shadow

மோடியுடன் நல்ல உறவு உள்ளது. ஸ்டாலின் அறிவிப்பால் காங்கிரஸ் அதிர்ச்சி

02stalin1திமுக கூட்டணியில் காங்கிரஸ் பிரதான கட்சியாக இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் பரம எதிரியான பிரதமர் மோடியுடன் திமுக நல்ல உறவுடன் உள்ளது என்று மு.க.ஸ்டாலின் இன்று அளித்துள்ள பேட்டியால் காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

காங்கிரஸ் கட்சி மிகக்குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளை பெற்று திமுக கூட்டணியில் இணைய சம்மதம் தெரிவித்ததற்கு முக்கிய காரணம் இதே கூட்டணி வரும் 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் தொடர வேண்டும் என்பதால்தான். ஆனால் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மோடியுடன் திமுக நல்ல உறவில் இருக்கின்றது என்று கூறியுள்ளார். மு.க.ஸ்டாலினின் இந்த பதிலால் காங்கிரஸ் தலைமை அதிருப்தி அடைந்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் மு.க.ஸ்டானின் தனது பேட்டியில் ‘கடந்த காலங்களில் நாங்கள் தவறு செய்தது உண்மைதான்.ஆனால் அதே தவறுகள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வது எங்களுடைய பொறுப்பு என்று கூறியுள்ளார்.

Leave a Reply