shadow

மூட்டையை கட்டிக் கொண்டு தமிழ்நாட்டிற்கு ஓடு. தமிழர்களுக்கு வாட்டார் நாகராஜ மிரட்டல்

cauvery-protestகாவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதில் இருந்தே கர்நாடகத்தில் தமிழகர்களுக்கு எதிரான தாக்குதல் தொடங்கிவிட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் எரிப்பது முதல் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல் உள்பட பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் கன்னட சவுவளி கட்சியின் தலைவர் வாட்டார் நாகராஜன், ‘‘எங்களுடைய போராட்டத்திற்கு கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் கலந்து கொள்ளவில்லை என்றால் மூட்டையை கட்டிக் கொண்டு தமிழ்நாட்டிற்கு ஓடு’ என்று கூறி பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளார். மேலும் எல்லாவற்றுக்கும் மேலாக வாட்ஸ் அப், சமூக வலைதளங்களில் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் பேசுவது அதிகரித்து வருவதால் கர்நாடகத்தில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

வாட்டார் நாகராஜனின் மிரட்டலை தொடர்ந்து இன்று நடைபெற்று வரும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு பெங்களூரு தமிழ்ச் சங்கம், கர்நாடக தமிழ் கூட்டமைப்பு, அனைத்து இந்திய தமிழ் சங்க கூட்டமைப்பு ஆகியன ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளன. தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 54 தமிழ் சேனல்களின் சேவை முடக்கப்பட்டுள்ளது. கர்நாடகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ் திரைப்படங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழர்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்து கொண்டிருப்பதை அடுத்து கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா நேற்று இரவு அனைத்து கன்னட அமைப்பின் தலைவர்களையும் அழைத்து, ‘‘நாம் போராடுவது நம்முடைய உரிமை. அதில் யாரும் தலையிட வில்லை. ஆனால் சிறுபான்மை சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தினீர்கள் என்றால் அது தேசிய பிரச்னையாக மாறக்கூடும். நமக்கு பாதகமாகவே அமைந்து விடும். தவறான திட்டம் ஏதாவது வகுத்து வைத்திருந்தாலும் அதை கைவிட்டு நேர்மையான வழியில் போராடுங்கள்… போராடுவோம். ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்” என்று வலியுறுத்தியதை அடுத்து தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டை சேர்ந்த பெங்களூரு துணை கமிஷனர் ஹரிசேகரன் தமிழர்கள் பாதுக்காக்கப்பட்டதற்கு முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுத படை போலீஸாரை தமிழர் பகுதிகளில் குவித்திருக்கிறார்கள்.

Leave a Reply