shadow

“மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் டாஸ்மாக் கடை திறக்க மாட்டோம்”: தமிழக அரசு உறுதி..!

கடந்த சில வாரங்களாகவே டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் வலுத்து வருகிறது. பெண்கள் உள்பட பொதுமக்கள் டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கும் சம்பவம் தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்து வருகிறது. குறிப்பாக சில வாரங்களுக்கு முன்னர் தேசிய நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகளை நடத்தக் கூடாது என்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியதை அடுத்து பொதுமக்களிடம் அதிக விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நேரில் ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், இனி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க மாட்டோம் என தமிழக அரசின் சார்பின் உறுதி அளித்தார்.

தமிழகத்தில் மது விலக்கிற்கு எதிரான போரட்டத்திற்கு கிடைத்த முக்கிய திருப்புமுனையாக, தமிழக அரசின் இந்த வாதம் கருதப்படுகிறது

Leave a Reply