download (1)

பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடும், மேஷ ராசி அன்பர்களே!

ராகு, செவ்வாய், குரு நன்மை தருவர். தந்தை வழி உறவினர்கள் உதவுவர். குடும்பத்தின் தேவையை தாராள செலவில் நிறைவேற்றுவீர்கள். விவகாரங்களில் சமரச தீர்வு கிடைக்கும்.
புத்திரர்கள் உங்கள் சொல் கேட்டு நடந்து பெருமை தேடித்தருவர். எதிர்கால வாழ்வில் நம்பிக்கை கூடும். வெளியூர் பயணத்தில், உரிய பாதுகாப்பு வேண்டும். மனைவியின் கருத்தை ஏற்பதால், குடும்ப ஒற்றுமை வளரும். தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேற தாமதமாகலாம். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும். பெண்கள் பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்கக் கூடாது. மாணவர்கள் படிப்பில் முன்னேற நண்பரின் உதவி கிடைக்கும்.

பரிகாரம்:
சனீஸ்வரர் வழிபாடு, சங்கடம் தீர்க்கும்.

பிறரது ஆலோசனையையும் ஏற்கும், ரிஷப ராசி அன்பர்களே!

புதன், கேது, சந்திரன் நற்பலன் தருவர். செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட பணி குறித்த காலத்தில் நிறைவேறும். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். புத்திரர்கள் படிப்பு, வேலையில் திறமையை வளர்த்துக் கொள்வர். வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். மனைவியின் உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். பணியாளர்கள் கூடுதல் சலுகையும், பணவரவும் பெறுவர். பெண்கள் செலவில் சிக்கனம் பின்பற்றுவது நல்லது. மாணவர்கள் வெளியிடம் சுற்றுவதை குறைக்கவும்.

சந்திராஷ்டமம்: 13.12.15 காலை 6:00 மணி முதல் 14.12.15 காலை 9:14 மணி வரை.

பரிகாரம்:
பெருமாள் வழிபாடு, செல்வ வளம் தரும்.

செலவில் சிக்கனம் பின்பற்றும், மிதுன ராசி அன்பர்களே!

சனி, சூரியன், சுக்கிரன் அளப்பரிய நற்பலன் தருவர். மனதில் நம்பிக்கை ஏற்படும். பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். பூர்வ சொத்தில் பணவரவு கூடும். புத்திரர்கள் பெற்றோரின் சொல் கேட்டு நடப்பர். உறவினர்கள், நண்பர்கள் அன்புடன் நடந்து கொள்வர். அரசு சார்ந்த சில நன்மைகள் கிடைக்கும். விருந்து, விழாவில் கலந்து மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சுப செய்தி கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் அதிக மூலதனத்தில் அபிவிருத்தி பணி செய்வீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள், குடும்ப உறுப்பினர்களின் பாராட்டைப் பெறுவர். மாணவர்கள் படிப்புடன் பொது அறிவிலும் மேம்படுவர்.

சந்திராஷ்டமம்: 14.12.15 காலை 9:15 மணி முதல் 16.12.15 மதியம் 1:27 மணி வரை.

பரிகாரம்: விநாயகர் வழிபாடு, வினை தீர்க்கும்.

உதவும் மனப்பான்மையுள்ள கடக ராசி அன்பர்களே!

சனி, கேது, சூரியன் தவிர மற்ற கிரகங்கள் ஆதாய பலன் தருவர். இனிய எண்ணங்கள் மனதை உற்சாகப்படுத்தும். ஒதுக்கி வைத்த பணியை விருப்பமுடன் நிறைவேற்றுவீர்கள். புதியவர்களின் அறிமுகம் உதவி எதிர்பாராமல் கிடைக்கும். இளைய சகோதர வகையில், மங்கல நிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தை சுமுகமாக அமையும். புத்திரர்கள் சில விஷயங்களில் பிடிவாதம் செய்வர். நோய் தொந்தரவு குறையும். மனைவி அன்புடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும், பணவரவும் கூடும். பணியாளர்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு சலுகை பெறுவர். பெண்கள் விரும்பிய பொருள் வாங்க பணவசதி துணை நிற்கும். மாணவர்கள் நன்றாகப் படித்து நற்பெயர் பெறுவர்.

சந்திராஷ்டமம்: 16.12.15 மதியம் 1:28 மணி முதல் 18.12.15 மாலை 4:26 மணி வரை.

பரிகாரம்: சாஸ்தா வழிபாடு, இடர் நீக்கும்.

நண்பர்களுக்கு உதவும் குணம் கொண்ட, சிம்ம ராசி அன்பர்களே!

சுக்கிரன், சந்திரன் ஓரளவு நன்மை தருவர். சுற்றுப்புற சூழ்நிலை தருகிற தொந்தரவினால் மனதில் கோபம், நிதானமின்மை ஏற்படலாம். புத்திரர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படலாம். கவனம் தேவை. மாறுபட்ட கருத்து உள்ளவர்களை விட்டு விலகுவது நல்லது. மனைவியின் சொல்லும், செயலும் குடும்ப நலனுக்கு உதவும். பயணத்தில் பாதுகாப்பு பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் இருக்கும். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் ஓரளவு சலுகை கிடைக்கும். பெண்கள், தாய் வீட்டு உதவி பெறுவர். மாணவர்கள் புதியவர்களுடன் பழகுவதில் நிதானம் வேண்டும்.

சந்திராஷ்டமம்: 18.12.15 மாலை 4:27 மணி முதல் 19.12.15 இரவு 12:00 மணி வரை.

பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு, வெற்றியளிக்கும்.

குடும்ப நலனில் அக்கறையுள்ள, கன்னி ராசி அன்பர்களே!

சூரியன், சுக்கிரன், புதன், சனி நன்மை தருவர். மனதில் தைரியம், செயலில் திறமை வெளிப்படும். பொதுநலப் பணியில் ஈடுபாடு வளரும். புத்திரர்கள் படிப்பு, வேலையில் முன்னேற்றம் காண்பர். நண்பர்களிடம் கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். மனைவி வழி சார்ந்த உறவினர்கள் உதவுவர். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரித்து சேமிப்பு கூடும். பணியாளர்கள் குறித்த காலத்தில், பணிகளை முடித்து அதிகாரிகளிடம் நற்பெயர் பெறுவர். பெண்கள் சிக்கனமாக இருந்து சேமிப்பர். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பர்.

பரிகாரம்: அம்பிகை வழிபாடு, மங்கள வாழ்வு தரும்.

உண்மையை கண்ணென போற்றும், துலாம் ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், கேதுவினால் அதிக நன்மை உண்டு. தாயின் அன்பு, ஆசி கிடைக்கும். வீண்செலவு குறையும். புத்திரர்கள் உலக நடப்புக்களை அறிவதில் ஆர்வம் கொள்வர். உடல்நிலையில் கவனம் தேவை. மனைவி சொல்லும் ஆலோசனையை ஏற்பது நன்மை தரும். தொழில், வியாபாரம் செழிக்கும். பாக்கிப் பணம் வசூலாகும். பணியாளர்கள், தன் கடமையை உணர்ந்து பணிபுரிவர். பெண்கள், உறவினர் குடும்பத்தில் ஒற்றுமை வளர உதவுவர். மாணவர்கள் நன்றாக படித்து சிறந்த தரத்தேர்ச்சி பெறுவர்.

பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு, நன்மை தரும்.

செயல்களை சிறப்பாக செய்து முடிக்கும், விருச்சிக ராசி அன்பர்களே!

செவ்வாய், ராகு, சுக்கிரன் நற்பலன் தருவர். பணிகளை விரைந்து முடிக்க வாய்ப்பு கிடைக்கும். நல்லவர்களின் உதவி கை கொடுக்கும். தாயாரின் தேவையை நிறைவேற்றுவீர்கள். புத்திரர்கள் உங்கள் வழிகாட்டுதல்களை ஏற்றுக்கொள்வர். மனமும், உடலும் புத்துணர்வு பெறும். மனைவி வழி உறவினர்கள், உங்களுடன் சுமுக உறவு கொள்வர். பயணங்கள் இனிய அனுபவம் தரும். தொழில், வியாபாரம் பெருமளவு வளர்ச்சி பெறும். பணியாளர்கள், தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள, வெளியூர்களுக்கு செல்ல வேண்டி வரும். பணவரவு அதிகரிக்கும். பெண்கள் ஆடம்பரப் பொருள் வாங்குவர். மாணவர்கள் ஆர்வமுடன் படித்து தேர்ச்சி பெறுவர்.

பரிகாரம்:
துர்க்கை வழிபாடு, தைரியம் வளர்க்கும்.

லட்சியத்துடன் செயல்படும், தனுசு ராசி அன்பர்களே!

குரு, சந்திரன், சுக்கிரன் ஆதாய பலன் தருவர். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். வீட்டில் சுக சவுகரியங்கள் நிறைந்திருக்கும். தாய்வழி உறவினர்களிடம் கருத்து வேறுபாடு நீங்கும். பயணங்கள் இனிதாக அமையும். புத்திரர்கள் திறமையை பயன்படுத்தி நற்பெயரும், புகழும் பெறுவர். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். சுற்றுலா பயணத்திட்டம் வகுப்பீர்கள். மனைவி விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை வளரும். தொழில், வியாபாரத்தில் வேலை அதிகம் இருந்தாலும், பணவரவால் மகிழ்வீர்கள். பணியாளர்கள், சக ஊழியர்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பெண்களுக்கு பலநாள் இருந்த கவலை நீங்கும். மாணவர்கள் படிப்பில் எளிய நடைமுறைகளை பின்பற்றுவர்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு, மங்கள வாழ்வு தரும்.

தகுதி, திறமை உணர்ந்து பணிபுரியும், மகர ராசி அன்பர்களே!

சனி, சூரியனின் சேர்க்கை அதிர்ஷ்ட பலன்களை தரும். தாமதமான செயல்கள் முயற்சியால் நிறைவேறும். சமூகத்தில் அந்தஸ்து கூடும். தம்பி, தங்கை உங்கள் சொல் கேட்டு நடப்பர். செல்வ வளம் சேரும். வாகனத்தின் பயன்பாடு அதிகரிக்கும். புத்திரர், பெற்றோரிடம் தமது தேவையை நிறைவேற்ற சொல்வர். அளவான உழைப்பும் சீரான ஓய்வுமே, உங்கள் உடல்நலத்தை பாதுகாக்கும். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில், மனம் நெகிழ்வீர்கள். தொழில், வியாபாரம் செழிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்க, உயர் அதிகாரி துணை புரிவார். பெண்கள், குடும்பநலன் பாதுகாப்பதில் அக்கறை கொள்வீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து சக மாணவர்களுக்கு உதவுவர்.

பரிகாரம்: சிவன் வழிபாடு, சகல நன்மை தரும்.

சமயோசிதமாக செயல்படும், கும்ப ராசி அன்பர்களே!

சூரியன், புதன், குரு, சுக்கிரனால் அதிக நன்மை கிடைக்கும். புதிய நிகழ்வுகள் அனுபவ பாடம் தரும். பழகுபவர்களின் எண்ணம் உணர்ந்து பேசுவீர்கள். பயணங்கள் அதிகரிக்கும். புத்திரர்கள் நல்ல செயல்களால், உங்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவர். பூர்வ புண்ணிய பலன், சில நன்மைகளை உருவாக்கும். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவி வழி உறவினர்களின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகி வளர்ச்சி பாதையில் நடைபோடுவீர்கள். பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறையில், உரிய கவனம் கொள்ளவும். பெண்கள் பிள்ளைகளின் நலன் சிறக்க, தேவையான பணிபுரிவர். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் கொள்வர்.

பரிகாரம்: முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.

பொறுப்புணர்ந்து செயல்படும் மீனராசி அன்பர்களே!

புதன், சுக்கிரன், சந்திரனால் நன்மை கிடைக்கும். செயலில் ஆற்றல் பிறக்கும். பணிகளை திட்டமிட்டபடி நிறைவேற்றுவீர்கள். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டு. புத்திரர்கள் தகுதியை வளர்த்துக் கொண்டு உங்களுக்கு நற்பெயர் பெற்றுத் தருவர். விஷப் பிராணிகளால் பிரச்னை வரலாம்; கவனம். ஆரோக்கியம் மேம்படும். கொடுக்கல், வாங்கலில் மிக கவனமாக இருக்க வேண்டும். மனைவியின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து வளர, சில மாற்றங்களைச் செய்வீர்கள். பணியாளர்கள் வேலையைத் திறம்படச் செய்வர். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பெண்கள் தாய் வீட்டு பெருமையை காத்திடுவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து, பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் பாராட்டு பெறுவர்.

பரிகாரம்: பைரவர் வழிபாடு, சங்கடம் தீர்க்கும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *