shadow

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

weekly raasipalanதீவிர சிந்தனைகளிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத நல்ல நிகழ்ச்சி கைகூடும். சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். அனைத்துச் செயல்களும் வெற்றி பெறும். ஆன்மிக தெய்வக் காரியங்களிலும் ஈடுபாடு அதிகரிக்கும். தெரிந்த தொழிலை நண்பர்களுடன் சேர்ந்து தொடங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அதிகம் உழைத்து இரட்டிப்பு லாபத்தை அள்ளுவர். சக ஊழியர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரிகளுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். போட்டிகளை நன்கு சமாளித்து பொருள்களை சந்தையில் விற்பனை செய்வர். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். மேலும் புதிய குத்தகைகளைப் பெறுவர். கால்நடைகளின் மூலம் வருமானத்தைக் காண்பர்.

அரசியல்வாதிகள் கட்சியில் நல்ல பெயரை எடுப்பர். புதிய பதவிகளும் கிடைக்கும். கலைத்துறையினர் கடுமையாக உழைத்து நற்பலனை அடைவார்கள். பெண்மணிகள் ஆடை அணிமணிகளை வாங்கி மகிழ்வார்கள். மாணவமணிகள் தற்சமயம் செய்யும் சிறிய முயற்சிகளுக்கு எதிர்காலத்தில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

பரிகாரம்: துர்க்கை வழிபாடு உகந்தது.

அனுகூலமான தினங்கள்: 25,26.

சந்திராஷ்டமம்: இல்லை

ரிஷபம்(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

அரசாங்கத்திலிருந்து சலுகைகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகாது. பொருளாதாரம் வலுவாக இருக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு பயணப்படுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பதால் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகள் சற்று கடுமையுடன் நடந்துகொள்வர். வியாபாரிகள் சுறுசுறுப்புடன் செயல்படுவதுடன் கடன்களையும் அடைப்பர். புதிய முதலீடுகளில் இறங்கி, தொழிலை விரிவுபடுத்துவர். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். நீர்வரத்து அதிகமாக இருப்பதால் புதிய குத்தகைகள் மூலம் வருமானம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் தங்கள் முயற்சிக்கு ஏற்ற பொறுப்புகளைப் பெறுவர். நண்பர்களால் வாழ்க்கையில் திருப்பங்களும் ஏற்படும். கலைத்துறையினருக்கு புகழும் நற்பெயரும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைச் செய்வர். பெண்மணிகள் கணவரை அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகள் கல்வியில் முன்னேற கடுமையாக உழைக்கவும்.

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 25,27.

சந்திராஷ்டமம்: இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

புதிய வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். பொருளாதார வளம் மேம்படும். சுயதொழில் செய்ய வாய்ப்புண்டாகும். சமுதாயத்தில் பெரியோர்களின் ஆதரவு, ஆசி இரண்டும் கிடைக்கும். அரசு அதிகாரிகளால் உதவி கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் அனைத்தும் சுமுகமாகவே முடியும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றமும் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகள் புதிய யுக்திகளை புகுத்தி வருமானத்தைப் பெருக்குவர். போட்டி பொறாமைகள் சற்று கூடுதலாக இருப்பதால் அனைத்திலும் கவனம் தேவை. விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபமுண்டு. கால்நடைகளால் நல்ல வருமானத்தைப் பெறுவர்.

அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் அதிகரிக்கும். உட்கட்சிப்பூசலால் மனம் வருந்த நேரிடும். கலைத்துறையினர் பல தடைகளைத்தாண்டி புதிய ஒப்பந்தங்கள் செய்வார்கள். பெண்மணிகள் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பர். அனைவரும் உங்களுக்கு நட்புக்கரம் நீட்டுவர். மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.

பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்து ஆத்மஒளி பெறுங்கள்.

அனுகூலமான தினங்கள்: 26,27.

சந்திராஷ்டமம்: இல்லை.

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உங்கள் ஆற்றல் பளிச்சிடும். குடும்பத்தில் பிரிந்தவர்கள் கூடுவர். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களிலிருந்து வருமானம் வரும். உடன்பிறந்தோரால் நன்மைகள் உண்டாகும். எதிரிகள் மறைவர். போட்டிகளிலும் வெற்றி பெறுவீர்கள். சுபநிகழ்ச்சிகள் நடத்த முயற்சி எடுப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் பதற்றப்படாமல் அலுவலக வேலைகளை அமைதியாகச் செய்வர். சக ஊழியர்களும் உதவிகரமாக இருப்பர். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சீராக முடியும். புதிய முதலீடுகள் செய்வீர்கள். விவசாயிகள் சலிப்பில்லாமல் உழைத்தால் பலன்களைப் பெறலாம். புதிய குத்தகை முயற்சிகளில் இறங்க வேண்டாம்.

அரசியல்வாதிகள் கவனமாகச் செயல்படவும். மக்களுக்கான உண்மையான போராட்டங்களில் மட்டும் ஈடுபடவும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களே புதிய வாய்ப்புகளைத் தேடித் தருவர். செலவு செய்யும்போது கவனம் தேவை. பெண்மணிகளைத் தேடி மகிழ்ச்சியான செய்திகள் வரும். சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வர். மாணவமணிகள் படிப்பில் போதிய கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வணங்கவும்.

அனுகூலமான தினங்கள்: 26,28.

சந்திராஷ்டமம்: இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

உயர்ந்த பொறுப்புகளும் பதவிகளும் உங்களைத் தேடிவரும். தொலைதூரத்திலிருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வரும். தோற்றத்தில் பொலிவு கூடும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.

வேலைகளை பொறுப்புடனும் நிதானத்துடனும் செய்து நற்பெயரெடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை கூடும். உங்கள் வேலைகளை சக ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.

பணவரவுக்கு ஒன்றும் குறைவு வராது. வியாபாரிகளுக்குத் தேவையான பணப்புழக்கம் இருந்து கொண்டிருக்கும். புதிய முதலீடுகளில் ஈடுபட வேண்டாம். விவசாயிகளுக்கு மகசூலில் பாதிப்பு உண்டாகும். பூச்சிகளால் பாதிப்புண்டு.

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். கடந்த காலத்தில் ஒதுக்கி வைத்திருந்த திட்டங்களைச் செயல்படுத்த முனைவர். கலைத்துறையினரின் திறமைகளை மற்றவர் பாராட்டுவர். அவர்கள் செய்யும் ஒப்பந்தங்களும் லாபகரமாகவே இருக்கும். பெண்மணிகள் கணவரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். மாணவமணிகள் கல்வியில் முன்கூட்டியே அக்கறை காட்டினால் எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளலாம்.

பரிகாரம்: அனுமனை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 27,28.

சந்திராஷ்டமம்: இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பயணங்களால் நன்மை உண்டாகும். வருமானம் உயரத்தொடங்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடத்த அச்சாரமிடுவீர்கள். செய்தொழிலை வெளியூர், வெளிநாடுகளுக்கும் விரிவுபடுத்துவீர்கள். நண்பர்களை நம்பி ரகசியங்களைக் கூற வேண்டாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்களிடமிருந்த அவநம்பிக்கைகள் அகலும். வியாபாரிகளுக்கு புதிய மாற்றம் தென்படும். வரவேண்டிய பணம் வசூலாகும். பழைய கடன்களையும் திருப்பிச் செலுத்துவர். விவசாயிகள் இந்த வாரம் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். கொள்முதலில் அதிக லாபமும் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் செய்யும் செயல்களில் வெற்றி பெறுவர். பெயர், புகழ், உயரும். கவனமுடன் செயலாற்றி கட்சி மேலிடத்தின் பாராட்டைப் பெறுவர். கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும்.

தொழிலில் நீண்ட நாள்களாக நிலவி வந்த போட்டிபொறாமைகள் விலகும். பெண்மணிகள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பர். கணவரிடம் பாசத்தோடு பழகுவர். மாணவமணிகள் வருங்காலத்திற்குச் செய்யும் பயிற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும்.

பரிகாரம்: பெருமாள் வழிபாடு உகந்தது.

அனுகூலமான தினங்கள்: 25,29.

சந்திராஷ்டமம்: இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் குதூகலம் பூத்துக்குலுங்கும். கவலைகள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். உங்கள் உழைப்பு திறமை வீண் போகாது. வருமானம் இரட்டிப்பாகும். குழந்தைகள் சொல் கேட்டு நடப்பர். உறுதியான எண்ணங்களுடன் பெரிய வெற்றிகளைப் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்குத்தகுந்த ஊதிய உயர்வு கிடைக்கும். தற்போது நிலவும் சூழ்நிலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். புதிய முதலீடுகள் செய்வதை மறுபரிசீலனை செய்யவும். விவசாயிகள் போட்டிகளை நன்கு சாதுர்யத்துடன் சமாளித்து வெற்றியடைவர். உங்கள் பொருள்களுக்கு சந்தையில் மதிப்பு கூடும்.

அரசியல்வாதிகளின் பதவிக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். தொண்டர்களை அனுசரித்துச் செல்லவும். கலைத்துறையினருக்கு புகழும் பாராட்டும் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். பெண்மணிகள் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வர். மாணவமணிகள் உடலாரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். படிப்பில் போதிய அக்கறை காட்டவும்.

பரிகாரம்: முருகப்பெருமானை மனமுருக ஆராதித்து வரவும்.

அனுகூலமான தினங்கள்: 27,29.

சந்திராஷ்டமம்: இல்லை

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பொதுநலனுக்காகச் சேவை செய்வீர்கள். நினைத்த வேலைகள் அனைத்தும் எந்த இடையூறுமின்றி முடிவடையும். குழந்தைகளுக்குச் சிறிது செலவு செய்ய வேண்டி வரும். புதியவர்களிடம் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. எவருக்கும் முன்ஜாமீன் போட வேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள் விட்டுக் கொடுத்து செயலாற்றுவர். மேலதிகாரிகளின் மனஸ்தாபத்திற்கு ஆளாகாமல் நடந்து கொள்ளவும். வியாபாரிகளுக்கு பணவரவு சீராக இருக்கும். தேவைக்கு ஏற்ற சரக்குகளை வாங்கி விற்பனை செய்வர். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். விவசாயிகள் அமோகமான விற்பனையை காண்பார்கள். கால்நடைகளால் பலனுண்டு.

அரசியல்வாதிகள் கட்சியில் மாற்றங்களைக் கொண்டுவர நினைக்க வேண்டாம். கட்சி மேலிடத்தில் நற்பெயரெடுக்கவும். கலைத்துறையினர் எதிர்வரும் இடையூறுகளை மிக்க சாதுர்யத்துடன் சமாளிப்பர்.

பெண்மணிகள் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தவும். நீங்கள் செய்யும் வீண் யோசனைகள் உங்கள் வலிமையை குறைக்கும். மாணவமணிகள் கல்வியில் அக்கறை காட்டினால் எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளலாம்.

பரிகாரம்: மஹாலட்சுமியை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 28,29.

சந்திராஷ்டமம்: 25,26.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

செயற்கரிய செயல்களைச் செய்து மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். முக்கியமான எண்ணம் ஒன்று நிறைவேறும். தர்மகாரியங்களில் ஈடுபடுவீர்கள். சமுதாயத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடும். மேலதிகாரிகளின் தொல்லைகளுக்கு ஆளாவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். வியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வர். இருப்பினும் மறதியினால் லாபம் குறையும். விவசாயிகளுக்கு மகசூல் சுமாராகவே இருக்கும். ஆகையால் மாற்றுப் பயிர்களை உற்பத்திச் செய்து பலன் பெறலாம்.

அரசியல்வாதிகளைத்தேடி புதிய பொறுப்புகள் வரும். அதைத் தக்கவைத்துக் கொள்ள அரும்பாடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். பாராட்டும் பணமும் ஒருங்கே கிடைக்கும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். மாணவமணிகள் விளையாட்டைக் குறைத்துக் கொண்டு கல்வியில் நாட்டம் செலுத்தவும்.

பரிகாரம்: நந்திகேஸ்வரரை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 25,30.

சந்திராஷ்டமம்: 27,28,29.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

வருமானம் படிப்படியாக உயரும். இல்லத்தில் உள்ளவர்களிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். போட்டிகள் குறையுமென்றாலும் தீயோர் சேர்க்கையைத் தவிர்க்கவும். உடன்பிறந்தோருக்கும் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். பூர்வீகச் சொத்துக்களிலிருந்த வில்லங்கங்கள் மறையும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வர். அலுவலக ரீதியான பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் லாபகரமாக இருக்கும். பழைய கடன்கள் வசூலாகும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். ஓய்வின்றி உழைக்க வேண்டியிருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு அந்தஸ்து உயரும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். முக்கிய பயணங்களைச் செய்ய நேரிடும். கலைத்துறையினர் கடுமையாக உழைத்து நற்பலனை அடைவர். நழுவிப்போன ஒப்பந்தங்கள் திரும்ப வரும். பெண்மணிகள் தம் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பர். மாணவமணிகள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவர். கடின பயிற்சிகள் மேற்கொண்டு பெரிய சாதனைகளுக்கு அடித்தளம் போடுவர்.

பரிகாரம்: ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 27,28.

சந்திராஷ்டமம்: 30,31.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பொறுமையுடனும் நிதானத்துடனும் நடந்து கொள்வீர்கள். காரியங்கள் வெற்றியுடன் முடிவடையும். புதிய முயற்சிகளை நன்கு யோசித்த பிறகே செயல்படுத்தவும். வெளியில் கொடுத்திருந்த கடன்களும் வசூலாகும். வழக்குகளிலும் சாதகமான தீர்ப்பு வரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகச் சூழல் சாதகமாகவே இருக்கும். துணிந்து காரியமாற்றி நற்பெயரை எடுப்பீர்கள். வியாபாரிகளுக்கு எல்லா தடைகளும் நீங்கும். லாபம் பெருகும். நண்பர்களின் ஒத்துழைப்புடன் முயற்சிகள் வெற்றி பெறும். விவசாயிகள் வயல் வரப்புச் சண்டைகளில் முடிவைக் காண்பர். நீர்வரத்து அதிகமாக இருப்பதால் உற்பத்தி நன்றாக இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் செல்வாக்கு உயரும். தொண்டர்களின் ஆதரவும் இருக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களில் நல்ல வருமானம் கிடைக்கும். சக கலைஞர்களின் உதவி கிடைக்கும். பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பர். மாணவமணிகள் வீண் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம். விளையாட்டுகளின்போது காயம் ஏற்படாமல் கவனமாக இருக்கவும்.

பரிகாரம்: பைரவரை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 26,30.

சந்திராஷ்டமம்: இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். உடலாரோக்கியம் சிறப்பாக இருக்கும். அக்கம்பக்கத்தாருடன் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். துணிந்து செய்யும் வேலைகளில் வெற்றி பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த வாரம் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மேலதிகாரிகள் அனுகூலமாகவே நடந்து கொள்வர். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்ற நிலை தென்படும். கடைகளுக்குப் பராமரிப்புச் செலவுகள் கூடும். விவசாயிகள் நீர்பாசன வசதிகளுக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கும். கால்நடைகளால் அனுகூலமும் வருமானமும் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் தங்கள் வேலைகளை ஒழுங்காகச் செய்யவும். புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த ஒப்பந்தங்களைச் செய்வர். பணவரவுக்கு குறைவில்லை.

பெண்மணிகளுக்கு கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். மாணவமணிகள் படிப்பில் மேலும் ஆர்வம் செலுத்தவும்.

பரிகாரம்: சனிபகவானை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 30,31.

சந்திராஷ்டமம்: இல்லை

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *