மேஷம்

புகழ்ச்சி, விமர் சனம் இரண்டையும், நிதானமாக ஏற்கும், மேஷ ராசிக் காரர்களே!

உங்கள் ராசிக்கு இந்த வாரம் சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள், அளப்பரிய நற்பலன் வழங்குகின்றனர். நம்பிக்கையுடன் செயல்பட்டு, நிலுவைப் பணி நிறைவேற்றுவீர்கள். பழகுபவர்கள் இனிய வார்த்தை பேசுவதால் மகிழ்ச்சியும், நிம்மதியும் அடைவீர்கள். தம்பி, தங்கையின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். வாகன பயன்பாடு அளவுடன் வைத்துக் கொள்வீர்கள். புத்திரர் அறிவுத்திறன் வளர்ந்து, புதிய சாதனை முயற்சியில் ஈடுபடுவர். எதிர்ப்பு விலகி சுமுக வாழ்வு உருவாகும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள். புதியவர்களின் வரவு தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தும். பணியாளர் குறித்த நேரத்தில், இலக்கு நிறைவேற்றுவர். பெண்கள் குடும்ப நலன் சிறக்க, தேவையான பணி மேற்கொள்வர். மாணவர்கள் திருப்திகர அளவில் தரதேர்ச்சி விகிதம் பெறுவர்.

 

ரிஷபம்

ஆன்மிக நம்பிக்கை யுடன், பணி மேற் கொள்ளும், ரிஷப ராசிக் காரர்களே!

உங்கள் ராசிக்கு இந்த வாரம் குரு, சனி, ராகு, சுக்கிரன் ஆகிய கிரகங்களின் அமர்வு, சிறப்பான பலன் தரும் வகையில் உள்ளது. சூரியன் வார பிற்பகுதியில், அத்தியாவசிய பணி ஒன்று நிறைவேற உதவுவார். உங்கள் சொல்லுக்கு நண்பர், உறவினர் மதிப்பு, மரியாதை தருவர். வீடு, வாகனத்தில் பாதுகாப்பு முறை தவறாமல் மேற்கொள்ள வேண்டும். புத்திரரின் கவனக்குறைவான செயலை, இதமான அணுகு முறையால் சரி செய்வீர்கள். விவகாரங்களில், சமரச தீர்வு கிடைக்கும். இல்லறத்துணை ஒற்றுமை குணத்துடன் நடந்து கொள்வார். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழித்து உபரி பணவரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம், உத்தியோக உயர்வு கிடைக்க, வார பிற்பகுதி நாட்களில் அனுகூலம் உண்டு. பெண்கள் திருப்திகர பணவசதி அமைந்து, மகிழ்ச்சி நிறைந்த வாழ்வு நடத்துவர். மாணவர்கள், பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்லக்கூடாது.

 

மிதுனம்

நண்பரின் வாழ்வு சிறக்க, தகுந்த ஆலோசனை சொல்லும், மிதுன ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு இந்த வாரம் புதன், கேதுவின் ஆதரவு பலம் நிறைந்து உள்ளது. ஆன்மிக நம்பிக்கையுடன் பணிபுரிந்து, முக்கிய இலக்கை அடைவீர்கள். உங்களை சிலர் புகழ்ந்து பேசி, சுயலாபம் பெற முயற்சி செய்வர். அவர்களிடம் விலகுவதால், சிரமம் அணுகாமல் தவிர்க்கலாம். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். புத்திரரின் செயல் திறன் உணர்ந்து, சில பணிகளைத் தருவீர்கள். காலமுறை உணவுப்பழக்கம், சீரான ஓய்வு, உடல் நலம் பாதுகாக்க உதவும். இல்லறத்துணையின் மனதில் உங்கள் மீதான நம்பிக்கை, குறை எதுவும் வராமல் நடந்து கொள்வது அவசியம். தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறு தாமதமின்றி சரி செய்வதால் உற்பத்தி, விற்பனை சராசரி இலக்கை அடையும். பணியாளர், சக பணியாளரிடம் பொது விவாதம் பேசவேண்டாம். பெண்கள் நகை இரவல் கொடுக்க, வாங்க கூடாது. மாணவர்கள், அதிக விலையுள்ள பொருட்களை கவனமுடன் பயன்படுத்த வேண்டும்.

கடகம்

பக்குவம் நிறைந்த மனதுடன் வாழ்வில் செயல்படும், கடக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு இந்த வாரம் செவ்வாய், தினகதி சுழற்சி கிரகம் சந்திரன் மட்டுமே அனுகூலமாக செயல்படுகின்றனர். தாழ்வு மனப்பான்மை அகற்றுவதால், செயல்களில் ஓரளவு நன்மை கிடைக்கும். பொது இடங்களில் வேடிக்கை பார்ப்பது, நண்பரிடம் அதிக நேரம் பேசுவது ஆகிய செயல்களை தவிர்ப்பது, மனதில் நிம்மதி உருவாக உதவும். இளைய சகோதரர் அனுசரணையாக நடந்து கொள்வர். வீடு வாகனத்தில் பராமரிப்பு பணச்செலவு ஏற்படலாம். புத்திரர் சுறுசுறுப்பாக செயல்பட்டு படிப்பு, தனித்திறன் வளர்ப்பில் முன்னேற்றம் காண்பர். இல்லறத்துணையின் செயல்குறையை பெரிதுபடுத்தி பேச வேண்டாம். தொழிலில் உற்பத்தி, விற்பனையை சராசரி அளவில் கொண்டு வர கூடுதல் உழைப்பு, கவனம் தேவைப்படும். பணியாளர், நிர்வாகத்தின் சட்ட திட்டம் தவறாமல் பின்பற்ற வேண்டும். பெண்கள், குடும்பத் தேவைகளை சிக்கன பணச்செலவில் மேற்கொள்வது நல்லது. மாணவர்கள், அக்கறையுடன் படிப்பதால் தேர்ச்சி விகிதம் சீராகும்.

சிம்மம்

அதிக உழைப்பினால் நற்பெயரும், உபரி பணவரவும் பெறும், சிம்ம ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, இந்த வாரம் செவ்வாய், கேது தவிர மற்ற கிரகங்கள் அனுகூல பலன் தருகின்றனர். ஆரோக்கிய உடல் நலத்துடன் பணிகளை திறம்பட மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த பணவரவு திருப்திகர அளவில் கிடைக்கும். நண்பர்களின் உதவியால், சில நன்மை வந்து சேரும். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். புத்திரர் கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வர். எதிரி வியந்து விலகுகிற அளவில், சுமுக வாழ்வு பெறுவீர்கள். வார பிற்பகுதி நாட்களில் அலைச்சல் தரும் பயணம், ஒவ்வாத உணவு வகை தவிர்ப்பது, உடல்நலம் பாதுகாக்க உதவும். இல்லறத்துணையின் ஜாதக யோக பலம் உங்களுக்கு, புதிய கவுரவம் பெற்றுத்தரும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி, பணி மேற்கொள்வீர்கள். பணியாளர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பு, உபரி பணவரவு கிடைக்கும். பெண்கள், பண வசதிக்கேற்ப ஆடை, அணிகலன் வாங்க அனுகூலம் உண்டு. மாணவர்கள், நண்பர்களிடம் பெற்ற அன்புக்கு குறைவராமல் பேசுவது நல்லது.

 

கன்னி

சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில், ஆர்வம் மிகுந்த, கன்னி ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, இந்த வாரம் சுக்கிரன் முழு அளவிலும், சந்திரன் சூரியன் ஓரளவிலும் நற்பலன் தருகின்றனர். கடந்த நாட்களில், உங்களுக்கு எதிர்மறையாக செயல்பட்டவரை நினைத்து, மனம் வருந்துகிற நிலைமை ஏற்படலாம். குடும்பத்தின் கவுரவம், எதிர்கால நலன் கருதி செயல்படுவது அவசியம். முக்கியமான பணிகளை சொந்த முயற்சியினால் நிறைவேற்றுவீர்கள். சொத்து ஆவணம் கவனமுடன் பாதுகாக்க வேண்டும். உடல்நலம் ஆரோக்கியம் பெற, சிறு அளவில் மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். இல்லறத்துணை வழி சார்ந்த உறவினர் இயன்ற உதவி மனமுவந்து வழங்குவர். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத் தன்மை, அதிக கவனமுடன் பாதுகாக்க வேண்டும். பணியாளர், பிறருக்காக பணப் பொறுப்பு ஏற்க கூடாது. பெணகள், குடும்ப சூழ்நிலை உணர்ந்து செயல்படுவர். மாணவர்கள், படிப்பில் முன்னேற்றம் பெற நண்பரால் உதவி கிடைக்கும்

 

துலாம்

அன்பான செயல்புரிந்து, அதிக நன்மை பெறும் துலாம் ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு இந்த வாரம் சுக்கிரன், புதன், குரு நற்பலன் வழங்குகின்றனர். துாய மனதுடன் பணிகளை மேற்கொண்டு உரிய நன்மையும், புகழும் பெறுவீர்கள். உறவினரின் வருகையால், வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நம்பகத்தன்மை இல்லாதவர் களுக்கு வீடு, வாகனத்தில் இடம் தர வேண்டாம். புத்திரரின் எதிர்கால நலன்சிறக்க, தேவையான அறிவுரை சொல்லி வழி நடத்துவீர்கள். நிர்ப்பந்த பணக் கடனில், ஓரளவு செலுத்துவீர்கள். இல்லறத்துணை, உங்களின் நல்லகுணம் உணர்ந்து பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் அரசின் சட்டதிட்டங்களை பின்பற்றி செயல்படுவது, பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கும். பணியாளர்கள், அனுபவம் இல்லாத துறை சார்ந்த பணியில் ஈடுபடக்கூடாது. பெண்கள், உறவினர் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி சிறப்பாக நிறைவேற, உறுதுணையாக செயல்படுவீர்கள். மாணவர்கள், பாடங்களில் உருவான குழப்பம் விலகி, புரிதல் தன்மையில் மேன்மை பெறுவர்.

 

விருச்சிகம்

நியாயம், தர்மம் பின்பற்றுபவரை மதித்து வாழும் விருச்சிக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு இந்தவாரம் சுக்கிரன், கேது, செவ்வாயின் அமர்வு அனுகூலமாக உள்ளது. சூரியன் வார முற்பகுதி நாட்களில் மட்டும் நற்பலன் தருகிறார். மனதில் சாந்தம் மிகுந்திருக்கும். பேசும் வார்த்தை இனிதாக அமைந்து, புதியவர்களை நண்பராக பெற்றுத்தரும்.
வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி வந்து சேரும். தாயின் தேவையறிந்து, பூர்த்தி
செய்வீர்கள். புத்திரரின் முரண்பட்ட செயல்களை, இதமான அணுகுமுறையால் சரிசெய்வீர்கள்.
எதிரியினால் வருகிற தொந்தரவு இஷ்டதெய்வ அருள் பலத்தினால் விலகும்.
இல்லறத்துணை, உங்களின் சமயோசித ஆலோசனையை ஏற்றுக் கொள்வார். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபவிகிதம் வைத்து உற்பத்தி, விற்பனையில் இலக்கை அடைவீர்கள். அரசியல்வாதிகள், விட்டுக்கொடுக்கும் மனதுடன் செயல்பட்டு சில நன்மை பெறுவீர்கள். பெண்களுக்கு, தாய்வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள், கூடுதல் பயிற்சியினால் சீரான தேர்ச்சிவிகிதம் பெறலாம்

 

தனுசு

கருணை மனதுடன், பிறருக்கு இயன்ற அளவில் உதவும், தனுசு ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு தன, குடும்ப புகழ்ஸ்தான அதிபதியாகிய சனிபகவான், உச்ச பலத்துடன் ராகுவுடன் ஆதாய ஸ்தானத்தில் உள்ளார். குரு, சுக்கிரன் கூடுதல் நற்பலன் தருகின்றனர். குடும்பத்தேவைகளை சிறப்பாக நிறைவேற்றுகிற எண்ணத்துடன் பணிபுரிவீர்கள்.
உபரி பணவரவு திருப்திகர அளவில் கிடைக்கும். உறவினர், நண்பரிடம் உங்கள் மீதான மதிப்பு, மரியாதை கூடும். வீடு, வாகனத்தில் உரிய பாதுகாப்பு பின்பற்றுவீர்கள். புத்திரர் மகிழ்ச்சியுடன் நடந்துகொள்வர், உடல் நல ஆரோக்கியம் சீராக இருக்கும். இல்லறத்துணை ஒற்றுமை குணத்துடன், குடும்ப நலம் பேணுவார். தொழிலில் வளர்ச்சி பெற, வருகிற வாய்ப்பை பயன்படுத்துவீர்கள். உத்தியோகஸ்தர், பணியாளர்களுக்கு தொழில்நுட்ப திறன் வளர உதவுவர். பெண்கள், தாராள பணவசதி கிடைத்து குடும்பச்செலவு திருப்திகர அளவில் மேற்கொள்வர். மாணவர்கள், நன்றாக படித்து ஆசிரியர், பெற்றோரின் வாழ்த்து பெறுவர்.

 

மகரம்

லட்சியம் நிறைவேற கூடுதலாக பணிபுரியும், மகர ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, இந்த வாரம் சுப விரய ஸ்தானத்தில் உள்ள சுக்கிரன், தினகதி சுழற்சி கிரகம் சந்திரன் மட்டுமே, நற்பலன் தருகின்றனர். புதிதாக, சில பணிகள் உருவாகி, மனதை
சஞ்சலப்படுத்தும். உதவிகர மனப்பான்மை உடைய நண்பரின் மூலமாக, சிரம சூழ்நிலையை சரி செய்வீர்கள். குடும்பத்தின் அத்தியாவசிய செலவுக்கு கொஞ்சம் பணக்கடன் பெற வேண்டியதிருக்கும். புத்திரரின் எண்ணமும், செயலும் எதிர்கால வாழ்வின் முன்னேற்றத்தை உறுதி செய்வதாக அமையும். உடல்நலத்திற்கு காலமுறை உணவுப்பழக்கம் மற்றும் சீரான ஓய்வு நடைமுறை நன்மை தரும். இல்லறத்துணை வழிசார்ந்த உறவினரால் உதவி உண்டு. தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாரான அளவில் இருக்கும். தொழிற்சாலை பணியாளர்கள், பாதுகாப்பு முறை தவறாமல் பின்பற்ற வேண்டும். பெண்கள், குடும்பச் செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படுத்துவர். மாணவர்கள், விளையாட்டுக்களில் சாகசம் கூடாது.

 

கும்பம்

சூழ்நிலை உணர்ந்து சமயோசிதமாக செயல்படும், கும்ப ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, இந்த வாரம் சுகம் சவுபாக்ய ஸ்தான அதிபதியாகிய சுக்கிரன் அனுகூல அமர்வில் உள்ளார். குரு, கேது அதிக அளவில் நற்பலன் தருகின்றனர். இஷ்ட தெய்வத்திடம் நடத்திய பிரார்த்தனை நிறைவேறி மகிழ்ச்சி அடைவீர்கள். அக்கம்
பக்கத்தவருடன் உங்கள் மீதான நன்மதிப்பு அதிகரிக்கும். வீடு, வாகனத்தில் பயன்பாட்டு வசதி சீராக இருக்கும். புத்திரர், நற்குணம் உள்ளவர்களின் அன்பை பெற்று, தகுதி, திறமையில் முன்னேற்றம் காண்பர். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு வகை உண்ண வேண்டாம். இல்லறத்துணை குடும்ப நன்மைக்கு தேவையான விஷயங்களில் அக்கறை கொள்வார். தொழிலில் உற்பத்தி, விற்பனை தாமத கதியில் இயங்கும். பணியாளர் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்ற வேண்டும். குடும்ப பெண்கள், கணவரின் கருத்துக்கு, உரிய முக்கியத்துவம் தருவர். மாணவர்கள், தமது பொறுப்பை உணர்ந்து படிப்பில் முன்னேற்ற இலக்கை அடைவர்.

 

மீனம்

பழகுபவர்களின் மன உணர்வை மதித்து பேசும், மீன ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு இந்த வாரம் நவக்கிரகங்களில் சூரியன், புதன் முழுஅளவில் நற்பலன் வழங்குகின்றனர். தாமதமான செயல் ஒன்றை உத்வேகத்துடன் நிறைவேற்றுவீர்கள். அரசு தொடர்பான உதவி பெற அனுகூலம் ஏற்படும். பணச்செலவில் சிக்கனம் பின்பற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களிடம் தேவையற்ற விஷயங்களை பேசவேண்டாம். வாகனத்தில் மிதவேகம் பயணமுறை எளிதாக அமைய உதவும். புத்திரர் அறிவுத்திறன் அதிகரிக்து, படிப்பு, வேலை வாய்ப்பில் முன்னுரிமை பெறுவர். விவகாரங்களில் சுமுகத்தீர்வு கிடைப்பதில் தாமதம் இருக்கும். இல்லறத்துணையின் மனதில் உங்கள் செயல் மீதான நம்பிக்கைக்கு குறை வராமல் நடப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சில மாற்றங்களை கொண்டு வருவீர்கள். அரசியல்வாதிகள், அதிகாரிகளின் உதவியினால், முக்கியமான பணியை நிறைவேற்றுவர். குடும்ப பெண்கள், உடல்நலத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் தருவீர்கள். மாணவர்கள், லட்சிய மனதுடன் படித்து சிறப்பான தேர்ச்சி விகிதம் காண்பர்.

Leave a Reply