகிற சூழ்நிலை உண்டு. இல்லறத் துணை, உங்களின் நல்ல குணத்தை பாராட்டுவார். தொழில், வியாபாரத்தில் ஓரளவே லாபம் கிடைக்கும். பணியாளர்கள், மற்றவர்களுடன் தேவையற்ற விவாதம் செய்ய வேண்டாம். பெண்களுக்கு, வீட்டுச்செலவுக்கு ஓரளவே பணம் இருக்கும். மாணவர்கள் சிறப்பாகப் படித்து, அதிக மதிப்பெண் பெறுவர்.

பரிகாரம்: விநாயகர் வழிபாடு, வாழ்வில் வெற்றி தரும்.

நட்பை புனிதமாகப் போற்றும், சிம்ம ராசி அன்பர்களே!

உங்களுக்கு ராகு, குரு, கேது தவிர மற்ற கிரகங்கள் அளப்பரிய நற்பலன் தருவர். அன்பு எண்ணம் அதிகரிக்கும். திறமையுடன் பணிபுரிந்து, முழு அளவில் நன்மை பெறுவீர்கள். நற்பெயரும், புகழும் கிடைக்கும். வீடு, வாகனத்தில் அபிவிருத்தி உண்டு. புத்திரர்கள், அறிவுத்திறனில் மேம்படுவர். இஷ்ட தெய்வ வழிபாடு செய்வீர்கள். சில விவகாரங்களில், சுமுகத் தீர்வு கிடைக்கும். இல்லறத் துணை விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். பணியாளர்கள், சேமிக்கும் அளவு சம்பாதிப்பர். பெண்கள், புத்தாடை அணிகலன் வாங்க யோகம் உண்டு. மாணவர்கள் நன்றாகப் படித்து பரிசு, பாராட்டு பெறுவர்.

பரிகாரம்:
ராமர் வழிபாடு, மன ஒருமைப்பாட்டை வளர்க்கும்.

சாந்த குணத்துடன் பேசும், கன்னி ராசி அன்பர்களே!

உங்களுக்கு சூரியன், புதன், குரு, சுக்கிரன் சிறப்பான பலன் தருவர். செயல்களில் ஆதாயம் அதிகரிக்கும். இளமைக்கால இனிய நிகழ்வு, மனதிற்கு உற்சாகம் தரும். உறவினர்களின் உதவி கிடைக்கும். புத்திரர்களின் பிடிவாதப் போக்கை, இதம் பதமாக சரி செய்யுங்கள். எதிரிகளிடம் இருந்து விலகவும். இல்லறத் துணை, குடும்பத்திற்கு நற்பெயர் பெற்றுத்தரும் வகையில் செயல்புரிவார். தொழில், வியாபாரம் செழித்து, பணவரவு கூடும். பணியாளர்கள், பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்களுக்கு, வீட்டுச் செலவுக்கு தாராள பணவசதி இருக்கும். மாணவர்கள், ஆசிரியர், பெற்றோரிடம் நற்பெயர் பெறுவர்.

பரிகாரம்:
சிவ வழிபாடு, மனம், உடலுக்கு புத்துணர்வு தரும்.

தெய்வ நம்பிக்கையுடன் பணிபுரியும், துலாம் ராசி அன்பர்களே!

உங்களுக்கு கேது, சந்திரன் ஓரளவு பலன் தருவர். செயல்களில் நிதானத்தை பின்பற்றுவதால், சிரமம் விலகும். பழகுவோரின் மனம் அறிந்து பேச வேண்டும். உடன் பிறந்தவர்களின் உதவி, நம்பிக்கையை தரும். வீடு, வாகனத்தில் பராமரிப்பு தேவைப்படலாம். புத்திரர்கள், உங்களுக்கு பெருமை தேடித் தருவர். சீரான ஓய்வு, உடல் நலம் காக்கும். இல்லறத் துணையின் மனதில் சஞ்சலம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் அதிக உழைப்பு தேவைப்படும். பணியாளர்கள், சக பணியாளர்களை நம்பி வேலைகளை கொடுக்க வேண்டாம். பெண்கள், குடும்ப நலனில் மட்டும் அக்கறை கொள்ளவும். மாணவர்கள், நண்பரால் நன்மை அடைவர்.

பரிகாரம்:
தட்சிணாமூர்த்தி வழிபாடு, சர்வமங்களம் தரும்.

இரக்க மனதுடன் பிறருக்கு உதவும், விருச்சிக ராசி அன்பர்களே!

உங்களுக்கு புதன், குரு, சுக்கிரன், ராகு நற்பலன் தருவர். தாமதமான செயல்களில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத் தேவையை நிறைவேற்ற, தாராள பணவசதி துணை நிற்கும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் கவுரவம் கிடைக்கும். பயணங்களை பயன் அறிந்து மேற்கொண்டால் போதும். புத்திரர்கள் நண்பர்களைப் போல பழகி, மனதை மகிழ்ச்சிப்படுத்துவர். இல்லறத் துணை விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க, சில மாற்றங்களை செய்வீர்கள். பணியாளர்கள், நிர்வாகத்தின் சட்டதிட்டத்தை பின்பற்றினால், சிரமத்தை தவிர்க்கலாம். பெண்கள், கோவில்களுக்கு சென்று வருவர். மாணவர்கள் சிறப்பாக படித்து, நற்பெயர் பெறுவர்.

பரிகாரம்: சாஸ்தா வழிபாடு, மனதிற்கு உற்சாகம் தரும்.

ஒழுக்கத்தை பெரிதும் விரும்பும், தனுசு ராசி அன்பர்களே!

உங்களுக்கு சுக்கிரன், சனி அனுகூல அமர்வில் உள்ளனர். நல்ல சிந்தனைகள் மனதில் உருவாகி, செயல் வடிவம் பெறும். நேர்மையாக நடந்தும் அடைந்த கஷ்டங்களுக்கு, தெய்வ அருளால் தீர்வு கிடைக்கும். பயணங்கள் இனிய அனுபவம் தரும். புத்திரர்களின் எதிர்கால நலனுக்கு தேவையானதை செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். இல்லறத் துணையின் கருத்துகளை ஏற்பீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை குறைந்த அளவில் இருக்கும். பணியாளர்கள், செலவில் சிக்கனம் மேற்கொள்வதால், கடன் வாங்குவதை தவிர்க்கலாம். பெண்களுக்கு, தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள், ஆன்மிக விஷயங்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவர்.

பரிகாரம்: அம்மன் வழிபாடு, வளம் தரும்.

பிறர் சொல்வதை ஆராய்ந்து ஏற்கும் குணமுள்ள, மகர ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் முக்கூட்டு கிரக சேர்க்கையாக சூரியன், செவ்வாய், புதன் அனுகூல அமர்வில் உள்ளனர். குரு, கேதுவும் நற்பலன் தருவர். பொறுமையுடன் செயல்பட்டு, எதிர்ப்புகளை வெல்வீர்கள். உடன் பிறந்தவர்களுக்கு, மங்கல நிகழ்ச்சி நடத்த அனுகூலம் உண்டு. புதிய வாகனம், வீடு வாங்க யோகம் உள்ளது. புத்திரர்களின் செயல்பாடுகளில், நல்ல மாற்றம் வரும். கடன்களை செலுத்துவீர்கள். இல்லறத் துணையுடன் கருத்து வேறுபாடு வரலாம்; கவனம் தேவை. தொழில், வியாபாரம் வளர, முக்கியஸ்தர்களின் ஆலோசனையை ஏற்பது நல்லது. பணியாளர்கள், கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். பெண்கள், நகை பாதுகாப்பில் கவனம் கொள்ளவும். மாணவர்கள், ஆர்வமாக படிப்பர்.

பரிகாரம்:
பைரவர் வழிபாடு, சிரமம் போக்கும்.

சமூக நலனில் அக்கறை கொண்ட, கும்ப ராசி அன்பர்களே!

உங்களுக்கு சந்திரன் மட்டுமே நற்பலன் தருவார். பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருந்தால், சிரமம் அணுகாமல் தவிர்க்கலாம். வரவை விட, செலவு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் கருத்து வேறுபாடு கொள்வர். அறிமுகம் இல்லாதவர்களுக்கு வீடு, வாகனத்தில் இடம் தர வேண்டாம். புத்திரர்களின் குறையை பொறுப்பதால், அவர்கள் நல்வழியில் செயல்பட வாய்ப்பு உருவாகும். ஒவ்வாத உணவை உண்ண வேண்டாம். இல்லறத் துணையின் மனம் அமைதி பெறும் வகையில், ஆறுதலாக நடந்து கொள்ளுங்கள். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் தங்கள் பணிகளை முடிக்க தாமதம் ஆகலாம். பெண்களுக்கு, வீட்டுவேலை பார்க்க சற்று சிரமம் இருக்கும். மாணவர்கள், நன்றாக படிப்பர்.

பரிகாரம்: நந்தீஸ்வரர் வழிபாடு, வாழ்வில் நல்ல மாற்றம் தரும்.

சந்தோஷ சூழலிலும் அமைதி காக்கும், மீன ராசி அன்பர்களே!

உங்களுக்கு புதன், சுக்கிரன், குரு வியத்தகு பலன் தருவர். கடந்த நாட்களில் உதவ நினைத்த ஒருவர், தேடி வந்து உதவுவார். செயல்களை உற்சாகமாக செய்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை வளரும். வாகனத்தில் செல்லும் போது, வேகத்தை குறைக்கவும். புத்திரர்களின் நற்செயல்கள் கண்டு, பெருமிதம் கொள்வீர்கள். கடன்களை செலுத்துவீர்கள். இல்லறத் துணையின் அன்பும், பாசமும் முழு அளவில் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற, புதியவர்களின் ஆதரவு துணை நிற்கும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து, அதிகாரிகளிடம் நற்பெயர் பெறுவர். பெண்கள், மங்கல நிகழ்ச்சிகளில் பங்கேற்பர். மாணவர்கள், நண்பர்களுடன் இணைந்து படித்து முன்னேறுவர்.

சந்திராஷ்டமம்: 28.6.15 காலை 6:00 மணி முதல், இரவு 9:02 மணி வரை.

பரிகாரம்:
பெருமாள் வழிபாடு, சகல நன்மையும் தரும்.

Leave a Reply