shadow

kachatheevuமீனவர் பாதுகாப்பு அமைப்பு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடந்த வழக்கில் கருத்து கூறிய நீதிபதி, ‘கச்சத்தீவு விவகாரத்தில் நீதிமன்றம் நேரடியாக தலையிட முடியாது என்றும், இது இருநாடுகளும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய விஷயம் என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.

இந்தியா, மற்றும் இலங்கைக்கு இடையேயுள்ள கச்சத்தீவு பகுதியில் இந்திய மீனவர்களுக்குரிய மீன்பிடிக்கும் உரிமை பற்றி விளக்கம் அளிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீனவர் பாதுகாப்பு அமைப்பு சார்பில் பீட்டர் ராயன் என்பவர் சமீபத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு வழக்கறிஞர், கச்சத்தீவு பகுத்யில் மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமை இல்லை என்று கூறியிருந்தார்., இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இதுகுறித்து கருத்து கூறிய உயர்நீதிமன்ற நீதிபதி, “கச்சத்தீவு விவகாரம் இரு நாடுகளுக்கு இடையே பேசி தீர்க்க வேண்டிய பிரச்னை என்றும்,  இந்த விவகாரத்தில் நீதிமன்றம் நேரடியாக தலையிட முடியாது என்றும் கருத்து தெரிவித்தார். மேலும் இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல், மற்றும் கைது நடவடிக்கை குறித்து பேச்சு மூலம் இருநாடுகளும் சுமூக தீர்வு காண வேண்டும் என்று கூறி வழக்கு முடிக்கப்பட்டதாக அவர் அறிவித்தார்.

Leave a Reply