shadow

opener 4கண் எரிச்சல் இல்லாமல் வெங்காயம் நறுக்குவது எவ்வாறு, முட்டையை மிக எளிதாக வேகவைப்பது எப்படி என்பது போன்ற எளிய முறைகளை யூடியூப் வீடியோவாக சமீபத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘ரைஸ் மோர்கன்’ என்பவர் தற்போது பீர் பாட்டில்களை A4 பேப்பர் மூலம் ஒப்பன் செய்வது எப்படி? என்ற எளியை முறையை வீடியோ வடிவில் யூடியூப் இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியான ஒருசில நாட்களில் 350,000 பேர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

A4 பேப்பர் ஒன்றை நான்காக மடித்து பின்னர் அதை குறுக்குவாட்டில் இரண்டாக மடித்து அவர் பீர் பாட்டிலை திறந்துள்ளார். இந்த டிரிக்கை பலர் இணையத்தில் பார்த்து பீர் பாட்டில்களை திறந்து வருவதாகவும், இது ஓப்பனர் இல்லாமல் மிக எளிதாக பீர் பாட்டில்களை திறக்க உதவியாக இருப்பதாகவும் பலர் அந்த வீடியோவின் கமெண்ட் பகுதியில் பதிவு செய்துள்ளனர்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1x0BVwQ” standard=”//www.youtube.com/v/MznXJ6r8yB4?fs=1″ vars=”ytid=MznXJ6r8yB4&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep1375″ /]

இந்த முறையில் பாட்டில்களை ஓப்பன் செய்ய கடினவகை பேப்பர்தான் தேவை என்ற அவசியம் இல்லை என்றும் சாதாரண பேப்பரிலும் இதை செய்யலாம் என்றும் ரைஸ் மோர்கன் தெரிவித்துள்ளார்.

opener 1 opener 2 opener 3  opener

Leave a Reply