shadow

warren-anderson-former-ceo-ofபோபால் விஷவாயு கசிவின் முக்கிய குற்றவாளியான வாரன் ஆண்டர்சன் உயிரிழந்தார். அவருக்கு வயது 92.

கடந்த 1984ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி நள்ளிரவு மத்தியபிரதேச தலைநகர் போபால் நகரில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்தின் ஆலையிலிருந்து  விஷ வாயு வெளியேறியது. இதில் 4 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். அதுமட்டுமின்றி இந்த விஷவாயு கசிவு காரணமாக பல்லாயிரக்கணக்கானோர்களுக்கு பின்விளைவும் ஏற்பட்டது. இந்த சம்பவம் நடந்து மூன்று நாள்களுக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் உரிமையாளர் ஆண்டர்சனை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதன் பின்னர் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும், தேவைப்படும்போது நீதிமன்றத்தில் ஆஜராவதாகவும் கூறி அமெரிக்கா  சென்ற ஆண்டர்சன் பின்னர் இந்தியாவில் நடந்த விசாரணைகளுக்கு வரவேயில்லை. இதையடுத்து விஷவாயு கசிவு தொடர்பான விசாரணைக்கு அவரை அழைத்து வர இந்தியா கடும் முயற்சி செய்தது. ஆனால் ஆண்டர்சனை அனுப்ப கடைசி வரை அமெரிக்க மறுத்ததால் இந்தியாவின் முயற்சி வீணானது.

இந்நிலையில், வாரன் ஆண்டர்சன் உயிரிழந்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதியே வோரா கடற்கரையில் உள்ள தனது இல்லத்தில் ஆண்டர்சன் உயிரிழந்துவிட்டார். எனினும் அவரது குடும்பத்தினர் இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.  ஆனால் பொது ஆவணங்களின் அடிப்படையில் அவரது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply