shadow

10அதிக உழைப்பினால், வளமான வாழ்வு பெறும், மேஷ ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு அசுரகுருவாகிய சுக்கிரன், பூமிகாரகன் செவ்வாய் அனுகூல பலன் தரும் இட அமர்வில் உள்ளனர். பழகுபவர்களிடம், நற்பெயரை பாதுகாக்கும் வகையில் நிதானித்து பேசுவீர்கள். குடும்பசெலவு களுக்கான பணத்தேவை அதிகரிக்கும். உடன் பிறந்தவர் தன்னால் இயன்ற அளவு உதவுவர். வீடு, வாகன பாதுகாப்பில், கூடுதல் கவனம் பின்பற்ற வேண்டும். புத்திரர் உடல் நலம் பலம்பெற, சத்து நிறைந்த உணவு தருவது அவசியம். எதிரியால் வருகிற தொந்தரவு பலமிழக்கும். இல்லறத்துணை குடும்ப சூழ்நிலை உணர்ந்து, நன்மை உருவாக செயல்படுவார். தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். பணியாளர் கூடுதல் வேலைவாய்ப்பை விருப்பமுடன் ஏற்றுக்கொள்வர். பெண்கள், சிக்கன செலவில் குடும்ப தேவை நிறைவேற்றுவர். மாணவர்கள், நண்பரின் உதவியால், படிப்பில் சிறப்பிடம் பெறுவர்.

பரிகாரம்: திங்கட்கிழமை மாலை, வீட்டில் தென் மேற்கு திசையில், தீபம் ஏற்றி இஷ்ட தெய்வத்தை வழிபடவும். ஏழை பெண் குழந்தைக்கு உதவலாம்.

பணியை நேர்த்தியுடன் மேற்கொள்கிற ரிஷப ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிநாதன் சுக்கிரனை, தர்ம கர்ம ஸ்தான அதிபதி யாகிய சனி பகவான், நட்பு கிரகம் ராகுவுடன் அனுகூலமாக பார்க்கிறார். குருபகவான் அளப்பரிய வகையில், நற்பலன் வழங்குகிறார். புதிய முயற்சி சிறப்பாக நிறைவேறி, அதிக பணவரவு கிடைக்கும். வெகு நாள் வாங்க விரும்பிய பொருள் வாங்குவீர்கள். பொறாமைக்குணம் உள்ளவரிடம் விலகுவதால், நேரம் மன அமைதியை பாதுகாக்கலாம். வாகன பயன்பாடு, அளவுடன் இருக்கும். புத்திரரின் பிடிவாத குணம் சரி செய்வதில், இதமான அணுகுமுறை வேண்டும். சிலருக்கு உடலில் உள்ள நச்சுத்தன்மை முறிந்து, ஆரோக்கியம் மேம்படும். இல்லறத்துணை பெருந்தன்மை குணத்துடன், குடும்ப நலனில் அக்கறை கொள்வார். தொழில், வியாபாரத்தில் புதிய ஆர்டர் கிடைத்து, பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். குடும்ப பெண்கள், பணவசதிக்கேற்ப புத்தாடை, அணிகலன் வாங்குவர். மாணவர்கள், தியானம் தெய்வழிபாட்டில் ஆர்வம் கொள்வர்.

பரிகாரம்: ஓம் என்னும் பிரணவ மந்திரம் பூஜை அறையில், தூய மனதுடன் ஏழுமுறை உச்சரிக்கவும். வயோதிக பெண்ணுக்கு உதவி புரியலாம்.

துன்பம் அடைந்தவர்க்கு, ஆறுதலாக உதவும் மிதுன ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு ஆதாய ஸ்தானத் தில் உள்ள சுக்கிரன், கேது அனுகூல பலன் தருகின்றனர். மற்ற கிரகங்கள், எதிர்மறை பலன் தரும் வகையில் செயல்படுகின்றனர். திட்டமிட்ட பணிகள் நிறைவேற, கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். உடன் பிறந்தவர்களின் மனக்கவலை மாற்ற, ஓரளவு உதவுவீர்கள். நீண்ட தூர வாகன பயணத்தில், மிதவேகம் பின்பற்றவும். புத்திரரின் கவனக்குறைவான செயல், குளறுபடி உருவாக்கலாம். உங்களின் கண்காணிப்பு சிரமம் தவிர்க்க உதவும். உடல் நலத்திற்கு, சிறுஅளவிலான சிகிச்சை தேவைப்படலாம். இல்லறத்துணையின் ஜாதகயோக பலம், சில நன்மை பெற்றுத்தரும். தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். பணியாளர்கள் சலுகை பெற, எளிய அணுகுமுறை உதவும். பெண்கள், சேமிப்பு பணத்தில் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்லக்கூடாது.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபடுவதுடன், ஏழைச்சிறுவனின் வைத்தியத்திற்கு உதவுவது நல்லது.

உண்மையான செல்வம், மன அமைதி தான் என வாழும், கடகராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் அனுகூலமாக உள்ளனர். மூன்றாம் இடத்தில் உள்ள செவ்வாய், கூடுதல் நற்பலன் வழங்குகிறார். கண்ணியம் மிகுந்த செயல்களால் நண்பர், உறவினர்களிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். தம்பி, தங்கை குடும்பத்தில் இருந்த கஷ்ட சூழ்நிலை நிவர்த்தியாகும். புத்திரர் அறிவுத்திறன் வளர்ந்து படிப்பு, செயலில் முன்னேற்றம் காண்பர். நிர்பந்த பணக்கடனில், ஒரு பகுதி செலுத்த பூர்வ சொத்தில் கிடைக்கிற பணவரவு உதவும். இல்லறத் துணையின் நல்ல செயல்களை பாராட்டுவதால், குடும்ப ஒற்றுமை வளரும். தொழில், வியாபாரத்தில் உருவாகிற இடையூறு தாமதமின்றி சரி செய்வது அவசியம். அரசு பணியில் உள்ளவர்களுக்கு, தாமதமான சலுகை அதிர்ஷ்டவசமாக கிடைக்கும். குடும்ப பெண்கள், கணவரின் வாழ்வியல் சிரமம் சரி செய்வதில் உதவிகரமாக செயல்படவேண்டும். மாணவர்கள், அதிக விலையுள்ள பொருள் இரவல் வாங்க வேண்டாம்.

பரிகாரம்: பூஜையறையில் வடக்கு நோக்கி அமர்ந்து, அர்த்த பத்மாசனம் இட்டு, உச்சந்தலையில் மிருகி, முத்திரை இட்டு குருமந்திரம் சொல்லி வழிபடவும், கொண்டக்கடலை தானம் செய்யலாம்.

சமயோசித செயல்களால், வாழ்வில் சாதனை புரிகின்ற சிம்மராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு நவக்கிரகங்களில் செவ்வாய், கேது தவிர மற்றவர் வியத்தகு அளவில் நற்பலன் வழங்குகின்றனர். எந்த செயலையும், மனப்பூர்வமுடன் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் உதவி, எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குபவர்கள், ராசிக்குரிய திசை, நிறம், தேர்வு செய்து வாங்குவது, கூடுதல் செல்வ வளம்பெற உதவும். புத்திரர் ஆன்மிகம் தொடர்பான செய்திகளை, உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்வர். எதிரி தன் நலம் காக்க, உங்களிடம் மறைமுகமாக உதவி கேட்கிற, புதிய சூழ்நிலை உருவாகும். இல்லறத்துணை கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரித்து அபிவிருத்தி பணி மேற்கொள்ள, நல்ல சந்தர்ப்பம் உருவாகும். பணியாளர் கூடுதல் வேலைவாய்ப்பு, திருப்திகர அளவில் சன்மானம் பெறுவர். பெண்கள், உறவினர் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி நடத்த, உறுதுணையாக செயல்படுவர். மாணவர்கள், விரும்பிய பொருள் பெற்றோர் வாங்கித்தருவர்.

பரிகாரம்: விநாயகருக்கு, அருகம்புல் மாலை சார்த்தி வழிபடுவதுடன், பசுவுக்கு கீரை, பழம் வழங்கலாம்.

சிறு செயலையும், பொறுப்புணர்வுடன் நிறைவேற்றும், கன்னி ராசிக்காரர்களே!

இந்த வாரம் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் உள்ள, சுக்கிரன் மற்றும் தினகதி சுழற்சி கிரகம் சந்திரன் மட்டுமே, நற்பலன் தருகின்றனர். பழகுபவர்களில் சிலர் உங்களை, அதிகம் புகழ்ந்து பேசி, மனதில் கர்வம் உருவாக்க முயற்சி செய்வர். தன்நிலை மாறாமல் செச்யல்படுவது, நற்பெயரை பாதுகாக்கும். வீடு, வாகனத்தில் கூடுதல் பாதுகாப்பு முறை பின்பற்ற வேண்டும். புத்திரர் ஆடம்பர எண்ணங்களை வளர்த்து, சுயதேவை பூர்த்தி செய்ய பிடிவாத குணத்துடன் அணுகுவர். அளவான உழைப்பு, சீரான ஓய்வு, உடல்நலம் ஆரோக்கியம் பெற உதவும். இல்லறத்துணையின் கூடுதல் அன்பு, பாசம் மனதில் நெகிழ்ச்சி தரும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சிறிதளவு குறையலாம். பணியாளர், நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்ற வேண்டும். பெண்களுக்கு, தாய்வீட்டு உதவி உண்டு. மாணவர்கள், படிப்பில் புதிய இலக்கை அடைய ஆசிரியரின் உதவி கிடைக்கும்.

பரிகாரம்: சிவனை வழிபடுவதுடன், காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கலாம்.

நல்ல பணிக்கு பாராட்டு தாமாக வரும் என, நம்பு கின்ற துலாம் ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் உள்ள புதன், பாக்ய ஸ்தானத்தில் உள்ள குரு நற்பலன் வழங்குகின்றனர். செயல்களில் புதிய யுக்தி பின்பற்றி கூடுதல் நன்மை பெறுவீர்கள். மனதில் உற்சாகமும், நண்பர், உறவினரின் பாராட்டும் கிடைக்கும். தம்பியின் பணித்திறன் சிறக்க, நல்ல ஆலோசனை வழங்குவீர்கள். அறிமுகம் இல்லாதவருக்கு வீடு, வாகனத்தில் இடம் தர வேண்டாம். புத்திரரின் ஆர்வம் மிகுந்த செயலில், கூடுதல் நன்மை பெற உதவுவீர்கள். ஓய்வு நேரங்களில் மெல்லிசை பாடல்களை ரசித்து, மனதில் புத்துணர்வு பெறுவீர்கள். இல்லறத்துணையிடம் தேவையற்ற விவாதம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கிடைக்கிற வாய்ப்பை தவறாமல் பயன்படுத்துவீர்கள். உத்தியோகஸ்தர், பணியாளர்களை அன்புடன் வழிநடத்தி பணி இலக்கு நிறைவேற்றுவர். பெண்கள், நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். மாணவர்கள், புதியவரை நண்பராக ஏற்பதில் கவனம் வேண்டும்.

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி வழிபடுவதுடன், ஏழைக்கு உளுந்து தானம் செய்யலாம்.

லட்சியம் நிறைவேற மன உறுதியுடன் செயல்படும் விருச்சிக ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் கேது, ஆதாய ஸ்தானத்தில் செவ்வாய் அனுகூலமாக உள்ளனர். செவ்வாய், கேது நட்பு கிரகங்கள் ஆவர். இருவரும் ஒருவரை, ஒருவர் மிஞ்சும் அளவில் நற்பலன் தருகின்றனர். பேசுவதில் நிதானம் பின்பற்றுவதால், நற்பெயர், புகழ் அதிகரிக்கும். வாகன பயன்பாடு அளவுடன் இருக்கும். புத்திரரின் எதிர்கால நலனுக்கு தேவையான பணி மேற்கொள்வீர்கள். எதிரியால் உருவாகிற சிரமம் பலமிழந்து போகும். இல்லறத்துணையின் உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கை அடைய அதிக பணிபுரிவது அவசியம். பணியாளர், நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்ற வேண்டும். பெண்கள், செலவுகளில் சிக்கனம் பணக்கடன் பெறுகிற சூழ்நிலை தவிர்க்க உதவும். மாணவர்கள், வயிறு தொடர்பான பிணி வராமல் தவிர்க்க, உணவு உண்பதில் கட்டுப்பாடு பின்பற்றவும்.

சந்திராஷ்டமம்: 31.5.14 நள்ளிரவு 12:01 மணி முதல்1.6.14 இரவு 7:09 மணி வரை
பரிகாரம்: கிழக்கு திசை பார்த்து ஓம் இந்திராயநமஹ என, வழிபடுவதுடன் இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித்தரலாம்.

தான் செய்த உதவியை பெரிதுபடுத்தி பேசாத தனுசு ராசிக்காரர்களே!

இந்தவாரம், உங்கள் ராசிக்கு செவ்வாய், கேது தவிர மற்ற கிரகங்கள் அனுகூல பலன் தாராள அளவில் வழங்குகின்றனர். தாயின் மனம் நிறைந்த வாழ்த்து கிடைக்கும். செயல்களை மனப்பூர்வமாக நிறைவேற்றுவீர்கள். பணவரவு அதிகம் கிடைக்க, புதிய வழிவகை உருவாகும். இளைய சகோதர வகையில் சுபநிகழ்ச்சி நடத்த அனுகூலம் உண்டு. சிலர், புதியவீடு, வாகனம் வாங்க வாய்ப்பு உருவாகும். மகளின் ஜாதகயோக பலம் சிறப்பாக அமைந்து, வாழ்வு சிறப்பு பெற உதவும். போட்டி, பந்தயத்தில் வெற்றிபெற சாதகமான தன்மை இருக்கும். இல்லறத்துணை ஒருமித்த மனதுடன் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர் சிறப்பாக பணிபுரிந்து நன்மதிப்பு, சலுகை பெறுவர். குடும்ப பெண்கள், நல்வாழ்வு தந்த தெய்வத்திற்கு நன்றி வழிபாடு நடத்துவர். மாணவர்கள், நன்றாக படித்து, ஆசிரியர், பெற்றோரின் வாழ்த்து பெறுவர்.

சந்திராஷ்டமம்: 1.6.14 இரவு 7:10 மணி முதல்4.6.14 காலை 6:52 மணி வரை
பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதுடன் தயிர்சாதம், நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வழங்கலாம்

இறையருள் பெறுகின்ற எண்ணத்துடன் நல்வழியில் நடைபோடும் மகர ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் உள்ள சுக்கிரன் மற்றும் தினகதி சுழற்சி கிரகம் சந்திரன் மட்டுமே நற்பலன் தருகின்றனர். வாழ்வியல் நடைமுறையை சீராக அமைத்துக் கொள்வதால், திட்ட மிட்ட பணியை எளிதாக நிறைவேற்றலாம். தவிர்க்க இயலாத பணச்செலவு உருவாகி, மனதில் வருத்தம் தரலாம். உடன் பிறந்தவர்களிடம் மனக்கிலேசம் வராத அளவில் பேசுவது நல்லது. வீடு, வாகன பாதுகாப்பில் கூடுதல் அக்கறை வேண்டும். புத்திரர் சில தேவை நிறைவேற்ற பிடிவாதத்துடன் அணுகுவர். எதிர்மனப்பாங்கு உள்ளவரிடம் விலகுவதால் சிரமம் தவிர்க்கலாம். இல்லறத்துணை வழிசார்ந்த உறவினர் முக்கிய தருணங்களில் உதவுவர். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனத்துடன் பணி மேற்கொள்வீர்கள். பணியாளர் குடும்பத் தேவையை சரிசெய்ய கூடுதல் வேலை வாய்ப்பை ஏற்றுக்கொள்வர். பெண்கள், சேமிப்பு பணம் குடும்பத்தின் சிறு செலவுக்கு பயன்படுத்துவர். மாணவர்கள், தகுந்த பயிற்சியால் படிப்பில் முன்னேறலாம்.

சந்திராஷ்டமம்: 4.6.14 காலை 6:53 மணி முதல்6.6.14 மாலை 5:49 மணி வரை
பரிகாரம்: விஷ்ணுவை வழிபடுவதுடன் கற்கண்டு, ஏலக்காய் கலந்த பால் நிவேதனம் செய்து, பக்தர்களுக்கு வழங்கலாம்.

புதிய கருத்துகளை துணிச்சலாக வரவேற்கும் கும்ப ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு தைரிய ஸ்தானத் தில் சுக்கிரன், கேது சுக ஸ்தானத்தில் புதன், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு, அனுகூலமாக உள்ளனர். உடல் நல ஆரோக்கியம் பாதுகாத்து பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். புதியவர்களின் அறிமுகம், உதவி கிடைக்கும். வீடு, வாகனத்தில் கூடுதல் பயன்பாட்டு வசதி பெற அபிவிருத்தி பணிபுரிவீர்கள். புத்திரர் ஆன்மிக ஞானம் நிறைந்த மனதுடன் செயல்படுவர். எதிரியால் வருகிற தொந்தரவு விலகும். இல்லறத்துணையின் அறிவாற்றல் மிகுந்த பேச்சு, குடும்பத்தில் மகிழ்ச்சி, நன்மை உருவாக்கும். பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். இல்லறத்துணை உங்களின் நற்குணம் பாராட்டுவார். தொழிலில் அபிவிருத்தி பணி செய்ய திட்டமிடுவீர்கள். பணியாளர்களுக்கு சராசரி வேலைவாய்ப்பு கிடைக்கும். பெண்கள், குடும்ப உறுப்பினர்களின் நல்அன்பை பெறுவர். மாணவர்கள், நல்லவிதமாக படித்து நற்பெயர் பெறுவர்.

சந்திராஷ்டமம்: 6.6.14 மாலை 5:50 மணி முதல்7.6.14 அன்று நாள் முழுவதும்
பரிகாரம்: பூஜையறையில், சூரிய, சந்திரர், தேவர்கள், முனிவர்கள், கோமாதாவின் உடலில் இடம்பெற்ற படம் வைத்து வழிபடுவதுடன், படிப்பில் சிறந்த ஏழை மாணவருக்கு உதவலாம்.

வாக்குறுதி தருவதில் நிதானம் பின்பற்றுகின்ற மீன ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு தனம், குடும்பம், வாக்கு ஸ்தானமாகிய இரண்டாம் இடத்தில் சுக்கிரன், தைரிய ஸ்தானமாகிய மூன்றாம் இடத்தில் சூரியன் அனுகூலமாக உள்ளனர். மனம் அமைதியான நிலையில் அமைந்து, பழகுபவர்களிடம் இனிய வார்த்தை பேசுவீர்கள்.
அன்பும், உதவியும் திருப்திகர அளவில் கிடைக்கும். பணி நிறைவேற்றுவதில் அதிக ஆர்வம் கொள்வீர்கள். வாகன பயன்பாடு சராசரி அளவில் இருக்கும். பூர்வ சொத்தில் வருகிற பணவரவு கூடும். எதிரி உங்களிடம் பகைமை மாறி, நல்ல அபிப்பிராயம் உருவாக சூழ்நிலை உதவும். இல்லறத்துணை உங்களின் நடைமுறை சிறக்க ஆலோசனை வழங்குவார். தொழிலில் அளவான மூலதனம், கூடுதல் உழைப்பு என்கிற அணுகுமுறை பின்பற்றுவீர்கள். பணியாளர்கள், பணியிடத்து சூழ்நிலை உணர்ந்து செயல்படுவர். பெண்கள், தாய்வீட்டு உதவி கிடைத்து மனம் மகிழ்வர். மாணவர்கள், சாகச விளையாட்டில் ஈடுபடக்கூடாது.

பரிகாரம்: பூஜையறையில் அஷ்டலட்சுமி படம் வைத்து வழிபடுவதுடன், வயோதிக பெண்ணுக்கு உணவு வழங்கலாம்

Leave a Reply