shadow

அஜித்துக்கு வியாழக்கிழமை, முருகதாசுக்கு புதன்கிழமையா?

தல அஜித் மற்றும் இயக்குனர் சிவா ஆகிய இருவருமே சாய்பாபா பக்தர்கள் என்பதால் ‘விவேகம்’ படத்தின் ஒவ்வொரு செய்தியும் வியாழக்கிழமை மட்டுமே வெளியாகவுள்ளதை பார்த்து வருகிறோம். மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியான ஆகஸ்ட் 10ஆம் தேதியும் வியாழக்கிழமை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது இயக்கி முடித்துள்ள ‘ஸ்பைடர்’ படத்தின் சிங்கிள் பாடல் வரும் புதன்கிழமை வெளிவரவுள்ளது. அதுமட்டுமின்றி இனிவரும் ஒவ்வொரு புதன்கிழமையும் மகேஷ்பாபுவின் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க இயக்குனர் முருகதாஸ் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அஜித்துக்கு வியாழக்கிழமை செண்டிமெண்ட் போல் முருகதாசுக்கு புதன்கிழமை செண்டிமெண்ட் என்று கூறப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் முதன்முதலாக மகேஷ்பாபு நடித்திருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரித்திசிங் நடித்துள்ளார். மேலும் முதல்முறையாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் வில்லனாகவும் தோன்றுகிறார். மேலும் இந்த படத்தில் பரத், ஆர்ஜே பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *