images

துன்பம் அடைந்தவருக்கு ஆறுதல் கூறும், மேஷ ராசி அன்பர்களே!

சுக்கிரன், கேது, சந்திரன் அதிகளவு நன்மை தருவர். திட்டமிட்ட பணிகள் சிறப்பாக நிறைவேறும். உறவினர்களின் உதவி கிடைக்கும். வாகனத்தின் பயன்பாடு அதிகரிக்கும். நற்பெயரும், புகழும் தேடி வரும். புத்திரர் படிப்பு, வேலையில் முன்னேற்றம் காண்பர். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். வழக்கு விவகாரத்தில் வெற்றி கிடைக்கும். மனைவி இணக்கமுடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை செழித்து, லாபம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கூடுதல் சலுகை கிடைக்கும். பெண்கள் தாராள பணச்செலவில், குடும்பத் தேவை நிறைவேற்றுவர். மாணவர்கள் விரும்பிய பொருட்களை, பெற்றோரிடம் கேட்டு வாங்குவர்.

பரிகாரம்:
சனீஸ்வரர் வழிபாடு, சங்கடம் தீர்க்கும்.

உண்மையான செல்வம் மன அமைதி தான் என வாழும், ரிஷப ராசி அன்பர்களே!

குரு, செவ்வாய், புதன் அனுகூல அமர்வில் உள்ளனர். செயல்களில் நேர்மை வெளிப்படும். உடன்பிறந்தவருக்கு உதவுவீர்கள். பூர்வ சொத்தில் வளர்ச்சியும், வருமானமும் கூடும். வீட்டுத் தேவைக்காக பணக்கடன் செலுத்துவீர்கள். புத்திரர், உங்கள் சொல்லை மதித்து நடப்பர். அக்கம் பக்கத்தவர் அன்பு பாராட்டுவர். மனைவியின் நற்செயல்களை முழுமனதுடன் பாராட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகி, வளர்ச்சிப் பாதையில் நடைபோடுவீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். பணியாளர்களுக்கு அதிர்ஷ்டவசமாக சலுகை கிடைக்கும். பெண்கள், உறவினர் குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சி நடத்த உதவுவர். மாணவர்கள், அக்கறையுடன் படித்து, அதிக மதிப்பெண் பெறுவர்.

பரிகாரம்: விநாயகர் வழிபாடு, வினை தீர்க்கும்.

சமயோசித செயலால், சாதனை புரியும், மிதுன ராசி அன்பர்களே!

ராகு, சனீஸ்வரர், சந்திரன் மட்டுமே நன்மை தருவர். செயல்களில் மனப்பூர்வமாக ஈடுபடுவதால் மட்டுமே, உரிய பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. புத்திரர் மனதில், ஆன்மிக எண்ணம் வளரும். படிப்பிலும் முன்னேறுவர். வெளியூர் பயணத்தில், உரிய பாதுகாப்பு அவசியம். நேரத்திற்கு உணவு உண்பதால், உடல் ஆரோக்கியம் பெறும். ஆடம்பரச் செலவு தவிர்க்கவும். மனைவி குடும்ப நலனில் அக்கறை கொள்வார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற, புதியவர்களின் ஆதரவு துணை நிற்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகைப் பயன் கிடைக்கும். பெண்கள், குடும்ப நலன் சிறக்க, அக்கறையுடன் செயல்புரிவர். மாணவர்கள் சாகச விளையாட்டுகளில் ஈடுபடக் கூடாது.

பரிகாரம்:
லட்சுமி வழிபாடு, செல்வ வளம் தரும்.

வாழ்க்கை வாழ்வதற்கே என்ற மனம் கொண்ட, கடக ராசி அன்பர்களே!

சுக்கிரன், புதன் அனுகூல பலன் தருவர். செயல்களில் மனிதாபிமானமும், நேர்த்தியும் உருவாகும். உடன் பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள். பூர்வ சொத்தில் மூலம் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. பணக்கடன் செலுத்துவீர்கள். பிள்ளைகளின் செயல்பாடு கண்டு பெருமிதம் கொள்வீர்கள். அக்கம் பக்கத்தவர் நல்அன்பு பாராட்டுவர். பகைவர் தொந்தரவு குறையும். மனைவியின் நற்செயல்களை முழுமனதுடன் பாராட்டுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இடையூறு விலகி, வளர்ச்சிப் பாதையில் நடைபோடுவீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். பணியாளர்களுக்கு பணியிடத்தில் செல்வாக்கு கூடும். பெண்கள், உறவினர்களுக்கு உதவி செய்து மகிழ்வர். மாணவர்கள் அக்கறையுடன் படித்து அதிக மதிப்பெண் பெறுவர்.

பரிகாரம்:
லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நல்லது.

நல்ல பணிக்கு பாராட்டு தானாக வரும் என கருதும், சிம்ம ராசி அன்பர்களே!

குரு, செவ்வாய், சுக்கிரன், சூரியனால் நன்மை உண்டாகும். மனதின் உற்சாகம் செயலில் வெளிப்படும். நண்பர், உறவினரின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் மங்கள நிகழ்வு ஏற்படும். பொது விவகாரங்களில் அமைதி காக்கவும். வெளியூர் பயணங்கள் இனிய அனுபவம் தரும். புத்திரரின் ஆர்வம் மிகுந்த செயல் நிறைவேற உதவுவீர்கள். எதிரி சொந்த சிரமங்களால் விலக நேரிடும். நோய் தொந்தரவு குறையும். மனைவி வழி உறவினர், அதிக அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி படிப்படியாக உருவாகும். பணியாளர், கூடுதல் வேலை வாய்ப்பை ஏற்று ஆதாயம் காண்பர். பெண்கள், வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். மாணவர்கள் படிப்புடன் கலை பயில்வதிலும் ஆர்வம் காட்டுவர்.

பரிகாரம்: சிவன் வழிபாடு, சகல நன்மை தரும்.

தான் செய்த உதவியை பெரிதுபடுத்தாத, கன்னி ராசி அன்பர்களே!

சுக்கிரன், சனி, புதன், கேது அளப்பரிய நன்மை தருவர். தர்ம கர்ம அதிபதி கிரகங்கள் அனுகூலமான இடத்தில் உள்ளதால், செயல்கள் சிறப்பாக அமையும். பணவரவு அதிகரிக்கும். புதிய வீடு வாகனம் வாங்க யோகம் உண்டு. புத்திரர், உங்கள் சொல் கேட்டு நடப்பர். பணம் கொடுக்கல், வாங்கலில் இருந்த தாமதம் விலகும். மனைவி, உங்களின் நல்ல குணம் உணர்ந்து பாசம் கொள்வார். அரசு உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நிலுவைப் பணம் வசூலிப்பதில் நிதானம் வேண்டும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரித்து, உபரி பணவரவு கிடைக்கும். பணியாளர்கள், பொறுப்புணர்வுடன் செயல்படுவர். பெண்களுக்கு ஆடை ஆபரணச்சேர்க்கை உண்டு. மாணவர்கள் நன்றாக படித்து, பெற்றோரிடம் பரிசு, பாராட்டு பெறுவர்.

சந்திராஷ்டமம்:
17.1.16 காலை 6:00 மணி முதல் 19.1.16 அதிகாலை 5:36 மணி வரை.


பரிகாரம்:
முருகன் வழிபாடு, நம்பிக்கை வளர்க்கும்.

நற்செயலில் மட்டும் ஈடுபடும், துலாம் ராசி அன்பர்களே!

ராகு, சுக்கிரன், சந்திரன் அனுகூல பலன் தரும் அமர்வில் உள்ளனர். கருணை நிறைந்த மனதுடன், நண்பர், உறவினர் கேட்ட உதவியை வழங்குவீர்கள். வெகுநாள் திட்டமிட்ட பணி, இஷ்ட தெய்வ அருளால் நிறைவேறும். வாழ்வியல் நடைமுறையை இன்னும் சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள். மனதில் தைரியம் வளரும். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். வாகனப் பயணம் எளிதாகும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். விருந்து, விழாவில் கலந்து கொள்ள உறவினர் அழைப்பர். மனைவி, உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரித்து, பணவரவு கூடும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிய அதிக தொழில் நுட்பம் அறிந்து செயல்படுவர். பெண்கள் குடும்ப நலனை கருத்தில் கொண்டு செயல்படுவர். மாணவர்கள் முயற்சியுடன் படித்து முன்னேற்றம் காண்பர்.

சந்திராஷ்டமம்:
19.1.16 அதிகாலை 5:37 மணி முதல் 21.1.16 காலை 9:21 மணி வரை.


பரிகாரம்:
அம்பிகை வழிபாடு, மகிழ்ச்சி தரும்.

வாக்குறுதி தருவதில் நிதானம் பின்பற்றும், விருச்சிக ராசி அன்பர்களே!

சுக்கிரன், குரு, சந்திரன் ஓரளவு நன்மை தருவர். அன்புக்கு உரியவரின் ஆலோசனை, உங்களை நல்வழிப்படுத்தும். பணம் கொடுக்கல், வாங்கலில் நிதானம் வேண்டும். வீடு, வாகனத்தில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடு கண்டு பெருமை கொள்வீர்கள். சத்தான உணவும், சீரான ஓய்வும் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். பகைவரை இனம் கண்டு விலகுவது நல்லது. மனைவியின் குறையை பெரிதுபடுத்தி பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் கடின உழைப்பு தேவைப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் தாமதமாகப் பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்கள், நகை பாதுகாப்பில், உரிய கவனம் பின்பற்றவும். மாணவர்கள், நண்பர்களிடம் நெருங்கிப் பழக வேண்டாம்.

சந்திராஷ்டமம்:
21.1.16 காலை 9:22 மணி முதல் 23.1.16 மதியம் 2:53 மணி வரை.


பரிகாரம்:
துர்க்கை வழிபாடு, தைரியம் வளர்க்கும்.

புதிய கருத்துக்களை மனதார வரவேற்கும் தனுசுராசி அன்பர்களே!

சுக்கிரன் செவ்வாய் கேது நன்மை தருவர். ஆரோக்கியம் மேம்படும். அன்றாடப் பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். பேச்சில் ஆன்மிக கருத்து மிகுந்திருக்கும். உறவினர்களுடன் சந்திப்பால் மகிழ்ச்சி ஏற்படும். வாகன பயன்பாட்டால் இனிய அனுபவம் உண்டாகும். பிள்ளைகள் அறிவார்ந்த செயலால் பெருமை தேடித்தருவர். கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். தொழில் வியாபாரம் கூடுதல் உழைப்பால் வளர்ச்சி பெறும். பணியாளர் பணியிடத்தின் சூழல் உணர்ந்து பணிபுரியவும். பெண்கள் குடும்ப உறுப்பினர்களின் நல்அன்பை பெறுவர்; மாணவர்கள் படிப்பில் அக்கறையுடன் ஈடுபடுவர்.

சந்திராஷ்டமம்:
23.1.16 மதியம் 2:54 மணி முதல் நாள் முழுவதும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு மங்கள வாழ்வு தரும்.

மாற்றுத் திட்டத்தின் மூலம் அதிக நன்மை பெறும், மகர ராசி அன்பர்களே!

குரு, சனி, சுக்கிரன் அதிகளவில் நன்மை தருவர். புதிய யுக்தியுடன் பணிகளை துவங்குவீர்கள். அன்றாட வாழ்வில், இனிய அனுபவம் காண்பீர்கள். வாகன பயன்பாடு அதிகரிக்கும். புத்திரர், உங்கள் வழிகாட்டுதலை ஏற்று பின்பற்றுவர். உறவினர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். ஆரோக்கியம் பலம் பெறும். மனைவியின் செயல்களில் சிறு குளறுபடி வரலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நண்பர் கேட்ட பண உதவியை தாராளமாக வழங்குவீர்கள். பணியாளர் நிர்வாகத்தின் சட்டதிட்டம் உணர்ந்து செயல்படுவர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் சிறப்பிடம் பெறுவர்.

பரிகாரம்: சாஸ்தா வழிபாடு, இடர் நீக்கும்.

பணியை நேர்த்தியுடன் மேற்கொள்ளும், கும்ப ராசி அன்பர்களே!

புதன், சந்திரனால் நன்மை உண்டு. எதிர்பார்த்த நன்மை வர தாமதமாகலாம். உடன்பிறந்தவரின் கருத்தை விமர்சிக்க வேண்டாம். மன அமைதியை பாதுகாக்கவும். புத்திரர் சில விஷயங்களில் பிடிவாதத்துடன் செயல்படுவர். பணக்கடன் பெற வேண்டாம். மனைவி பெருந்தன்மை குணத்துடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணியிலக்கை முடிக்க, அதிக அவகாசம் தேவைப்படும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும். பெண்கள் வீட்டுச்செலவில் சிக்கனம் பின்பற்றுவர். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம்:
ஆஞ்சநேயர் வழிபாடு, நன்மை தரும்.

அடுத்தவரின் நற்செயலை பாராட்டும், மீன ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், புதன், சூரியன் ஆதாய பலன் தருவர். மனதில் உத்வேகமும், செயல்களில் வசீகரமும் ஏற்படும். பணிகளைத் திட்டமிட்டு செயலாற்றுவீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். பணவரவு சீராகும். எதிரியால் இருந்த தொந்தரவு குறையும். புத்திரரின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். எதிர்கால தேவை கருதி சேமிக்கவும் செய்வீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனைவி சிறு விஷயங்களிலும் அக்கறை கொள்வார். தொழில், வியாபாரத்தில் கூடுதல் உழைப்பு தேவைப்படும். லாபம் படிப்படியாக உயரும். பணியாளர்கள், பணிகளை விரைந்து நிறைவேற்றி நற்பெயர் பெறுவர். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம்:
மாரியம்மன் வழிபாடு, நன்மை தரும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *