images (4)

உற்சாகமுடன் பணிபுரியும் மேஷ ராசி அன்பர்களே!

பெரும்பாலான கிரகங்கள் அளப்பரிய நன்மை தருவர். நீண்ட நாள் முயற்சி கூட இனிதே நிறைவேறும். பண வரவு பன்மடங்கு அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு சிறப்பாக நடந்தேறும். உடன்பிறந்தவர்களால் உதவி கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஆரோக்கியம் பலம் பெறும். மனைவியின் அன்பு கண்டு மனம் நெகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும், வருமானமும் அதிகரிக்கும். பணியாளர்கள் திறம்பட பணிபுரிந்து, நிர்வாகத்தினரின் பாராட்டைப் பெறுவர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். மாணவர்களுக்கு ஞாபகத்திறன் மேம்படும்.

பரிகாரம்:
சிவன் வழிபாடு, சகல வளமும் தரும்.

நற்செயலால் பிறரை வசீகரிக்கும் ரிஷப ராசி அன்பர்களே!

செவ்வாய், சுக்கிரன், கேதுவால் நன்மை மேலோங்கும். வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்லும். வாகனத்தின் பயன்பாட்டால் இனிமை காண்பீர்கள். உறவினர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும். புத்திரரை வழி நடத்துவதில் மென்மையான அணுகுமுறை தேவை. ஒவ்வாத உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. மனைவியின் ஆலோசனையை ஏற்பதால் நன்மை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மிதமான ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் கடமை உணர்ந்து செயல்படுவர். பெண்கள் குடும்ப நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவர்.

பரிகாரம்:
ஆஞ்சநேயர் வழிபாடு, வெற்றி அளிக்கும்.

பிறர் நலனில் அக்கறையுள்ள மிதுன ராசி அன்பர்களே!

சுக்கிரன், புதன், சனீஸ்வரர் அதிக நன்மை வழங்குவர். ஆரோக்கியம் மேம்படும். அக்கம் பக்கத்தினரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும். பூர்வீக சொத்து மூலம் வருமானம் உண்டாகும். எதிரியால் இருந்த தொல்லை மறையும். மனைவியின் அன்பைப் பெற்று மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் புதியவர்களின் ஆதரவு கிடைக்கும். லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். பணியாளர்கள் குறித்த காலத்தில் பணியை விரைந்து முடிப்பர். பெண்கள் பணம், நகை பாதுகாப்பில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் மேம்படுவர்.

பரிகாரம்:
விநாயகர் வழிபாடு, நன்மைக்கு வழிவகுக்கும்.

உலக நடப்பை அறிவதில் ஆர்வமுள்ள கடக ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், ராகு, சூரியன் சிறப்பான பலன் தருவர். பேச்சு, செயலில் புத்துணர்வு வெளிப்படும். பசு, பால் பாக்ய யோகத்தால் நன்மை காண்பீர்கள். வாகன பயணத்தால் இனிய அனுபவம் ஏற்படும். புத்திரர்கள் உங்களுடன் கருத்து வேறுபாடு கொள்ள வாய்ப்புண்டு. கடன் பிரச்னை ஏற்படலாம். மனைவி வழி உறவினர்களால் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் சோம்பலைக் கைவிடுவது அவசியம். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவர். மாணவர்கள் படிப்புடன், விளையாட்டிலும் ஆர்வம் கொள்வர்.

பரிகாரம்:
பைரவர் வழிபாட்டால் நலம் பெருகும்.

லட்சியத்தில் உறுதி கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!

சுக்கிரன், சந்திரனால் நன்மை அதிகரிக்கும். மாறுபட்ட கருத்து உள்ளவர்களுடன் பேசுவதை தவிர்க்கவும். திடீர் செலவால் கடன் வாங்கும் சூழல் உண்டாகலாம். கண்களின் பாதுகாப்பில் கவனம் தேவை. வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். பிள்ளைகள் உங்களின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பர். வழக்கு விஷயத்தில் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. கணவன், மனைவி ஒற்றுமையுடன் செயல்படுவர். தொழில், வியாபாரத்தில் குறுக்கிடும் இடையூறுகளை உடனடியாக சரி செய்யவும். பணியாளர்கள் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வர். பெண்கள் வீட்டுச் செலவில் சிக்கனத்தை கடைபிடிப்பர். மாணவர்கள் சாகச விளையாட்டில் ஈடுபடுவது கூடாது.

பரிகாரம்: கிருஷ்ணர் வழிபாடு, சிரமம் தீர்க்கும்.

நட்புக்கு முன்னுரிமை தரும் கன்னி ராசி அன்பர்களே!

செவ்வாய், சுக்கிரன், சனீஸ்வரர் நன்மையை வாரி வழங்குவர். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை மறையும். குடும்ப வளர்ச்சிக்கான புதிய திட்டம் தீட்டுவீர்கள். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். வாகன வகையில் பராமரிப்பு செலவு ஏற்படும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். வழக்கில் வெற்றி கிடைக்கும். மனைவியின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டி அதிகரிக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்தித்தாலும் வருமானம் அதிகரிக்கும். பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பர். மாணவர்கள் நண்பர்களுடன் பொழுதுபோக்கில் ஈடுபடுவர்.

பரிகாரம்:
சனீஸ்வரர் வழிபாடு, மேன்மை தரும்.

நேர்மை எண்ணம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே!

கேது, குரு, சுக்கிரனால் அதிக நன்மை உண்டாகும். மனதில் உற்சாகம் பிறக்கும். பேச்சிலும், செயலிலும் நிதானம் வெளிப்படும். வீடு, வாகன வகையில் கூடுதல் பாதுகாப்பு தேவை. புத்திரரின் எதிர்கால வளர்ச்சிக்கு துணைபுரிவீர்கள். விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவர். மனைவியால் குடும்ப ஒற்றுமை மேலோங்கும். தொழில், வியாபாரத்தில் புதிய உத்தி மூலம் லாபம் காண்பீர்கள். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பெண்கள் திறமையை வளர்த்துக் கொள்வர். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பர்.

பரிகாரம்: பெருமாள் வழிபாடு, வளம் சேர்க்கும்.

நல்லவரோடு பழகும் விருச்சிக ராசி அன்பர்களே!

சூரியன், புதன், ராகுவால் அதிக நன்மை உண்டாகும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். புதியவர்களின் நட்பை பெற்று மகிழ்வீர்கள். வாகன பயன்பாட்டால் நன்மை காண்பீர்கள். புத்திரர்களின் வளர்ச்சி கண்டு பெருமை உண்டாகும். ஆரோக்கியம் பலம் பெறும். மனைவியின் மனதில் உங்கள் மீதான நல்ல எண்ணத்திற்கு குறை வராமல் பாதுகாக்கவும். அரசு வகையில் உதவி கிடைக்க வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் மூலதனத்தை அதிகப்படுத்தி ஆதாயம் காண்பீர்கள். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்ட திட்டத்தை மதித்து நடக்கவும். பெண்கள் பிறருக்காக பணப் பொறுப்பு ஏற்க வேண்டாம். மாணவர்கள் நண்பரோடு சேர்ந்து படிப்பர்.

சந்திராஷ்டமம்:
4.10.15 காலை 6:00 மணி முதல் 6.10.15 காலை 8:33 மணிவரை.

பரிகாரம்: லட்சுமி வழிபாடு, வளம் சேர்க்கும்.

சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும் தனுசு ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன் நன்மை தரக் காத்திருக்கின்றனர். சூரியன், புதன், ‘புத ஆதித்ய யோக பலன்’ சிறப்பாக வழங்குவர். நற்செயலில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் புகழ் கிடைக்கும். முக்கியஸ்தர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிதாக வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். புத்திரர்களின் வளர்ச்சியில் அக்கறை காட்டுவீர்கள். எதிரி தொல்லை மறையும். மனைவியுடன் இருந்த மோதல் போக்கு மறையும். தொழில், வியாபாரத்தில் வருமானம் உயரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பெண்கள் மனம் போல ஆடை, ஆபரணம் வாங்குவர். மாணவர்கள் பெற்றோரின் அன்பை பெறுவர்.

சந்திராஷ்டமம்:
6.10.15 காலை 8:34 மணி முதல் 8:10:15 மாலை 5:12 மணி வரை.


பரிகாரம்:
முருகன் வழிபாடு, மேன்மை தரும்.

நல்லதை விரும்பி வரவேற்கும் மகர ராசி அன்பர்களே!

கேது, சனி, சுக்கிரனால் நன்மை உண்டாகும். இஷ்ட தெய்வ அருள் பலம் துணை நிற்கும். அன்றாட பணி அனைத்தும் குறித்த காலத்தில் நிறைவேறும். மகளின் ஜாதக யோக பலனால் நன்மை ஏற்படும். வீடு, வாகனத்தில் உரிய பாதுகாப்பை செய்வது நல்லது. உடல் நலனுக்கு ஒவ்வாத உணவைத் தவிர்க்கவும். மனைவி வழி சார்ந்த உறவினர்களால் உதவி கிடைக்கும். தொழிலில் புதிய உத்தி மூலம் வருமானத்தைப் பெருக்குவீர்கள். பணியாளர் கடமையை உணர்ந்து சிறப்பாக பணிபுரிவர். பெண்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.

சந்திராஷ்டமம்:
8.10.15 மாலை 5:13 மணி முதல் 10.10.15 அன்று நாள் முழுவதும்.


பரிகாரம்:
ராமர் வழிபாடு, நன்மை அளிக்கும்.

சிக்கனத்தைப் பின்பற்றும் கும்ப ராசி அன்பர்களே!

செவ்வாய், குரு, புதன் நற்பலன் வழங்குவர். இடையூறு செய்தவர் விலகிப் போகும் சூழல் உருவாகும். சுப விஷயத்தில் இருந்த தடை நீங்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவால் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனத்தில் அறிமுகம் இல்லாதவர்களுக்கு இடம் தர வேண்டாம். புத்திரர்கள் உங்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பர். வருமானம் உயர்வதால் கடன் தொல்லை மறையும். மனைவியிடம் வாக்குவாதம் செய்ய நேரிடலாம். தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பணியாளர்கள் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவர். பெண்கள் பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வர். மாணவர்களுக்கு நட்பு விஷயத்தில் கவனம் தேவை.

பரிகாரம்:
துர்க்கை வழிபாடு, துன்பம் விலக்கும்.

விவேகத்துடன் செயலாற்றும் மீன ராசி அன்பர்களே!

சந்திரனால் நன்மை அதிகரிக்கும். பேச்சு, செயலில் நிதானத்தை கடைபிடிக்கவும். தவிர்க்க இயலாத வகையில் திடீர்ச் செலவு ஏற்படலாம். வாகன பயணத்தில் மித வேகம் பின்பற்றவும். புத்திரர்களின் செயல்பாடு நன்மைக்கு வழிவகுக்கும். ஆரோக்கிய விஷயத்தில் அக்கறை உண்டாகும். மனைவியின் ஆலோசனையை பரிசீலிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் குடும்ப நலனில் கவனம் செலுத்துவர். மாணவர்கள் வெளியிடம் சுற்றுவதை குறைக்கவும்.

பரிகாரம்:
நந்தீஸ்வரர் வழிபாடு, நலம் சேர்க்கும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *