images4-225x185

துணிவுடன் செயலாற்றும் மேஷ ராசி அன்பர்களே!

கேது, சூரியன், சுக்கிரனால் அதிக நன்மை ஏற்படும். புதிய உத்தியுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். குடும்ப விஷயத்தில் இனிய அனுபவம் பெறுவீர்கள். வாகனத்தின் பயன்பாடு அதிகரிக்கும். புத்திரர் உங்கள் வழிகாட்டுதல்களை அன்புடன் ஏற்றுக் கொள்வர். உறவினர்களின் உதவியால் குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியம் பலம் பெறும். மனைவியின் செயல்கள் சிறப்பாக அமைந்திடும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சியும் பணவரவும் கூடும். பணியாளர், நிர்வாகத்தின் சட்டதிட்டம் மதித்து செயல்படுவர். விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்கள், நற்செயலால் பெருமிதம் கொள்வர். மாணவர்கள், படிப்பில் அதிக தேர்ச்சி அடைவர்.

பரிகாரம்: சாஸ்தா வழிபாடு இடர் நீக்கும்.

லட்சியம் நிறைவேற உறுதியுடன் செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே!

சுக்கிரன், புதன், செவ்வாய், குரு நற்பலன் தருவர். எதிர்பார்த்த நன்மை தாமதமின்றி வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் அதிக அன்பு பாராட்டுவர். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். புத்திரர் பெருந்தன்மையுடன் பழகுவர். பணவரவுக்கேற்ப தாராளமாகச் செலவு செய்வீர்கள். மனைவி உங்கள் நல்ல குணத்தை பாராட்டுவார். தொழில், வியாபாரம் செழித்து லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் எளிதாக பணி இலக்கை நிறைவேற்றுவர். வெளியூர் பயணத்தின் மூலம் இனிய அனுபவம் காண்பீர்கள். பெண்கள், மனம் போல ஆடை, ஆபரணம் வாங்குவர். மாணவர்கள், படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம்:
ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.

செய்த உதவியைப் பெரிதுபடுத்தாத மிதுன ராசி அன்பர்களே!

ராகு, சனீஸ்வரர், சந்திரன் அதிகளவு நன்மை தருவர். மனதில் நம்பிக்கை வளரும். திட்டமிட்ட பணிகள் சிறப்பாக நிறைவேறும். வாகன வகையில் மராமத்து செலவு ஏற்படும். சமுகத்தில் நற்பெயரும், புகழும் தேடி வரும். புத்திரர் படிப்பு, வேலையில் முன்னேற்றம் காண்பர். ஆரோக்கியம் பலம் பெறும். வழக்கு விவகாரத்தில் வெற்றி கிடைக்கும். மனைவியுடன் கருத்து வேறுபாடு வராமல் ஒற்றுமையை பாதுகாக்கவும். தொழில் வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். பணியாளர்கள், பணிச்சுமையைத் திறம்பட சமாளிப்பர். பெண்கள், குடும்பச் செலவில் சிக்கனம் பின்பற்றுவர். மாணவர்கள், அக்கறையுடன் படிப்பில் ஈடுபடுவர்.

பரிகாரம்:
சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

நற்பெயர் பெற நல்வழியில் ஈடுபடும் கடக ராசி அன்பர்களே!

புதன், சந்திரன், அனுகூல அமர்வில் உள்ளனர். செயல்களில் மனிதாபிமானமும் நேர்த்தியும் வெளிப்படும். உடன்பிறந்தவருக்கு உதவுவீர்கள். பூர்வ சொத்து மூலம் வருமானம் கிடைக்கும். நிர்பந்த பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். புத்திரரின் குழப்பமான எண்ணங்களை சரிசெய்வீர்கள். அக்கம் பக்கத்தவர் அன்பு பாராட்டுவர். மனைவியின் செயல்களை குறை சொல்ல வேண்டாம். தொழில் வியாபாரத்தில் இடையூறு விலகி வளர்ச்சிப்பாதையில் நடைபோடுவீர்கள். பணியாளர்களுக்கு அதிர்ஷ்டவசமாக சலுகை கிடைக்கும். பெண்கள், உறவினர்களின் அன்பை பெறுவர். மாணவர்கள், அக்கறையுடன் படிப்பது அவசியம்.

பரிகாரம்:
நரசிம்மரை வழிபடுவது நல்லது.

புதிய கருத்துக்களை மனதார வரவேற்கும் சிம்ம ராசி அன்பர்களே!

குரு, செவ்வாய், சூரியன் நன்மை தருவர். சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புதிய வீடு வாகனம் வாங்க நல்யோகம் உண்டு. புத்திரர் மனதில் ஆன்மிக எண்ணம் வளரும்; படிப்பிலும் முன்னேறுவர். ஆரோக்கியம் சீராகும். வெளியூர் பயணத்தில் உரிய பாதுகாப்பு அவசியம். ஆடம்பரச் செலவைத் தவிர்க்கவும். மனைவியின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவது நல்லது. தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கடினமாக உழைப்பீர்கள். பணியாளர்கள், நிபந்தனையுடன் பணக்கடன் பெற வேண்டாம். பெண்கள், பிறர் விஷயத்தில் தலையிடுவது கூடாது. மாணவர்கள், ஞாபகத்திறன் வளர்த்து அதிக தேர்ச்சி அடைவர்.

பரிகாரம்:
விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

வாக்குறுதி தருவதில் நிதானம் பின்பற்றும் கன்னி ராசி அன்பர்களே!

புதன், சுக்கிரன், சனி, கேது அதிக நன்மை தருவர். சமூகத்தில் நற்பெயர் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். குடும்பச் செலவுக்கு தாராள பணவரவு கிடைக்கும். புத்திரர் பெற்றோரின் எண்ணங்களை மதித்து செயல்படுவர். உடல் ஆரோக்கியம் பாதுகாத்திடுவீர்கள். மனைவியின் செயல்பாடு குடும்பத்திற்கு நன்மை சேர்க்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற புதியவர்களின் ஆதரவு கிடைக்கும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து பரிசு பாராட்டு பெறுவர். பெண்கள், இஷ்டதெய்வ வழிபாடு நிறைவேற்றுவர். மாணவர்கள், நண்பரின் உதவியால் படிப்பில் முன்னேற்றம் அடைவர்.

பரிகாரம்: பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.

பணியை ஆர்வமுடன் மேற்கொள்கின்ற துலாம் ராசி அன்பர்களே!

ராகு, சுக்கிரன், சந்திரனால் நன்மை உண்டாகும். மனதில் இனம்புரியாத சஞ்சலம் ஏற்படலாம். பொது விஷயத்தில் அமைதி காப்பது நல்லது. உங்கள் நலம் விரும்புபவரின் ஆலோசனை நம்பிக்கை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். புத்திரரின் ஆர்வம் மிகுந்த செயல் நிறைவேற உதவுவீர்கள். அலைச்சல் பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதிரி சொந்த சிரமங்களால் இடம் மாறுவர். மனைவி வழி உறவினர் அதிக அன்பு பாராட்டுவர். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கடின உழைப்பு தேவைப்படும். பணியாளர்கள், பணிச்சுமைக்கு ஆளாகலாம். பெண்கள், பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்க கூடாது. மாணவர்கள், எளிய பயிற்சியால் படிப்பில் முன்னேறுவர்.

பரிகாரம்:
சிவன் வழிபாடு சகல நன்மை தரும்.

உற்சாகத்துடன் செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே!

சூரியன், குரு, சுக்கிரன் ஆதாய பலன் தருவர். மனதில் இருந்த தயக்கம் விலகும். பணிகளை அக்கறையுடன் நிறைவேற்றுவீர்கள். வாகன பயன்பாடு திருப்திகரமாகும். புத்திரரின் செயல்பாடு கண்டு பிறர் வியந்து பாராட்டுவர். பூர்வ சொத்தில் பணவரவு அதிகரிக்கும். சுற்றுலா சென்று வர திட்டமிடுவீர்கள். பகைவர் தொந்தரவு மறையும். மனைவியின் ஆலோசனையால் கவுரவம் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சிக்கான புதிய மாற்றங்களைச் செய்வீர்கள். பணியாளர்கள், நிர்வாகத்தின் சட்டதிட்டம் மதித்து செயல்படுவர். பெண்கள், வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். மாணவர்கள், நற்செயலால் ஆசிரியர் பெற்றோரிடம் பாராட்டு பெறுவர்.

பரிகாரம்:
சனீஸ்வரர் வழிபாடு வெற்றிக்கு வழி தரும்.

ஏழைகளுக்கு உதவும் தனுசு ராசி அன்பர்களே!

செவ்வாய், கேது, சுக்கிரன் அளப்பரிய நன்மை தருவர். உங்கள் பேச்சு, செயல்களில் நிதானம் நிறைந்திருக்கும். உறவினர் நண்பர்களுக்கு மனப்பூர்வமாக உதவுவீர்கள். குடும்பச் செலவு அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. புத்திரர்களின் செயல்கள் சிறப்பாக அமையும். பணம் கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். மனைவி உங்களிடம் அதிக பாசமாக இருப்பார். அரசாங்க உதவி பெற கூடுதல் முயற்சி தேவை. தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். பணியாளர்கள், சக பணியாளர்களுடன் உறவைக் குறைக்கவும். பெண்கள், குடும்ப எதிர்கால நலன் குறித்து கணவரிடம் ஆலோசனை செய்வர். மாணவர்கள், நன்றாக படித்து அதிக தேர்ச்சி பெறுவர்.

சந்திராஷ்டமம்:
24.1.16 காலை, 6:00 மணி 25.1.16 இரவு, 10:51 மணி.

பரிகாரம்: முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.

எந்தச் சூழலையும் சமாளிக்கும் திறனுள்ள மகர ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், சனீஸ்வரரால் நன்மையுண்டு. உங்கள் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை நிறைந்திருக்கும். பயணங்களை அளவுடன் மேற்கொள்வீர்கள். புத்திரர்கள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவி பாசத்துடன் குடும்பநலன் பேணுவார். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். சேமிப்பு கூடும். பணியாளர்கள் தொழில் நுட்பங்களை ஆர்வமுடன் அறிந்து சிறப்பாக செயல்படுவர். பெண்கள், புத்தாடை, நகை வாங்க அனுகூலம் உண்டு. மாணவர்கள், முயற்சியுடன் படித்தால் முன்னேறலாம்.

சந்திராஷ்டமம்: 25.1.16 இரவு, 10:52 மணி 28.1.16 காலை, 8:12 மணி.

பரிகாரம்: அம்பிகை வழிபாடு மகிழ்ச்சி தரும்.

செயல்களில் புதுமையை பின்பற்றும் கும்ப ராசி அன்பர்களே!

சுக்கிரன், சந்திரன், புதனால் அதிக நன்மை உண்டாகும். உடல்நலம் சுமாராக இருக்கும். பேச்சில் உண்மை நிறைந்திருக்கும். உறவினர்கள் சொந்தம் பாராட்டுவர். வாகனப் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். புத்திரர்கள் அறிவார்ந்த செயலால் பெற்றோருக்கு பெருமை தேடித்தருவர். கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். மனைவி விரும்பிக்கேட்ட பொருள் வாங்கித்தருவீர்கள். வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும். தொழில், வியாபாரத்தில் வருகின்ற இடையூறுகளை தாமதமின்றி சரி செய்தால் சிறப்பாக அமையும். பணியாளர்கள் பணியிடத்தின் சூழல் உணர்ந்து பணிபுரியவும். பெண்களுக்கு, இஷ்டதெய்வ அருளால் பிரார்த்தனை நிறைவேறும். மாணவர்கள், படிப்பில் சிறப்பான இலக்கை அடைவர்.

சந்திராஷ்டமம்: 28.1.16 காலை, 8:13 மணி 30.1.16 இரவு, 9:51 மணி.

பரிகாரம்:
தட்சிணாமூர்த்தி வழிபாடு மங்கள வாழ்வு தரும்.

பொறுப்புணர்வுடன் பணி நிறைவேற்றும் மீன ராசி அன்பர்களே!

சூரியன், புதன், குரு, ராகு வியத்தகு நற்பலன் தருவர். மனதில் உற்சாகமும் செயல்களில் புத்துணர்வும் வெளிப்படும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். புத்திரரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். எதிர்கால தேவை கருதி சேமிக்கவும் செய்வீர்கள். எதிரியால் இருந்த தொந்தரவு மறையும். உறவினர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும். மனைவி, குடும்ப நலனில் ஆர்வம் கொள்வார். தொழில் வியாபாரத்தில் உழைப்பின் மூலம் ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள், கடமை உணர்ந்து பணி இலக்கு பூர்த்தி செய்வர். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள், படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம்: துர்க்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *