shadow

download (2)

அயராத உழைப்பினால் அதிர்ஷ்ட வாழ்வு பெறும், மேஷ ராசி அன்பர்களே!

உங்களுக்கு புதன், சனி, கேது தவிர மற்ற கிரகங்கள் அனுகூல அமர்வில் உள்ளனர். தைரியம் நிறைந்த செயலால் புகழ் பெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் உதவி உண்டு. வீடு, வாகனத்தில் அபிவிருத்தி பணிபுரிவீர்கள். புத்திரர், உங்கள் சொல் கேட்டு நடப்பர். எதிரிகள் இடம் மாறுகிற நன்னிலை உண்டு. இல்லறத் துணை, பாசத்துடன் நடந்து கொள்வார். புதியவர்களின் ஆதரவால் தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். பணியாளர்களுக்கு, சலுகை கிடைக்கும். பெண்கள், புத்தாடை, அணிகலன் வாங்குவர். மாணவர்கள், திறமையை வளர்த்துக் கொள்வர்.

பரிகாரம்: சூரிய வழிபாடு, செயல்கள் வெற்றி பெற உதவும்.

இனிய வார்த்தை பேசி பிறரை வசீகரிக்கும், ரிஷப ராசி அன்பர்களே!

உங்களுக்கு, சுக்கிரன், சனி, கேதுவின் நல்லருள் பலமாக உள்ளது. செலவில் சிக்கனம் வேண்டும். கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். உறவினர்கள், புதிய சொந்தங்களை அறிமுகம் செய்வர். பொது இடங்களில் அதிகம் பேச வேண்டாம். வாகன பயன்பாடு சீராக இருக்கும். புத்திரர்களின் மனக்குறையை ஓரளவு சரிசெய்வீர்கள். உடல் நலத்தைப் பேணுவதில் அக்கறை வளரும். இல்லறத் துணை, ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். தொழில், வியாபார நடைமுறையில் மாற்றம் செய்வீர்கள். பணியாளர்கள், கடின உழைப்பால் இலக்கை நிறைவேற்றுவர். பெண்களுக்கு, தாய்வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு, படிப்பில் கவனம் வேண்டும்.

பரிகாரம்:
லட்சுமியை வழிபடுவதால், செல்வ வளம் சேரும்.

சிரமச் சூழ்நிலையையும் அனுபவமாக கருதும், மிதுன ராசி அன்பர்களே!

உங்களுக்கு சுக்கிரன், சந்திரன் மட்டுமே ஓரளவு பலன் தருவர். கிடைக்கிற சிறு நன்மையையும் பெரிதென போற்றுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் பழைய விவகாரம் பற்றி பேச வேண்டாம். வீடு, வாகன பாதுகாப்பில் உரிய கவனம் வேண்டும். புத்திரர்களின் பிடிவாதத்தைப் போக்க, பொறுமையுடன் ஆலோசனை சொல்ல வேண்டும். வழக்கு, விவகாரங்களில் பொறுமையான அணுகுமுறையை பின்பற்றவும். இல்லறத் துணை, குடும்பநலனில் அக்கறை கொள்வார். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். பணியாளர்கள், தாமதமாக பணி இலக்கை பூர்த்தி செய்வர். பெண்கள், பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்க கூடாது. மாணவர்கள், கடுமையாக முயற்சி எடுத்து படிக்க வேண்டும்.

சந்திராஷ்டமம்: 5.7.15 காலை 6:00 முதல் 5.7.15 மதியம் 12:26 மணி வரை.

பரிகாரம்:
குரு வழிபாடு, சகல நன்மையும் தரும்.

அனைவருக்கும் நல்ல ஆலோசனை தரும், கடக ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு, வாக்கு ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் அனுகூலமாக உள்ளனர். பேச்சில் சத்தியமும், வசீகரமும் மிகுந்திருக்கும். ராகுவின் மூன்றாம் இட அமர்வு, சமூகப்பணி புரிகின்ற ஆர்வத்தை வளர்க்கும். விருந்து, விழாவில் கலந்துகொள்வீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர்களின் செயல்பாடுகளில் குளறுபடி ஏற்படலாம். பகைமை உணர்வுடன் பழகியவர்கள் கூட, தங்கள் தவறை உணர்ந்து உங்களிடம் சுமுகமாக இருப்பர். இல்லறத் துணை விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் மூலதனத் தேவை அதிகரிக்கும். பணியாளர்கள், ஓரளவு சலுகை பெறுவர். மாணவர்கள், நன்றாக படிப்பர். பெண்கள், கணவர் வழி உறவினர்களிடம் மதிப்பு பெறுவர்.

சந்திராஷ்டமம்:
5.7.15 மதியம் 12:27 முதல் 7.7.15 மாலை 5:01 மணி வரை.


பரிகாரம்:
துர்க்கையம்மன் வழிபாடு, தொழிலில் வளர்ச்சி தரும்.

மனசாட்சியை மதித்து செயல்படும், சிம்மராசி அன்பர்களே!

உங்களுக்கு சனி, செவ்வாய், சுக்கிரன், சூரியன், புதன் அளப்பரிய பலன் தருவர். மனதில் தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாக்கும். உடன்பிறந்தவர்கள் அன்பு பாராட்டுவர். வீடு, வாகனம் வாங்க நிதியுதவி கிடைக்கும். புத்திரர்கள், உங்களின் அன்பைப் பெறுவதில் அதிக கவனம் கொள்வர். நோய் தொந்தரவு குறைந்து, உடல்நலம் பலம் பெறும். இல்லறத் துணை, உங்களின் தியாக மனதை புரிந்து கொள்வார். தொழில், வியாபாரம் செழித்து, உபரி பணவரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு, சலுகை கிடைக்கும். பெண்கள், பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள், படிப்பில் முன்னேற்றம் அடைவர்.

சந்திராஷ்டமம்:
7.7.15 மாலை 5:02 முதல் 9.7.15 மாலை 6:04 மணி வரை.

பரிகாரம்: பைரவர் வழிபாடு, மன அமைதியைப் பாதுகாக்கும்.

சிறு நன்மையையும் பெரிதென போற்றும், கன்னி ராசி அன்பர்களே!

உங்களுக்கு சூரியன், புதன், சுக்கிரன் அனுகூலபலன் தருவர். நல்ல முயற்சிகள் அத்தனையும் உரிய நன்மையை பெற்றுத்தரும். அளவுக்கு மீறி புகழ்ந்து பேசுபவர்களிடம் விலகுவது நல்லது. வாகன பராமரிப்பு செலவு கூடும். புத்திரர்கள், தங்கள் தேவையை நிறைவேற்ற பிடிவாதம் செய்வர். எதிரிகள் விலகுவர். இல்லறத் துணையுடன் இணக்கமான போக்கு இருக்கும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணிகளை செய்வீர்கள். பணியாளர்களுக்கு, நிறைந்த வருமானம் கிடைக்கும். பெண்கள், உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பர். மாணவர்கள், விரும்பிய பொருளை பரிசாகப் பெற அனுகூலம் உண்டு.

சந்திராஷ்டமம்:
9.7.15 மாலை 6:05 முதல் 11.7.15 இரவு 9:17 மணி வரை

பரிகாரம்: கிருஷ்ணர் வழிபாடு, தைரியம் வளர்க்கும்.

மன உறுதியுடன் செயல்படும், துலாம் ராசி அன்பர்களே!

உங்களுக்கு கேது, குரு, சுக்கிரன் நற்பலன் தருவர். வெகுநாள் நினைத்த திட்டங்களை செயல்படுத்துவீர்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பயணங்களை பயன் அறிந்து மேற்கொண்டால் போதும். உறவினர்களின் கருத்தில் உள்ள நியாயத்தை ஏற்று, திருத்திக் கொள்வீர்கள். சொத்து பராமரிப்பில் நம்பகமானவர்களை பணியமர்த்த வேண்டும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நிறைவேறும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். இல்லறத் துணை, அன்புடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. பணியாளர்கள், சேமிக்கும் அளவு சலுகை பெறுவர். பெண்கள், பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள், புதிய முயற்சி முறையால், படிப்பில் சிறந்த தேர்ச்சி பெறுவர்.

சந்திராஷ்டமம்:
11.7.15 இரவு 9:18 முதல் 13.7.15 மதியம் 2.25 மணி வரை.


பரிகாரம்:
விநாயகர் வழிபாடு, செயலில் வெற்றி தரும்.

பகைவர்களின் திட்டத்தை சமயோசிதமாக முறியடிக்கும், விருச்சிக ராசி அன்பர்களே!

உங்களுக்கு புதன், ராகு ஓரளவு நற்பலன் தருவர். செயல்களில் முன்யோசனை வேண்டும். குடும்ப செலவு அதிகரிக்கும். புதிய அனுபவம் பெறுவீர்கள். வாகனத்தில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். புத்திரர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்து, முன்னேற்றத்திற்கு வழி வகுப்பீர்கள். உடல்நிலை சுமாராக இருக்கும். இல்லறத் துணையின் மனதில் நம்பிக்கையை வளர்க்கும் வகையில் நடந்து கொள்ளுங்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள மந்த நிலையை, புதிய திட்டத்தால் சரி செய்வீர்கள். பணியாளர்களுக்கு, ஓரளவே சலுகை கிடைக்கும். பெண்கள், பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்க வேண்டாம். மாணவர்கள், புதிய நண்பர்களிடம் பழகுவதில் நிதானம் வேண்டும்.

பரிகாரம்: சனீஸ்வரரை வழிபடுவதால், சிரமம் குறையும்.

நண்பர் கருத்தை மதித்து, தன் அன்பை வளர்த்திடும், தனுசு ராசி அன்பர்களே!

உங்களுக்கு குரு, சுக்கிரன், சனி அதிக நற்பலன் தருவர். மனதில் இரக்கமும், கருணையும் அதிகரிக்கும். விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவர். தாயின் அன்பு, ஆசி, புதிய பணிகள் நிறைவேற துணை நிற்கும். புத்திரரை நல்வழி படுத்துவதில், இனிய அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். எதிர்மறையாக இருந்த செயல் ஒன்று, அனுகூலம் தருவதாக மாறும். இல்லறத் துணை, உங்கள் நலன் சிறக்க உதவுவார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற, மாற்று உபாயம் நன்மை தரும். பணியாளர்கள், பணியிடத்தின் சூழல் உணர்ந்து செயல்பட வேண்டும். பெண்கள், பணச்செலவில் சிக்கனம் மேற்கொள்வர். மாணவர்கள், படிப்பின் மகத்துவம் உணருவர்.

பரிகாரம்:
நந்தீஸ்வரர் வழிபாடு, நன்மைகளை அதிகரிக்கும்.

சத்தியத்திற்கு மதிப்பளிக்கும், மகர ராசி அன்பர்களே!

உங்களுக்கு சூரியன், புதனின் அமர்வு விபரீத ராஜயோக பலனைத் தரும். சுக்கிரன், செவ்வாய், கேதுவின் அனுகூலமும் உண்டு. தந்தையின் பூர்வ புண்ணிய பலன், சில நன்மைகளைத் தரும். புதிய வாகனம், வீடு வாங்குகிற முயற்சி நிறைவேறும். புத்திரர்கள், உங்களின் சொல்கேட்டு நடந்து கொள்வர். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். சுற்றுலா சென்றுவர திட்டம் உருவாகும். இல்லறத் துணை, அதிக பாசத்துடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரம் செழித்து வளரும். பணியாளர்கள், நிறைந்த சலுகை பெறுவர். பெண்கள், குடும்பநலன் பேணுவர். மாணவர்கள் படிப்பு, கலையில் சாதனை புரிவர்.

பரிகாரம்:
அம்மன் வழிபாடு, குடும்பத்தில் ஒற்றுமையை வளர்க்கும்.

அடுத்தவர் நலம் காக்க உதவும், கும்பராசி அன்பர்களே!

உங்களுக்கு குரு, சந்திரன் நற்பலன் தருவர். பகைவர்களிடம் விலகுவதால், மன அமைதியை பாதுகாக்கலாம். தகுதி மீறிய செயலில் ஈடுபடக்கூடாது. குடும்ப உறுப்பினர்களின் கருத்துகளை மதிப்பதால், ஒற்றுமை வளரும். வாகன பராமரிப்பு செலவு கூடும். புத்திரர்கள், பிடிவாத குணத்துடன் செயல்படுவர். இல்லறத் துணையுடன் கருத்து வேறுபாடு வரலாம்; பொறுமை தேவை. தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாரான அளவில் இருக்கும். பணியாளர்கள், நிர்வாகத்திடம் நற்பெயர் பெறும் வகையில் செயல்பட வேண்டும். பெண்கள், நகை பாதுகாப்பில் கூடுதல் கவனம் பின்பற்றவும். மாணவர்கள், ஓரளவுக்கு படிப்பர்.

பரிகாரம்:
ஆஞ்சநேயர் வழிபாடு, பாதுகாப்பு தரும்.

மன்னிக்கும் மனப்பாங்கை பின்பற்றும், மீன ராசி அன்பர்களே!

உங்களுக்கு புதன், சந்திரன் நற்பலன் தருவர். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. பிறர் கருத்தில் உள்ள நியாயத்தை மதித்து நடக்க வேண்டும். வாகன பராமரிப்பு செலவு ஏற்படும். புத்திரர்களின் நற்செயல், பெருமை தேடித்தரும். உடல்நலம் பேணுவதில் அதிக கவனம் வேண்டும். இல்லறத் துணை வழிசார்ந்த உறவினர்களின் கருத்தையோ, செயலையோ குறை சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இப்போதைய நிலை நீடிக்கும். பணியாளர்கள், பணியில் கண்ணும் கருத்துமாக ஈடுபட்டு, அதிகாரிகளிடம் நற்பெயர் பெறுவர். பெண்கள், இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள், ஆசிரியரிடம் பாராட்டு பெறுவர்.

பரிகாரம்: காமதேனு வழிபாடு, தொழிலில் வளர்ச்சி தரும்.

Leave a Reply