shadow

திராவிடம் என்பது தீய அரசியலின் தொடக்கம்: சீமான்

தமிழகத்தை தமிழர் மட்டுமே ஆள வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியின் சீமான் பல பொதுக்கூட்ட மேடைகளில் முழங்கி வருகிறார். ஆனால் அவருடைய கருத்தை யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.

கடந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும், ஆர்.கே.நகர் தேர்தலிலும் அவரும் அவருடைய கட்சி வேட்பாளர்களும் டெபாசிட் இழந்ததில் இருந்தே அவரை தமிழக மக்கள் நம்ப தயாராக இல்லை என்பது புரிய வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை கமல்ஹாசனை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ‘கமல்ஹாசன் திராவிட அரசியலை பின்பற்றினால் அவருடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக இல்லை. திராவிட அரசியல் என்பது தீய அரசியலின் தொடக்கம் என்ற கருதுபவன் நான்’ என்று கூறினார்.

Leave a Reply