ஒரு குடம் தண்ணீர் எடுக்க உயிரையே பணயம் வைக்கும் கிராமத்து மக்கள்

நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டைவிட்டு பொதுமக்கள் வெளியே வர வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தேவகான் என்ற கிராமத்தைச் சேர்ந்த பொது மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அல்லல்பட்டு வருகின்றனர். இவர்கள் அந்த பகுதியில் இருக்கும் ஒரே ஒரு கிணற்றில் தான் தண்ணீர் எடுத்து தங்களுடைய தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்

அந்த கிணற்றிலும் அதிக கூட்டம் இருப்பதால் சமூக விலகலை கடைபிடிக்கும் வாய்ப்பு இல்லாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்கின்றனர். தண்ணீர் பிடிக்க வருபவர்களில் ஒரே ஒரு ஒருவருக்கு கொரோனா இருந்தாலும் கூட அந்த கிராமத்திற்கே பரவும் அபாயம் இருப்பதால் அரசு தங்களுக்கு இதுகுறித்து மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் மகாராஷ்டிர அரசும் மத்திய அரசும் இது குறித்து ஏதாவது செய்யுமா? என்பதே இருந்து பார்ப்போம்

Leave a Reply