shadow

jawarullahதேமுதிக தலைவர் விஜயகாந்த் நம்பிக்கைக்குரியவராக இல்லை என்றும் அதனால் அவர் கட்சியுடன் இனிமேல் எவ்வித கூட்டணியும் தங்கள் கட்சி வைத்துக் கொள்ளாது என்றும்  மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பிரபல பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ஜவாஹிருல்லா, “தேமுக தலைவர் விஜயகாந்த் நம்பிக்கைக் குரியவராக இல்லை. கடந்த முறை எங்களது பொதுச் செயலாளர் அன்சாரி கோலாலம்பூர் வரை சென்று விஜயகாந்திடம் பேசினார். ஆனால் அவர் எங்களிடம் பேசியது ஒன்றாகவும் அதன் பிறகு வெளியில் பேசியது வேறொன்றாகவும் இருந்தது. அவர் என்ன பேசுகிறார் என்று மக்களுக்கும் புரியவில்லை; அவருக்கும் தெரியவில்லை. அவரை யார் ஆட்டுவிக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. எனவே, கூட்டணி குறித்து அவரோடு பேசும் சிந்தனை எங்களுக்கு இல்லை’ என்று கூறினார்.

மேலும் திமுக மற்றும் அதிமுக குறித்து கருத்து கூறிய அவர், “கருணாநிதியும் ஜெயலலிதாவும் சிறுபான்மையினர் நலனுக்கான திட்டங்களை தந்திருப்பதை நாங்கள் மறுக்கவில்லை. எனினும் நாங் கள் இந்திய அரசியல் சாசனத்தை தான் முழுமையாக நம்புகிறோம். இந்தியா மதச்சார்பற்ற நாடு. சிறுபான்மையினருக்கு எல்லா உரிமைகளையும் கொடுக்க வேண்டும் என்கிறது நமது அரசியல் சாசனம். கருணாநிதியும் ஜெயலலிதாவும் சிறுபான்மையினருக்கு செய்தவை அனைத்துமே அரசியல மைப்புக்கு உட்பட்டுத்தானே தவிர அரசியலமைப்புக்கு விரோதமாக அல்ல” என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply