shadow

8

செயல் நிறைவேற, மனஉறுதியுடன் பணிபுரியும், மேஷ ராசிக்காரர்களே! (6-4-2014 – 12-4-2014)

இந்த வாரம், உங்கள் ராசிக்கு செவ்வாய் மற்றும் சுக்கிரன் சிறப்பான பலன் வழங்குகின்றனர். எதிர்ப்புக்களை புத்தி சாதுர்யத்துடன் சமாளித்து, திட்டமிட்ட இலக்கை அடைவீர்கள். முக்கியமான பணவரவு கிடைக்கும். நண்பர்களுக்காக எவரையும் பகைத்துக் கொள்ளும் விதமாக பேசக்கூடாது. வாகன பயன்பாடு சராசரி அளவில் இருக்கும்.
புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித்தர, பிடிவாத குணத்துடன் அணுகுவர். உடல்நல ஆரோக்கியம் சீரான அளவில் இருக்கும். இல்லறத்துணை கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார். தொழிலில் உற்பத்தி, விற்பனை கூடுதல் உழைப்பால் முன்னேற்றம் பெறும். பணியாளர், தொழில் நுட்ப அறிவை வளர்ப்பதில் ஆர்வம் கொள்வர்.
பெண்கள் நகை, இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். மாணவர்கள், புதிய பயிற்சி முறை பின்பற்றி அதிக மதிப்பெண் பெறுவர்.

 

அனுபவசாலிகளின், ஆலோசனையை மதித்து நடக்கும், ரிஷப ராசிக்காரர்களே! 6-4-2014 – 12-4-2014)

இந்த வாரம், உங்கள் ராசிக்கு சூரியன், புதன், குரு, சனி, ராகு ஆகிய கிரகங்களின் அளப்பரிய அனுகூலம் பலமாக உள்ளது.பண்பு, பணிவு நிறைந்த குணத்துடன் நண்பர், உறவினர்களிடம் பழகுவீர்கள். குடும்பத் தேவை நிறைவேற்றுவதற்கான பணவசதி, தாராள அளவில் இருக்கும். உடன் பிறந்தவர்களின் மங்கல நிகழ்ச்சி நடத்துவதற்கான பேச்சுவார்த்தை, நல்லவிதமாக அமையும். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான முயற்சி இனிதாக நிறைவேறும்.புத்திரரின் செயல், சிறப்பாக அமைய உதவுவீர்கள். விவகாரம் அணுகாத சுமுக வாழ்வு பெறுவீர்கள். இல்லறத்துணையின் உடல்நலத்திற்கு, மருத்துவசிகிச்சை உதவும். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழித்து சேமிக்கும் அளவில், பணவரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர் சிறப்பாக செயல்பட்டு, பாராட்டு வெகுமதி பெறுவர். குடும்ப பெண்கள், கணவரின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவர். மாணவர்கள் நண்பரின் உதவியால், படிப்பில் புதிய விஷயங்களை அறிந்து கொள்வர்.

 

தன் இன்ப துன்பம் கருதாமல், சேவை புரியும் மிதுன ராசிக்காரர்களே! (6-4-2014 – முதல் 12-4-2014 வரை)

இந்த வாரம், உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானத்தில் உள்ள சுக்கிரன், தொழில் ஸ்தானத்தில் உள்ள சூரியன், புதன் வியத்தகு அளவில் நற்பலன் தருகின்றனர். மகளின் ஜாதகத்தில் உள்ள புண்ணிய பலன், குடும்பத்தில் நல்ல நிகழ்வு உருவாக உதவும். பிறர் மனம் அறிந்து பேசி, நற்பெயரை பாதுகாத்திடுவீர்கள். மனதில் புதிய நம்பிக்கை, புத்துணர்வு ஏற்படும். வாகனத்தில் பராமரிப்பு செய்வதால், பயணமுறை எளிதாக அமையும்.
புத்திரர் தம் நண்பரிடம் பழகும் விதம் குறித்து, சொல்லித் தருவீர்கள். உடல் நலம் ஆரோக்கியம் பெற, சத்து நிறைந்த உணவு உண்பதும், சீரான ஓய்வும் பின்பற்றுவதும் நல்லது. இல்லறத்துணை குடும்ப நலன் சிறக்க, நல்ல ஆலோசனை சொல்வார். தொழில் வளர்ச்சி பெற, தேவையான உதவி எளிதில் கிடைக்கும். பணியாளர்களுக்கு, கூடுதல் வேலைவாய்ப்பு திருப்திகர சன்மானம் வந்து சேரும். பெண்கள், குடும்ப ஒற்றுமையை பேணிக்காத்திடுவர். மாணவர்கள், பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்லக்கூடாது.

 

உடல்நலம் பேணுவதில், அக்கறை மிகுந்த கடக ராசிக்காரர்களே! (6-4-2014 – முதல் 12-4-2014 வரை)

இந்த வாரம், உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் செவ்வாய், எட்டாம் இடத்தில் சுக்கிரன், அனுகூல அமர்வில் உள்ளனர். சமூக நிகழ்வு மனதிற்கு ஏற்புடையதாக அமைந்து, புதிய நம்பிக்கையை உருவாக்கும்.
உடன்பிறந்தவர்களின் அன்பு, உதவி முக்கிய தருணங்களில் கிடைக்கும். வீடு, வாகனத்தில் நம்பகத் தன்மை குறைவானவர்களுக்கு இடம் தரவேண்டாம். புத்திரர் அறிவுத்திறன் வளர்த்து, செயல்களில் கூடுதல் நன்மை பெறுவர். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு வகை உண்ண வேண்டாம்.இல்லறத்துணை கருத்து ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். தொழிலில் உருவாகிற இடையூறு, தாமதமின்றி சரிசெய்வதால் உற்பத்தி, விற்பனை சீராகும்.
பணியாளர், நிர்வாகத்தின் சட்டதிட்டம் மதித்து, பணிபுரிவதில் கூடுதல் அக்கறை வேண்டும். பெண்கள், குடும்பத் தேவைகளை சிக்கன பணச்செலவில் மேற்கொள்வர். மாணவர்கள், ஞானம் மிகுந்த புதிய நண்பரின் அறிமுகத்தினால், மகிழ்ச்சி அடைவர்.

 

வெற்றிப் பாதையை தேர்வு செய்வதில், கவனமுள்ள சிம்ம ராசிக்காரர்களே! (6-4-2014 – முதல் 12-4-2014 வரை)

இந்த வாரம், உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சனி, ராகு, அஷ்டமத்தில் புதன், ஆதாயத்தில் குரு அனுகூலமாக உள்ளனர். புதிய திட்டங்களை உரிய பரிசீலனைக்கு பின் திறம்பட செயல்படுத்துவீர்கள். புகழ், உபரி பணவரவு திருப்திகர அளவில் கிடைக்கும்.வீடு, வாகனத்தில் தகுந்த பாதுகாப்பு பின்பற்றுவதால், திருட்டு பயமின்றி செயல்படலாம். புத்திரர் ஆன்மிகம் தொடர்பான செய்திகளை, உங்களிடம் கேட்டு தெரிவதில் ஆர்வம் கொள்வர். பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள்.இல்லறத்துணையின் மனதில் உருவாகிற சஞ்சலம் போக்க உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெற புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். பணியாளர்கள், பணி இலக்கை லட்சிய மனதுடன் நிறைவேற்றுவர்.
குடும்ப பெண்கள், கணவரின் சம்மதமின்றி எவருக்கும் பணஉதவி செய்ய வேண்டாம்.
மாணவர்கள், நண்பர்களிடம் படிப்பு தவிர, பிற விஷயங்களில் விவாதம் கூடாது.

 

குடும்ப நலன் பாதுகாப்பதில், ஆர்வம் நிறைந்த கன்னி ராசிக்காரர்களே! (6-4-2014 – முதல் 12-4-2014 வரை)

இந்த வாரம், உங்கள் ராசிக்கு நவக்கிரகங்களில் சந்திரன் மட்டுமே, ஓரளவு நற்பலன் தருகிறார். இதனால், எந்த செயல்களிலும், முன்யோசனையுடன் ஈடுபடுவது நல்லது.
குடும்ப உறுப்பினர்கள், உங்களின் தியாகம் நிறைந்த குணத்தை சந்தேகப்படும் வகையிலான, சூழ்நிலை ஏற்படலாம். நேர்மை வழியும், தெய்வ வழிபாடும் உங்கள் மனதில் ஊக்கம் தரும். நண்பருடன் வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
புத்திரரின் அதிருப்தி எண்ணங்களை சரி செய்வீர்கள். சேமிப்பு பணம், அத்தியாவசிய
செலவுக்கு பயன்படும். இல்லறத் துணையின் செயல், குறையை பெரிதுப்படுத்தி பேச வேண்டாம். தொழிலில் அளவான மூலதனம், அதிக உழைப்பு என்ற நடைமுறை நல்லது.
இயந்திர தொழிற்சாலை பணியாளர், பாதுகாப்பு நடைமுறை தவறாமல் பின்பற்றவும். குடும்ப பெண்கள், கணவர் வழி உறவினர் பற்றி குறை கூற வேண்டாம். மாணவர்கள், ஆசிரியரின் அன்பை பெறும் வகையில், படிப்பில் கவனம் கொள்வது நலம்.

 

கலை ரசனையுடன் பேசி, புகழ் பெறும், துலாம் ராசிக்காரர்களே! (6-4-2014 – முதல் 12-4-2014 வரை)

இந்த வாரம் உங்கள் ராசிக்கு ஐந்தில் சுக்கிரன், ஆறாம் இடத்தில் சூரியன், புதன், ஒன்பதாம் இடத்தில் குரு, அனுகூல அமர்வில் உள்ளனர். உங்களின் தகுதி, திறமையை வளர்ப்பதில் அக்கறை கொள்வீர்கள். அக்கம், பக்கத்தவருடன் கொண்டிருந்த மனக்கிலேசம் மாறி அன்பு மலரும். வீடு, வாகனத்தில் கூடுதல் வசதி பெற, சில மாற்றம் செய்வீர்கள்.
புத்திரர் உங்கள் சொல் கேட்டு நடந்து, பெருமை தேடித் தருவர். உடல்நல ஆரோக்கியம் பலம் பெறும். புதிய பணி நிறைவேற்றுவதில், ஆர்வம் கொள்வீர்கள். இல்லறத்துணை, குடும்பத் தேவை நிறைவேறி, இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற,
கூடுதல் மூலதனம் செய்வீர்கள். அரசியல்வாதி களுக்கு எதிர்ப்பு விலகி, புதிய பதவி கிடைக்க அனுகூலம் உண்டு. பெண்கள், தாராள பணவசதி கிடைத்து ஆடை, அணிகலன் வாங்குவர். மாணவர் கள், வெளியிடம் சுற்றுவதை, குறைத்து படிப்பில் கவனம் கொள்வர்.

 

இயன்ற அளவு, சமூக சேவையில் ஈடுபடும், விருச்சிக ராசிக் காரர்ளே! (6-4-2014 – முதல் 12-4-2014 வரை)

இந்த வாரம், உங்கள் ராசிக்கு சுக்கிரன், கேது செவ்வாயின் அமர்வு அனுகூல பலன் தரும் வகையில் உள்ளது. புதிய முயற்சி சிறப்பாக அமைந்து, சமூகத்தில் வரவேற்பு பெற்றுத் தரும். உடன் பிறந்தவர்களிடம், ஓரளவு உதவி எதிர்பார்க்கலாம்.
வாகன பயன்பாட்டு வசதி, திருப்திகரமாக இருக்கும். புத்திரர் உடல் நலக்குறைவை சரிசெய்வதில், கூடுதல் அக்கறையுடன் செயல்படுவீர்கள். நிலுவைப் பணம், எதிர்பாராத அளவில் வந்து சேரும்.இல்லறத்துணை, உங்களின் நல்ல குணங்களை பாராட்டுவர். தொழிலில் ஏற்படுகிற மந்த நிலையை சரி செய்வதால் உற்பத்தி, விற்பனை சீராக அமைந்திடும். பணியாளர்கள், சக பணியாளர்களிடம் தேவையற்ற விவாதம் பேசக் கூடாது. பெண்கள் கணவரின் அன்பு, பாசம் கூடுதலாக கிடைத்து, மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்கள், படிப்புக்கான பணவசதி எதிர்பார்த்தபடி கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: 5.4.14 இரவு 12.01 மணி முதல் 7.4.14 காலை 4.37 மணி வரை

 

வாழ்வின் நிகழ்வுகளை, அனுபவ பாடமாக கருதும் தனுசு ராசிக்காரர்களே! (6-4-2014 – முதல் 12-4-2014 வரை)


. மகிழ்ச்சியுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். உறவினர்களில் வருகையும், உதவியும் வீட்டில் புதிய சூழ்நிலையை உருவாக்கும். சிலர் புதிய வாகனம், வாங்குகிற முயற்சி நிறைவேறும். புத்திரர் இனம் புரியாத அளவில், சில விஷயங்களில் சஞ்சலம் கொள்வர்.இல்லறத் துணையுடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அதிக மூலதனத்துடன் அபிவிருத்தி பணி புரிவீர்கள். பணியாளர், நிர்வாகத்தின் சட்ட திட்டம் மதித்து நடந்து பணிஇலக்கு நிறைவேற்றுவர். குடும்ப பெண்கள், பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை கொள்வர். மாணவர்கள், படிப்பில் கவனம் செலுத்துவதற்கான புதிய சூழ்நிலை அமையப் பெறுவர்.
சந்திராஷ்டமம்: 7.4.14 காலை 4:38 மணி முதல் 10. 4.14 மாலை 4:19 மணி வரை.

 

எதிர்கால வாழ்வு சிறக்க, பணி மேற்கொள்ளும் மகர ராசிக்காரர்களே! (6-4-2014 – முதல் 12-4-2014 வரை)

இந்தவாரம், உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான வாக்குஸ்தானத்தில் சுக்கிரன், மூன்றாம் இடமான புகழ் ஸ்தானத்தில், சூரியன் அனுகூலமாக உள்ளனர். வாழ்வில் எதிர்கொண்ட சிரமங்களை மறந்து, பணிகளில் லட்சிய மனதுடன் ஈடுபடுவீர்கள். பேசும்வார்த்தை வசீகரம் மற்றும் இனிதாக அமைந்து, பழகுபவர்களிடம் நன்மதிப்பை பெற்றுத்தரும். குடும்பத்தேவை தாராள பணச்செலவில் நிறைவேற்றுவீர்கள். அறிமுகம் இல்லாதவருக்கு வீடு, வாகனத்தில் இடம் தர வேண்டாம்.புத்திரர் உங்களின் அருமை, பெருமை நிறைந்த செயல்களால் பெருமிதம் அடைவர். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்பது தவிர்க்கவும். இல்லறத்துணை, தாய்வீட்டு உதவியை பெற்றுத்தருவார். தொழில், வியாபாரத்தில் உருவாகிற போட்டியை சமயோசிதமாக எதிர்கொள்வீர்கள். பணியாளர்கள், பணிஇலக்கை கூடுதல் கால அவகாசத்தில் நிறைவேற்றுவர். பெண்கள், குடும்பத்தின் பணவரவுக்கேற்ப செலவு மேற்கொள்வர். மாணவர்கள், நண்பரின் புகழ் வார்த்தையை, பெரிதாக எண்ண வேண்டாம்.
சந்திராஷ்டமம்: 10.4.14 மாலை 4:20 மணி முதல் 12.4.14 இரவு 2:50 மணி வரை.

 

ஆன்மிக நம்பிக்கை உள்ளவர்களை, மதிக்கும் கும்ப ராசிக்காரர்களே! (6-4-2014 – முதல் 12-4-2014 வரை)

இந்த வாரம், உங்கள் ராசியில் உள்ள சுக்கிரன், மூன்றாம் இடத்தில் உள்ள கேது, ஐந்தாம் இடத்தில் உள்ள குரு, நற்பலன் தருகின்றனர். தன்னிடம் பழகுபவர்களின் ஆடம்பர செயல்பாடுகளை பார்த்து பின்பற்ற, மனம் விரும்பும். இதனால், பணச்செலவு, சிலரிடம் அவமதிப்பு உருவாகிற நிலை ஏற்படலாம். கவனம் தேவை. வெளியூர் பயணம் சில நன்மையைத் தரும்.புத்திரர், உங்கள் சொல்கேட்டு நடந்து கொள்வர். உடல்நல ஆரோக்கியம் சீராக இருக்கும். இல்லறத்துணையின் நல்ல கருத்துகளை ஏற்று செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தன்மை, கவனமுடன் பாதுகாத்திடுவீர்கள். பணியாளர்கள், தமக்குரிய பொறுப்புக்களை உணர்ந்து, பணியில் ஈடுபடுவீர்கள். பெண்கள், சேமிப்பு பணம், குடும்பத்தின் அத்தியாவசிய செலவுகளுக்காக பயன்படுத்துவர். மாணவர்கள், ஒருமுகத்தன்மையுடன் படித்து, நல்ல தேர்ச்சி விகிதம் பெறுவர்.

 

 

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *