shadow

7அடுத்த சூப்பர் ஸ்டார்?’ என்ற தலைப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில், நடிகர் விஜய் வெற்றி பெற்றதாக குமுதம் தமிழ் வார இதழ் கடந்த வாரம் அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து பல சர்ச்சைகள் சமூக வலைத்தளத்தில் ஆரம்பித்தது.   ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட வலைத்தளங்களில் நடிகர் விஜய், நடிகர் அஜித் ரசிகர்கள் கடுமையாக ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.

இந்நிலையில் ஷாலினி அஜித் என்ற பெயரில், அஜித்தின் மனைவியும் நடிகையுமான முன்னாள் நடிகையுமான ஷாலினியின் புகைப்படத்தை புரொஃபைல் படமாக கொண்ட ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு நீண்ட விளக்கம் வெளியானது. அந்த விளக்கத்தில் “அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பது குறித்து வார இதழ் ஒன்று வாக்கெடுப்பு நடத்தியது. அதன்படி, மற்றொரு நடிகர் வெற்றி பெற்று இருக்கிறார். அஜித் எப்போதுமே முதல் ‘தல’தான். அவருக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் தேவையில்லை. அந்த வாக்கெடுப்பினைப் பற்றி அஜித் ரசிகர்கள் யாரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம். நமக்கு நிறைய வேலைகள் இருக்கிறது மேலும் ஒருசில விளக்கங்களை கொடுத்து ஒரு நீண்ட பதிவு பதிவாகி உள்ளது.

இந்த பதிவு உண்மையிலேயே ஷாலினி அஜித் வெளியிட்டதா? அல்லது ஷாலினியின் பெயரை பயன்படுத்தி வேறு யாரும் வெளியிட்டார்களா? என்று தெரியாமல் அந்த விளக்கத்திற்கு ஏராளமான ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் அஜித் மற்றும் ஷாலினி தரப்பினர் இந்தப் பதிவு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். ஃபேஸ்புக்கில் ஷாலினி அஜீத்துக்கு அக்கவுண்டே இல்லை என்று அஜீத் தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டிருந்தபோதும், விஜய்க்கு சரியான பதிலடி கொடுக்க ஷாலினி புதிதாக அக்கவுண்ட்டை ஆரம்பித்திருக்கலாம் என்றும் அஜீத் ரசிகர்கள் நம்பி வருகின்றனர். இந்த அக்கவுண்ட் போலியானதா அல்லது ஷாலினியின் உண்மையான அக்கவுண்டா என்பதை ஷாலினி அல்லது அஜித் விளக்கம் அளிக்க வேண்டும் என அஜீத் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply