shadow

 101

எதிர்கால நலனை கவனத்தில் வைத்து செயல்படும், மேஷ ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஆறாம் இடத்திலும், புகழ் ஸ்தான அதிபதி புதன் பதினொன்றாம் இடத்திலும் அனுகூல சஷ்டாஷ்டக அமர்வில் உள்ளனர். மனம், செயலில் புத்துணர்வு ஏற்படும். உழைப்பதில் அதிக ஆர்வம் கொள்வீர்கள். அறிமுகம் இல்லாதவரிடம் பேசுவதில், நிதானம் பின்பற்ற வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் தேவையை, மன மகிழ்வுடன் வாங்கித் தருவீர்கள். புத்திரர் வெளியிடம் சுற்றுவதை குறைத்திட, இதமான அறிவுரை சொல்வீர்கள். இல்லறத்துணையின் நம்பிக்கைக்கு குறை வராத அளவில் நடந்து கொள்ள வேண்டும். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகி வியத்தகு அளவில் வளர்ச்சி உண்டாகும். பணியாளர் கூடுதல் வேலை வாய்ப்பு திருப்திகர அளவில் சன்மானம் பெறுவர். பெண்கள், உறவினர், குடும்ப விவகாரத்தில் கருத்து சொல்வதை தவிர்க்கவும். மாணவர்கள், நண்பர்களிடம் கூடுதல் மதிப்பு, மரியாதை பெறுவர்.சந்திராஷ்டமம்: 12.3.14 காலை 9:25 மணி முதல் 22.3.14 அன்று நாள் முழுவதும்.

பிறர் நலன் சிறக்க மனம் உவந்து உதவும், ரிஷப ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிநாதன் சுக்கிரனும், நவகிரகங்களில் செவ்வாய், கேது தவிர, மற்ற கிரகங்களும் அளப்பரிய வகையில், நற்பலன் வழங்குகின்றனர். உங்கள் மீது நன்மதிப்பு உள்ளவர்கள், தம் வாழ்வை செம்மைப்படுத்த ஆலோசனை கேட்டுப் பெறுவர். குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சி நடத்த அனுகூலம் உண்டு. தாய்வழி உறவினர் விரும்பி சொந்தம் பாராட்டுவர். புத்திரரின் மன சஞ்சலம் விலக, தேவையான பணிகளை மேற்கொள்வீர்கள். உடல்நல ஆரோக்கியம் பலமுடன் இருக்கும். இல்லறத்துணையின் கூடுதல் அன்பு, பாசம் அதிகரித்து, ஆளுமை மனப்பான்மையுடன் செயல்படுவர். தொழில், வியாபாரம் செழித்து வளர, புதியவாய்ப்பு உருவாகும். பணியாளர் சிறப்பாக பணிபுரிந்து, சலுகை பெறுவர். குடும்ப பெண்கள், தாராள பணவசதி அமைந்து, வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். மாணவர்கள், படிப்பில் கூடுதல் தேர்ச்சி விகிதமும் வேலை வாய்ப்பில் முன்னுரிமையும் அடைவர்.

சந்தோஷ நிகழ்வுகளை பொக்கிஷமாக கருதும் மிதுன ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் உள்ள சுக்கிரன், பத்தாம் இடத்தில் உள்ள சூரியன் நற்பலன் தருகின்றனர். சுய முயற்சியால் வாழ்வில் கூடுதல் வளம் பெற தேவையான பணி மேற்கொள்வீர்கள். உங்களை புகழ்ந்துபேசி, சுயலாபம் பெற விரும்புபவரிடம் விலகுவது நல்லது. வீடு, வாகனத்தில் கூடுதல் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். புத்திரரின் சேர்க்கை சகவாசம் அறிந்து, நல்வழியில் நடைபோட உதவுவீர்கள். உடல் நலத்திற்கு, ஒவ்வாத வகையிலான உணவு உண்பதை தவிர்க்கவும். இல்லறத்துணையின் ஆறுதல் நிறைந்த வார்த்தை மனம், செயலில் புத்துணர்வை உருவாக்கும். தொழில், வியாபாரம் செழித்து வளர, தேவையான அரசு உதவியை, தகுந்த முயற்சியினால் பெறலாம். அரசியல்வாதிகளுக்கு பொறுப்பான பதவி கிடைக்க அனுகூலம் உண்டு. பெண்கள், குடும்பத்தின் பணவரவுக்கேற்ப செலவுகளை திட்டமிடுவர். மாணவர்கள், சாகசம் நிறைந்த விளையாட்டுக்களில் ஈடுபடக் கூடாது.

 

உலக விஷயங்களை அறிவதில் ஆர்வமுள்ள, கடக ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு, புகழ் ஸ்தானமாகிய மூன்றாம் இடத்தில், தொழில் ஸ்தான அதிபதி செவ்வாய் அனுகூலமாக உள்ளார். எட்டாம் இடத்தில் புதன், செவ்வாய்க்கு அனுகூல சஷ்டாஷ்டக அமர்வில் உள்ளார். நற்செயல்கள் நிறைவேற இஷ்ட தெய்வ அருள் பலத்துடன், முருகப் பெருமானின் நல்லருளும் துணை நிற்கும். உடன்பிறந்தவர்களின் உதவியால் மகிழ்ச்சி அடைவீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர் விரும்பிய பொருள் அதிக தரத்தில் வாங்கித்தருவீர்கள். உடல் நலத்திற்கு, சிறு அளவில் மருத்துவ சிகிச்சை தேவைப்படும். இல்லறத்துணையின் கவனக்குறைவான செயலை குறை சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை அடைய மாற்று உபாயம் பின்பற்றுவீர்கள். பணியாளர், பணியில் குளறுபடி வராமல், அதிக கவனமுடன் செயல்பட வேண்டும். பெண்கள், கணவர் வழி சார்ந்த உறவினர்களிடம் கருத்து வேற்றுமை மறந்து, அன்பு பாராட்டுவது நலம் தரும். மாணவர்கள், ஆசிரியரின் கண்டிப்புக்கு ஆளாகாதவாறு, அக்கறையுடன் படிக்க வேண்டும்

 

வாழ்வில் முன்னேற, வரும் வாய்ப்பை பயன்படுத்தும் சிம்மராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் உள்ள சனி, ராகு, லாப ஸ்தானத்தில் உள்ள குரு, அதிக நற்பலன் தருகின்றனர். பிறரிடம் பேசுவதில், நிதானம் பின்பற்றி, சமூகத்தில் பெற்ற நற்பெயரை பாதுகாத்திடுவீர்கள். புதியவர்களின் அறிமுகம், உதவி கிடைக்கும். ெவளியூர் பயணத்தில், உரிய பாதுகாப்பு நடைமுறை பின்பற்ற வேண்டும். புத்திரரின் அறிவாற்றல் நிறைந்த சொல் பெருமை தேடித்தரும். எதார்த்தமாக பழகுகிற பெண்களைப் பற்றி, நண்பரிடம் விமர்சனம் பேசவேண்டாம். உடல் நலத்தில் கூடுதல் கவனம் அவசியம். இல்லறத்துணை, உங்களின் குறையை பெருந்தன்மையுடன் பொறுத்துக்கொள்வார். தொழிலில் உற்பத்தி, விற்பனை திருப்திகர அளவில் இருக்கும். பணியாளர்கள், கூடுதல் வேலை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வர். குடும்ப பெண்கள், கணவரின் சம்மதமின்றி எவருக்கும் பணப்பொறுப்பு ஏற்க கூடாது. மாணவர்கள், கோபகுணம் தவிர்ப்பதால், நண்பரிடம் நற்பெயர் பாதுகாக்கலாம்.

 

வாழ்வில் ஆடம்பரம், அளவுடன் பயன்படுத்தும் கன்னி ராசிக்காரர்களே!

இந்தவாரம், உங்கள் ராசிநாதனும், பத்தாம் இட அதிபதியுமாகிய புதன், ஆறாம் இட அமர்வில் அனுகூலமாக உள்ளார். அசுர குருவாகிய சுக்கிரன், ஐந்தாம் இடத்தில் பூர்வபுண்ணிய பலம் பெற்றுத்தரும் வகையில் உள்ளார். எவரிடமும் இனிய வார்த்தை பேசி, நன்மதிப்பு பாதுகாத்திடுவீர்கள். இளைய சகோதரர் ஓரளவு உதவுவர். வீடு, வாகன பராமரிப்பு பணச்செலவு அதிகரிக்கும். மகளின் ஜாதகயோக பலன் சிறப்பாக அமைந்து, புதிய நன்மை பெற்றுத்தரும். வழக்கு, விவகாரத்தில் அனுகூலத்தீர்வு கிடைக்கும். இல்லறத்துணை கூடுதல் அன்பு, பாசத்துடன் உதவுவார். தொழில், வியாபாரத்தில் சில மாற்றம் பின்பற்றி அபிவிருத்தி காண்பீர்கள். பணியாளர்கள், தன்பொறுப்பு உணர்ந்து பணிபுரிவர். பெண்கள், குடும்ப வாழ்வை மங்கலகரமாக அமைப்பதில் ஆர்வம் கொள்வர். மாணவர்கள், ஆசிரியர், பெற்றோரிடம் நன்மதிப்பு பெற படிப்பில் சிறந்து விளங்குவர்.

 

நீதி, நேர்மை குணம் தவறாமல் வாழ்ந்திடும், துலாம் ராசிக்காரர்களே!

இந்தவாரம், உங்கள் ராசிக்கு சுக்கிரன், சூரியன், குருபகவானின் அமர்வு, அளப்பரிய நற்பலன் வழங்கும் வகையில் உள்ளது. நல்ல விஷயங்களை, நண்பரிடம் ஆர்வமுடன் பேசுவீர்கள். தகுதி, திறமையை பயன்படுத்தி, வாழ்வில் முன்னேற இஷ்டதெய்வ அனுகிரகம் பலமாக துணைநிற்கும். வாகன பயன்பாடு திருப்திகர அளவில் இருக்கும். புத்திரரின் முரண்பட்ட பேச்சு, செயலை பொறுத்துக் கொள்வீர்கள். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை, விருப்பமுடன் உண்டு மகிழ்வீர்கள். நிலுவைப்பணம் எளிதில் வசூலாகும். இல்லறத்துணை, உங்களின் நல்ல குணம் பாராட்டுவார். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திபணி, திருப்திகர அளவில் நிறைவேற்றுவீர்கள். பணியாளர்கள், நிர்வாகத்திடம் நன்மதிப்பு, எதிர்பாராத சலுகை பெறுவர். குடும்ப பெண்கள், கணவரின் கருத்தை மதித்து, எதிர்கால நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள், படிப்பில் சிறப்பான இடம்பெற்று, பெற்றோரிடம் விரும்பிய பரிசுப்பொருள் கேட்டுப்பெறுவர்

 

நல்ல கருத்துக்கு, முக்கியத்துவம் தருகின்ற விருச்சிக ராசிக்காரர்களே!

இந்தவாரம், உங்கள் ராசிக்கு சுக்கிரன், புதன், கேது, செவ்வாயின் அனுகூல பலன், சிறப்பான அளவில் கிடைக்கிறது. எந்த செயலிலும் நிதானம் பின்பற்றி, ஆதாய பலன் எளிதில் அடைவீர்கள். அக்கம், பக்கத்தவரிடம் நட்பு வளரும். வாகனபயணம் எளிதாகும். உறவினர் வருகையால், வீட்டில் மகிழ்ச்சி வளரும். புத்திரரின் உடல்நலம் ஆரோக்கியம் பெற, மருத்துவ சிகிச்சை உதவும். இல்லறத்துணை, உங்கள் வாழ்வியல் நடைமுறை சிறக்க, உறுதுணையாக செயல்படுவார். தொழில், வியாபாரத்தில் உருவாகிற சாதகமான தன்மையை நழுவ விடாமல் பயன்படுத்துவீர்கள். பணியாளர்கள், தொழில்நுட்ப அறிவை வளர்த்து, பணியில் சாதனை நிகழ்த்துவர். குடும்ப பெண்கள், கணவர் வழிசார்ந்த உறவினர்களை பண்புடன் உபசரிப்பர். மாணவர்களின் படிப்புக்கு தேவையான பணவசதி, திருப்திகரமாக கிடைக்கும்.

 

மனதில் சிந்தனைத் தெளிவுடன் பணிபுரியும், தனுசு ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு இரண்டில் சுக்கிரன், சப்தமஸ்தானத்தில் குரு, ஆதாயத்தில் சனி, ராகு சிறப்பாக உள்ளனர். பேசுகிற வார்த்தை இனிதாக அமைந்து, பழகுகிறவர்களிடம் கூடுதல் நன்மதிப்பை பெற்றுத் தரும். உங்களை அவமானப்படுத்த உரிய நேரம் எதிர்பார்த்து காத்திருப்பவரும், விலகுகிற புதிய சூழ்நிலை உருவாகும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர், ஆன்மிக அறிவை வளர்த்துக் கொள்வதில் ஆர்வமுடன் ஈடுபடுவர். உடல்நல ஆரோக்கியம் சீராக இருக்கும். இல்லறத்துணை, உங்களின் எண்ணம், கருத்துக்கேற்ப நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் உருவாகிற இடையூறு சரிசெய்து முன்னேற்றம் காண்பீர்கள். பணியாளர் பாதுகாப்பு முறை தவறாமல் பின்பற்ற வேண்டும். குடும்ப பெண்கள், கணவரின் நற்செயலை உறவினர்களிடம் பெருமையுடன் கூறுவர். மாணவர்கள், சாகச விளையாட்டில் ஈடுபட வேண்டாம்.

 

ஆன்மிக நம்பிக்கை உள்ளவர்களை மதித்து பேசும், மகர ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசியில் உள்ள சுக்கிரன், புகழ் ஸ்தானத்தில் உள்ள சூரியன், அதிக நற்பலன் தருகின்றனர். நடை, உடை, செயலில் வசீகரம் மிகுந்திருக்கும். பேச்சில் நிதானமும், பிறர் நலன்பற்றிய அக்கறையும் கலந்திருக்கும். மாறுபட்ட குணத்துடன் பேசுபவரிடம் விலகுவீர்கள். வாகன பயன்பாடு அளவுடன் இருக்கும். புத்திரர் விரும்பிய பொருள், அதிக தரத்தில் வாங்கித் தருவீர்கள். மகான் மற்றும் தெய்வ தரிசனம் மகிழ்ச்சி தரும். இல்லறத்துணை, உங்கள் நலனில், மிகுந்த அக்கறை கொள்வார். தொழில், வியாபாரத்தில் உருவாகிற போட்டியை, சமயோசித செயலால் சரி செய்வீர்கள். பணியாளர், பணியிடத்தில், உரிய பயன் பெறும் வகையில் செயல்படுவது நன்மை தரும். குடும்ப பெண்கள், கணவர் வழி சார்ந்த உறவினர்களை உபசரித்து பெருமை சேர்த்திடுவர். மாணவர்கள், ஞாபகத்திறன் வளர்த்து, படிப்பில் பெற்ற இடத்தை பாதுகாத்திடுவர்.

சந்திராஷ்டமம்: 15.3.14 இரவு 12:1 மணி முதல் 19.3.14 இரவு 7:39 மணி வரை

 

மனதில் கருணையும், செயலில் பொறுமையும் நிறைந்த, கும்ப ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள ராசிக்கு மூன்றில் கேது, ஐந்தில் குரு, பன்னிரெண்டில் சுக்கிரன் அனுகூலமாக உள்ளனர். உறவினர், நண்பரின் எண்ணங்களுக்கு மாறாக, எதுவும் பேச வேண்டாம். குடும்பத் தேவை நிறைவேற்ற பணச்செலவு அதிகரிக்கும். சேமிப்பு பணம் குறைவதும், புதிய கடன் பெறுவதுமான நிலைமை சிலருக்கு ஏற்படலாம். இஷ்ட தெய்வ வழிபாடு, மனதில் அமைதி நிலவ உதவும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். புத்திரர், தமக்கு உரிய பொறுப்பு உணர்ந்து செயல்படுவர். எதிர்மறை குணம் உள்ளவர்களிடம், சமயோசிதமாக விலகுவீர்கள். இல்லறத்துணை சமூகத்தில், உங்களின் மதிப்பு உயர உதவுவார். தொழில், வியாபாரத்தில் சராசரி இலக்கை அடைய கடின உழைப்பு தேவைப்படும். அரசியல்வாதிகள், சமரசபேச்சு வார்த்தையில் நிதானம் பின்பற்றவும். பெண்கள், குடும்ப நலன் சிறக்க தேவையான பணி மேற்கொள்வர். மாணவர்கள் மன உறுதியுடன் படித்து, சிறந்த தேர்ச்சி விகிதம் பெறுவர்.

சந்திராஷ்டமம்: 19.3.14 இரவு7:40 மணி முதல் 18.3.14 இரவு 3:51 மணி வரை.

 

சிரம சூழ்நிலையை அறிவுத் திறனால் சரி செய்யும், மீன ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு ஆதாய ஸ்தானத்தில் உள்ள, சுக்கிரன் மற்றும் தினகதி சுழற்சி கிரகம் சந்திரன் மட்டுமே நற்பலன் வழங்குகின்றனர். இதனால், ஒவ்வொரு செயலிலும், முன்யோசனை மற்றும் நிதானம் பின்பற்ற வேண்டும். உடல்நலத்தை பேணுவதால் மட்டுமே, பணிகளை, உரிய காலத்தில் நிறைவேற்ற இயலும். உடன்பிறந்தவர் தரும் உதவி, மனதில் நம்பிக்கை தரும். வீடு, வாகனம் பாதுகாப்பில் கூடுதல் கவனம் பின்பற்றவும். புத்திரர் செயல்திறன் வளர்த்து சாதனை புரிவர். எதிரியிடம் விலகுவதால், நேரம், பணம் விரயமாவதை தவிர்க்கலாம். இல்லறத் துணையின் அறிவார்ந்த செயல் குடும்ப பிரச்னைக்கு நல்ல தீர்வை உருவாக்கும். தொழிலில் அளவான மூலதனம், கூடுதல் உழைப்பு என்ற நடைமுறை நன்மை தரும். குடும்ப பெண்கள், சேமிப்பு பணம் சிறு செலவுகளுக்கு பயன்படுத்துவர். மாணவர்கள், ஆசிரியரிடம் நன்மதிப்பு பெறுகிற வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

சந்திராஷ்டமம்: 18.3. 14 இரவு 3:52மணி முதல் 21.3.14 காலை 9.24 மணி வரை.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *