Weekly-Forecast-5சுறுசுறுப்புடன் பணிபுரிந்து மற்றவர் மனம் கவரும் மேஷ ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு ஐந்து, ஆறாம் இட அதிபதிகளான சூரியன், புதன் அனுகூல அமர்வில் உள்ளனர். புதன் வீட்டில் உள்ள ராகுவும், புதன் கிரகம் தரும் நற்பலன்களுக்கு இணையாக தானும் வருவார். இதனால், உங்களின் எதிர்பார்ப்பு இரு மடங்கு அளவில் நிறைவேறும். பணிகளில் ஆர்வம் கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். புதிய வாகனம் வாங்க சிலருக்கு யோகம் உண்டு. புத்திரர் அறிவு, செயல் திறனில் முன்னேற்றம் காண்பர். பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம். இல்லறத் துணையிடம் வாக்குவாதம் தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். குடும்ப பெண்கள், விரும்பிய பொருள் வாங்குவர். மாணவர்கள், ஆசிரியரின் அறிவுரை ஏற்று படிப்பர்.

பரிகாரம்:
முருகப் பெருமானை வழிபடுவதால், செல்வ வளம் அதிகரிக்கும்.

 

பண வரவுக்கு ஏற்ப, குடும்பச் செலவை திட்டமிடும் ரிஷப ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிநாதனும், ஆறாம் இட அதிபதியுமாகிய சுக்கிரன் நீசம் பெற்ற நிலையிலும் அனுகூலமாக உள்ளார்.சனி, கேது கூடுதல் நற்பலன் தருவர். மனதில் இருந்த முரண்பட்ட சிந்தனை விலகும். குடும்பத்தின் எதிர்கால நலன் கருதி செயல்படுவீர்கள். உடன் பிறந்தவர்களின் உதவி உண்டு. வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். புத்திரர், தமது தேவை நிறைவேற தாமதம் ஆவதால் சஞ்சலம் கொள்வர். எதிர்ப்பாளரால் உருவான தொந்தரவு விலகும். இல்லறத் துணை கருத்து ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரம் செழிக்க புதிய வாடிக்கையாளர்களின் வருகை உதவும். பணியாளர் கடமை உணர்ந்து பணிபுரிவர். பெண்கள், குடும்ப நலனுக்காக சில சீர்திருத்தம் மேற்கொள்வர். மாணவர்கள், சாகச விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்: குரு பகவானை வழிபடுவதால், குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும்.

 

நல்லவர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படும் மிதுன ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிநாதனும், சுகஸ்தான அதிபதியுமாகிய புதன், உச்ச பலத்துடன் உள்ளார். குரு, சுக்கிரன், செவ்வாய் கூடுதல் நற்பலன் தருவர்.பேசும் வார்த்தை உண்மை, நேர்மை மிகுந்திருக்கும். இதனால், வெளிவட்டார தொடர்பு அதிகரிக்கும். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். மகளின் ஜாதக யோக பலம், குடும்பத்தில் மங்கல நிகழ்வுகளை உருவாக்கும். மனதில் இருந்த இனம் புரியாத பயம் விலகும். இல்லறத் துணை வழி சார்ந்த உறவினர் உங்களின் அருமை, பெருமை நிறைந்த செயல்களை பாராட்டுவர். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெற, முக்கியஸ்தர்களின் உதவி கிடைக்கும். பணியாளர், சுறுசுறுப்பாக பணிபுரிவீர்கள். பெண்கள், பண வசதிக்கேற்ப புத்தாடை, ஆபரணம் வாங்குவர். மாணவர்கள், பெற்றோரின் அன்பு, பாசம் அதிகம் கிடைத்து, உற்சாகம் கொள்வர்.

பரிகாரம்: காமதேனுவை வழிபடுவதால், புதியவர்களின் அறிமுகம், உதவி கிடைக்கும்.

 

அடுத்தவர் செயல் குறையை, பக்குவமாக உணர்த்தும் கடக ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு தனம், சுகஸ்தான அதிபதிகளாகிய சூரியன், சுக்கிரன் மூன்றாம் இடத்தில் ராகுவுடன் அனுகூலமாக உள்ளனர். உடல் நல ஆரோக்கியம் சிறந்து, மனதில் உற்சாகம் பிறக்கும். புதியவர்களின் அறிமுகம், வாழ்வியல் நடைமுறை உயர்வு பெற உதவும். பசு, பால், பாக்ய யோகம் உண்டாகும். குடும்பத்துடன் புதிய இடங்களுக்கு சுற்றுலா சென்று வர அனுகூலம் ஏற்படும். புத்திரரின் அதிருப்தி மனதை சரி செய்வீர்கள். உடனிருந்து இடையூறு செய்பவரை அறிந்து கொள்வீர்கள். இல்லறத் துணையின் கூடுதல் அன்பு, பாசம் மனம் நெகிழ வைக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் முயற்சி, உழைப்பு தேவைப்படும். பணியாளர், நிர்வாகத்தின் சட்ட திட்டம் தவறாமல் பின்பற்ற வேண்டும். பெண்கள், உறவினர்களிடம் நன்மதிப்பு பெறுவர். மாணவர்கள், படிப்பில் புதிய திட்டமிடுதல் பின்பற்றுவீர்கள்.

சந்திராஷ்டமம்: 5.10.14 அதிகாலை 3:36 மணி முதல் 7.10.14 காலை 6:40 மணி வரை.

பரிகாரம்:
யோக நரசிம்மரை வழிபடுவதால், வாழ்வில் துன்பம் விலகி நன்மை உண்டாகும்.

 

அத்தியாவசிய பணிகளை, தாமதமின்றி நிறைவேற்றும் சிம்ம ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு இரண்டில் நீசம் பெற்ற சுக்கிரன், மூன்றில் உச்சம் பெற்ற சனி அனுகூலமாக உள்ளனர். மனதில், மித மிஞ்சிய தைரியம், செயல் திறன் ஏற்படலாம். இந்த புதிய சக்தியை எதிரியை பதம் பார்க்க முயற்சிக்காமல், எதிர்கால வாழ்வுக்கு பயன்படுத்துவது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் அதிக அன்பு, பாசம் கொள்வர். வாகனத்தில் மித வேதம் பின்பற்றவும், புத்திரரின் சேர்க்கை சகவாசம் அறிந்து, நல்வழி நடத்த வேண்டும். இல்லறத் துணை, உங்களின் இன்ப, துன்பங்களில் முழு மனதுடன் பங்கு பெறுவார். தொழில், வியாபாரத்தில் ஓரளவு வளர்ச்சி ஏற்படும். பணியாளர்களுக்கு கூடுதல் பணி உருவாகும். பெண்கள், குடும்ப நலன் சிறக்க தேவையான பணி மேற்கொள்வீர்கள். மாணவர்கள், படிப்பு தவிர, பிற விவாதம் பேச வேண்டாம்.

சந்திராஷ்டமம்:
7.10.14 காலை 6:41 மணி முதல் 9.10.14 காலை 9:18 மணி வரை.


பரிகாரம்:
வீரபத்திரரை வழிபடுவதால், தொழில் சிறந்து பண வரவு கூடும்.

 

உறவினர்களின் உதவியால், மனதில் உற்சாகம் பெறும் கன்னி ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசியில் சுக்கிரன், மூன்றில் செவ்வாய், பதினொன்றில் குரு அனுகூலமாக உள்ளனர். பணச் செலவில் தாராளம் பின்பற்றுவீர்கள். அறிமுகம் இல்லாதவருக்கு உதவுகிற சூழ்நிலை அமைந்து, சிலரது மனதில் உங்கள் மீது அதிருப்தி உருவாக்கலாம். கவனம் தேவை. உடன் பிறந்தவர்களுக்கான மங்கல பேச்சு வார்த் தை முன்னேற்றம் பெறும். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். புத்திரரின் குளறுபடியான வார்த்தைகளை சரி செய்வீர்கள். பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். இல்லறத் துணை கண்ணும், கருத்துமாக உங்களை கவனித்துக் கொள்வார். தொழிலில் வருகிற இடையூறு விலக, மாற்று உபாயம் உரிய பலன் தரும். பணியாளர்களுக்கு தாமதமான சலுகை கிடைக்கும். பெண்கள், விதவிதமாக உணவு தயாரித்து, குடும்ப உறுப்பினர்களிடம் பாராட்டுப் பெறுவர். மாணவர்கள், ஆன்மிக கருத்துகளில் நம்பிக்கை கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம்: 9.10.14 காலை 9:19 மணி முதல் 11.10.14 பிற்பகல் 2:21 மணி வரை.

பரிகாரம்: தன்வந்திரி பகவானை வழிபடுவதால், உடல் நலம் பலம் பெறும்.

 

உழைப்பும், பணிவும் வாழ்வை உயர்த்தும் என்கிற துலாம் ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசி நாதன் சுக்கிரனும், ஆறாம் இடத்தில் உள்ள கேதுவும், சம சப்தம அமர்வில் அனுகூலமாக உள்ளனர். கூடுதல் பணச் செலவு, மனதில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும். பண வரவுகளை அதிகரிக்க, பணிகளில் ஆர்வம் கொள்வீர்கள். சுயலாபம் கருதி, உங்களை புகழ்ந்து பேசுபவரிடம், இதம் பதமாக விலகுங்கள். வீடு, வாகனத்தில், பாதுகாப்பு முறை தவறாமல் பின்பற்றவும். புத்திரரை கண்டிப்பதில் நிதானம் வேண்டும். இஷ்ட தெய்வ அருள் பலம், எதிர்ப்பு அணுகாமல் பாதுகாக்கும். இல்லறத் துணை கூடுதல் அன்பு பாராட்டுவார். தொழில், வியாபாரம் ஓரளவு வளர்ச்சி பெறும். பணியாளர் சிக்கனம் பின்பற்றுவதால், பணக்கடன் பெறுவதை தவிர்க்கலாம். பெண்கள், தாய் வீட்டு உதவி கிடைத்து மகிழ்வர். மாணவர்கள், நற்குண, நற்செயலால் பாராட்டுப் பெறுவர்.

சந்திராஷ்டமம்: 11.10.14 பிற்பகல் 2:22 மணி முதல் அன்று நாள் முழுவதும்.

பரிகாரம்: சூரிய பகவானை வழிபடுவதால், தந்தை வழி உறவினரிடம் ஒற்றுமை வளரும்.

 

உண்மை, நேர்மை பின்பற்றுபவரை மதிக்கும் விருச்சிக ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு செவ்வாய், சனி, கேது தவிர, மற்ற கிரகங்கள் அனுகூல பலன் தருவர். கடந்த நாட்களில் நடத்திய மங்கல நிகழ்ச்சிகளை எண்ணி மகிழ்வீர்கள். புதிய பணிகள் உருவாகும். எளிதாக நிறைவேற்றுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் உதாசீனம் வேண்டாம். வீடு, வாகனத்தில் சிறு அளவில் பராமரிப்பு தேவைப்படும். புத்திரர் ஞானமும், நல்லறிவும் கூடுதலாக பெறுகிற சூழ்நிலை உருவாகும். எதிர்மறை செயல்களை தகுந்த உபாயத்தினால் சரி செய்வீர்கள். இல்லறத் துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் நடைபோடும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள், குடும்ப நலனில் அதிக அக்கறை கொள்வர். மாணவர்கள், கூடுதல் தேர்ச்சி விகிதம் பெறுவர்.

பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால், நற்செயல்களில் முன்னேற்றம் ஏற்படும்.

 

தன் தகுதி, திறமை உணர்ந்து செயல்படும் தனுசு ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு சூரியன், புதன், சனி பகவானின் நல்லருள் பலமாக உள்ளது. ஆதாய பண வரவு பெற, உரிய வாய்ப்பு வரும். உறவினர்களின் சொல்லுக்கு கூடுதல் மரியாதை தருவீர்கள். புதிய முயற்சியால், தாமதமான செயலை நிறைவேற்றுவீர்கள். வாகனத்தில், மித வேகம் பின்பற்றவும். புத்திரரின் உடல் நலம் பேணுவதில், தகுந்த அக்கறை வேண்டும். அடுத்தவர் விவகாரத்தில் கருத்து சொல்ல வேண்டாம். இல்லறத் துணையின் மனதில் உங்கள் மீதான நம்பிக்கைக்கு குறை வராமல் நடந்து கொள்வது நலம். தொழில் அபிவிருத்திக்கான பண வரவு கிடைக்கும். பணியாளர் கடமை உணர்ந்து பணிபுரிவர். பெண்கள், நகை பாதுகாப்பில் உரிய கவனம் வேண்டும். மாணவர்கள், வெளியிடம் சுற்றுவதை தவிர்க்கவும்.

பரிகாரம்:
சிவ பெருமானை வழிபடுவதால், தொழில் சார்ந்த இடையூறு விலகும்.

 

பொறுமை குணத்தால், சமூகத்தில் நன்மதிப்பு பெறும் மகர ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு கேது, குரு, செவ்வாய், சுக்கிரன் அனுகூல பலன் தருவர். ஆன்மிக நம்பிக்கை வளரும். குடும்பத்தின் எதிர்கால நலனுக்கு உகந்த பணி புரிவீர்கள். வெளியூர் பயணம், நன்மை பெற்றுத் தரும். பூர்வ சொத்தில், உபரி பண வரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். எதிரியின் மனதில் உங்களைப் பற்றி, நல்ல மதிப்பீடு உருவாகும். இல்லறத் துணையின் ஆலோசனை முக்கியமான நன்மை தரும். தொழிலில் உள்ள அனுகூலத்தை பாதுகாப்பீர்கள். பணியாளர், உரிய காலத்தில் இலக்கை நிறைவேற்றுவீர்கள். குடும்ப பெண்கள், மகிழ்ச்சிகர வாழ்வு பெறுவர். மாணவர்கள் படிப்பில் சிறப்பிடம் அடைவர்.

பரிகாரம்:
கிருஷ்ணரை வழிபடுவதால், வாழ்வில் சகல நன்மையும் கிடைக்கும்.

 

சமயோஜிதமாக செயல்பட்டு, உரிய நன்மை பெறும் கும்ப ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு, உச்சம் பெற்ற புதன் மற்றும் நீசம் பெற்ற சுக்கிரன், நற்பலன் தருவர். மற்ற கிரகங்கள் எதிர்மறை பலன் தருவர். ஆடம்பர செயல் தவிர்ப்பதால், சிரமம் அணுகாமல், மன அமைதியை பாதுகாக்கலாம். உடன் பிறந்தவர்களிடம், சிறு அளவில் மனஸ்தாபம் ஏற்படலாம். வாகன பயன்பாடு சராசரி அளவில் இருக்கும். புத்திரர், உங்கள் சொல் கேட்டு நடந்து கொள்வர். உடல் நல ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை பின்பற்ற வேண்டும். இல்லறத் துணை உங்களின் கஷ்ட சூழ்நிலை விலக உதவுவார். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம், கூடுதல் உழைப்பு நல்லது. பணியாளர், பாதுகாப்பு நடைமுறை தவறாமல் பின்பற்ற வேண்டும். பெண்கள், வீட்டு அலங்காரப் பொருள் வாங்குவர். மாணவர்கள், நன்றாகப் படித்து பாராட்டு, வெகுமதி பெறுவர்.

பரிகாரம்:
மாரியம்மனை வழிபடுவதால், புதிய பணி நிறைவேற்ற ஆர்வம் வளரும்.

 

பொது விவகாரங்களில் விலகுதல் மனப்பாங்கு உள்ள மீன ராசிக்காரர்களே!

இந்த வாரம், உங்கள் ராசிக்கு, ஐந்தில் உச்சம் பெற்ற குரு மற்றும் தினகதி சுழற்சி கிரகம் சந்திரன் மட்டுமே நற்பலன் தருவர்.இதனால், செயல்களில் முன்யோசனை அவசியமாகும். பண வரவை விட செலவு அதிகரிக்கலாம். பொது இடங்களில் எவருடனும் அதிக நேரம் பேசுவதை தவிர்க்கவும். அறிமுகம் இல்லாதவர்களுக்கு வீடு, வாகனத்தில் இடம் தர வேண்டாம். புத்திரர், திறமையை வளர்த்து, பெற்றோருக்கு பெருமை தேடித்தருவார். இல்லறத் துணையின் உடல் நலத்திற்கு, மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். தொழில், வியாபாரத்தில் சில நன்மை கிடைக்கும். பணியாளர், தொழில்நுட்ப அறிவு வளர்த்துக் கொள்வர். பெண்கள், நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். மாணவர்கள் படிப்பு தவிர, பிற விஷயங்களை பேசக்கூடாது.

பரிகாரம்:
சாஸ்தாவை வழிபடுவதால், செயல்களில் வெற்றி முழுமையாக கிடைக்கும்.

 

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *