shadow
weekly rasipalanமேஷம்
சாம்பார் முதல் சாட்டிலைட் வரை அனைத்தையும் அறிந்தவர்களே! ராசிநாதன் செவ்வாய் ஆட்சிப் பெற்று 8-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எதிரும் புதிருமாக எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதித் தொகை தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். வழக்கு சாதகமாகும். என்றாலும் 8-ல் நிற்கும் சனி உங்களை அடிக்கடி கோபப்பட வைப்பார். எதிர்காலம் என்னாகுமோ என்ற பயத்தை உண்டாக்குவார். உங்கள் திறமைகள் யாவும் மங்கி விட்டதாக நினைக்க வைப்பார். ஆனால் சுக்ரன் சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்திலும் நிம்மதி உண்டு. கல்யாண முயற்சிகள் கூடி வரும். வாகனப் பழுது நீங்கும். பழைய கடன் பற்றிய கவலைகள் விலகும். சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். 5-ல் ராகு நீடிப்பதாலும், உங்களின் பூர்வ புண்யாதிபதி சூரியன் 12-ல் நுழைந்ததாலும் பிள்ளைகளின் தேர்வு, உயர்கல்வி பற்றிய பயம் வந்துப் போகும். கர்ப்பிணிப் பெண்கள் வெளி உணவுகளையும், பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். காதல் கைக்கூடும். 5-ல் குரு நிற்பதால் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. பழைய சரக்குகளை தள்ளுப்படி விலைக்கே விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். புது முயற்சிகளை அதிகாரிகள் ஆதரிப்பார்கள். கலைத்துறையினரே! எதிர்பார்த்த நிறுவனத்திலிருந்து வாய்ப்பு வரும். போராடினாலும் வெற்றி பெறும் வாரமிது.  அதிஷ்ட எண்கள்: 2, 8 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெள்ளை அதிஷ்ட திசை: வடக்கு
 
 ரிஷபம்
நெருக்கடி நேரத்தில் சாக்கு போக்கு சொல்லாமல் உதவுபவர்களே! உங்கள் பிரபல யோகாதிபதிகளான சூரியனும், புதனும் தொடர்ந்து சாதகமாக இருப்பதால் தொடங்கிய வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். வி.ஐ.பிகளும் ஆதரவாக இருப்பார்கள். வேலைக் கிடைக்கும். உறவினர், நண்பர்கள் மதிப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். 7-ல் செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் திருமணம் கூடி வரும். சொத்து விஷயம் நல்ல விதத்தில் முடியும். சகோதரங்கள் உதவிகரமாக இருப்பார்கள். மனைவி உங்களுக்கு பக்கபலமாக இருப்பார். என்றாலும் சனியும் 7-ல் நீடிப்பதால் தூக்கமின்மை, கடன், வழக்கு குறித்து கவலை, தொண்டைப் புகைச்சல், அடிவயிற்றில் வலி வந்துப் போகும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, முதுகு, இடுப்பு வலி வரக்கூடும். ஆனால் சுக்ரன் சாதகமாக இருப்பதால் மகிழ்ச்சி தங்கும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாததால் பிள்ளைகளால் செலவுகள் வரும். கூடாபழக்கமுள்ள நண்பர்களின் சகவாசங்களை தவிர்ப்பது நல்லது. சிலர் உங்களை தவறானப் போக்கிற்கு தூண்டுவார்கள். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். உத்யோகத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். விவேகமான முடிவுகளால் முன்னேறும் வாரமிது. அதிஷ்ட எண்கள்: 5, 7 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், ஆரஞ்சு அதிஷ்ட திசை: மேற்கு
மிதுனம்
நெருக்கடி நேரத்தில் சாக்கு போக்கு சொல்லாமல் உதவுபவர்களே! ராகு 3-ம் வீட்டிலும், சனியும், செவ்வாயும் 6-ம் இடத்திலும் தொடர்வதால் உங்களின் சாதனைப் பட்டியல் நீளும். சவாலான விஷயங்களைக் கூட எளிதில் முடிப்பீர்கள். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். பணம் எதிர்பார்த்த வகையில் வரும். மனைவி வழியில் உதவிகளுண்டு. வீடு, மனை வாங்க முன் பணம் தருவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சகோதரங்கள் மதிப்பார்கள். வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள். சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. பூர்வீக சொத்துப் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீடு சிலர் மாறுவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். பார்த்தும் பார்க்காமல் சென்றுக் கொண்டிருந்த உறவினர்கள் தேடி வந்து பேசுவார். டி.வி., ஃப்ரிட்ஜ், எலக்ட்ரானிக் சாதனங்கள் வாங்குவீர்கள். குரு 3-ல் தொடர்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். சூரியன் 10-ல் தொடர்வதால் புது வேலைக் கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். அதிகாரிகளிடம் கவனமாகப் பழகுங்கள். கலைத்துறையினரே! உங்களுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும். பிரபலங்களின் உதவியால் முன்னேறும் வாரமிது. 27 அதிஷ்ட எண்கள்: 6, 8 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா அதிஷ்ட திசை: வடமேற்கு
கடகம்
ஏமாற்றங்கள் அடுத்தடுத்து வந்தாலும் தளராமல் எதிர்நீச்சல் போடுபவர்களே! குரு 2-ல் தொடர்வதால் இங்கிதமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். குடும்பத்தில் அமைதி உண்டாகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பெரிய பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். கல்யாண விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். செவ்வாய் 5-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் செல்வாக்கு கூடும். பிள்ளைகளின் திறமைகளை இனங்கண்டறிந்து வளர்ப்பீர்கள். வழக்கில் திடீர் திருப்பம் ஏற்படும். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. பயணங்களால் நிம்மதி உண்டாகும். சூரியன் 9-ல் நிற்பதால் வேலைச்சுமை, அலைச்சல் இருக்கும். தந்தையார் உங்களை சரியாப் புரிந்துக் கொள்ளவில்லை என புலம்புவீர்கள். சனி 5-ல் நீடிப்பதால் மனஇறுக்கம் உண்டாகும். கடன் பிரச்னை தலைத்தூக்கும். பாவ கிரகங்களான ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் எந்த நேரம் எந்த ஆபத்து நேருமோ, பெயர் கெட்டுவிடுமோ என அவ்வப்போது அச்சப்படுவீர்கள். யாரையும் கடுமையாக தாக்கிப் பேச வேண்டாம். கன்னிப் பெண்களே! குழப்பம் நீங்கி திடமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் லாபம் இருக்கும். கடையை விரிவுப்படுத்தி, அழகுப்படுத்துவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள். கடந்த கால சுகங்களை அசைப்போடும் வாரமிது.  அதிஷ்ட எண்கள்: 1, 6 அதிஷ்ட நிறங்கள்: கிரே, பிஸ்தா பச்சை அதிஷ்ட திசை: தென்கிழக்கு
சிம்மம்
சொன்ன சொல்லை நிறைவேற்றுவதற்காக கால நேரம் பார்க்காமல் உழைப்பவர்களே! சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். நண்பர்களால் பயனடைவீர்கள். உறவினர்களின் ஆதரவுப் பெருகும். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். லோன் கிடைக்கும். கல்யாணம், சீமந்தம் என வீடு களைக்கட்டும். புதிதாக வீடியோ கேமரா வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். ராசிநாதன் சூரியன் 8-ல் மறைந்திருப்பதால் அடுத்தடுத்து அலைச்சலும் எதிர்பாராத செலவுகளும், கொஞ்சம் சோர்வும், களைப்பும் வந்து போகும். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் கால் வலி, கழுத்து வலி, மூச்சுத் திணறல் வந்துப் போகும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அனுசரித்துப் போங்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம். சில காரியங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. இடைத்தரகர் வேண்டாம். செவ்வாய் 4-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் சகோதர வகையில் பலனமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். ராசிக்குள்ளேயே குருவும், ராகுவும் நிற்பதால் ஒருவித தடுமாற்றம், சிறுசிறு விபத்துகள், நிம்மதியின்மை, எதிலும் ஆர்வமின்மை வந்துச் செல்லும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற அச்சம் வந்துப் போகும். கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருந்துக் கொண்டேயிருக்கும். வேலையாட்கள், பங்குதாரர்களுடன் மோதல்கள் வந்துச் செல்லும். உத்யோகத்தில் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். எதார்த்தமாக நடந்துக் கொள்ள வேண்டிய வாரமிது. அதிஷ்ட எண்கள்: 7, 9 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, பிங்க் அதிஷ்ட திசை: கிழக்கு
கன்னி
மற்றவர்களுக்கு கலங்கரை விளக்கமாய் இருப்பவர்களே! சனியும், செவ்வாயும் 3-ம் வீட்டில் வலுவாக இருப்பதால் எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிட்டும். சிறுக சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது ஒரு கால் கிரவுண்டு வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஷேர் லாபம் தரும். வேற்றுமொழி, இனத்தவர்களால் ஆதாயம் உண்டாகும். அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களால் உதவிகள் உண்டு. 12-ல் குரு மறைந்திருப்பதால் ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். திடீர் பயணங்கள் உண்டாகும். சூரியன் 7-ல் நின்று உங்களை பார்ப்பதுடன் ராகு 12-ல் நிற்பதால் உடல் உஷ்ணம், அடிவயிற்றில் வலி, பைல்ஸ் வந்துப் போகும். எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்துப் போகும். வெளி உணவுகள் வேண்டாம். சுக்ரன் ராசிக்கு 6-ல் மறைந்திருப்பதால் தொண்டைப் புகைச்சல், கழுத்து வலி, வாகனம் மற்றும் மின்னணு, மின்சார சாதனப் பழுது வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. கன்னிப் பெண்களே! சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். காதல் கைக்கூடும். புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள். பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். புது சலுகைகள் கிடைக்கும். கலைத்துறையினரே! உங்களின் கலைத்திறன் வளரும். விடாமுயற்சியால் வெற்றி பெறும் வாரமிது.  அதிஷ்ட எண்கள்: 4, 6 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், சில்வர் கிரே அதிஷ்ட திசை: தெற்கு
துலாம்
பிறர் துயர் துடைப்பதில் ஆர்வம் காட்டுபவர்களே! குருவும், ராகுவும் வலுவாக அமர்ந்திருப்பதால் சவாலான விஷயங்களை கூட எளிதாக முடிப்பீர்கள். தொழிலதிபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் உதவிகள் உண்டு. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். மனைவிவழியில் செல்வாக்கு உயரும். ஷேர் மூலம் பணம் வரும். சூரியன் 6-ல் வலுவாக அமர்ந்திருப்பதால் அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மூத்த சகோதரருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். சுக்ரன் சாதகமாக இருப்பதால் பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். புது வேலைக் கிடைக்கும். 2-ம் வீட்டிலேயே செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் வீடு, மனை வாங்குவது, விற்பதில் இருந்த பிரச்னைகள் தீரும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். பாதச் சனி தொடர்வதால் வீண் செலவு, ஒருவித பயம், சின்ன சின்ன தடைகள் வந்துப் போகும். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். இடம், பொருள், ஏவலறிந்து பேசுவது, பழகுவது நல்லது. கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருட்களை கொள்முதல் செய்து லாபத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களுடன் பகைமை பாராட்டிக் கொண்டிருந்த உயரதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். கலைத்துறையினரே! சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். நீண்ட நாள் கனவுகள் நனவாகும் வாரமிது.  அதிஷ்ட எண்கள்: 5, 8 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆலிவ் பச்சை அதிஷ்ட திசை: வடமேற்கு
விருச்சிகம்
உள்ளதை உள்ளபடி பேசி சிக்கிக் கொள்பவர்களே! புதன் 5-ல் நிற்பதால் உங்களின் அனுபவ அறிவால் முன்னேறுவீர்கள். வளைந்து போகக் கற்றுக் கொள்வீர்கள். உறவினர்களின் அன்புத்தொல்லைகள் குறையும். நட்பால் வழியில் பலனடைவீர்கள். சூரியன் 5-ல் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்களின் உயர்கல்வி, உத்யோகம் குறித்த கவலைகள் வந்துப் போகும். பூர்வீக சொத்திற்காகப் போராட வேண்டாம். குருவும், ராகுவும் 10-ல் நீடிப்பதால் வீண் பழி சுமத்துவார்கள். தாழ்வுமனப்பான்மை, விபத்து, டென்ஷன், வேலைச்சுமையால் மனஇறுக்கம் வந்துப் போகும். இழந்த வாய்ப்புகள், பணத்தை நினைத்து சில நேரங்களில் பெருமூச்சு விடுவீர்கள். சுக்ரன் சாதகமாக இருப்பதால் ஓரளவு பணவரவு உண்டு. வாகனத்தை மாற்றுவீர்கள். ராசிநாதன் செவ்வாய் ராசிக்குள் ஆட்சிப் பெற்று நிற்பதால் பிரச்னைகளை சமாளிக்கும் வல்லமை கிடைக்கும். வழக்கு சாதகமாகும். சகோதரிக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். 4-ல் கேது இருப்பதால் சிலர் உதவுவதாகச் சொல்லி உபத்திரவத்தில் மாட்டிவிடுவார்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். மறதி, மந்தம் அவ்வப்போது வரக்கூடும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். வேலையாட்கள், வாடிக்கையாளர்களால் மறைமுக தொந்தரவுகள் வரக்கூடும். உத்யோகத்தில் அதிகாரிகளை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டாம். கலைத்துறையினரே! கிசுகிசுத் தொந்தரவுகள், வதந்திகளெல்லாம் வந்தாலும் அஞ்சமாட்டீர்கள். விட்டுக் கொடுத்து விட்டதைப் பிடிக்கும் வாரமிது.  அதிஷ்ட எண்கள்: 1, 3 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், வெள்ளை அதிஷ்ட திசை: வடகிழக்கு
தனுசு
தற்பெருமை பேசாத நீங்கள், புகழ்ச்சியையும் விரும்ப மாட்டீர்கள்! உங்கள் பாக்யாதிபதி சூரியன் 4-ல் கேந்திர பலம் பெற்று நிற்பதால் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். உங்கள் ரசனைக் கேற்ற சொத்து அமையும். கேட்ட இடத்தில் பணம் கிட்டும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். அரசால் அனுகூலம் உண்டு. எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். தந்தைவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிதுர்வழி தந்தைவழி சொத்து கைக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். 4-ம் வீட்டிலேயே புதனும் சாதகமாக இருப்பதால் மாறுபட்ட அணுகுமுறையால் சாதிப்பீர்கள். உங்களுடைய தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். சித்தர்பீடங்கள் சென்று வருவீர்கள். குரு 9-ல் தொடர்வதால் பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். திருமணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். கேது 3-ம் வீட்டிலேயே வலுவாக அமர்ந்திருப்பதால் ஷேர் பணம் தரும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். செவ்வாய் 12-ல் மறைந்திருப்பதால் சேமிப்புகள் கரையும். என்றாலும் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் சகோதர வகையில் நன்மை கிட்டும். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். கன்னிப் பெண்களே! தகுதிக் கேற்ப புது வேலைக் கிடைக்கும். பள்ளி, கல்லூரி காலத் தோழியை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முன்னுரிமைத் தருவார்கள். கலைத்துறையினரே! வசதி, வாய்ப்புகள் பெருகும். முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் வாரமிது. அதிஷ்ட எண்கள்: 4, 8 அதிஷ்ட நிறங்கள்: கிரே, ஊதா அதிஷ்ட திசை: தென்மேற்கு
மகரம்
மற்றவர்கள் புண்படுத்தி பேசினாலும் மௌனமாய் இருப்பவர்களே! சூரியன் 3-ல் அமர்ந்திருப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். பிரபல யோகாதிபதி சுக்ரன் சாதகமாக இருப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். வாகனம் வாங்குவீர்கள். குரு 8-ல் நிற்பதால் முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். யாரேனும் உங்களை தாழ்த்திப் பேசினாலும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். சர்ப்ப கிரகங்களான ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் நரம்புக் கோளாறு, தோலில் நமச்சல், வேலைச்சுமை, நெஞ்சு வலி வந்துப் போகும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்தப்பாருங்கள். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. யோகாதிபதி புதனும் சாதகமாக இருப்பதால் இதமாகப் பேசி சில கடினமான வேலைகளை முடிப்பீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. தந்தைவழி சொத்தை போராடி பெறுவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். செவ்வாயும், ராசிநாதன் சனியும் லாப வீட்டில் தொடர்வதால் சகோதரருக்கு வேலை அமையும். வெகு நாள் கனவாக இருந்த ஆசை இப்போது நிறைவேறும். கன்னிப் பெண்களே! உங்களுடைய பொது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமென நினைப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பை பெறுவீர்கள். நயமாகப் பேசி வெற்றி பெறும் வாரமிது.  அதிஷ்ட எண்கள்: 2, 7 அதிஷ்ட நிறங்கள்: அடர் நீலம், மஞ்சள் அதிஷ்ட திசை: வடக்கு
கும்பம்
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதை உணர்ந்தவர்களே! புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் மனநிம்மதி, மகிழ்ச்சி கிட்டும். ஓரளவு பணவரவு உண்டு. பூர்வீக சொத்து கைக்கு வரும். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி வரும். புது வாகனம் வாங்குவீர்கள். வீடு மாறுவீர்கள். சிலர் வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். நவீன ரக சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். 2-ல் சூரியன் நிற்பதால் பார்வைக் கோளாறு, பல் வலி, வீண் விவாதம் வந்துப் போகும். சேமிப்புகள் கரையும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். செவ்வாயும், சனியும் ராசிக்கு 10-ல் நிற்பதால் கௌரவப் பதவி தேடி வரும். இளைய சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். புறநகர் பகுதியில் அரை கிரவுண்டாவது இடம் வாங்க வேண்டுமென்று முயற்சி செய்வீர்கள். ராசியிலேயே கேதுவும், 7-ல் ராகுவும் தொடர்வதால் முன்கோபம், எதிர்காலத்தைப் பற்றிய பயம் வந்துப் போகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். சர்க்கரையின் அளவை பரிசோத்துக் கொள்ளுங்கள். இரத்த அழுத்தம் அதிகரிக்கும். கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு பாசமழைப் பொழிவார்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். வேலையாட்கள், பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் நினைத்ததை முடித்துக் காட்டுவீர்கள். கலைத்துறையினரே! புது நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும். கூடுதல் நேரம் உழைத்து முன்னேறும் வாரமிது.  அதிஷ்ட எண்கள்: 1, 6 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், சாம்பல் அதிஷ்ட திசை: மேற்கு
மீனம்
வணங்குபவர்களிடம் வளைந்து செல்பவர்களே! ராசியை விட்டு சூரியன் இன்னும் நகராததால் அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். எங்கேயோ காட்ட வேண்டிய கோபத்தை அடக்கி வைத்திருந்ததை குடும்பத்தில் உள்ளவர்கள் மீது வீசி வாங்கிக் கட்டிக் கொள்வீர்கள். சுக்ரன் தொடர்ந்து சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். ரசனைக் கேற்ற வீடு, இடம் அமையும். கல்யாண முயற்சிகள் வெற்றி அடையும். பிள்ளைகளுக்கு தகுந்த ஆலோசனை கூறி தேர்வில் அதிக மதிப்பெண் பெற உதவுவீர்கள். செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். லோன் கிடைக்கும். வேலை மாற நினைப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். ராகு 6-ல் வலுவாக நீடிப்பதால் உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். குரு 6-ல் மறைந்திருப்பதால் நிம்மதி இழப்பீர்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். புதன் சாதகமாக இருப்பதால் பயணங்கள் உண்டு. உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். கன்னிப் பெண்களே! புதியவர்கள் நண்பர்களாவார்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். கடையை விரிவுப்படுத்திக் கட்ட முடிவெடுப்பீர்கள். வாடிக்கையாளர்கள் உங்கள் மனங்கோணாமல் நடத்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைத்துறையினரே! உங்களின் திறமைகள் வெளிப்படும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 21, 23, 25 அதிஷ்ட எண்கள்: 3, 8 அதிஷ்ட நிறங்கள்: சிவப்பு, கிளிப் பச்சை அதிஷ்ட திசை: தென்கிழக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *