shadow

5aaமேஷம்: சுறுசுறுப்பான பணியால், மற்றவர் மனம் கவரும், மேஷ ராசிக்காரர்களே! 20-4-14 முதல் 26-4-14 வரை

உங்கள் ராசிக்கு இந்த வாரம் அனுகூல பலன் தரும் கிரகங்களாக செவ்வாய், சுக்கிரன் செயல்படுகின்றனர். கடந்த சில நாட்களில் எதிரிகளால் உருவான தொந்தரவு விலகி, சுமுக வாழ்க்கை முறை அமையும். இடம், சூழ்நிலை உணர்ந்து பேசி நற்பெயரை பாதுகாத்திடுவீர்கள். இளைய சகோதரர் இயன்ற அளவில் உதவுவர். வாகன பயன்பாடு, சீரான அளவில் இருக்கும். புத்திரர் மாறுபட்ட உணவு பழக்கத்தினால், உடல்நலக் குறைவுக்கு உள்ளாவர். இல்லறத்துணை குடும்ப நலனில் அக்கறையுடன் செயல்படுவார். தொழில், வியாபாரத்தில் கடின உழைப்பால் திட்டமிட்ட இலக்கை அடைவீர்கள். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பெண்கள், குடும்பத்தின் அத்தியாவசிய செலவுக்கு மட்டும் முக்கியத்துவம் தருவர். மாணவர்கள், ஞாபகத்திறன் வளர்ந்த கூடுதல் தேர்ச்சி விகிதம் பெறுவர்.

 

ரிஷபம்: பணவரவுக்கு ஏற்ப, குடும்பச் செலவை திட்டமிடும், ரிஷப ராசிக்காரர்களே! 20-4-14 முதல் 26-4-14 வரை

இந்த வாரம், உங்கள் ராசிக்கு நற்பலன் தரும் கிரகங்களாக குரு, சனி, ராகு செயல்படுகின்றனர். பேச்சு, செயலில் ஆடம்பர குணம் நிறைந்திருக்கும். சமயோசிதமாக பேசி நண்பர், உறவினரிடம் பாராட்டு பெறுவீர்கள். வீடு, வாகனத்தில் பராமரிப்பு பணி திட்டமிட்டபடி நிறைவேற்றுவீர்கள். புத்திரரின் கவனக்குறைவான நடவடிக்கையை சரி செய்வதில், இதமான அணுகுமுறை நல்லது. பிறருக்கு கடனாக கொடுத்த பணம் பெரும்பகுதி திரும்பக் கிடைக்கும். இல்லறத்துணை மனதில், உங்கள் மீது அதிருப்தி வராத அளவில் நடந்து கொள்வது நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி மேற்கொள்வதால் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணியாளர் அதிகப் பணிபுரிந்து, பணத்தேவையை பூர்த்தி செய்வர். பெண்கள் நகைகளை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். மாணவர்கள், ஆசிரியர்களின் அறிவுரை கேட்டு நடப்பதால் தேர்ச்சி விகிதம் சீராகும்.

சந்திராஷ்டமம்: 19.4.14இரவு 12:10மணி முதல் 21.4.14 இரவு 12:57 மணி வரை.

 

மிதுனம்: நல்லவர்களின் ஆலோசனை ஏற்று, செயல்படும், மிதுன ராசிக்காரர்களே! 20-4-14 முதல் 26-4-14 வரை

இந்த வாரம், உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது அனுகூல அமர்வில் உள்ளனர். இதனால், உங்கள் செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். தொழிலில் பணவரவு அதிகம் பெற, தேவையான பணி புரிவீர்கள். உறவினர், நண்பர்களிடம் அன்பை பகிர்ந்திட நல்ல நிகழ்வு ஏற்படும். வீடு, வாகனத்தில் பாதுகாப்பு முறை அக்கறையுடன் பின்பற்ற வேண்டும். புத்திரரின் அறிவுத்திறன் வளர, தேவையான ஆலோசனை சொல்வீர்கள். எதிர் மனப்பாங்கு உள்ளவரிடம் விலகுவது நல்லது. இல்லறத்துணை உங்களின் நல்ல குணம் பாராட்டுவார். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும். பெண்கள் குடும்ப பணவசதிக்கேற்ப ஆடை, அணிகலன் வாங்குவர். மாணவர்கள், படிப்பில் சிறப்பான இடம் பெறுவர்.

சந்திராஷ்டமம்: 21.4.14 மஇரவு 12:58மணி முதல் 23.4.14இரவு 2:26 மணி வரை.

 

கடகம்: அத்தியாவசிய பணிகளை உடனே நிறைவேற்றும், கடக ராசிக்காரர்களே! 20-4-14 முதல் 26-4-14 வரை

இந்த வாரம், உங்கள் ராசிக்கு மூன்றில் செவ்வாய், எட்டாம் இடத்தில் சுக்கிரன், ஜீவன ஸ்தானத்தில் சூரியன், புதன் அனுகூலமாக உள்ளனர். இனிய எண்ணங்கள், மனதை உற்சாகப்படுத்தும். ஒதுக்கி வைத்த பணியை, விருப்பமுடன் நிறைவேற்றுவீர்கள். புதியவர்களின் அறிமுகம், உதவி எதிர்பாராத வகையில் கிடைக்கும். இளைய சகோதர வகையில், மங்கல நிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தை சுமுகமாக அமையும். புத்திரர், உங்கள் சொல் கேட்டு நடந்து பெருமை தேடித் தருவர். பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். இல்லறத்துணையின் கூடுதல் அன்பு, பாசம் மனதில் உத்வேகம் தரும். தொழிலில் வளர்ச்சியும், உபரி பணவரவும் கிடைக்கும். பணியாளர், தொழில் நுட்ப அறிவு வளர்த்துக் கொள்வர். பெண்கள், கணவரின் அன்பு, தாராள பணவசதி கிடைத்து, மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்கள், வெளியிடம் சுற்றுவதை தவிர்ப்பதால், படிப்பில் கவனம் வளரும்.

சந்திராஷ்டமம்: 23.4.14 இரவு 2:27 மணி முதல் 26.4.14 இரவு 5:21 மணி வரை.

 

சிம்மம்: நண்பர்களின் உதவி யால், மனதில் உற்சாகம் பெறும், சிம்ம ராசிக்காரர்களே! 20-4-14 முதல் 26-4-14 வரை

இந்த வாரம், உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சனி, ராகு, ஆதாய ஸ்தானத்தில் குரு பகவான் அனுகூலமாக உள்ளனர். மனதில் தைரியமும், செயல்களில் கூடுதல் பரிமளிப்பும் ஏற்படும். பசு, பால் பாக்யயோகம் சிறப்பாக அமைந்து, குடும்பத் தேவைகளை இலகுவாக பூர்த்தி செய்ய உதவும். பொதுப் பணியிலும் ஈடுபடுவீர்கள். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர், நண்பர்களின் உதவியால், அறிவு சார்ந்த விஷயங்களை எளிதில் புரிந்து கொள்வர். எதிர்மறையாக இருந்த சூழ்நிலை, அனுகூலம் தருவதாக மாறும். இல்லறத்துணையின் செயல் குறையை கண்டித்து பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை சீராக, தகுந்த கண்காணிப்பு அவசியம். பணியாளர், நிர்வாகத்தின் வழிகாட்டுதல் கவனமுடன் பின்பற்றுவது நல்லது. பெண்கள், சமையலறை பணிகளில், உரிய பாதுகாப்புடன் செயல்பட வேண்டும். மாணவர்கள், பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்வதை தவிர்க்கவும்.

 

கன்னி: நண்பரின் நலன் கருதி, இயன்ற அளவில் உதவும், கன்னி ராசிக்காரர்களே! 20-4-14 முதல் 26-4-14 வரை

இந்த வாரம், உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் உள்ள, புதன் மற்றும் தினகதி சுழற்சியில் செயல்படுகிற சந்திரன் மட்டுமே, அனுகூலமாக உள்ளனர். சுற்றுப்புற சூழ்நிலை தருகிற, தொந்தரவினால் மனதில் கோபம், பொறாமை குணம் ஏற்படலாம். செயல்களில் நிதானம் பின்பற்றுவதால், நடைமுறை வாழ்வு சுமுகமாக அமையும். வீடு, வாகனத்தில் நம்பகக் குறைவானவர்களுக்கு இடம் தர வேண்டாம். புத்திரர், உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு விரும்பி உண்பதால், உடல்நலக் குறைவு ஏற்படலாம். கவனம் தேவை. அத்தியாவசிய செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். இல்லறத்துணை உதவிகரமாக நடந்து கொள்வார். தொழில் வளர்ச்சி பெற, உங்கள் நலம் விரும்புபவரின் ஆலோசனை நாடுவீர்கள். இயந்திர தொழிற்சாலை பணியாளர், பாதுகாப்பு முறை தவறாமல் பின்பற்றவும். பெண்கள் நகைகளை கவனமுடன் பாதுகாக்க வேண்டும். மாணவர்கள், ஆசிரியரின் அறிவுரையை பின்பற்றுவது, நற்பெயர் பெற உதவும்.

 

துலாம்: எந்த சூழ்நிலையிலும், நேர்மை குணம் பின்பற்றுகிற, துலாம் ராசிக்காரர்களே! 20-4-14 முதல் 26-4-14 வரை

இந்த வாரம், உங்கள் ராசிக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன், பாக்ய ஸ்தானத்தில் குரு அனுகூலமாக உள்ளனர். கடந்த நாட்களில் நிறைவேற்றிய நற்செயல்களுக்கான பலன், வியத்தகு அளவில் வந்து சேரும். தம்மைச் சார்ந்தவர்களுக்கு, தேவையான உதவி மனமுவந்து வழங்குவீர்கள். இளைய சகோதரர், தம் வாழ்வை வளமாக்க, உங்களின் ஆலோசனை கேட்டுப் பெறுவர். சொத்தின் மூலம், கூடுதல் பணவரவு கிடைக்கும். புத்திரர் படிப்பு, வேலை வாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். எதிரியாக உங்களை கருதியவர் மனமாற்றம் அடைந்து அன்பு பாராட்டுவார். இல்லறத்துணை வழி சார்ந்த உறவினர் மதிப்பு, மரியாதை தருவர். தொழில் அபிவிருத்தியாக புகழ், கூடுதல் பணவரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு, வெகுமதி பெறுவர். பெண்கள், பிரார்த்தனை நிறைவேறி இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள், படிப்பில் ஆர்வம் கொள்வர்

 

விருச்சிகம்: சமயோசிதமாக செயல்புரிந்து வாழ்வில் முன்னேறும், விருச்சிக ராசிக்காரர்களே! 20-4-14 முதல் 26-4-14 வரை

இந்த வாரம், உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சுக்கிரன், ஆறாம் இடத்தில் சூரியன், புதன், கேது ஆதாய ஸ்தானத்தில் செவ்வாய் அனுகூலமாக உள்ளனர். ஒவ்வொரு செயலும் தருகிற நன்மை, சிரமம் உணர்ந்து பணி மேற்கொள்வீர்கள். இதனால், பிரச்னை வராத சுமுக வாழ்வு உருவாகும். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்குகிற திட்டம் நிறைவேறும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித்
தருவீர்கள். வழக்கு விவகாரங்களில் அனுகூலத் தீர்வு கிடைக்கும். இல்லறத்துணை குடும்ப நலனில் கூடுதல் அக்கறை கொள்வார். தொழில், வியாபாரம் செழிக்க, தேவையான அரசு உதவி பெற அனுகூலம் உண்டு. அரசியல்வாதிகளுக்கு, எதிர்ப்பாளரால் இருந்த தொந்தரவு விலகும். பெண்கள், கணவரின் செல்வாக்கு சமூகத்தில் அதிகரிக்க, தேவையான ஆலோசனை கூறுவர். மாணவர்கள், சிறந்த தேர்ச்சி விகிதம் பெற்று, பெற்றோர், ஆசிரியரின் பாராட்டு பெறுவர்.

 

தனுசு: தன் தகுதி, திறமையை உணர்ந்து செயல்படும், தனுசு ராசிக்காரர்களே! 20-4-14 முதல் 26-4-14 வரை

இந்த வாரம், உங்கள் ராசிக்கு மூன்றில் சுக்கிரன், ஏழாம் இடத்தில் குரு பதினொன்றில் சனி, ராகு அனுகூலமாக உள்ளனர். இதனால், நல்லவர்களின் நட்பு கிடைத்து உற்சாகம் அடைவீர்கள். முக்கியமான செயல்கள் எளிதாக வெற்றி பெறும். குடும்பத்தேவை தாராள பணச்செலவில் நிறைவேற்றுவீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்க நல்யோகம் உண்டு. புத்திரரின் உடல்நலத்திற்கு சிறு அளவில் மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். எதிர்மனப்பாங்கு உள்ளவரும், உங்களிடம் உதவி பெற்று, தம் வாழ்வை வளப்படுத்த விரும்புவர். இல்லறத்துணை குடும்பத்தில், மகிழ்ச்சி நிலைத்திருக்க அன்புடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரம் அபிவிருத்தியாகி, உபரி பணவரவு கிடைக்கும். பணியாளர் சுறுசுறுப்பாக செயல்பட்டு, நிர்வாகத்திடம் நன்மதிப்பு சலுகை பெறும். குடும்ப பெண்கள், தாராள பணவசதி, கணவரின் நல்அன்பு கிடைத்து, சந்தோஷ வாழ்வு நடத்துவர். மாணவர்கள், கலகலப்பாக பேசி
நண்பரின் மனக்கவலை மாற்றுவீர்கள்.

 

மகரம்: பொறுமை குணம் பின்பற்றி, சமூகத்தில் மரியாதை பெறும், மகர ராசிக்காரர்களே! 20-4-14 முதல் 26-4-14 வரை

இந்த வாரம், உங்கள் ராசிக்கு இரண்டில் சுக்கிரன், நான்கில் புதன் அனுகூல பலன் தரும் வகையில் உள்ளனர். பேசும் வார்த்தை இனிதாக அமைந்து, நண்பர், உறவினரை வசீகரிக்கும். குடும்ப நிகழ்வுகளின் போக்கு உணர்ந்து, முன்யோசனையுடன் தேவையான பணிபுரிவீர்கள். பிறருக்காக எவ்வித பொறுப்பும் ஏற்க வேண்டாம். வாகன பயன்பாடு, சீரான அளவில் இருக்கும். புத்திரர் நண்பரைப்போல சகஜமாகப் பழகுவர். சீரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்க உதவும். இல்லறத்துணை, சமூகத்தில் உங்களின் கவுரவம் மிளிரும் வகையில், உதவிகரமாக நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம், அதிக உழைப்பு என்கிற உறுதியுடன் பணிபுரிவீர்கள். அரசியல்வாதிகள், சமரசப் பேச்சு வார்த்தையில் சுமுக நிலையை அடைவர். பெண்கள், சிக்கன பணச்செலவில் குடும்பத்தேவை திருப்திகரமாக நிறைவேற்றுவர். மாணவர்கள், புதிய பயிற்சி முறை பின்பற்றி, திட்டமிட்ட தேர்ச்சி விகிதம் பெறுவர்.

 

கும்பம்: உழைப்பு, பணிவு தன் வாழ்வை வளமாக்கும் என, செயல்படும், கும்ப ராசிக்காரர்களே! 20-4-14 முதல் 26-4-14 வரை

இந்தவாரம், உங்கள் ராசியில் சுக்கிரன், மூன்றில் சூரியன், கேது அனுகூலமாக உள்ளனர். ஐந்தாம் இடத்தில் உள்ள, குரு ராசியை பார்ப்பதால், மனதில் உற்சாகமும், முகத்தில் புதுப்பொலிவும் பெறுவீர்கள். பணவரவு அதிகம் பெறுவதற்கான புதிய வாய்ப்பு உருவாகும். இளைய சகோதரர் மனதில் நம்பிக்கை வளர, தேவையான ஆலோசனை சொல்வீர்கள். குடும்பத்தில் மங்கலநிகழ்வு ஏற்படும். புத்திரர் ஆன்மிகம் தொடர்பான விஷயங்களை அறிவதில் ஆர்வம் கொள்வர். பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். இல்லறத்துணை உங்களின் நல்லகுணம் பாராட்டுவார். தொழிலில் உருவாகிற சிறு இடையூறு, தாமதமின்றி சரிசெய்வது நல்லது. பணியாளர்கள், நிர்வாகத்தின் வழிகாட்டுதல் கவனமுடன் பின்பற்ற வேண்டும். பெண்கள், விதவிதமான உணவு தயாரித்து குடும்பத்தினரை உபசரிப்பீர்கள். மாணவர்கள், படிப்புக்கான பணவசதி சீராக கிடைத்து, மனதில் நிம்மதி அடைவர்.

 

மீனம்: தன் கடமை உணர்ந்து, எந்நாளும் பணிபுரியும், மீன ராசிக்காரர்களே! 20-4-14 முதல் 26-4-14 வரை

இந்த வாரம், உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் உள்ள, சுக்கிரன் மற்றும் தினகதி சுழற்சி கிரகம், சந்திரன் மட்டுமே நற்பலன் தருகின்றனர். ஒவ்வொரு செயலையும் நிதானித்து மேற்கொள்வதால், உரிய நன்மை கிடைக்கும். ஆடம்பர செலவுகளினால் பண இருப்பு குறையும். உடன் பிறந்தவர்களின் வாழ்வு சிறக்க உதவி புரிவீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும், பொது விவகாரத்தில் கருத்து சொல்ல வேண்டாம்.புத்திரர், உங்களின் சூழ்நிலை உணர்ந்து நடந்து கொள்வார். இல்லறத்துணை கூடுதல் அன்பு, பாசத்துடன் செயல்பட்டு உங்கள் மனதில் நம்பிக்கை உருவாக்குவார். தொழிலில் உற்பத்தி, விற்பனை மிதமான அளவில் இருக்கும். பணியாளர், அத்தியாவசிய செலவுக்கு கொஞ்சம் பணக்கடன் பெறுகிற நிலைமை உருவாகலாம். பெண்கள், தாய்வீட்டு உதவி கிடைத்து மனம் மகிழ்வர். மாணவர்கள், ஆசிரியரிடம் நன்மதிப்பு பெறும் வகையில் நடக்க வேண்டும்.

Leave a Reply