shadow

download (2)

அடுத்தவரின் நற்செயலை மனதார பாராட்டுகிற, மேஷ ராசி அன்பர்களே!

உங்களுக்கு சூரியன், செவ்வாய், சுக்கிரன், ராகுவின் நல்லருள் பலமாக உள்ளது. தடைகளை தகர்த்தெறிவீர்கள். வாழ்வில் வளம் பெற, புதிய வாய்ப்பு தேடி வரும். உங்களுக்கு எதிராக பேசுபவர்களையும் நேசிப்பீர்கள். வீட்டில் மகிழ்ச்சி நிரம்பி இருக்கும். புத்திரர்களின் செயல்திறன் வளர உதவுவீர்கள். எதிரிகள் இடம் மாறுகிற நிலை உண்டு. இல்லறத்துணை உங்களுடன் இணக்கமாக இருப்பார். தொழில், வியாபாரத்தில் போட்டி கடுமையாக இருக்கும். பணியாளர்களுக்கு வேலைப்பளு கூடும்.பெண்கள், ஆடை, அணிகலன் வாங்க யோகம் உண்டு. மாணவர்கள் படிப்பில் கவனம் கொள்வர்.

பரிகாரம்:
நாகராஜர் வழிபாடு தொழிலில் வளர்ச்சி தரும்.

தகுதி திறமைக்கு ஏற்ப பணி மேற்கொள்ளும், ரிஷப ராசி அன்பர்களே!

உங்களுக்கு சுக்கிரன், சனி, கேது, நற்பலன் தருவர். முக்கியச் செயல்களை விரைந்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் பாசம் அதிகரிக்கும். பயணங்களை முக்கியத்துவம் கருதி மேற்கொள்ளலாம். வீடு, வாகனத்தில் பராமரிப்பு செலவு கூடும். புத்திரர்கள் தங்கள் செயல்களில் கவனக்குறைவாக இருக்கலாம். அதை எடுத்துச் சொல்லி சரி செய்யுங்கள். கடன்பாக்கி முயற்சியால் வசூலாகும். இல்லறத்துணை உங்கள் செயல்பாடுகளை பாராட்டுவார்.
தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். பணியாளர்கள் பொறுப்புணர்ந்து பணிபுரிந்து சலுகை பெறுவர். பெண்கள் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர். மாணவர்களுக்கு ஞாபகத்திறன் அதிகரிக்கும்.

பரிகாரம்:
அம்பாள் வழிபாடு குடும்ப ஒற்றுமையை வளர்க்கும்.

எதிர்ப்புகளை சமயோதிதமாக வெல்லும், மிதுன ராசி அன்பர்களே!

உங்களுக்கு சுக்கிரன், குரு நற்பலன் தருவர். தேவையற்றதை பேசுபவர்களிடம் இருந்து விலகி இருக்கவும். புதிய வேலைகள் உருவாகி நெருக்குதல் ஏற்படுத்தும்; அவற்றைச் சமாளித்தால் தான் இருப்பதைத் தக்க வைக்க முடியும். தாய்வழி உறவினர்களிடம் கருத்து வேறுபாடு வரலாம். புத்திரர்கள் விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள். இல்லறத்துணை வழங்கும் ஆலோசனை, வாழ்வில் முன்னேற்றத்தை உருவாக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். பணியாளர்கள் சுமாரான வருமானம் பெறுவர். பெண்கள் கணவருடன் இணக்கமாக இருப்பர். மாணவர்கள் பாதுகாப்பு குறைந்த இடங்களுக்கு செல்ல வேண்டாம்.

பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு செயலில் வெற்றி தரும்.

மனதில் புத்துணர்வுடன் செயல்படும், கடக ராசி அன்பர்களே!

உங்களுக்கு சுக்கிரன், ராகு, புதன் அளப்பரிய நற்பலன் தருவர். பேச்சிலும், செயலிலும் உற்சாகம் பிறக்கும். புதியவர்களின் உதவி கிடைத்து மனம் நெகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்கள் பாசத்தைக் கொட்டுவர். வீடு, வாகன வகையில் அபிவிருத்தி பணி செய்வீர்கள். புத்திரர்களின் செயல்களை ஒழுங்குபடுத்துவது நன்மை தரும். கடனில் ஒருபகுதியை செலுத்துவீர்கள். இல்லறத்துணை உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும். பெண்கள் வீட்டுச்செலவுக்கு போதுமான பணம் பெறுவர். மாணவர்கள், நண்பர்களின் உதவியால் நன்மை பெறுவர்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு ஊக்கம் தரும்.

முயற்சியை மூச்சாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!

உங்களுக்கு புதன், சூரியன், செவ்வாய், சுக்கிரன், சனி வியத்தகு அளவில் நற்பலன் தருவர். மனதில் தைரியம் வளரும். விலகிய உறவினர்கள் தேடி வருவர். குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சி நடந்தேறும். புதிய வீடு, வாகனம் வாங்க, யோகம் உண்டு. புத்திரர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பசு, பால் பாக்ய யோகம் உருவாகி, செல்வவளம் பெருகும். எதிர்ப்பாளரால் உருவான சிரமங்கள் பலமிழக்கும். இல்லறத்துணையின் அன்பில் மனம் மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில், லாபம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்களுக்கு, குடும்பத்தேவை நிறைவேறும். மாணவர்கள் மற்ற கலைகளை படிப்பதிலும் ஆர்வம் கொள்வர்.

பரிகாரம்:
விநாயகர் வழிபாடு, மங்கள வாழ்வு தரும்.

உலக நடப்புகளை அறிந்து கொள்ளும் கன்னி ராசி அன்பர்களே!

உங்களுக்கு சூரியன், சுக்கிரன், குருவின் நல்லருள் பலமாக உள்ளது. குடும்ப வாழ்வுமுறை, சீரான பாதையில் செல்லும், முயற்சிகள் சிறப்பாக நிறைவேறும். பணவரவு சுமார் என்பதால், முக்கிய செலவுகளை மட்டும் செய்வீர்கள். தம்பி, தங்கைகளுடன் கருத்து வேறுபாடு வரலாம். வீடு, வாகன பராமரிப்பு செலவு குறையும். புத்திரர்கள், உங்கள் சொல்லை மதிப்பர். இல்லறத்துணை வழிசார்ந்த உறவினர்கள் உதவுவர். தொழில், வியாபாரத்தில், அபிவிருத்தி பணிகள் சிறப்பாக நிறைவேறும். பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு, அதிகாரிகளிடம் நற்பெயர் பெறுவர். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்களின் செயலில், சுறுசுறுப்பு ஏற்படும்.

பரிகாரம்:
பைரவர் வழிபாடு இன்பம் சேர்க்கும்.

சோதனை காலத்திலும் மனம் தளராத துலாம் ராசி அன்பர்களே!

உங்களுக்கு புதன், கேது ஓரளவு நற்பலன் தருவர். செயல்களில் முன்யோசனை வேண்டும். பயணங்களில் உரிய பாதுகாப்பு முறையைப் பின்பற்றவும். உறவினர்கள் வகையில் செலவு செய்ய நேரிடலாம். இஷ்டதெய்வ அருள்பலம் துணை நிற்கும். புத்திரர்களின் செயல், பெருமை தேடித்தரும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். இல்லறத்துணை வழிசார்ந்த உறவினர்களுடன் பிரச்னை வரலாம். தொழிலில், உற்பத்தி, விற்பனை, அளவுடன் இருக்கும். பணியாளர்கள் பணியிடத்தில், தேவையற்றதை பேசி, வம்பில் சிக்க வேண்டாம். பெண்கள் எதையும் இரவல் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். மாணவர்கள் சிறப்பாக படிப்பர்.

பரிகாரம்:
மகாலட்சுமி வழிபாடு, தொழிலில் நன்மை தரும்.

எந்த பிரச்னையிலும் நியாயமாக நடக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!

உங்களுக்கு குரு, சுக்கிரன், ராகுவின் நல்லருள் பலமாக உள்ளது. மனம் மகிழ்வாக இருக்கும். பணிகள் நேர்த்தியாக நிறைவேறும். பணவரவும், நன்மையும் கூடும். நம்பகத்தன்மை இல்லாதவர்களுக்கு வீடு, வாகனத்தில் இடம் தர வேண்டாம். புத்திரர்களின் செயல்பாடு சிறப்பாக அமைய, ஆலோசனை வழங்குவீர்கள். உடல் நலத்திற்கு சிகிச்சை தேவைப்படலாம். இல்லறத்துணை, உங்கள் இன்ப, துன்பத்தில் பங்கு கொள்வார். தொழில், வியாபாரத்தில் இருந்த, சிரமமான நிலை சரியாகும். பணியாளர்களுக்கு வேலைப்பளு கூடும். பெண்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

பரிகாரம்: முருகனை வழிபடுவதால், சகல வளமும் கிடைக்கும்.

பிறர் துன்பம் போக்க, துணிந்து செயல்படும் தனுசு ராசி அன்பர்களே!

உங்களுக்கு சுக்கிரன், புதன், சனி நற்பலன் தருவர். குடும்பத்தில் ஒற்றுமை வளரும். உறவினர்களின் உதவி கிடைக்கும். முன்னேற்ற பாதையில் நடைபோடுவீர்கள். வாகனங்களில், மிதவேகமாகச் செல்லவும். புத்திரர்கள் அடம் பிடிக்கிறார்கள் என்பதற்காக, கேட்ட உணவு வகைகளைக் கொடுக்காதீர்கள். எதிர்ப்பாளர்களால் இருந்த தொந்தரவு விலகும். குடும்ப நலன் சிறக்க, இல்லறத்துணை, ஒத்துழைப்பு தருவார். தொழில், வியாபாரத்தில், சிரமம் இருக்கும். அவற்றுக்குரிய தீர்வை உடனே செய்வது நல்லது. பணியாளர்களின் பாதுகாப்பில், உரிய கவனம் வேண்டும். பெண்கள் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பர். மாணவர்கள் நண்பரால் உதவி பெறுவர்.

சந்திராஷ்டமம்: 21.6.15 காலை 6.00 முதல் மதியம் 12:01 மணி வரை.

பரிகாரம்:
சிவன் வழிபாடு மனதில் தைரியத்தை வளர்க்கும்.

குடும்ப நலனில் அதிக அக்கறை கொள்ளும் மகர ராசி அன்பர்களே!

உங்களுக்கு கேது, சூரியன், செவ்வாய், குரு நற்பலன் தருவர். வேற்றுமை பாராமல் எல்லாருக்கும் உதவுவீர்கள். உழைப்பிற்குரிய பலன் நிச்சயம் கிடைக்கும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பயணங்கள் இனிதாக அமையும். புத்திரர்களின் மனக்குறையை போக்கி மகிழச் செய்வீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்வு கிடைக்கும். இல்லறத்துணையின் உடல்நலத்தில், அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில், சுமாரான லாபம் கிடைக்கும். பணியாளர்கள், நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை மதித்து செயல்பட்டால், பிரச்னை வராது. பெண்கள் பிறருக்காக பணப்பொறுப்பை ஏற்க வேண்டாம். மாணவர் லட்சியத்துடன் படித்து முதல்நிலை பெறுவர்.

சந்திராஷ்டமம்: 21.6.15 மதியம் 12:02 முதல் 23.6.15 இரவு 11:30 மணி வரை.

பரிகாரம்: கிருஷ்ணர் வழிபாடு தொழில் வளர உதவும்.

கடின உழைப்பில் நம்பிக்கை கொண்ட கும்ப ராசி அன்பர்களே!

உங்களுக்கு சந்திரன், புதன் நற்பலன் தருவர். புதிய முதலீடு செய்வதில் நிதானம் வேண்டும். உடன் பிறந்தவர்களால் நன்மை ஏற்படும். வீடு, வாகன வகையில், பாதுகாப்பு அவசியம். பராமரிப்பு செலவு கூடும். புத்திரர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக சொத்தில் வளர்ச்சியும், வருமானமும் கூடும். இல்லறத்துணையின் பேச்சு, செயல், மனவருத்தம் தருவதாக இருக்கும். பொறுமை தேவை. தொழில், வியாபாரத்தில், கடும் உழைப்பால் மட்டுமே லாபம் பெற முடியும். பணியாளர்களுக்கு சலுகை பெற தாமதமாகும். பெண்கள் உடல்நலத்தில் கவனம் கொள்ளவும். மாணவர்களுக்கு ஞாபசக்தி அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம்: 23.6.15 இரவு 11:31 முதல் 26.6.15 காலை 11:01 மணி வரை

பரிகாரம்:
லட்சுமி வழிபாடு செல்வ வளத்தை தரும்.

மனதில் லட்சியத்துடன் பணிபுரியும் மீன ராசி அன்பர்களே!

உங்களுக்கு சுக்கிரன், குரு அதிக பலன் தருவர். புகழ்ந்து பேசுபவர்கள், குழி பறிக்க நினைப்பார்கள். கவனம். குடும்பத்தில் மங்கள நிகழ்வு ஏற்படும். பொது இடங்களில் நின்று, தேவையற்றதைப் பேச வேண்டாம். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும், புத்திரர்களின் சொல்லும், செயல்திறனும் மேம்படும். சீரான ஓய்வு, உடல் நலனை பாதுகாக்கும். இல்லறத்துணையின் ஆறுதல் வார்த்தை ஊக்கம் தரும். தொழில், வியாபாரம் செழித்து, பணவரவு கூடும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்களுக்கு சேமிக்கும் அளவு வருமானம் இருக்கும். மாணவர்கள் வெளியே சுற்றுவதை குறைத்தால் படிப்பில் முன்னேறலாம்.

சந்திராஷ்டமம்: 26.6.15 காலை 11:02 முதல் 27.6.15 இரவு 11.55 மணி வரை.

பரிகாரம்: தன்வந்திரி வழிபாடு, ஆரோக்கியம் தரும்.

Leave a Reply