shadow

மாட்டிறைச்சி சட்டத்திற்கு எதிர்ப்பு: கேரள, புதுவை முதல்வர்களுடன் இணைந்த மம்தா பானர்ஜி

மத்திய அரசு கொண்டு வந்த மாட்டிறைச்சி தடை சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் உறுதியாக கூறிவிட்ட நிலையில் தற்போது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ‘மத்திய அரசின் மாட்டிறைச்சித் தடையை எங்களால் ஏற்க முடியாது. இந்த உத்தரவை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம். இந்த உத்தரவு ஜனநாயகத்துக்கு எதிரானது. நியாயமற்றது. மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் செயல். ரம்ஜான் மாதத்தின் துவக்கத்தில் ஏன் இப்படி ஒரு உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். ஒருவரின் உணவில் தலையிடும் உரிமை அரசுக்குக் கிடையாது’ என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

ஏற்கனவே தென்னிந்தியா முழுவதிலும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் தற்போது வட இந்தியாவிலும் எதிர்ப்புகள் கிளம்பிவிட்டதால் கூடிய விரைவில் இந்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ் வாங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply