shadow

download (2)

அன்பும், கருணையும் நிறைந்த, மேஷ ராசி அன்பர்களே!

ராசிநாதன் செவ்வாய் சூரியனுடன் அனுகூலமாக உள்ளார். சுக்கிரன், ராகு அதிக பலன் தருவர். பணவரவு, புகழ் கிடைக்கும். தம்பி, தங்கை அன்புடன் நடந்து கொள்வர். வீடு, வாகனம் வாங்குவீர்கள். புத்திரர்களின் நற்செயல், பெருமை தேடித்தரும். எதிரிகளால் உருவான இடையூறு விலகும். இல்லறத் துணை விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபராத்தில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். வெளியூர் பயணம், இனிய அனுபவம் தரும். பணியாளர்களுக்கு, சலுகை கிடைக்கும். பெண்கள், குடும்பநலன் பேணுவர். மாணவர்கள், அறிவுத்திறனில் மேம்படுவர்.

பரிகாரம்:
பைரவரை வழிபடுவதால், நன்மை மேலோங்கும்.

பிறரை வசீகரிக்கும் விதமாக பேசும், ரிஷப ராசி அன்பர்களே!

ராசிநாதன் சுக்கிரன், கேது இவர்களுடன் வக்ரகதியான சனிபகவானும் நற்பலன் தருவர். எதிர்ப்பு விலகி, முன்னேற புதியபாதை உருவாகும். வளர்ச்சிப் பணிகளுக்கு, சேமித்த பணம் பயன்படும். உடன் பிறந்தவர்களின் செயலை குறை சொல்ல வேண்டாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர்கள் மனக்குழப்பம் அடைவர். ஆரோக்கியம் மேம்படும். இல்லறத் துணை அன்புடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரம் விருத்தியாகும். பணியாளர்கள் அதிகாரிகளிடம் நற்பெயர் பெறுவர். பெண்கள் வேண்டிய பிரார்த்தனை நிறைவேறும். மாணவர்கள், சிறப்பாக படிப்பர்.

பரிகாரம்:
முருகனை வழிபடுவதால், வாழ்க்கைத் தரம் உயரும்.

பெருந்தன்மையான குணத்தால் நன்மை பெறும், மிதுன ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன் நற்பலன் தருவர். புதியவர்களின் நட்பு கிடைக்கும். பேச்சில் கனிவு பிறக்கும். வீடு, வாகனத்தில் பராமரிப்பு தேவைப்படும். புத்திரர்களின் சிந்தனையும், செயலும் அறிவுப்பூர்வமாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். விரும்பாததை பேசுவோரிடம் இருந்து விலகுவது நல்லது. இல்லறத் துணையின் ஆறுதல் வார்த்தை, மன சங்கடத்தை போக்கும். தொழில், வியாபாரத்தில் இப்போதைய நிலை தொடரும். பணியாளர்கள், நிர்வாகத்தின் சட்டதிட்டத்தை ஏற்று செயல்படுவதால், பிரச்னை குறையும். பெண்கள், உறவினர்களுக்கு உதவுவர். மாணவர்கள், அக்கறையுடன் படிக்க வேண்டும்.

பரிகாரம்:
மகாலட்சுமியை வழிபடுவதால், பணவரவு கூடும்.

விவேகம் நிறைந்த செயல்களால் புகழ் பெறும், கடக ராசிக்காரர்களே!

சுக்கிரன், ராகு, புதன் நற்பலன் தருவர். சனி துலாத்தில் வக்ரகதியாகி அர்த்தாஷ்டம் சனியின் தாக்கத்தை தருகிறார். செயல்களில் முன்யோசனை வேண்டும். பேரும், புகழும் தேடிவரும். செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும். புத்திரர்களை கண்டிப்பதில் நிதானம் வேண்டும். விஷப்பிராணிகளிடம் விலகவும். இல்லறத் துணை, உங்களின் நல்ல குணத்தை பாராட்டுவார். தொழில் சார்ந்த உதவி கிடைக்க தாமதம் ஆகலாம். பணியாளர்கள், சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு, தாய்வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள், கடும் முயற்சி எடுத்து படிக்க வேண்டும்.

பரிகாரம்:
ராமபிரானை வழிபடுவதால், மன பிரச்னை தீரும்.

மனதில் துணிவுடன் செயல்படும், சிம்ம ராசி அன்பர்களே!

ராசிநாதன் சூரியன் லாப ஸ்தானத்தில் செவ்வாயுடன் அனுகூலமாக உள்ளார். புதன், சுக்கிரன், வக்ரகதியான சனி மிகப்பெரும் நற்பலன் தருவர். கடந்த கால செயல்களுக்கான நன்மை கிடைக்கும். சுயதிறமை மேம்படும். தம்பி, தங்கைக்கு சுப நிகழ்ச்சி நடக்கும். உறவினர்களின் வருகை, மகிழ்ச்சி தரும். பூர்வ சொத்தில் பணவரவு அதிகரிக்கும். இல்லறத் துணை அன்புடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரம் வளர, அரசு சார்ந்த உதவி பெற அனுகூலம் உண்டு. பணியாளர்களுக்கு பணி உயர்வு, சன்மானம் கிடைக்கும். பெண்கள், புத்தாடை, நகை வாங்குவர். மாணவர்களின் ஞாபகத்திறன் வளரும்.

பரிகாரம்: மாரியம்மன் வழிபாடு, வீட்டில் மகிழ்ச்சியை தரும்.

நட்பிற்கு முக்கியத்துவம் தரும், கன்னி ராசி அன்பர்களே!

சூரியன், குரு, சுக்கிரன் நற்பலன் தருவர். சனி வக்ரகதியாகி வாக்கு ஸ்தானத்திற்கு வருகிறார். எவருடனும் வாக்குவாதம் வைத்துக் கொள்ள வேண்டாம். வருகின்ற வாய்ப்புகளை, நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தாய்வழி உறவினர்களுக்கு, இயன்ற அளவில் உதவுவீர்கள். புத்திரர்கள், சுமுக உறவு கொள்வர். இல்லறத் துணை, இணக்கமாக செயல்படுவார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும், லாபமும் உண்டு. பணியாளர்களின் திறமை பளிச்சிடுவதுடன், சலுகையும் கிடைக்கும். பெண்கள், பிள்ளைகள் நலனுக்காக பாடுபடுவர். மாணவர்கள், படிப்பில் கவனமாக இருக்க வேண்டும்.

சந்திராஷ்டமம்:
14.6.15 காலை 6:00 முதல் பிற்பகல் 1:19 மணி வரை.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு, மனதிற்கு உற்சாகம் தரும்.

உலகநடப்புகளை அறிவதில் ஆர்வமுள்ள, துலாம் ராசி அன்பர்களே!

புதன், கேது நற்பலன் தருவர். சனிபகவான் வக்ரகதியாகி ராசியில் இடம் பெறுகிறார். இதனால், சிந்தனை, செயலில் குழப்பம் ஏற்படும். பிறர் விஷயத்தில் கருத்து சொல்ல வேண்டாம். பயணங்களை அளவுடன் மேற்கொள்ளவும். புத்திரர்கள், உங்கள் சொல் கேட்டு நடப்பர். எதிர்ப்பாளர்களை கண்டாலே விலகவும். இல்லறத் துணையுடன் கருத்து வேறுபாடு வரலாம். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். பணியாளர்களுக்கு வேலைப்பளு கூடும். பெண்கள், பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்க வேண்டாம். மாணவர்கள், நன்றாகப் படிப்பர்.

சந்திராஷ்டமம்:
14.6.15 பிற்பகல் 1:20 முதல் 16.6.15 மாலை 6:30 மணி வரை


பரிகாரம்:
சிவன் வழிபாடு, குடும்பத்தில் ஒற்றுமையை வளர்க்கும்.

உயர்ந்த சிந்தனையை பின்பற்றும், விருச்சிக ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், ராகு நற்பலன் தருவர். குடும்ப உறுப்பினர்களின் கருத்தை மதித்து செயல்படுவீர்கள். வீடு, வாகனத்தில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். இனிய அனுபவம் தரும் சம்பவங்கள் நிகழும். புத்திரர்களின் செயல்களை பாராட்டி, சுமுக உறவு கொள்வீர்கள். உடல் நலத்தில் உரிய கவனம் வேண்டும். இல்லறத் துணை வழிசார்ந்த உறவினர்கள் உதவுவர். தொழில், வியாபாரத்தில் இடையூறுகள் இருந்தாலும், சரி செய்ய வழியும் கிடைக்கும். பணியாளர்கள், நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை மதித்து நடந்தால் பிரச்னை குறையும். பெண்களுக்கு, தாய்வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள், திறமையை வளர்த்துக் கொள்வர்.

சந்திராஷ்டமம்:
16.6.15 மாலை 6:31 முதல் 18.6.15 நள்ளிரவு 2:49 மணி வரை.


பரிகாரம்:
ஆஞ்சநேயர் வழிபாடு, சிரமத்தை தவிர்க்கும்.

இனிய அணுகுமுறையால் செயல்களை நிறைவேற்றும், தனுசு ராசி அன்பர்களே!

புதன், சுக்கிரன் சனி அனுகூல பலன் தருவர். ஆதாயங்களை பெற முயற்சி எடுப்பீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும். பூர்வச் சொத்தில் வளர்ச்சியும், வருமானமும் கூடும். வீடு, வாகனத்தில் உரிய பாதுகாப்பு பின்பற்றவும். வழக்கு விவகாரத்தில் வெற்றி கிடைக்கும். புத்திரர்களை வழிநடத்துவதில், இதமான அணுகுமுறை நல்லது. இல்லறத் துணை, உங்களின் பணிசிறக்க உதவுவார். தொழில், வியாபாரத்தில் செய்த மாற்றம் நல்ல பலன் தரும். பணியாளர்கள், பணி இலக்கை குறித்த நேரத்தில் நிறைவேற்றுவர். பெண்களுக்கு, வீட்டு செலவுக்கு சற்று சிரமம் இருக்கும். மாணவர்கள், புதியவர்களின் நட்பை பெறுவர்.

சந்திராஷ்டமம்: 18.6.15 நள்ளிரவு 2:50 முதல் 20.6.15 இரவு 11:30 மணி வரை.

பரிகாரம்:
விநாயகர் வழிபாடு, நன்மை தரும்.

இயன்ற அளவில் பிறருக்கு உதவும், மகர ராசி அன்பர்களே!

கேது, சூரியன் செவ்வாய், குரு ஆகியோரால் நன்மை அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றி வருவீர்கள். வாழ்க்கைத்தரம் மேம்படும். சமூகப்பணியிலும் ஈடுபடுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. விருந்து, விழா மூலம் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிருப்தி உருவாகலாம். விரைவில், ஆன்மிக சுற்றுலா சென்று வரத் திட்டமிடுவீர்கள். மனைவியின் கருத்தை ஏற்பது நன்மையளிக்கும். தொழில், வியாபாரத்தில் சுமாரான ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள், சுதந்திர மனப்பான்மையுடன் பணியாற்றுவர். பெண்கள், ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். மாணவர்கள், உற்சாகமுடன் படிப்பர்.

பரிகாரம்: தன்வந்திரி வழிபாடு, ஆரோக்கியம் அளிக்கும்.

வாழ்வை திட்டமிட்டு அமைத்திடும், கும்ப ராசி அன்பர்களே!

புதன், சந்திரன் மட்டுமே நற்பலன் தருவர். உடன்பிறந்தவரின் எதிர்பார்ப்பை ஓரளவு நிறைவேற்றுவீர்கள். வெளியூர் பயணத்தால், இனிய அனுபவம் உண்டாகும். பிள்ளைகள் பெருமை தேடித் தருவர். எதிர்மறையான குணம் படைத்தவர்களிடம் இருந்து விலகுவது நல்லது. மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கேற்ப ஆதாயம் காண்பீர்கள். பணியாளர்கள், பணி தவிர்த்த பிற விஷயங்களில் ஈடுபட வேண்டாம். பெண்கள், குடும்ப நலனுக்காக பாடுபடுவர். மாணவர்கள், கல்வியில் சிறந்து விளங்குவர்.

பரிகாரம்:
சாஸ்தா வழிபாடு, வாழ்வை மேம்படுத்தும்.

வாக்குறுதியை காப்பாற்ற முயலும், மீன ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன் நன்மை தர காத்திருக்கின்றனர். இனிய பேச்சால், பிறரை கவர்வீர்கள். சுப விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்காலம் குறித்து, புதிய திட்டம் தீட்டுவீர்கள். நம்பகமானவர்களை உதவிக்கு வைத்துக் கொள்வது நல்லது. மகளின் ஜாதக யோகத்தால் நன்மை உண்டாகும். உடல் நலம் பேணுவதில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர் வருகையால், வீட்டில் கலகலப்பு கூடும். மனைவி விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் உயரும். பணியாளர்களுக்கு, சலுகை கிடைக்கும். பெண்கள், வீட்டு நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள், ஆர்வமுடன் படித்து சிறப்பர்.

பரிகாரம்: சனிபகவான் வழிபாட்டால், முன்னேற்றம் உண்டாகும்.

Leave a Reply