shadow

download (2)

முயற்சி வெற்றி பெற தகுந்த பணியாற்றும், மேஷ ராசி அன்பர்களே!

குரு, ராகுவினால் நன்மை உண்டு. பணிகள் எளிதில் நிறைவேறும். எதிர்பார்த்த செயல் ஒன்றில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். உடன் பிறந்தவர்களை குறை சொல்ல வேண்டாம்.
வாகனம் இயக்கும் போது மிதவேகம் பின்பற்றவும், புத்திரர்கள் பாசம் கொள்வர். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனைவியின் உடல்நலத்திற்கு செலவு வரலாம்.
தொழில், வியாபாரத்தில் அளவான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் பாராட்டைப் பெறுவர். பெண்கள் குடும்ப நலம் காத்திடுவர். மாணவர்களுக்கு ஞாபகத்திறன் வளரும்.

பரிகாரம்:
தட்சிணாமூர்த்தி வழிபாடு, நன்மை தரும்.

புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வமுள்ள, ரிஷப ராசி அன்பர்களே!

சுக்கிரன், சூரியன், புதன், கேது அனுகூல அமர்வில் உள்ளனர். நண்பர்களின் உதவி கிடைக்கும். பணிகள் வேகமாக நடக்கும். குடும்பத்தில் மங்கள நிகழ்வு ஏற்படும். புதிய சொத்து வாங்க அனுகூலம் உண்டு. புத்திரர்களின் எதிர்கால நலனுக்கு தேவையானதை செய்வீர்கள். உடல்நிலை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து ஒற்றுமை ஏற்படும்.
தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகும். கொடுக்கல், வாங்கல் சீராகும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் சந்தோஷ வாழ்வு பெறுவர். மாணவர்கள் நன்றாகப் படித்து பாராட்டு, பரிசு பெறுவர்.

பரிகாரம்:
லட்சுமி நரசிம்மரை வழிபடுவது, மேலும் பலன் தரும்.

அறிவும், செயல்திறனும் இருகண்கள் என போற்றும், மிதுன ராசி அன்பர்களே!

செவ்வாய், சுக்கிரன், சனி பகவான் நற்பலன்கள் வழங்குவர். மனதில் தைரியம் வளரும். முருகப்பெருமானின் அருள்பலம் துணை நிற்கும். புத்திரர்கள் நன்மை, தீமை எதுவென உணர்ந்து கொள்வர். எதிர்ப்பாளர்கள் ஒதுங்கிப் போவார்கள். மனைவி வழி சார்ந்த உறவினர் அதிக அன்பு பாராட்டுவர். புதியவர்களின் ஆதரவினால் தொழில், வியாபாரம் செழித்து வளரும்.
பணியாளர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி நடப்பர். பெண்கள் வீட்டுச் செலவுக்கு போதுமான பணம் பெறுவர். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் கொள்வர்.

பரிகாரம்:
முருகன் வழிபாடு வெற்றியளிக்கும்.

செயலின் பின் விளைவு உணர்ந்து நடக்கும், கடக ராசி அன்பர்களே!

புதன், சுக்கிரன், குரு, ராகு தாராள நன்மை தருவர். பேசும் வார்த்தைகள் வசீகரமாகும். தடையாக இருந்த சூழல் மாறும். சமூகத்தில் கூடுதல் அந்தஸ்து கிடைக்கும். வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. புத்திரர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வீர்கள். பணியாளர்களுக்கு நல்ல சலுகை, அதிக பணவரவு கிடைக்கும். பெண்கள், உறவினர் குடும்ப சுப நிகழ்ச்சிகளுக்கு பணம் கொடுத்து உதவுவர். மாணவர்கள் புதிய பயிற்சியில் இணைய வாய்ப்புண்டு.

பரிகாரம்:
ஆஞ்சநேயர் வழிபாடு, நன்மை தரும்.

தன்னைச் சார்ந்தவர்களின் வாழ்வு வளம்பெற உதவும், சிம்ம ராசி அன்பர்களே!

சுக்கிரன், சூரியன் நீசம் பெற்ற நிலையிலும் அனுகூலம் தருகிற இட அமர்வில் உள்ளனர். ஆடம்பரச் செலவைத் தவிர்க்கவும். இடம், சூழல் உணர்ந்து பேச வேண்டும். உடன் பிறந்தவர்கள் ஓரளவு உதவுவர். புத்திரர்கள், அறிவு, செயல்திறனில் மேம்படுவர். எதிரிகள் செய்த கெடு செயல் நன்மை தருவதாக மாறும். மனைவி, உங்கள் கவுரவம் பெருக வழி சொல்வார். தொழில், வியாபாரத்தில் பணவரவு ஓரளவுக்கு இருக்கும். பணியாளர்கள் கடமையை உணர்ந்து செயல்பட்டு நிர்வாகத்தின் மதிப்பைப் பெறுவர். மாணவர்கள் நன்றாகப் படிப்பர்.

பரிகாரம்:
பெருமாள் வழிபாடு, தொழிலில் வளர்ச்சி தரும்.

உழைப்பே உயர்வு தரும் என்ற மன உறுதியுள்ள, கன்னி ராசி அன்பர்களே!

சுக்கிரன், சனி, சந்திரனால் நன்மை உண்டு. முகத்தில் சந்தோஷப் பொலிவு ஏற்படும். பயணங்களால் நன்மை ஏற்படும். புத்திரர்களின் சந்தேகங்களை நல்ல கருத்துக்களால் நிவர்த்தி செய்வீர்கள். உடல்நலம் சீராகும். வாழ்க்கைத்துணை, உங்களுக்கு பெரும் ஒத்துழைப்பு தருவார். தொழில், வியாபாரத்தில் சில மாற்றங்கள் உருவாகும். பணியாளர்கள் தாழ்வு மனப்பாங்கை அகற்றவும். பெண்கள், பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் நண்பர்களின் உதவியை பெறுவர்.

பரிகாரம்: பைரவர் வழிபாட்டால், நன்மை ஏற்படும்.

துணிச்சல் நிறைந்த மனதுடன் செயல்படும், துலாம் ராசி அன்பர்களே!

சுக்கிரன், கேது மற்றும் குரு மங்கள சேர்க்கை அதிர்ஷ்ட பலன்களைத் தரும். மனதின் சந்தோஷம், முகத்திற்கு வசீகரத்தைத் தரும். பேச்சில் நிதானம் இருக்கும், உடன் பிறந்தவர்கள் உதவுவர். புத்திரர்களின் அறிவு, செயல்திறன் மேம்படும். மனைவி வழி சார்ந்த உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உபரி பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் சாதனை நிகழ்த்துவர், பெண்கள் வீட்டு அலங்காரப்பொருள் வாங்குவர். மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவர்.

பரிகாரம்: சிவன் வழிபாடு, தொழிலில் சிறப்பு தரும்.

நண்பர்களின் நல்ல ஆலோசனையை மதிக்கும், விருச்சிக ராசி அன்பர்களே!

ராகு, சுக்கிரன், சந்திரனால் நன்மை உண்டு. சோம்பலைத் தவிர்ப்பதால் பணிகள் நிறைவேறும். வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். புத்திரர்கள் வழியில் சுபநிகழ்வு உண்டாகும்.
உடல்நலம் பேணுவதில் அக்கறை வளரும். மனைவி உங்களின் நல்ல எண்ணங்கள் வெற்றிபெற உதவுவார். தொழில், வியாபாரத்தில் மூலதனத் தேவை அதிகரிக்கும். பணியாளர்களுக்கு வேலைப்பளு கூடும். பெண்கள், செலவில் சிக்கனம் பின்பற்றி சேமிப்பர். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் குறையலாம். வெளியிடங்களில் சுற்றுவதைக் குறைக்கவும்.

சந்திராஷ்டமம்: 1.11.15 காலை 6:00 மணி முதல் 2.11.15 மதியம் 3:43 மணி வரை.

பரிகாரம்:
அம்மன் வழிபாடு, மகிழ்ச்சி தரும்.

அரிய செயலால் சமூகத்தில் புகழ் பெறும் தனுசு ராசி அன்பர்களே!

குரு, சூரியன், புதனால் நன்மை கிடைக்கும். முக்கியமான பணிகள் நிறைவேறும். அரசு சார்ந்த உதவி கிடைக்கும். பூர்வ சொத்தில் வளர்ச்சியால் பணவரவு கூடும். புத்திரர்களின் மனதில் நம்பிக்கை வளரும். உடல்நலத்திற்கு சிகிச்சை தேவைப்படலாம். மனைவியின் செயலை குறை சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரம் வியத்தகு வளர்ச்சி பெறும். பணியாளர்கள் அதிக வருமானத்தால் நிறைவாக சேமிப்பர். பெண்கள், தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர். மாணவர்கள் நன்றாகப் படிப்பர்.

சந்திராஷ்டமம்: 2.11.15 மதியம் 3:44 மணி முதல் 4.11.15 இரவு 12:25 மணி வரை.

பரிகாரம்: விநாயகர் வழிபாடு, வினை தீர்க்கும்.

சத்திய வழியில் மன உறுதியுடன் நடைபோடும், மகர ராசி அன்பர்களே!

பெரும்பான்மை கிரகங்கள் அனுகூலமாக உள்ளன. செயல்களில் அதிக நன்மை கிடைக்கும். பூர்வ புண்ணிய பலன் துணை நிற்கும். வீடு, வாகனத்தில் அபிவிருத்தி பணி செய்வீர்கள்.
புத்திரர்கள் உங்கள் எண்ணங்களை புரிந்து நடந்து கொள்வர். கடன்களை செலுத்துவீர்கள். மனைவி விரும்பியபொருள் வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். பணியாளர்கள் நிர்வாகத்திடம் நற்பெயர் பெறுவர். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் நண்பர்களுக்கு உதவுவர்.

சந்திராஷ்டமம்: 6.11.15 இரவு 12:26 மணி முதல் 7.11.15 காலை 11:20 மணி வரை.

பரிகாரம்:
மகாலட்சுமி வழிபாடு செல்வ வளம் தரும்.

வெற்றியை எளிய முறையில் கொண்டாடும், கும்ப ராசி அன்பர்களே!

குரு, சுக்கிரன், சந்திரன் நன்மை தருவர். எண்ணமும், செயலும் சிறப்பாகும். குடும்பத்திற்கான செலவு அதிகரிக்கும். பயணங்கள் எளிதாகும். புத்திரர்கள் உடல்வலிமை பெற சத்தான உணவு தருவீர்கள். அக்கம் பக்கத்தவர் அன்பு பாராட்டுவர். மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சரியாகும். தொழில், வியாபாரம் செழிக்க, உரிய கவனம் கொள்வீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள், புத்தாடை, அணிகலன் வாங்குவர். மாணவர்கள் தெளிந்த சிந்தனையுடன் படிப்பர்.

சந்திராஷ்டமம்: 7.11.15 காலை 11:21 மணி முதல் இரவு 11:55 மணி வரை.

பரிகாரம்: சாஸ்தா வழிபாடு இடர் நீக்கும்.

வாக்குறுதியை தருவதில் நிதானம் உள்ள, மீன ராசி அன்பர்களே!

செவ்வாய், புதன், சந்திரன் நன்மை தருவர். மனதில் எதிர்மறை சிந்தனை விலகும். லட்சிய உறுதியுடன் பணிபுரிவீர்கள். சகோதர வழியில் மங்கள நிகழ்வு ஏற்படும். வாகன பயன்பாடு அதிகரிக்கும். புத்திரர்கள் அன்புடன் நடந்து கொள்வர். கடன் தொந்தரவு குறையும். மனைவியின் மனதில் நம்பிக்கை வளரும் விதத்தில் செயல்திட்டங்களை அமைப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகும். பணியாளர்களுக்கு வேலைப்பளுவும், சலுகைகளும் கூடும். பெண்கள் பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்கவேண்டாம். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம்: ராமபிரான் வழிபாடு நன்மையைத் தரும்.

Leave a Reply