shadow

weekly raasipalanகடின உழைப்பால் அதிர்ஷ்டகர வாழ்வு பெறும், மேஷ ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் உள்ள ராகு, தினகதி சுழற்சி கிரகம் சந்திரன் மட்டுமே நற்பலன் தருவர்.வாழ்வில் குறுக்கிடும் இடையூறை சரி செய்வதால், பணி திட்டமிட்டபடி நிறைவேறும். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேச வேண்டாம். உடன் பிறந்தவர்களின் செயல், மனவருத்தம் தரும். வாகன பயன்பாடு சராசரி அளவில் இருக்கும்.புத்திரரின் விருப்பத்தை இயன்ற அளவில் நிறைவேற்றுவதால், குடும்பத்தில் ஒற்றுமை பலம்பெறும். உடல் நல ஆரோக்கியம் சீராகும். கூடுதல் உழைப்பு தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி தரும். பணியாளர்கள் ஆர்வமுடன் செயல்படுவதால், பணி இலக்கு நிறைவேறும். பெண்கள், குடும்பசெலவில் சிக்கனம் பின்பற்றவும். மாணவர்கள், விரும்பிய பொருள் வாங்குவதற்கு அவசரப்பட வேண்டாம்.

பரிகாரம்: துர்க்கையம்மனை வழிபடுவதுடன், ஏழைச் சிறுமிக்கு புத்தாடை வழங்கலாம்.

இனிய வார்த்தை பேசி பிறர் மனதில் இடம் பெறும், ரிஷப ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் உள்ள சனி, சூரியன், புதன் லாபஸ்தானத்தில் உள்ள கேது அளப்பரிய நற்பலன் தருகின்றனர். பேச்சில் நிதானம், வசீகரம் மிகுந்திருக்கும். குறித்த காலத்தில் பணி நிறைவேறும். நல்லோரின் ஆலோசனை, ஆதரவு கிடைக்கும். சிலர் புதிய வாகனம், வீடு வாங்க நல்யோகம் உண்டு.புத்திரர், படிப்பில் சிறந்து வேலை வாய்ப்பில் முன்னுரிமை பெறுவர். எதிரியினால் தொல்லை வராத சுமுக வாழ்வு ஏற்படும். இல்லறத்துணையின் செயல்களில் சிறு அளவில் குளறுபடி வரலாம். தொழில், வியாபார வளர்ச்சிக்கான முக்கிய பணி நிறைவேறும். பணியாளர்களுக்கு, சலுகை கிடைக்கும். பெண்கள், அதிக பயன்தராத வீட்டு உபயோகப் பொருளை வாங்க வேண்டாம். மாணவர்கள், புதிய திறமை வளர்ப்பதில் ஆர்வம் கொள்வீர்கள்.

பரிகாரம்: மகாலட்சுமியை வழிபடுவதுடன் பசுவுக்கு புல், பழம் வழங்கலாம்.

நிகழ்வுகளை அனுபவபாடமாக கருதி செயல்படும், மிதுன ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் உச்சபெற்ற குரு, ஐந்தில் ஆட்சி பெற்ற சுக்கிரன் நற்பலன் தருவர். பழகுபவரின் மனம் அறிந்து பேசுவீர்கள். இயலாத காரியம் எதிலும் ஈடுபட வேண்டாம். உடன் பிறந்தவர்களின் எதிர்பார்ப்பை ஓரளவு பூர்த்தி செய்வீர்கள். வீடு, வாகனத்தில் கூடுதல் பாதுகாப்பு வேண்டும்.மகளின் ஜாதகயோகபலன் முக்கியமான நன்மை ஒன்றை பெற்றுத்தரும். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். இல்லறத்துணையிடம் கருத்து வேறுபாடு வராமல் நடந்து கொள்ளவும். தொழில், வியாபாரம் சீராக அமைய சிலமாற்றம் செய்வீர்கள். பணியாளர்கள், தம் கடமை உணர்ந்து பணிபுரிவது நன்மை தரும். பெண்கள், தாய்வீட்டு உதவி கிடைத்து மகிழ்வீர்கள். மாணவர்கள், பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம்.

பரிகாரம்: சனி பகவானை வழிபடுவதுடன் காகத்திற்கு எள், தயிர் கலந்த சாதம் வைக்கலாம்.

தன்னையும் உணர்ந்து, பிறருக்கும் நல்வழி சொல்லும், கடக ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு ராகு, புதன், சுக்கிரன், செவ்வாயின் நல்லருள் பலம் சிறப்பாக உள்ளது. ஒருமுகத்தன்மையுடன் பணியில் ஈடுபடுவீர்கள். பூர்வ புண்ணிய நற்பலன் துணை நின்று உதவும். அக்கம் பக்கத்தவர் கூடுதல் அன்பு பாராட்டுவர். உறவினர் வருகை மகிழ்ச்சியை தரும்.புத்திரர், அறிவாற்றலில் சிறந்து புதிய சாதனை நிகழ்த்துவர். உங்களின் சமூக அந்தஸ்து கண்டு, எதிர்மனப்பாங்கு உள்ளவர் வியந்து விலகுவர். இல்லறத்துணையின் உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை உதவும். தொழில், வியாபாரம் புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் வளர்ச்சி பெறும். பணியாளர்கள், கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்றுக் கொள்வீர்கள். பெண்கள், ஆபரணம் வாங்க அனுகூலம் உண்டு. மாணவர்கள், நண்பரின் உதவியால் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

சந்திராஷ்டமம்: 1.11.14 நள்ளிரவு 12:01 மணி முதல் 3.11.14 மதியம் 2:04 மணி வரை

பரிகாரம்: பவுர்ணமி நாளில் கிரிவலம் வருவதுடன், அன்னதானம் வழங்கலாம்.

மனசாட்சி சொல்கின்ற கட்டளையை பெரிதும் மதிக்கும், சிம்ம ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் உள்ள சூரியன், சுக்கிரன், சனிபகவானின் அமர்வு சிறப்பான பலன்தரும் வகையில் உள்ளது. கடந்த காலத்தில் உருவான தடைகளை சரி செய்து, வாழ்வில் முன்னேற புதிய வழி வகுப்பீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பணவசதி திருப்திகர அளவில் இருக்கும். அவமானப்படுத்த முயற்சிப்பவரிடம் இருந்து விலகுவது நல்லது. வீடு, வாகனத்தில் கூடுதல் பாதுகாப்பு வேண்டும்.புத்திரர், சில விஷயங்களில் முரண்பட்ட கருத்து கொள்வார். சீரான ஓய்வு உடல்நலம் காக்கும். இல்லறத்துணையின் அன்பு, பாசம் மனதில் நெகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரம், செழித்து உபரி பணவரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு, சலுகை கிடைக்க அனுகூலம் உண்டு. பெண்கள், குடும்ப உறுப்பினர்களிடம் பாராட்டு, பரிசு பெறுவீர்கள். மாணவர்கள், நண்பர்களிடம் படிப்பு தவிர பிற விவாதம் பேசவேண்டாம்.

சந்திராஷ்டமம்: 3.11.14 மதியம் 2:05 மணி முதல்5.11.14 மாலை 5:18 மணி வரை

பரிகாரம்: சிவபெருமானை வழிபடுவதுடன், சிவனடியார்களுக்கு வஸ்திரம் தானம் தரலாம்.

சிறிதளவு பெற்ற நன்மையையும் பெரிதென போற்றும், கன்னி ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு அசுர குரு சுக்கிரன், தேவ குரு வியாழன் இவர்களுடன் சந்திரனும் நற்பலன் வழங்குகிறார். இடம், சூழ்நிலை உணர்ந்து பேசுவதால் நற்பெயர் பாதுகாக்கலாம். சந்தேகம் தெளிந்த சில விஷயங்களை, மீண்டும் அலசி ஆராய்ந்து மனதை குழப்ப வேண்டாம். வாகனத்தை பராமரிப்பு செய்வதால், பயணம் எளிதாக அமையும்.புத்திரர், சில விஷயங்களில் பிடிவாதம் கொள்வர். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படும். இல்லறத்துணையின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாக்க பொறுமை, கூடுதல் உழைப்பு அவசியம். பணியாளர்கள், நேரம் தவறாமையை பின்பற்றவும். பெண்கள், கணவரின் அனுமதியின்றி பணம் கடன் கொடுக்க, வாங்க கூடாது. மாணவர்கள், ஆசிரியரின் வழிகாட்டுதலை பின்பற்றுவது நன்மை தரும்.

சந்திராஷ்டமம்: 5.11.14 மாலை 5:19 மணி முதல்7.11.14 இரவு 10:09 மணி வரை

பரிகாரம்: கருமாரியம்மனை வழிபடுவதுடன், மழைவளம் பெற மரக்கன்று நட்டு வளர்க்கலாம்.

உண்மை, நேர்மை இரு கண்களென போற்றும், துலாம் ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு சுக்கிரன், செவ்வாய், கேதுவின் அமர்வு சிறப்பான இடங்களில் உள்ளது. சோம்பல்குணம் விலகி, பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு முழு அளவில் கிடைக்கும். வெளியூர் பயணம் பயன் கருதி மேற்கொள்வீர்கள். வீட்டிற்கு வரும் உறவினர்களை இயன்ற அளவில் உபசரிப்பீர்கள்.புத்திரரின் நிறை, குறையை அதிகம் விமர்சிக்க வேண்டாம். எதிரி, தம் சொந்த சிரமங்களால் விலகிப் போவர். இல்லறத்துணை, குடும்ப வாழ்வு நலம் சிறக்க அக்கறை கொள்வார். தொழில், வியாபாரம் சீராக புதியவர்களின் உதவி கிடைக்கும். பணியாளர்கள், தொழில் நுட்ப அறிவை வளர்த்துக்கொள்வீர்கள். குடும்ப பெண்கள், தியாக மனதுடன் செயல்படுவீர்கள். மாணவர்கள், வெளியிடம் சுற்றுவது குறைப்பதால் படிப்பில் கவனம் வளரும்.

பரிகாரம்: விஷ்ணு பகவானை வழிபடுவதுடன், இனிப்பு பதார்த்தம் படையல் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கலாம்.

பகைவரின் செயல்களிலிருந்து பல விஷயங்கள் அறியும், விருச்சிக ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு குரு, ராகு, சுக்கிரனின் அமர்வு சிறப்பான இடங்களில் உள்ளது. ஆர்வம் மிகுதியால் பேசும் வார்த்தை, சிரமம் உருவாக்கலாம். கவனம் தேவை. உடன் பிறந்தவர்களின் உதவி ஓரளவு கிடைக்கும். வீடு, வாகனத்தில் கூடுதல் பாதுகாப்பு வேண்டும்.புத்திரர், ஆன்மிகம் தொடர்பான செய்திகளை அறிவதில் ஆர்வம் கொள்வர். எவருக்காகவும், பணப்பொறுப்பு ஏற்க வேண்டாம். இல்லறத்துணையின் நல்ல ஆலோசனை, வாழ்வியல் நடைமுறை சிறப்பு பெற உதவும். தொழில், வியாபாரத்தில் உருவாகிற இடையூறுகளை தாமதமின்றி சரி செய்ய வேண்டும். பணியாளர்கள், நிர்வாகத்தின் சட்ட திட்டத்தை தவறாமல் பின்பற்ற வேண்டும். பெண்கள், உறவினர் குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சி நடத்த உதவுவீர்கள். மாணவர்கள், புதியவரை நண்பராக ஏற்பதில் நிதானம் அவசியம்.

பரிகாரம்: சூரிய பகவானை வழிபடுவதுடன், தந்தை வழி சார்ந்த உறவினர்களுக்கு உதவலாம்.

நண்பரின் ஆலோசனையை மதித்து செயலாற்றும், தனுசு ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் உள்ள சூரியன், புதன், சுக்கிரன், சனி ஆகிய நான்கு கிரகங்களும் வியத்தகு அளவில் நற்பலன் வழங்குவர். உற்சாகமுடன் பணிபுரிந்து நற்பெயரும், உபரி பண வரவும் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர் விரும்பிக் கேட்ட பொருளை வாங்கித் தருவீர்கள். வீட்டில் மகிழ்ச்சி, குதுாகலம் வளரும்.புத்திரரின் செயல் குறையை கண்டிப்பதில், நிதான அணுகுமுறையை பின்பற்றவும். வழக்கு விவகாரத்தில் வெற்றி கிடைக்கும். இல்லறத்துணை, உங்களின் நல்ல குணம் பாராட்டுவர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற தேவையான அனுகூல காரணி பலம் பெறும். பணியாளர்கள், குறித்த காலத்தில் இலக்கு நிறைவேற்றுவீர்கள். குடும்ப பெண்கள், வீட்டுக்கு தேவையான பொருட்களை தாராள பணச்செலவில் வாங்குவீர்கள். மாணவர்கள், ஒருமுகத்தன்மையை வளர்ப்பதால் படிப்பது எளிதாகும்.

பரிகாரம்: முருகப் பெருமானை வழிபடுவதுடன், வேத சாஸ்திரம் பயிலும் மாணவர்களுக்கு உதவலாம்.

பணிகளில் முழுமனதுடன் ஈடுபட்டு வளம் சேர்க்கும், மகர ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு செவ்வாய், ராகு, சுக்கிரன் தவிர, மற்ற கிரகங்கள் தாராள அளவில் நற்பலன் வழங்குகின்றனர். தெய்வ நம்பிக்கையுடன் பணிதுவங்கி, முழு அளவில் நன்மை பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களுக்கான மங்கள நிகழ்ச்சி நடத்த, காலம் கனிந்து வரும். நீண்ட துார வாகன பயணத்தில் மித வேகம் பின்பற்றவும்.புத்திரர், தம் நண்பர்களுடன் மனக்கிலேசம் கொள்வர். உங்களின் ஆறுதல் வார்த்தை சாந்தப்படுத்தும். நண்பருக்கு கடனாக கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். இல்லறத்துணையின் மனதில் வாழ்வியல் நம்பிக்கை வளர உதவுங்கள். தொழில், வியாபாரம் செழித்து, உபரி பணவரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு, ஓரளவு சலுகை உண்டு. பெண்கள், கடினப் பணிகளில் ஈடுபடக் கூடாது. மாணவர்கள், பாதுகாப்பு குறைந்த இடங்களில் செல்ல வேண்டாம்.

பரிகாரம்: பைரவரை வழிபடுவதுடன், தலைச்சுமையாக பொருட்கள் விற்பவருக்கு உதவலாம்.

அடுத்தவர் துன்பம் போக்க இயன்ற அளவில் உதவும், கும்ப ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு செவ்வாய், சுக்கிரன், சந்திரன் நற்பலன் வழங்குவார். எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அதிக உழைப்பு தேவைப்படும். பணச்செலவில் சிக்கனம் பின்பற்ற வேண்டும். அக்கம், பக்கத்தவருடன் பெற்ற நற்பெயருக்கு, குறை வராமல் நடந்து கொள்வது நல்லது. தாய்வழி உறவினரால் சில நன்மை கிடைக்கும்.புத்திரரின் உடல் நலத்திற்கு, சிறு அளவிலான மருத்துவ சிகிச்சை உதவும். அத்தியாவசிய செலவுக்காக கெடுபிடி குணம் உள்ளவரிடம் பணக்கடன் பெற வேண்டாம். இல்லறத்துணை, கூடுதல் அன்பு பாராட்டுவார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். பணியாளர்களுக்கு, கூடுதல் பணி உருவாகும். பெண்கள், அன்பு நிறைந்த செயலால் உறவினர்களிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். மாணவர்கள், படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம்: ராமபிரானை வழிபடுவதுடன், நல்ல ஒழுக்கம் பின்பற்றி வாழும் ஏழைக்கு உதவலாம்.

பிறர் தவறுகளை கண்டிப்பதுடன், மன்னிக்கவும் தயங்காத மீன ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு குரு, புதன், சுக்கிரனின் அமர்வு சிறப்பான இடங்களில் உள்ளது. மனம், தெளிந்த நீரோடை போல இருக்கும். செயல் நேர்த்தியாக அமைந்து நற்பெயர், புகழ் பெற்றுத் தரும். அதிக விலையுள்ள பொருளை கவனமுடன் பாதுகாக்க வேண்டும். உறவினர்களுடன் இருந்த மனக்கிலேசம் விலகி, சுமுக நிலை உருவாகும். பூர்வ சொத்தில் பெறுகிற பணவரவு கூடும்.புத்திரரின் ஒவ்வொரு சொல்லிலும் நேர்மை, சத்தியம் நிறைந்திருக்கும். எதிரி பலமிழந்து போவர். இல்லறத்துணை விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து வளர நல்லோரின் உதவி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள், பணியாளர்களை ஊக்கப்படுத்துவீர்கள். பெண்கள், குடும்பத்தின் எதிர்கால வாழ்வு சிறக்க திட்டமிடுவீர்கள்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபடுவதுடன் அவல்,பொரி, கடலையுடன், சர்க்கரை கலந்து நிவேதனம் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *