shadow

8

ஆர்வமுடன் உழைத்து வாழ்வில் முன்னேறும், மேஷ ராசிக்காரர்களே! (30-3-14 முதல் 5-4-14 வரை)

இந்த வாரம், உங்கள் ராசிநாதன் செவ்வாய் மற்றும் தன சப்தமஸ்தான அதிபதி சுக்கிரன் நற்பலன் வழங்குகின்றனர். வெகுநாள் திட்டமிட்ட செயலை நிறைவேற்ற தாராள பணவசதி கிடைக்கும். பிறர் பொருளை பாதுகாக்கும் பொறுப்பு ஏற்க வேண்டாம். இளைய சகோதரரின் கஷ்ட சூழ்நிலை விலக, தேவையான உதவி புரிவீர்கள். வாகன பயன்பாடு சராசரி அளவில் இருக்கும். புத்திரரின் உடல் நலத்திற்கு, சிறு அளவில் மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். எதிரியால் உருவாக்குகிற கெடுதல் முயற்சி பலமிழக்கும். இல்லறத்துணை ஒற்றுமை குணத்துடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் புதிய மாற்றம் கொண்டு வருவீர்கள். பணியாளர் நிர்வாகத்தின் நடைமுறை பொறுப்புணர்வுடன் பின்பற்ற வேண்டும். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் முயற்சியுடன் படித்து, திருப்திகர அளவில் தேர்ச்சி விகிதம் பெறுவர்.

 

நடை, உடை, செயலில் வசீகரம் பின்பற்றும், ரிஷப ராசிக்காரர்களே! (30-3-14 முதல் 5-4-14 வரை)

இந்த வாரம், உங்கள் ராசிக்கு வீடு வாகன ஸ்தான அதிபதி சூரியன் புத்திரம் – பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி புதன் ஆதாய அமர்வில் உள்ளனர். குரு, சனி, ராகு கூடுதல் நற்பலன் தருகின்றனர். உங்களின் இனிய வார்த்தை, நண்பர்களிடம் மதிப்பு, மரியாதை பெற்றுத்தரும். பணிகளில் உற்சாகமுடன் ஈடுபடுவீர்கள். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்குகிற முயற்சி இனிதாக நிறைவேறும். புத்திரரின் நற்செயல் பெருமை தேடித்தரும். குடும்பத்தில் மங்களநிகழ்வு ஏற்படும். உபரி பணவரவில் சேமிப்பை அதிகரிப்பீர்கள். இல்லறத்துணை சுயகவுரவ எண்ணங்களுடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் வியத்தகு அளவிலான வளர்ச்சியும், புகழும் உண்டாகும். பணியாளர் திறம்பட பணிபுரிந்து, நிர்வாகத்திடம் நன்மதிப்பு, சலுகை பெறுவர். குடும்ப பெண்கள், கணவரின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவதால், ஒற்றுமை சீராகும். மாணவர்கள், ஞாபகத்திறன் வளர்த்து, படிப்பில் சிறந்த முன்னேற்றம் காண்பர்.

 

பிறர் கருத்தின் நியாயம் உணர்ந்து மதிக்கும், மிதுன ராசிக்காரர்களே! (30-3-14 முதல் 5-4-14 வரை)

இந்த வாரம், உங்கள் ராசிநாதனும், சுக ஸ்தான அதிபதியுமாகிய புதன், பத்தாம் இடத்தில் நீசம் பெற்ற நிலையிலும் இயன்ற அளவில் நற்பலன் தருகிறார். சூரியன், சுக்கிரனின் அமர்வு அனுகூலமாக உள்ளது. மனஉறுதியுடன் பணிகளை துவங்குவீர்கள். சாதகமான சூழ்நிலை உருவாகி, வெற்றியை எளிதாக பெற்றுத்தரும். சுயலாபத்திற்காக உங்களை புகழ்ந்து பேசுபவரிடம் விலகுவது நல்லது. வீடு, வாகன பாதுகாப்பில் உரிய கவனம் வேண்டும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். எதிரியால் வருகிற சிரமம் மாற்று உபாயத்தினால் சரி செய்வீர்கள். இல்லறத்துணையின் அன்பு, பாசம் மனதில் மகிழ்ச்சி தரும். தொழில் வியாபாரம் செழித்து வளர, தேவையான அரசு உதவி பெறலாம். உத்தியோகஸ்தர் கடமை உணர்வுடன் பணிகளை நிறைவேற்றுவர். குடும்ப பெண்கள், சேமிப்பு பணத்தில் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். மாணவர்கள், திட்டமிட்டு படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவர்.

 

பரந்த மனமும், உழைப்பில் ஆர்வமும் கொண்ட கடக ராசிக்காரர்களே! (30-3-14 முதல் 5-4-14 வரை)

இந்த வாரம், உங்கள் ராசிக்கு தாய் ஸ்தான அதிபதி சுக்கிரன், பூர்வ புண்ணியம், தொழில் ஸ்தான அதிபதியாகிய செவ்வாய் அனுகூல சஷ்டாஷ்டக அமர்வில் உள்ளனர். கடந்த நாட்களில் தாய் தந்த உதவிக்கு, நன்றி உடையவராக செயல்படுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி நிலவும். இஷ்ட தெய்வ அருள் பலத்துடன், முருகப் பெருமானின் அருளும், சுப நிகழ்வுகளை உருவாக்கும். நண்பருடன் வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர் அருமை, பெருமை நிறைந்த செயலால், உங்களின் கூடுதல் அன்பை பெறுவார். சீரான ஓய்வு, உடல் நலம் பாதுகாக்கும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கிடைக்கிற வாய்ப்பை ஆர்வமுடன் பயன்படுத்துவீர்கள். குடும்ப பெண்கள், அத்தியாவசிய செலவுகளுக்கு மட்டும், முன்னுரிமை தருவர். மாணவர்கள், வெளியிடத்தில் சுற்றுவதை தவிர்த்து, படிப்பில் கவனம் கொள்வர்

 

மனதில் துணிச்சலும், கூடுதல் செயல்திறனும் உள்ள, சிம்ம ராசிக்காரர்களே! (30-3-14 முதல் 5-4-14 வரை)

இந்த வாரம் உங்கள் ராசிக்கு தன, லாப ஸ்தான அதிபதி புதன் நீசம் பெற்ற நிலையிலும், குருவுடன் பரிவர்த்தனை யோகம் பெற்று நற்பலன் வழங்குகின்றனர். சனி, ராகு இருவரும் குருவின் பார்வை பெற்று, உங்கள் செயல் நிறைவேற துணை புரிகின்றனர். பேசுவதில் நிதானம், நற்பெயரை பாதுகாக்கும். கடந்த நாட்களில் எதிர்மறையாக உருவான செயல், நற்பலன் தருவதாக மாறும். வீடு, வாகன பராமரிப்பில் பணச்செலவு அதிகரிக்கும். புத்திரர், உங்களின் குடும்ப நலன் சார்ந்த பணிகளை உணர்ந்து, கூடுதல் அன்பு பாராட்டுவர். உடல்நல ஆரோக்கியம் சீராக இருக்கும். இல்லறத்துணையின் மனதில் நம்பிக்கை வளர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணியாளர் குளறுபடி வராத அளவில் பணிபுரிவது அவசியம். பெண்கள், பணச்செலவுகளை சிக்கன முறையில் மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள், அதிக விலையுள்ள பொருட்களை கவனமுடன் பயன்படுத்தவும்.

சந்திராஷ்டமம்: 29.03.14 இரவு 12.01 மணி முதல் 31.03.14 இரவு 1.51 மணி வரை

 

அன்பின் சக்தியை உணர்ந்து, வரவேற்கும், கன்னி ராசிக்காரர்களே! (30-3-14 முதல் 5-4-14 வரை)

இந்த வாரம், உங்கள் ராசிக்கு தினகதி சுழற்சி கிரகம், சந்திரன் மட்டுமே நற்பலன் வழங்குகிறார். மற்ற கிரகங்கள் எதிர்மறையாக உள்ளனர். இதனால், உங்களின் கோப குணம், தற்புகழ்ச்சி, அளவற்ற பேச்சு ஆகியவை தவிர்ப்பதால், வாழ்வில் இருக்கிற நல்ல சூழ்நிலைகளை பாதுகாக்கலாம். இளைய சகோதரர் ஓரளவு உதவுவர். அறிமுகம் இல்லாதவர்க்கு வீடு, வாகனத்தில் இடம் தர வேண்டாம். புத்திரரின் ஆடம்பரமான நடவடிக்கையை, இதமுடன் சரி செய்வது நல்லது. சமூக நிகழ்வுகளை, அதிக நேரம் வேடிக்கை பார்க்க வேண்டாம். இல்லறத்துணை குடும்ப சிரமங்களை சரி செய்வதில், குழப்ப மனதுடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் சிறிது லாப விகிதம் குறைப்பதால், திட்டமிட்ட இலக்கை அடையலாம். பணியாளர் பாதுகாப்பு நடைமுறையில், கூடுதல் கவனம் பின்பற்றவும். பெண்கள், தெய்வ வழிபாடு நடத்துவதால், குடும்பத்திற்கான நன்மை உருவாக புதிய வழி பிறக்கும். மாணவர்கள், நண்பரின் குறையை விமர்சிக்க வேண்டாம்.

சந்திராஷ்டமம்: 31.3.14 இரவு 1.52 மணி முதல் 2.4.14 இரவு 2.29 மணி வரை.

 

செயல்களில், கலையம்சம் பின்பற்றுகிற, துலாம் ராசிக்காரர்களே! (30-3-14 முதல் 5-4-14 வரை)

இந்தவாரம், உங்கள் ராசிக்கு புகழ் ஸ்தான அதிபதி குரு, பாக்யஸ்தான அதிபதி புதன், பரிவர்த்தனை யோக பலத்துடன் உள்ளனர். புத ஆதித்ய யோகமும், சிறிப்பான இடத்தில் அமைந்து, உங்களை அறிவார்ந்த செயல்களில் ஈடுபட வைக்கும். பணி சிறப்பாக அமைந்து, புதிய வரவேற்பு பெற்றுத்தரும். புத்திரரின் சொல் சிறப்பாக உருவாகி, மனதில் ஞானம் பெருகும். எதிரி, உங்கள் வாழ்வியல் முன்னேற்றம் உணர்ந்து விலகுவர். இல்லறத்துணை இஷ்டதெய்வ வழிபாடு நிறைவேற்றுவார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும், பணவரவும் கூடும். உத்தியோகஸ்தர், பணியாளர்களை ஊக்கப்படுத்தி, திட்டமிட்ட பணி இலக்கு நிறைவேற்றுவர். குடும்ப பெண்கள், தாராள பணவசதி கிடைத்து மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்கள், நண்பரின் உதவியால் படிப்பு சார்ந்த புதிய விஷயம் அறிந்து கொள்வர்.

சந்திராஷ்டமம்: 2.4.14 இரவு 2:30 மணி முதல் 5.4.14 மாலை 5:35 மணி வரை.

 

சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பக்குவமாக செயல்படும், விருச்சிக ராசிக் காரர்களே! (30-3-14 முதல் 5-4-14 வரை)

இந்த வாரம், உங்கள் ராசிநாதன் செவ்வாய், லாப ஸ்தானத்தில் இடம் பெற்று, நட்பு கிரகம் கேதுவை பார்க்கிறார். சுக்கிரன் கூடுதல் அளவில், நற்பலன் தருகிறார். நண்பர், உறவினர் கருணை உள்ளத்துடன், உங்களின் தேவை நிறைவேற உதவுவர். உபசரிப்பு திருப்திகர அளவில் கிடைக்கும். வார்த்தைகளில் நிதானம் நற்பெயரை பாதுகாக்கும். வீடு, வாகனத்தில் அதிக பயன்பாட்டு வசதி பெற, தேவையான மாற்றம் செய்வீர்கள். புத்திரரின் கவனக்குறைவை சரிசெய்வதில், இதமான அணுகுமுறை வேண்டும். எதிரியால் இருந்த தொல்லை விலகும். இல்லறத்துணை அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் உருவாகிற போட்டியை பொறுமையுடன் எதிர்கொள்வீர்கள். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும். குடும்ப பெண்கள், உறவினர்களிடம் இருந்த மனக்கிலேசம் மறந்து, சொந்தம் பாராட்டுவர். மாணவர்களின் படிப்புக்கான பண வசதி சீராக இருக்கும்.

சந்திராஷ்டமம்: 5.4.14 மாலை 5:36 மணி முதல் அன்று நாள் முழுவதும்.

 

நம்பிக்கையுடன் பணிபுரிந்து, உரிய நன்மை பெறும், தனுசு ராசிக்காரர்களே! (30-3-14 முதல் 5-4-14 வரை)

இந்த வாரம், உங்கள் ராசிக்கு நவக்கிரங்களில் சூரியன், கேது, செவ்வாய் தவிர, மற்ற கிரகங்கள் அளப்பரிய நற்பலன் தருகின்றனர். அக்கம், பக்கத்தவருடன் நல்அன்பு வளரும். குடும்ப உறுப்பினர் உற்சாக மனதுடன் பணிகளை மேற்கொள்வர். எதிர்பார்த்த பணவரவு, திருப்திகர அளவில் கிடைக்கும். உடல்நலம் பேணுவதில், அதிக அக்கறை கொள்வீர்கள். புத்திரர், தன் நண்பருடன் ஏற்படுகிற சச்சரவு தீர, சிறந்த ஆலோசனை சொல்வீர்கள். சொத்து தொடர்பான ஆவணம் கவனமுடன் பாதுகாக்க வேண்டும். இல்லறத்துணை கருத்து ஒற்றுமையுடன் குடும்பநலன் பேணுவார். தொழில், வியாபாரத்தில் சில மாற்றம் பின்பற்றி, வளர்ச்சி இலக்கை அடைவீர்கள். பணியாளர்கள், தொழில்நுட்ப அறிவை வளர்த்து திறம்பட செயல்படுவர். பெண்கள், குடும்ப பணவசதிக்கேற்ப ஆடை, அணிகலன் வாங்குவர். மாணவர்கள், நன்றாக படித்து ஆசிரியர், பெற்றோரின் பாராட்டு பெறுவர்.

 

நட்பின் பெருமையை உணர்ந்து, மதிக்கும் மகர ராசிக்காரர்களே! (30-3-14 முதல் 5-4-14 வரை)

இந்த வாரம், உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணியம் தொழில் ஸ்தான அதிபதியாகிய, சுக்கிரன் மற்றும் அஷ்டம ஸ்தான அதிபதி சூரியன், அனுகூல அமர்வில் உள்ளனர். பழகுபவர்களிடம் இனிய வார்த்தை பேசி கூடுதல் அன்பு, மரியாதை பெறுவீர்கள். நிலுவைப்பணிகளை நினைவுப்படுத்தி, புதுஉத்வேகத்துடன் நிறைவேற்றுவீர்கள். அரசு அதிகாரிகளிடம், அதிக விளக்கம் தந்து பேசவேண்டாம். வீடு, வாகனத்தில் உரிய பாதுகாப்பு முறை பின்பற்றவும். புத்திரர், உங்கள் சொல்கேட்டு அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வர். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவை தவிர்க்கவும். இல்லறத்துணை, உங்கள் அருமை, பெருமை மதித்து நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறு, இஷ்ட தெய்வ அருளால் விலகும். பணியாளர், பணியிடத்தில் விவாத பேச்சில் ஈடுபடக்கூடாது. பெண்கள், குடும்பத்தின் எதிர்கால நலன் சிறக்க, பணி மேற்கொள்வர். மாணவர்கள், பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.

 

வாழ்வில் முன்னேற, புதிய சிந்தனையுடன் செயல்படும் கும்ப ராசிக்காரர்களே! (30-3-14 முதல் 5-4-14 வரை)

இந்த வாரம், உங்கள் ராசிக்கு அசுர குருவான சுக்கிரன், தேவகுருவான வியாழன் மற்றும் அசுர கிரகம் கேது, அனுகூல இட அமர்வில் உள்ளனர். உங்களின் செயல்திறன் பரிமளித்து, அளப்பரிய நன்மையை பெற்றுத் தரும். இடம், சூழ்நிலை உணர்ந்து, எவரிடமும் அளவுடன் பேசி நற்பெயர் பாதுகாத்திடுவீர்கள். இஷ்ட தெய்வ அனுகிரகத்தினால், குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும். உறவினர் வருகை மகிழ்ச்சி தரும். பூர்வசொத்தில் வளர்ச்சி, பணவரவு திருப்திகர அளவில் கிடைக்கும். எதிரி வியந்து பார்க்கிற புதிய வாழ்வியல் நடைமுறை உருவாகும். இல்லறத்துணை உங்களின் நல்ல குணம் உணர்ந்து பாராட்டுவார். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம், கடின உழைப்பு என்ற நடைமுறை பின்பற்றுவீர்கள். பணியாளர்களுக்கு தாமதமான சலுகை, எளிய முயற்சியால் கிடைக்கும். பெண்கள், கணவருக்கு உறுதுணையாக நடந்து கொள்வர். மாணவர்கள், நண்பர்களின் உதவியால், படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

 

புதிய பணிகளை, தாமதமின்றி நிறைவேற்றும், மீன ராசிக்காரர்களே! (30-3-14 முதல் 5-4-14 வரை)

இந்த வாரம், உங்கள் ராசிக்கு சுக்கிரன் மற்றும் தினகதி சுழற்சி கிரகம் சந்திரன் மட்டுமே, நற்பலன் வழங்குகின்றனர். நண்பர்களிடம் கருத்து வேறுபாடு வராத அளவுக்கு பழகுவது நல்லது. குடும்பத் தேவை நிறைவேற்ற, சேமிப்பு பணம் செலவாகும். இளைய சகோதரர், இயன்ற அளவு உதவிகரமாக நடந்து கொள்வார். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தர கேட்டு, பிடிவாத குணத்துடன் செயல்படுவர். காலமுறை உணவுப்பழக்கம், உடல்நல ஆரோக்கியம் பாதுகாக்கும். வெளியூர் பயணத் திட்டத்தில் மாற்றம் செய்வீர்கள். இல்லறத்துணை கருத்து வேற்றுமை மறந்து, குடும்ப நலனில் அக்கறை கொள்வார். தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்க தாமதமாகும். பெண்கள், சிக்கன பணச்செலவில் வாழ்வு நடத்துவர். மாணவர்கள், நண்பர்களிடம் படிப்பு தவிர, பிற விஷயம் விவாதிக்க வேண்டாம்.

Leave a Reply