shadow

மோடி இல்லா பாரதத்தை’ உருவாக்குவோம்: ராஜ் தாக்கரே

கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலின்போது இந்தியா முழுவதற்கும் ஹீரோவாக தெரிந்த பிரதமர் மோடி, நான்கே ஆண்டுகளில் பல்வேறு எதிர்ப்புகளை பெற்றுவிட்டார். அவரது கூட்டணி கட்சியினர்களை அவரை எதிர்க்க தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் மோடி இல்லா பாரதத்தை’ உருவாக்குவோம் என மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சியின் ராஜ் தாக்கரே அழைப்பு விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை சிவாஜி பூங்காவில் பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே “நாம் இன்று மூன்றாவது சுதந்திரத்தை நோக்கி போராட வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என 2019 மக்களவைத் தேர்தலை சுட்டிக்காட்டிப் பேசிய அவர், மோடி இல்லா பாரதத்தை உருவாக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும், என்றார்.

தேசம் தழுவிய அளவில் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட சில அமைப்புகள் முயன்றுவருகின்றன என்ற எச்சரிக்கையைய இந்த மேடையில் பதிவு செய்ய நான் விரும்புகிறேன் என்றும் அவர் கூறினார்.

உத்தரப் பிரதேசத்தில் பூல்பூர், கோரக்பூர் இடைத்தேர்தலில் நடந்த தேர்தலில் பாஜக படுதோல்வியடைந்ததற்குப் பின்னர் பாஜகவுக்கு எதிராக ஓரணி என்ற முழுக்கம் வலுத்துவருகிறது” என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply