horoscopes1அனுபவசாலியின் ஆலோசனையை மதித்து நடக்கும் மேஷ ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு தன சப்தம ஸ்தான அதிபதி சுக்கிரன், ஐந்தில் அனுகூல அமர்வில் உள்ளார்.
சூரியன், புதன், ராகு முக்கூட்டு கிரக சேர்க்கையாக அமைந்து, புத ஆதித்ய யோக பலன் தருகின்றனர்.சிலரால் வருகிற எதிர்ப்பு விலகி, பலவித நன்மை கிடைக்கும். பூர்வ சொத்தில் வருமானம் அதிகரிக்கும். சிலர் புதிய சொத்து வாங்க அனுகூலம் வளரும். புத்திரரின் அறிவு, செயல்திறன் பரிமளிக்கும். சத்து நிறைந்த உணவு உண்டு மகிழ்வீர்கள். இல்லறத்துணையின் ஒற்றுமை சிறந்து, குடும்பநலனை பாதுகாக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் பெறும். பணியாளர் கூடுதல் வேலை வாய்ப்பை ஆர்வமுடன் ஏற்பீர்கள். பெண்கள், பிள்ளைகளின் நலனில் கவனம் கொள்வர். மாணவர்கள் ஆசிரியர், பெற்றோரின் நன்மதிப்பு பெறுவர்.

பரிகாரம்: மகாலட்சுமியை வழிபடுவதால், தொழில் வளம் சிறந்து பணவரவு கூடும்

 

செயல் நிறைவேற பொறுமையுடன் பணியாற்றுகிற ரிஷப ராசிக்காரர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் தர்ம, கர்ம ஸ்தான அதிபதி சனி பகவான் மற்றும் கேது நற்பலன் தருவர். உறவினர்களுடன் சந்தோஷ சந்திப்பு நிகழும். தாமதம் ஏற்படுத்திய பணியை உத்வேகமுடன் செய்வீர்கள். சமூக நலன் பாதுகாப்பதிலும் ஆர்வம் ஏற்படும். வீடு, வாகன பயன்பாட்டில் திருப்திகர நிலை உண்டு. புத்திரரின் சந்தேகங்களை எளிய வார்த்தைகளால் புரிய வைப்பீர்கள். வழக்கு விவகாரத்தில் சாதகமான நிலை உருவாகும். இல்லறத்துணை ஆரோக்கிய பலம் பெற்று, புத்துணர்வுடன் செயல்படுவார். தொழில் வியாபாரம் வளர்ச்சிப்பாதையில் செல்லும். பணியாளர் தம் கடமை உணர்ந்து பணியில் ஈடுபடுவர். குடும்ப பெண்கள், கணவர் வழி சார்ந்த உறவினர்களிடம் நற்பெயர் பெறுவர். மாணவர்களின் படிப்பு சிறப்பாக அமைய அனுகூலம் ஏற்படும்.

பரிகாரம்: பைரவரை வழிபடுவதால், எதிரியால் வருகிற தொல்லை, நன்மை தருவதாக மாறும்.

 

துன்ப நிகழ்வுகளை பிறரிடம் சொல்வதில் தயக்கமுள்ள மிதுன ராசிக்காரர்களே!

உங்கள் ராசிநாதன் புதன், உச்ச பலத்துடன் நான்காம் இடத்தில் உள்ளார். குரு, சுக்கிரன், செவ்வாய் கூடுதல் நற்பலன் தருவர். பழகுபரின் சூழ்நிலை, மனஉணர்வு அறிந்து கருணை மனதுடன் உதவுவீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பூர்வ சொத்து பராமரிப்பில், நம்பகமானவர்களுக்கு இடம் தருவது நல்லது. புத்திரரை விஷப்பிராணிகளிடம் விலகி இருக்கச் சொல்லுங்கள். உங்களிடம் அதிருப்தி கொண்ட சிலர், சுயலாபம் பெற அன்பு பாராட்டுவர். இல்லறத்துணையின் நல்ல ஆலோசனை உங்கள் வாழ்வில் புதிய மாற்றத்தை உருவாக்கும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணியாளர் ஆர்வமுடன் பணிபுரிந்து இலக்கை நிறைவேற்றுவர். பெண்கள், புத்தாடை, ஆபரணம் வாங்க நல்ல யோகம் உண்டு. மாணவர்கள், சாகச விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது.

பரிகாரம்: சூரியனை வழிபடுவதால், தந்தை வழி சார்ந்த உறவினர்களின் கூடுதல் அன்பு கிடைக்கும்.

 

உடல்நலம் பேணுவதில் கூடுதல் கவனமுள்ள கடக ராசிக்காரகளே!

உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான தன குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சுக்கிரன் அனுகூலமாக உள்ளார். சூரியன், ராகு, தைரியம், புகழ் தரும் வகையில் செயல்படுகின்றனர். உங்கள் வார்த்தையின் வசீகரம், புதியவர்களின் அன்பை பெற்றுத்தரும். நிலுவைப்பணம் வசூலாகும். எதிர்ப்பாளரும் கடந்த காலத்தில் உங்களிடம் பெற்ற உதவியை, பெரிதாக மதித்து பேசுவர். புத்திரரின் கவனக்குறைவான செயல்களை சரி செய்ய உதவுவீர்கள். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். இல்லறத்துணை கூடுதல் அன்பு பாராட்டுவார். தொழில் வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். பணியாளர் சோர்வுக்கு இடம் தராமல் பணிபுரிவது அவசியம். குடும்ப பெண்கள் கணவரின் சொல்லுக்கு அதிக முக்கியத்துவம் தருவர். மாணவர்கள் சத்து நிறைந்த உணவு உண்பதால், செயலில் சுறுசுறுப்பு ஏற்படும்.

பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால், தொழிலில் உருவாகிற இடையூறு விலகும்.

 

வெற்றிப்பாதையை தேர்வு செய்வதில் கவனமுள்ள சிம்ம ராசிக்கார்களே!

உங்கள் ராசியில் சுக்கிரன், தைரியம், புகழ் ஸ்தானத்தில் உச்சம் பெற்ற சனி பகவான், அனுகூலமாக உள்ளனர். உடல் நலம் புதிய பொலிவு பெறும். பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். அவமானப்படுத்தும் எண்ணத்துடன் பேசுபவரிடம் விலகுவது நல்லது. உடன் பிறந்தவர்களின் வாழ்வு வளம் பெற உதவுவீர்கள். வாகனத்தின் பராமரிப்பு செலவு அதிகரிக்கும்.புத்திரர் அதிருப்தி எண்ணங்களுடன் செயல்படுவர். உறவினர் குடும்ப விவகாரங்களில் விலகி இருக்கவும். இல்லறத்துணை குடும்ப நலனை, கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்வார். தொழில் வியாபாரம் சராசரி அளவில் அமைந்து பணவரவு தரும். இயந்திர பிரிவு பணியாளர் பாதுகாப்பு முறையை தவறாமல் பின்பற்றவும். பெண்கள், சேமிப்பு பணத்தில் விரும்பிய பொருள் வாங்குவர். மாணவர்கள் புதியவர்களிடம் நிதானித்து பேசவும்.

பரிகாரம்:
ஆஞ்சநேயரை வழிபடுவதால், மனதில் சாந்தமும், மகிழ்ச்சியும் ஏற்படும்.

 

குடும்பத்தின் நலன் பேணுவதில் அக்கறையுள்ள கன்னி ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு தனம், பாக்ய ஸ்தான அதிபதி சுக்கிரன், அனுகூலமாக உள்ளார். ஆட்சி பெற்ற செவ்வாய், உச்சம் பெற்ற குரு, சிறப்பான பலன் தருவர். மாறுபட்ட மனம் உள்ளவர்களிடம் விலகுவது நல்லது. வாழ்வில் முன்னேற்றம் பெற, முருகப்பெருமானின் நல்லருள் புதிய வாய்ப்பு தரும். வாகன பயன்பாடு திருப்திகர அளவில் இருக்கும்.புத்திரர் உங்களின் சொல்லை வேதமென கருதுவார். சீரான ஓய்வு, உடல்நலம் பாதுகாக்க உதவும். இல்லறத்துணை வழிசார்ந்த உறவினர்களின் வருகை, வீட்டில் மகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம், கூடுதல் உழைப்பு என்கிற நடைமுறை நற்பலனை உருவாக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை தவறாமல் பின்பற்றவும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள், ஞாபகத்திறன் வளர்த்து, நல்ல தேர்ச்சி விகிதம் பெறுவர்.

பரிகாரம்:
குரு பகவானை வழிபடுவதால், செயல்களில் வெற்றி பெற புதிய வழி பிறக்கும்.

 

குடும்பத்தின் நலன் பேணுவதில் அக்கறையுள்ள கன்னி ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு தனம், பாக்ய ஸ்தான அதிபதி சுக்கிரன், அனுகூலமாக உள்ளார். ஆட்சி பெற்ற செவ்வாய், உச்சம் பெற்ற குரு, சிறப்பான பலன் தருவர். மாறுபட்ட மனம் உள்ளவர்களிடம் விலகுவது நல்லது. வாழ்வில் முன்னேற்றம் பெற, முருகப்பெருமானின் நல்லருள் புதிய வாய்ப்பு தரும். வாகன பயன்பாடு திருப்திகர அளவில் இருக்கும்.புத்திரர் உங்களின் சொல்லை வேதமென கருதுவார். சீரான ஓய்வு, உடல்நலம் பாதுகாக்க உதவும். இல்லறத்துணை வழிசார்ந்த உறவினர்களின் வருகை, வீட்டில் மகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம், கூடுதல் உழைப்பு என்கிற நடைமுறை நற்பலனை உருவாக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை தவறாமல் பின்பற்றவும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள், ஞாபகத்திறன் வளர்த்து, நல்ல தேர்ச்சி விகிதம் பெறுவர்.

பரிகாரம்:
குரு பகவானை வழிபடுவதால், செயல்களில் வெற்றி பெற புதிய வழி பிறக்கும்.

 

இயன்ற அளவில் சமூக சேவைப் பணிபுரியும் விருச்சிக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானத்தில் குரு, லாப ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு அனுகூலமாக உள்ளனர். சமூகத்தில் கூடுதல் அந்தஸ்து கிடைக்கும். தாமதமான பணியை நிறைவேற்றி மகிழ்வீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை தாராள பணச்செலவில் வாங்கித் தருவீர்கள். புதிய வாகனம், வீடு வாங்க சிலருக்கு யோகம் உண்டு.புத்திரர், அறிவார்ந்தவர்களின் அன்பு, நட்பு பெறுவதில் ஆர்வம் கொள்வர். உடல்நலம் பேணுவதில் கூடுதல் கவனம் வேண்டும். இல்லறத்துணையின் கவனக்குறைவான செயலை பெரிதுபடுத்தி விமர்சிக்க வேண்டாம்.தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரித்து உபரி பணவரவு கிடைக்கும். பணியாளர்கள், குறித்த காலத்தில் பணி இலக்கு நிறைவேற்றுவர். பெண்கள், கணவரின் அனுமதியின்றி எவருக்கும் பண உதவி செய்ய வேண்டாம். மாணவர்கள், ஆசிரியர், பெற்றோரிடம் நன்மதிப்பு பெறுவர்.

பரிகாரம்: முருகப் பெருமானை வழிபடுவதால், உடல்நலம் ஆரோக்கியம் பெறும்.

 

வாழ்வின் நிகழ்வுகளை அனுபவ பாடமாக கருதும் தனுசு ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு சப்தம – ஜீவன ஸ்தான அதிபதி புதன், பத்தாம் இடத்தில் சூரியனுடன் அனுகூலமாக உள்ளார். சனி, சுக்கிரனும் நற்பலன் தருவர். ஆன்மிக கருத்துக்கு எதிராக பேசுபவரிடம் விலகுவது நல்லது. குடும்பத்தின் அத்தியாவசிய தேவை பெருமளவில் நிறைவேற்றுவீர்கள்.உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். வாகன பயன்பாடு திருப்திகர அளவில் இருக்கும்.புத்திரரின் படிப்பு, உடல் நலத்திற்கு பணம் செலவு செய்ய நேரிடலாம். எதிர் மனப்பாங்கு உள்ளவரும், உங்கள் மீது நன்மதிப்பு கொள்வர். இல்லறத்துணை ஒற்றுமையுடன் நடந்து கொள்வர். தொழில், வியாபாரத்தில், வளர்ச்சி பணவரவு கூடும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள், கணவரின் கருத்துக்கு ஏற்ப செயல்படுவர். மாணவர்கள், வெளியிடம் சுற்றுவதை தவிர்ப்பதால், படிப்பில் கவனம் வளரும்.

சந்திராஷ்டமம்: 20.9. 14 நள்ளிரவு 12:01 மணி முதல், 21.9.14 காலை 11:52 மணி வரை.

பரிகாரம்:
சனி பகவானை வழிபடுவதால், வாழ்வில் துன்பம் விலகி இன்பம் சேரும்.

 

தன் எதிர்கால வாழ்வு சிறக்க உரிய திட்டமிடும் மகர ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு கேது, குரு, சுக்கிரன், செவ்வாய் சிறப்பான வகையில் பலன் தருவர். புதிய நிகழ்வு உருவாகி, மனதை மகிழ்விக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். உறவினர் கேட்ட உதவியை வழங்குவீர்கள். பூர்வ சொத்தில் வளர்ச்சியும், பணவரவும் அதிகரிக்கும்.மகளின் ஜாதகயோக பலம், குடும்பத்தின் எதிர்கால வாழ்வுக்கு நல்வழி தரும். பொது இடங்களில் அதிக நேரம் எவருடனும் பேச வேண்டாம். இல்லறத்துணை விரும்பி கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள். தொழிலில் இருந்த மாறுபட்ட சூழ்நிலை சரியாகும். பணியாளர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பு கிடைக்கும். பெண்கள், வீட்டை அலங்கரிக்க கலைப்பொருட்கள் வாங்குவர். மாணவர்கள், உடல் நலம் சிறந்து, பொது அறிவு வளர்ப்பதில் ஆர்வம் கொள்வர்.

சந்திராஷ்டமம்:
21.9.14 காலை 11:53 மணி முதல், 23.9.14 இரவு 11:15 மணி வரை.

பரிகாரம்: அன்னை மீனாட்சியை வழிபடுவதால், குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும்.

 

மனதில் ஆன்மிக சிந்தனையை நாளும் வளர்த்திடும் கும்ப ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு இந்த வாரம் புதன், சந்திரனின் அனுகூலம் மட்டுமே உள்ளது. சோம்பல் குணம் தவிர்த்து, பணிகளில் ஈடுபடுவதால் மட்டுமே ஓரளவு நன்மை கிடைக்கும். வீண் வார்த்தை பேசுபவரிடம் விலகுவது நல்லது. உடன் பிறந்தவர்களின் செயல் குறையை கண்டிப்பதில் நிதானம் வேண்டும். வீடு, வாகனத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அவசியம்.புத்திரர், தன் கடமைகளை உணர்ந்து நடந்து கொள்வர். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ணக்கூடாது. இல்லறத்துணையின் மனதில் உங்கள் மீதான நம்பகத்தன்மை குறையாமல் நடந்து கொள்ளுங்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். இயந்திரப் பிரிவு பணியாளர்கள், பாதுகாப்பு முறைகளை தவறாமல் பின்பற்றவும். பெண்கள், சமையலறை பணிகளில் கவனமுடன் ஈடுபட வேண்டும். மாணவர்கள், புதியவரை நண்பராக ஏற்பதில் நிதானம் நல்லது.

சந்திராஷ்டமம்:
23.9.14 இரவு 11:16 மணி முதல், 25.9.14 காலை 9:08 மணி வரை.


பரிகாரம்:
நந்தீஸ்வரரை வழிபடுவதால், பழகுபவர்களிடம் உங்கள் மீதான நன்மதிப்பு கூடும்

 

தன்னால் இயன்ற உதவிக்கு மட்டும் வாக்குறுதி தரும் மீன ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு இந்த வாரம் குரு, சந்திரன் மட்டுமே நற்பலன் தருவர். நற்குணம் உள்ளவர்களின் அறிவுரை, உங்கள் வாழ்வில் புதிய மாற்றம் உருவாக்கும். செலவுகளில் சிக்கனம் பின்பற்றுவதால், பணக்கடன் பெறுவதை தவிர்க்கலாம். மன உறுதியுடன் பணி மேற்கொள்வதால், உரிய நன்மை கிடைக்கும். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.புத்திரர், நண்பருக்கு இணையாக அன்புடன் ஆலோசனை வழங்குவர். காலமுறை உணவுப் பழக்கம் உடல் நலம் பாதுகாக்க உதவும். இல்லறத்துணையின் பதற்றமான செயல் சிரமம் தரலாம். தொழிலில் அளவான மூலதனம், கூடுதல் உழைப்பு உரிய நன்மை தரும். பணியாளர்கள், தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்வீர்கள்.பெண்கள், நகை பாதுகாப்பில் உரிய கவனம் வேண்டும். மாணவர்கள், படிப்பு தவிர பிற விவாதம் பேச வேண்டாம்.

சந்திராஷ்டமம்: 25.9.14 காலை 9:09 மணி முதல், 27.9.14 அன்று நாள் முழுவதும்.

பரிகாரம்:
காமதேனுவை வழிபடுவதால், குடும்பத்தில் மங்களமும், செல்வ வளமும் பலப் பெருகும்.

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *