shadow

download

காலத்தை பொன் போல மதிக்கும், மேஷ ராசி அன்பர்களே!

உங்களுக்கு சுக்கிரன், மற்றும் ராகு நற்பலன் தருவர். எவரிடமும் வெளிப்படையான மனதுடன் பழகுவீர்கள். பிரிந்த சொந்தங்கள் ஒன்று சேரும். உடன் பிறந்தவரால் உதவி உண்டு. வாகனம் இயக்கும் போது கவனம் தேவை. புத்திரர்களின் சொல்லும், செயலும் மாறுபடும் என்பதால் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பீர்கள். இல்லறத்துணை மதிப்பு, மரியாதை தருவார். தொழில், வியாபாரத்தில் போட்டியை சமாளித்து விடுவீர்கள். பணியாளர்களுக்கு, வேலையில் கவனம் தேவை. பெண்களிடம் சுமாரான பணப்புழக்கம் இருக்கும். மாணவர்கள், விரும்பிய கல்லுாரியில் சேர்வர்.

பரிகாரம்: நரசிம்மர் வழிபாடு, கஷ்டங்களை போக்கும்.

சூழ்நிலை அறிந்து நடந்து கொள்ளும், ரிஷப ராசி அன்பர்களே!

உங்களுக்கு சுக்கிரன், கேது நற்பலன் தருவர். மனச் சோர்வுக்கு இடம் தர வேண்டாம். வார்த்தையின் வசீகரத்தால், புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். அதிக விலையுள்ள பொருட்களை, கவனமாக பாதுகாக்கவும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. புத்திரர்கள், செயல்களில் நன்மை பெற உதவுவர். விருந்து, விழாக்களில் கலந்து கொள்வீர்கள். இல்லறத்துணையுடன் இணக்கமான போக்கு இருக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் பெற, கடுமையாக பாடுபட வேண்டி வரும். பணியாளர்களுக்கு, வேலைப்பளு அதிகரிக்கும். பெண்கள், ஆடம்பரத்தைக் குறைப்பது நல்லது. மாணவர்கள், எதிர்கால படிப்புக்குரிய ஆயத்தப் பணிகளை ஆர்வமாக செய்வர்.

பரிகாரம்:
சிவன் வழிபாடு, பணிகளில் வெற்றியை தரும்.

தன்னம்பிக்கை மிக்க, மிதுன ராசி அன்பர்களே!

உங்களுக்கு சுக்கிரன், குரு, சனி பகவானின் அமர்வு சிறப்பான இடங்களில் உள்ளது. மனம், செயலில் தெளிவு பிறக்கும். வளர்ச்சிக்குரிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தேவை பெருமளவில் பூர்த்தியாகும். சொத்து சம்பந்தமான ஆவணங்களை, பிறர் பொறுப்பில் கொடுக்க வேண்டாம். புத்திரர்கள், உங்கள் சொல் கேட்டு நடந்துகொள்வர். உடல்நிலை ஆரோக்கியம் பெறும். இல்லறத்துணை வழிசார்ந்த உறவினரால் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி, உபரி பணவரவு உண்டு. பணியாளர்கள், திறமையை வெளிப்படுத்தி பணபலன் பெறுவர். பெண்கள், குடும்பத்திற்காக முழு நேரமும் செலவழிப்பர். மாணவர்கள், சக மாணவர்களுடன் கருத்து வேறுபாடு கொள்ள நேரிடும்.

பரிகாரம்:
அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு நட்பு, ஒற்றுமையை வளர்க்கும்.

நற்பணிகளை செய்து, சமூகத்தில் அந்தஸ்து பெறும், கடக ராசி அன்பர்களே!

உங்களுக்கு குரு, சனி, கேது தவிர மற்ற கிரகங்கள் நற்பலன் தருவர். பொருளும், புகழும் கிடைத்து, எதிர்கால வாழ்வில் நம்பிக்கை கொள்வீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்வு உண்டாகும். புத்திரர்கள் விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். வழக்கு விவகாரங்கள் சுமுகத் தீர்வுக்கு வரும். இல்லறத்துணை, உங்களின் நல்ல குணத்தை பாராட்டுவார். தொழில், வியாபாரத்தில் இடையூறு அணுகாத பாதுகாப்பான சூழல் இருக்கும். பணியாளர்கள், ஊக்கத்தொகை பெறுவர். பெண்கள், வீட்டை அழகுபடுத்த, கலையம்சம் நிறைந்த பொருட்களை வாங்குவர். மாணவர்கள், சிறப்பாக படித்து நற்பெயர் பெறுவர்.

பரிகாரம்: லட்சுமி வழிபாடு, செல்வ வளம் தரும்.

இன்ப, துன்பத்தை சமமாக பார்க்கும், சிம்ம ராசி அன்பர்களே!

உங்களுக்கு சூரியன், புதன், சுக்கிரனின் அமர்வு அனுகூலமாக உள்ளது. மதி நுட்பத்துடன் செயல்பட்டு, வாழ்வை செம்மைப்படுத்துவீர்கள். புதியவர்களின் நட்பு, உதவி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவர். வாகனங்களில் செல்லும் போது, வேகத்தைக் குறைக்கவும். புத்திரர்கள், சில விஷயங்களில் அதிருப்தி கொள்வர். இல்லறத்துணை, சேமிப்பு பணத்தை தந்து உதவுவார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற சில மாற்றங்களைச் செய்வீர்கள். பணியாளர்களுக்கு, அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு வரலாம். பெண்கள், வீட்டுச்செலவுக்கு போதுமான பணம் பெறுவர். மாணவர்கள், பாதுகாப்பு குறைந்த இடங்களுக்குச் செல்லக்கூடாது.

பரிகாரம்:
முருகன் வழிபாடு, சிரமம் விலக உதவும்.

தன் தகுதியை உணர்ந்து வாழ்க்கை நடத்தும், கன்னி ராசி அன்பர்களே!

உங்களுக்கு குரு, சனி பகவானின் அமர்வு நற்பலன் தரும் வகையில் உள்ளது. புகழ் பெறுகிற எண்ணத்துடன் திட்டங்களை அமைப்பீர்கள். அடுத்தவர்களுடன் பேச்சைக் குறைக்க வேண்டும். குடும்பத்திற்கு பணத்தேவை அதிகரிக்கும். புத்திரர்கள், ஓரளவுக்கே உதவுவர். துஷ்டர்களைக் கண்டால் துாரச் சென்று விடுங்கள். இல்லறத்துணையுடன் கருத்து வேறுபாடு வரலாம். தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளிடையே பிரச்னை, பண பிரச்னை வரலாம்; கவனம். பணியாளர்கள், சற்று சிரமத்தின் பேரில் வேலைகளை முடிப்பர். பெண்கள், உறவினர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். மாணவர்கள், பெற்றோரின் எண்ணங்களுக்கு மதிப்பளிப்பர்.

சந்திராஷ்டமம்:
17.5.15 காலை 6:00 மணி முதல் 18.5.15 அதிகாலை 5:09 மணி வரை.


பரிகாரம்:
பைரவர் வழிபாடு, மேன்மை தரும்.

மனத் துாய்மையுடன் செயல்படும், துலாம் ராசி அன்பர்களே!

உங்களுக்கு புதன், கேது, சுக்கிரன், சந்திரன் நற்பலன் தருவர். திட்டங்களை மாற்றியமைத்து, முன்னேற்றத்திற்கு வழிவகுப்பீர்கள். பணவரவுக்கு ஏற்ப செலவும் அதிகரிக்கும். தாய்வழி உறவினரால் உதவி உண்டு. புத்திரர்களின் நற்செயலை பாராட்டுவீர்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். கடன் தொல்லையால் சில சிரமங்கள் வரலாம். இல்லறத் துணையின் ஆறுதல் வார்த்தை, நம்பிக்கை தரும். தொழில், வியாபாரம் வளர சில மாற்றங்களை செய்வீர்கள். பணியாளர்கள், பொறுமையைக் கடைபிடிக்கவும். பெண்கள், பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்களுக்கு, எதிர்பார்த்த பாடப்பிரிவில் சேர வாய்ப்பு கிடைக்கும்.

சந்திராஷ்டமம்:
18.5.15 அதிகாலை 5:10 மணி முதல் 20.5.15 காலை 10:40 மணி வரை.


பரிகாரம்:
பெருமாள் வழிபாடு, மங்களம் தரும்.

மனசாட்சிக்கு முக்கியத்துவம் தரும், விருச்சிக ராசி அன்பர்களே!

உங்களுக்கு குரு, சுக்கிரன், ராகு நற்பலன் தருவர். சோம்பலைத் தவிர்ப்பதால், நன்மை உண்டாகும்; புகழ் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களை குறை சொல்ல வேண்டாம். வாகனங்களை இயக்கும் போது கவனம் தேவை. புத்திரர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். கடன்பாக்கி ஓரளவு வசூலாகும். இல்லறத்துணை, குடும்ப நலனை பாதுகாப்பதில் அக்கறை கொள்வார். தொழில், வியாபாரத்தில் சிறுசிறு பிரச்னைகள் உண்டு. பணியாளர்கள், நிர்வாகத்துடன் கருத்து வேறுபாடு கொள்ள நேரிடும். பெண்கள், குடும்பத்தினரிடம் பாசம் கொள்வர். மாணவர்களுக்கு, நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும்.

சந்திராஷ்டமம்:
20.5.15 காலை 10:41 மணி முதல் 22.5.15 மாலை 6:23 மணி வரை.

பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு, மன உறுதியைத் தரும்.

தன் சக்தியையும் மீறி செயல்படும், தனுசு ராசி அன்பர்களே!

உங்களுக்கு சூரியன், செவ்வாய், புதனின் அமர்வு சிறப்பாக உள்ளது. நடக்காதோ என இருந்த விஷயங்களில், மாற்றம் உருவாகும். ஆர்வமுடன் பணிபுரிந்து, செல்வ வளம் பெறுவீர்கள். உறவினர் வருகையால், வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாகன பராமரிப்பு செலவு கூடும். புத்திரர்களின் உற்சாகம் நிறைந்த செயல், மனதை மகிழ்விக்கும். வழக்கு விவகாரத்தில் அனுகூலம் உண்டு. இல்லறத் துணையுடன் இணக்கமாக இருந்தால், வாழ்வு முன்னேறும். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். பணியாளர்கள், செலவுக்காக கடன் வாங்க நேரிடும். பெண்கள், பிறருக்கு நகை, பணம் இரவல் கொடுக்க வேண்டாம். மாணவர்கள், புதிய நண்பர்களிடம் கவனமாக இருக்கவும்.

சந்திராஷ்டமம்:
22.5.15 மாலை 6:24 மணி முதல் 23.5.15 இரவு 11:50 மணி வரை.


பரிகாரம்:
சூரிய வழிபாடு, பூர்வ புண்ணிய பலன் தரும்.

மனதில் சாந்தமும், கருணையும் உள்ள, மகர ராசி அன்பர்களே!

உங்களுக்கு குரு, சனி, கேதுவின் அமர்வு அனுகூலமாக உள்ளது. செயல்கள் நிறைவேற, முருகப் பெருமானின் அருள் துணை நிற்கும். இடம் உணர்ந்து பேசி, அனைவரது மதிப்பையும் பெறுவீர்கள். தாயின் தேவையை நிறைவேற்றுவதால், குடும்ப ஒற்றுமை பலம் பெறும். சொத்துகளை பராமரிக்க அதிகம் செலவாகும். உணவு கட்டுப்பாடு, உடல்நல ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இல்லறத் துணையின் செயல்களில் குளறுபடி ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். பணியாளர்கள், பணியில் அதிக அக்கறை கொள்வது நலம் தரும். பெண்களிடம், வீட்டுச்செலவுக்கு போதுமான பணம் இருக்கும். மாணவர்கள், பாதுகாப்பு குறைந்த இடங்களுக்கு செல்ல வேண்டாம்.

பரிகாரம்:
தன்வந்திரி வழிபாடு, உடல்நலத்தை தரும்.

தன் குறைகளை சரிசெய்து கொள்வதில் தயக்கமற்ற, கும்ப ராசி அன்பர்களே!

உங்களுக்கு புதன், சுக்கிரன் நற்பலன் தருவர். பூர்வ புண்ணிய பலன், செயல்கள் நிறைவேற துணையாக இருக்கும். குடும்பத்தேவையை நிறைவேற்ற அதிக பணம் செலவாகும். உடன் பிறந்தவர்களின் கருத்தை குறை சொல்ல வேண்டாம். பயணங்கள் இனிதாக அமையும். புத்திரர்களின் எதிர்காலம் சிறக்க, சில பணிகளை மேற்கொள்வீர்கள். நேரத்துக்கு சாப்பிட்டால், உடல்நலம் சிறப்பாக இருக்கும். இல்லறத் துணையுடன் உறவினர் இல்லம் சென்று வருவீர்கள். தொழில், வியாபாரத்தில் ஓரளவே லாபம் வரும். பணியாளர்கள், நிர்வாகத்தின் பாராட்டுடன் சலுகை பெறுவர். பெண்கள், ஆன்மிக சுற்றுலா சென்று வருவர். மாணவர்களுக்கு, எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும்.

பரிகாரம்:
அம்மன் வழிபாடு, குடும்ப ஒற்றுமையை பாதுகாக்கும்.

கடின வேலையையும் கனிவுடன் ஏற்கும், மீன ராசி அன்பர்களே!

உங்களுக்கு சூரியன், செவ்வாய், சுக்கிரன், குரு அனுகூல பலன் தருவர். சமூகத்தில் அதிக மதிப்பு, மரியாதை ஏற்படும். மனமும், செயலும் புத்துணர்வு பெறும். தம்பி, தங்கையின் அன்பு, பாசம் நெகிழ்ச்சி தரும். வாகனத்தில் மிதவேகம் நல்லது. பூர்வ சொத்தில் வளர்ச்சியும், பணவரவும் அதிகரிக்கும். எதிராக இருந்த விஷயங்களை சாதகமாக மாற்றுவீர்கள். புத்திரர்கள், அறிவுத்திறனில் மேம்படுவர். இல்லறத்துணை, உங்களின் நல்ல குணத்தை பாராட்டுவார். தொழில், வியாபாரம் செழிக்க புதியவர்களின் வருகை துணை நிற்கும். பணியாளர்கள், பணியிட சூழல் உணர்ந்து சிறப்பாக பணிபுரிவர். பெண்களுக்கு, ஓரளவு வருமானம் உண்டு. மாணவர்கள், பெற்றோர் சொல்லை மதித்து நடப்பர்.

பரிகாரம்
: விநாயகர் வழிபாடு, தொழிலில் நன்மை தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *