download (1)

அனுபவ அறிவை பயன்படுத்தும், மேஷ ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், ராகு, சூரியன் அதிக நற்பலன் தருவர். நண்பர்களால் உதவி கிடைக்கும். திட்டங்களை நல்ல முறையில் செயல்படுத்துவீர்கள். பணவரவு கூடும். புத்திரர்களின் சொல்லும், செயலும் சிறப்பாக அமையும். எதிர்ப்பு இல்லாத சுமுக வாழ்வு உருவாகும். மனைவி கருத்து இணக்கம் கொள்வார். தொழில், வியாபாரம் செழித்து வளரும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் ஆன்மிக வழிபாடு மேற்கொள்வர். மாணவர்கள் சிறந்த மதிப்பெண் பெறுவர்.

பரிகாரம்: மகாலட்சுமி வழிபாடு, சுபநிகழ்வு தரும்.

நற்செயலால் பிறர் மனம் கவரும், ரிஷப ராசி அன்பர்களே!

புதன், சுக்கிரன், செவ்வாய், கேது அளப்பரிய நற்பலன் தருவர். முருகப் பெருமானின் அருள் துணை நிற்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்துவீர்கள். பயணங்கள் இனிதாகும். புத்திரர், நண்பர் போல் இணக்கமாக இருப்பர். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழிலில் மூலதன தேவை அதிகரிக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை கவனமுடன் பின்பற்றவும். பெண்கள், உறவினர் வீட்டு மங்கல நிகழ்ச்சிகளில் பங்கேற்று, அவர்களுக்கு உதவுவர். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பர்.

பரிகாரம்:
சனீஸ்வரர் வழிபாடு, குடும்ப ஒற்றுமையை வளர்க்கும்.

தனக்கு கிடைக்கும் சிறு நன்மையையும், பெரிதென கருதும், மிதுன ராசி அன்பர்களே!

சுக்கிரன், சனி, சந்திரன் நன்மை தருவர். பொதுப் பிரச்னையில் தலையிட வேண்டாம். உடன் பிறந்தவர்கள் உதவுவர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர்களின் செயல் பெருமையளிக்கும். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். இல்லறத்துணை, உங்களின் நல்ல குணத்தை பாராட்டுவதுடன் பரிசும் வாங்கித் தருவார். தொழில், வியாபாரத்தில் இப்போதுள்ள நிலைமையே தொடரும். பணியாளர்கள், புதிய தொழில் நுட்பங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் கொள்வர். பெண்கள் பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்க வேண்டாம். மாணவர்கள் பாதுகாப்பற்ற இடங்களுக்கு செல்ல வேண்டாம்.

பரிகாரம்: பைரவர் வழிபாடு, சகல நலமும் தரும்.

கருணை மனதுடன் பிறருக்கு உதவும், கடக ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், சூரியன், ராகு அதிக நற்பலன் தருவர். உங்கள் சொல்லை பலரும் வரவேற்பர். வீடு, வாகனம் வாங்க நல்ல யோகம் உண்டு. புத்திரர்களின் செயல்பாட்டிலுள்ள குறைகளை சரி செய்வீர்கள். கடன் கொடுத்த பணம் வசூலாகும். மனைவியின் ஆலோசனை நன்மை தரும்.
தொழில், வியாபாரம் செழிக்க, புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். பணியாளர்கள் நற்பெயரை பாதுகாக்கும் எண்ணத்துடன் பணிபுரிவர். பெண்கள் புத்தாடை, அணிகலன் வாங்குவர். மாணவர்கள் பெற்றோர், கல்வி நிறுவனத்தில் பரிசு பெறுவர்.

சந்திராஷ்டமம்: 27.9.15 காலை 6:00 மணி முதல் மாலை 4:04 மணி வரை

பரிகாரம்:
பெருமாள் வழிபாடு, தொழிலில் வளர்ச்சி தரும்.

மனதில் உறுதியுடன் பணிபுரியும், சிம்ம ராசி அன்பர்களே!

சுக்கிரன், சந்திரனால் மட்டுமே நற்பலன் உண்டு. ஆடம்பரச் செயல்களை தவிர்ப்பதால் செலவு குறையும். பேச்சில் நிதானம் கொள்வது, உங்கள் நற்பெயரை பாதுகாக்கும். வீடு, வாகனத்தில் பராமரிப்பு செலவு ஏற்படும். புத்திரர்களின் உடல் நலத்திற்கு, சிறு அளவில் மருத்துவ சிகிச்சை தேவைப்படும். மனைவி வழி உறவினர்கள் உதவுவர். தொழில், வியாபாரம் சுமாரான பணவரவைத் தரும். பணியாளர்கள் அதிக வேலைப்பளுவை சந்திப்பர். பெண்கள் நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் தீவிர கவனம் செலுத்தினால் தான், அதிக மதிப்பெண் பெற முடியும்.

சந்திராஷ்டமம்: 27.9.15 மாலை 4:05 மணி முதல் 29.9.15 மாலை 4:57 மணி வரை.

பரிகாரம்: முருகனை வழிபடுவதால் புகழ் சேரும்.

எல்லார் வார்த்தைக்கு மதிப்பு தரும், கன்னி ராசி அன்பர்களே!

சனி, செவ்வாய், சுக்கிரனால் நன்மை உண்டாகும். மனதில் தைரியம் கூடும். தேவையற்ற அலைச்சல், பயணங்களைத் தவிர்க்கவும். புத்திரர்கள், உங்கள் சொல் கேட்டு நடப்பர். நோய், கடன் தொந்தரவு குறையும். மனைவியின் கருத்தை ஏற்பீர்கள். தொழில், வியாபாரத்தில் உருவாகிற இடையூறை சரி செய்வீர்கள். பணியாளர்கள் வேலை செய்யும்போது, பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். பெண்கள் குடும்ப நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் படிப்புடன் பொது அறிவிலும் மேம்படுவர்.

சந்திராஷ்டமம்: 29.9.15 மாலை 4:58 மணி முதல் 1.10.15 இரவு 9:19 மணி வரை.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு நிம்மதி தரும்.

நியாயம் நிலைக்க பணி செய்யும், துலாம் ராசி அன்பர்களே!

கேது, குரு, புதன், சுக்கிரன் நன்மை தருவர். பேசுவதில் நிதானம் வேண்டும். வெளியூர் பயணம் புதிய அனுபவம் தரும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். வழக்கு விவகாரத்தில் சுமுக தீர்வு கிடைக்கும். மனைவியின் செயல் பெருமை அளிக்கும். தொழில், வியாபாரம் செழித்து பணவரவு கூடும். பணியாளர்கள் பணி இலக்கை எளிதில் நிறைவேற்றுவர். பெண்கள், தாய்வீட்டு உதவி கேட்டுப்பெறுவர். மாணவர்கள் படிப்பில் மேன்மை அடைவர்.

சந்திராஷ்டமம்: 1.10.15 இரவு 9:20 மணி முதல் 3.10.15 இரவு 11:55 வரை.

பரிகாரம்:
விநயாகர் வழிபாடு, வெற்றியளிக்கும்.

நேர்மையான வழியில் செயல்படும், விருச்சிக ராசி அன்பர்களே!

புதன், ராகு, சூரியனால் நன்மை உண்டு. அந்தஸ்து உயரும். அரசாங்க உதவி பெற அனுகூலம் உண்டு. வாகன பராமரிப்பு செலவு குறையும். புத்திரர்கள், உங்களின் வழி காட்டுதலை ஏற்பர். மனைவியின் செயல்களில் ஏற்படும் குறையை பெரிதுபடுத்தி பேச வேண்டாம். வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும். உறவினர்களின் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்களுக்கு வீட்டுச் செலவுக்கு போதுமான பணம் கிடைக்கும். மாணவர்கள் கடுமையாக பயிற்சி எடுத்தால் தான், நல்ல மதிப்பெண் பெற முடியும்.

பரிகாரம்: சூரிய வழிபாடு, நன்மை தரும்.

சிந்தனையை செயல் வடிமாக்கும், தனுசு ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், சூரியன் நன்மை தருவர். செயல்களில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு அதிகம் பெற புதிய வழி பிறக்கும். உடன்பிறந்தவர்களின் செயலை குறை சொல்ல வேண்டாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர்கள் வகையில் சிறிதளவு மருத்துவச் செலவு வரலாம். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியின் ஆலோசனை வாழ்வில் நல்ல மாற்றம் தரும். தொழில், வியாபாரம் சுமாரான லாபம் தரும். பணியாளர்கள் வேலை இடத்தில், பாதுகாப்பில் கவனம் கொள்ளவும். பெண்களுக்கு செலவுகளில் சிக்கனம் வேண்டும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் கொள்வர்.

பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு நம்பிக்கை தரும்.

சூழ்நிலையை உணர்ந்து நடந்து கொள்ளும், மகர ராசி அன்பர்களே!

கேது, புதன், சுக்கிரன், சனி நன்மை தருவர். செயல்கள் வெற்றிகரமாக அமையும். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி கூடும். வாகன பராமரிப்பு செலவு உயரும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். நோய், கடன் தொந்தரவு தீரும். மனைவியின் செயல் குறையை பெரிதுபடுத்த மாட்டீர்கள். தொழில், வியாபாரம் செழித்து பணவரவு கூடும். பணியாளர்கள் வேலையை மிக எளிதாக எடுத்துக் கொள்வர். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள், புதிய பயிற்சி முறை மூலம் அதிக மதிப்பெண் பெறுவர்.

பரிகாரம்: பசுவுக்கு அகத்திக்கீரை, பழம் கொடுப்பது, தொழிலில் வளர்ச்சி தரும்.

பணிகளில் மனப்பூர்வமாக ஈடுபடும், கும்ப ராசி அன்பர்களே!

செவ்வாய், குரு, சந்திரன் நற்பலன் தருவர். சிலரின் புகழ்ச்சியைப் பெறுவதற்காக, சவாலான வேலைகளை ஏற்க வேண்டாம். மனதில் நம்பிக்கை வளரும். வீடு, வாகனத்தில் அதிக பாதுகாப்பு அவசியம். புத்திரர்களை அன்பாக வழி நடத்தவும். சீரான ஓய்வு, உடல் நலம் காக்கும். இல்லறத் துணையின் மனதில், உங்களைப் பற்றிய நல்ல மதிப்பீடு குறையாதபடி நடந்து கொள்ளுங்கள்.
தொழில், வியாபாரத்தில் போட்டி ஓரளவு குறையும். பணியாளர்கள் அதிக வேலைப்பளுவை சந்திப்பர். பெண்கள் ஆன்மிக சுற்றுலா செல்ல வாய்ப்புண்டு. மாணவர்கள் நண்பர்களின் செயலில் குறை கண்டுபிடிப்பதை தவிர்க்கவும்.

பரிகாரம்: கிருஷ்ணர் வழிபாடு, வாழ்வில் மேன்மை தரும்.

உழைப்பின் உன்னதம் போற்றும், மீன ராசி அன்பர்களே!

புதன், சந்திரனால் ஓரளவு நன்மை உண்டு. செயல்களில் நிதானம் வேண்டும். பொது இடங்களில் நடக்கும் பிரச்னையில் தலையிட வேண்டாம். பயணங்களால் ஓரளவு நன்மை கிடைக்கும்.
புத்திரர்கள் கேட்ட பொருள் வாங்கி தருவீர்கள். முன்னோர் செய்த நற்செயலுக்கான புண்ணியம் கிடைக்கும். மனைவியின் செயல் குளறுபடியை உருவாக்கும். தொழில், வியாபாரத்தில் அதிக மூலதனம் தேவைப்படும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை பின்பற்றவும். பெண்கள் நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் மேம்படுவர்.

பரிகாரம்: அம்மன் வழிபாடு, சகல நன்மையும் தரும்.

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *