images (1)

மற்றவர்களின் நற்செயலையும் பாராட்டும் மேஷ ராசி அன்பர்களே!

குரு, ராகு, செவ்வாய் நற்பலன் தருவர். மனதில் உற்சாகமும் செயல்களில் பொறுப்புணர்வும் ஏற்படும். திட்டமிட்டு செயலாற்றுவீர்கள்.குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும். பணவரவு சீராகும். சேமிக்கவும் செய்வீர்கள். எதிரியால் இருந்த தொந்தரவு குறையும்.புத்திரர்களின் தேவையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் நல்ல ஆலோசனை சொல்வர். மனைவியுடன் கருத்து வேறுபாடு வரலாம். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் வரும். பணியாளர்கள் பணி இலக்கை பூர்த்தி செய்வர். பெண்கள் குடும்பநலன் சிறக்க மாற்றுத்திட்டம் உருவாக்குவர். மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்த வேண்டும்.

சந்திராஷ்டமம்: 9.12.15 மாலை 5:20 மணி 11.12.15 இரவு 2:28 மணி.

பரிகாரம்:
ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.

திறமையை வளர்த்துக் கொள்வதில் ஆர்வமுள்ள ரிஷப ராசி அன்பர்களே!

சந்திரன், புதன், கேது ஓரளவு நன்மை தருவர். மனதில் உறுதி நிறைந்திருக்கும்; பணியில் வரும் குறுக்கீடுகளை மாற்று உபாயத்தால் சரி செய்யலாம்.சகோதரர் விலகுதல் மனப்பாங்கு கொள்வர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர் அறிவு, செயல்திறனில் மேம்படுவர். ஆடம்பர பொருள் வாங்குவதை தவிர்ப்பதால் செலவு குறையும். மனைவியின் செயல்களை குறை சொல்ல வேண்டாம். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். பணியாளர்கள் கூடுதல் வேலை வாய்ப்பை ஏற்றுக்கொள்வர். பெண்கள் குடும்பநலனில் மட்டும் அக்கறை கொள்வது நல்லது. மாணவர்கள் லட்சிய மனதுடன் படிப்பில் கவனம் கொள்வர்.

சந்திராஷ்டமம்: 11.12.15 இரவு 2:29 மணி 12.12.15 இரவு 11:55 வரை.

பரிகாரம்: துர்க்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

எதிர்ப்புகளை சமயோசிதமாக வெல்லும் மிதுன ராசி அன்பர்களே!

சுக்கிரன், சனி, சூரியன் ராஜயோக பலன் தருவர். மனதில் சில குழப்பங்கள் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை நன்மை தரும். வாகன பராமரிப்பு செலவு கூடும். புத்திரர்கள் விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள்; உடல்நலம் ஆரோக்கியம் பெறும். மனைவி குடும்ப நலனில் அக்கறை கொள்வார். தொழில், வியாபாரம் வளர புதியவர்கள் ஆதரவு தருவர். பணியாளர்கள் பணித்திறனில் மேம்படுவர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். மாணவர்கள் பெற்றோரின் வழிகாட்டுதல்படி செயல்பட்டால் மதிப்பெண் உயரும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு மங்கள வாழ்வு தரும்.

புத்துணர்வுடன் செயல்படும் கடக ராசி அன்பர்களே!

சூரியன், சனி, கேது தவிர மற்ற கிரகங்கள் அனுகூல அமர்வில் உள்ளனர். எதிர்கால தேவைகளுக்காக திட்டமிடுவீர்கள். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். தாய்வழி உறவினர் உதவுவர். புத்திரர்களின் குறையை சரி செய்வதில் நிதானம் வேண்டும். மங்கள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மனைவி உங்களுடன் வரவு செலவு விஷயத்தில் ஒத்துழைப்பு தருவார். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை செழிக்கும். சேமிப்பு கூடும்.
பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்; பெண்கள் நிம்மதி நிறைந்த வாழ்வு பெறுவர். மாணவர்கள் அக்கறையுடன் படித்து அதிக மதிப்பெண் வாங்குவர்.

பரிகாரம்:
சிவன் வழிபாடு சகல நன்மை தரும்.

மன உறுதியுடன் பணிபுரியும் சிம்ம ராசி அன்பர்களே!

சுக்கிரன், சந்திரன் ஓரளவு நன்மை தருவர். அதிக முயற்சியால் பணி ஓரளவு நிறைவேறும். அறிமுகம் இல்லாதவர்களுக்கு வாகனத்தில் இடம் தர வேண்டாம். புத்திரர்கள் பிடிவாத குணத்துடன் செயல்படுவர். உடல்நிலைக்கு சிகிச்சை தேவைப்படலாம். மனைவி வழி சார்ந்த உறவினர்களால் உதவி உண்டு. தொழில், வியாபாரத்தில் இடையூறு இருக்கலாம். பொறுமை தேவை. பணியாளர்களுக்கு நிர்வாகத்தால் சில பிரச்னைகள் வரலாம். பெண்கள் பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்கக்கூடாது. மாணவர்கள் நண்பர்களுடன் சுற்றுவதை தவிர்த்தால் மதிப்பெண் உயரும்.

பரிகாரம்:
முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.

உலக நடப்புகளை அறிவதில் ஆர்வமுள்ள கன்னி ராசி அன்பர்களே!

சனி, சூரியன், சுக்கிரன் புதனால் நன்மை உண்டு. பணிகளில் திறமை பளிச்சிடும்.எதிர்பார்த்த சுபசெய்தி கிடைக்கும். புத்திரர்கள் பெற்றோர் சிந்தும் பாசத்தில் மனம் நெகிழ்வர். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியின் செயல்களை புகழ்ந்து பேசி காரியம் சாதிப்பீர்கள் தொழில், வியாபாரம் செழித்து லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணிகளை விரைந்து முடித்து நிர்வாகத்திடம் நற்பெயர் பெறுவர். பெண்கள் வீட்டுச்செலவுக்கு திண்டாட நேரிடும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.

பரிகாரம்: பைரவர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

சோதனை காலத்திலும் மனம் தளராத துலாம் ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், கேது நற்பலன் தருவர். ஆடம்பர செலவுகளால் கடன் வாங்கும் சூழ்நிலை வரும். தாய்வழி உறவினர்களிடம் கருத்து பேதம் ஏற்படலாம். புத்திரர்களின் நற்செயல் பெருமை தேடித் தரும். உடல்நிலையில் சிறு பாதிப்பு வரலாம். மனைவியின் ஆதரவால் மனதில் தைரியம் கூடும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அனுகூல சூழல் உருவாகும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்ட திட்டங்களை மதித்து செயல்படுவர்; பெண்கள் புத்தாடை, நகை வாங்க யோகம் உண்டு. மாணவர்கள் லட்சிய மனதுடன் படிப்பில் கவனம் கொள்வர்.

பரிகாரம்:
சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

நியாயப்பபடி நடக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!

சுக்கிரன், செவ்வாய், ராகு நற்பலன் தருவர். உங்கள் மீதான மற்றவர்களின் பார்வை மதிப்பு மிக்கதாக இருக்கும். தாய்வழி உறவினர்களின் உதவி கிடைக்கும். புத்திரர்கள் படிப்பு, வேலைத்திறனில் மேம்படுவர். பூர்வ சொத்தில் பணவரவு கூடும். நோய் தொந்தரவு குறையும்.
மனைவி உங்கள் எண்ணங்களை செயல்படுத்துவார். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். தொழில், வியாபாரம் செழித்து சேமிப்பு அதிகரிக்கும். பணியாளர்கள் குறித்த காலத்தில் பணிகளை முடித்து சலுகை பெறுவர். பெண்களுக்கு தாராள பணவசதி இருக்கும். மாணவர்கள் நண்பர்களின் உதவியால் படிப்பில் முன்னேறுவர்.

பரிகாரம்: பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.

பிரச்னை வந்தாலும் துணிவுடன் சமாளிக்கும் தனுசுராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், சந்திரனால் நன்மை உண்டு. வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் உருவாகும். அதிக பணவரவால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சிலர் வீடு இடம் மாறுவர். வாகன பராமரிப்பு செலவு கூடும். புத்திரர்களின் வளர்ச்சிக்காக திட்டமிடுவீர்கள். உடல்நிலை நன்றாக இருக்கும். மனைவியின் சிந்தனையும் செயலும் நல்ல பலன் தரும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி கூடும். தொழில், வியாபாரத்தில் கடந்த வார நிலை தொடரும். பணியாளர்களுக்கு அதிக சலுகை கிடைக்கும். பெண்கள் குடும்ப எதிர்கால நலனில் கவனம் கொள்வர். மாணவர்கள் பெற்றோர் சொல் கேட்டு செயல்படவும்.

பரிகாரம்: விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

லட்சிய மனதுடன் பணிபுரியும் மகர ராசி அன்பர்களே!

சனி, சூரியனின் சேர்க்கை அதிர்ஷ்ட பலன்களைத் தரும். குடும்பத்தின் தேவையை தாராள செலவில் நிறைவேற்றுவீர்கள். புத்திரர்களின் அறிவாற்றல் வளரும். படிப்பு, வேலையில் முன்னேறுவர். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு வரலாம். கடன்களை அடைத்து விடுவீர்கள். மனைவி உங்களின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவு தருவார். தொழில், வியாபாரம் புதியவர்களின் ஆதரவினால் செழிக்கும்; பணியாளர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெண்கள் உறவினர்களுக்கு உதவி செய்து நற்பெயர் பெறுவர். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை இருக்கும்.

பரிகாரம்: சாஸ்தா வழிபாடு இடர் நீக்கும்.

இயன்ற அளவில் பிறருக்கு உதவும் கும்ப ராசி அன்பர்களே!

சூரியன், புதன், குரு, சுக்கிரன் வியத்தகு அளவில் நன்மை தருவர். பயணங்கள் புதிய அனுபவம் தரும். புத்திரர்கள் உங்களின் வழிகாட்டுதல்படி நடந்து கொள்வர். பூர்வ சொத்தில் வளர்ச்சி, வருமானம் கூடும். பகைவர் மனதிலும் உங்கள் மீது நல் எண்ணம் ஏற்படும். மனைவியின் தியாகம் நிறைந்த மனதை புரிந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணிபுரிவீர்கள். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் நன்றாக படித்து பாராட்டு பெறுவர்.

சந்திராஷ்டமம்:
6.12.15 காலை, 6:00 மணி 7.12.15 மாலை 6:13 மணி.

பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு வெற்றியளிக்கும்.

கடின உழைப்பில் நம்பிக்கையுள்ள மீன ராசி அன்பர்களே!

சந்திரன், புதன், சுக்கிரனால் நன்மை உண்டாகும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடு வரலாம். புத்திரர்கள் படிப்பு, வேலையில் முன்னேற்றம் காண்பர்; பகைவர்களிடம் விலகுவது நல்லது. உடல்நலத்தில் சிறு தொந்தரவு வந்து நீங்கும். மனைவி உங்கள் மீது பாசம் கொள்வார்.
தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் பணி உதவும். பணியாளர்கள் அலுவலகத்தில் கேட்ட கடன் தாமதமாகும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

சந்திராஷ்டமம்: 7.12.15 காலை, 6:14 மணி 9.12.15 மாலை 5:19 மணி.

பரிகாரம்: அம்பிகை வழிபாடு மங்கள வாழ்வு தரும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *