shadow

சந்தர்ப்ப சூழ்நிலையால் தகுதியில்லாதவர் முதல்வராகிவிட்டார். நிதீஷ்குமாரை தாக்கு லாலு கட்சியினர்

bihar cm Nitish-Kumarகடந்த ஆண்டு நடைபெற்ற பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமார்-லாலுபிரசாத் யாதவ் கட்சிகள் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தன. நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக லாலுபிரசாத் ஆதரவு கொடுத்தார். இந்நிலையில் தற்போது இரு கட்சிகளுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இரண்டாம் நிலை தலைவர்கள் மாறி மாறி அறிக்கையின் மூலம் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் நடந்து வருகின்றன

ராஷ்டீரிய ஜனதா தளம் முன்னாள் எம்.பி.யும், பிரபல தாதாவான சகாபுதீன் நேற்று அளித்த பேட்டியின்போது, ‘நிதிஷ்குமார் தகுதியில்லாத நிலையில், சந்தர்ப்ப சூழ்நிலையால் முதல்-மந்திரியாகிவிட்டார். அவரை நான் தலைவராக கருதவில்லை. லல்லுபிரசாத் தான் எனக்கு ஒரே தலைவர் என்று கூறியுள்ளார்.

மேலும் லல்லுபிரசாத் கட்சியின் துணைத்தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ரகுவன்ஸ் பிரசாத்சிங்கும் நிதிஷ்குமாரை விமர்சித்துள்ளார். சகாபுதீன் சொன்ன கருத்துக்கள் பற்றி அவரிடம் கேட்டபோது, சகாபுதீன் சொன்னதில் எந்த தவறும் இல்லை. அவர் தனது மனதில் உள்ளதை சொல்லி இருக்கிறார். எனக்கும் கூட லல்லுபிரசாத் தான் தலைவர். பல கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் நிதிஷ்குமார் சந்தர்ப்ப சூழ்நிலையில் முதல்-மந்திரியாகி விட்டார். ஆனால் அவர் முதல்-மந்திரியாவதை நான் விரும்பவில்லை. கூட்டணி காரணமாக வேறு வழியில்லாமல் அவரை முதல்-மந்திரியாக ஏற்றுக் கொண்டோம். எங்களை பொறுத்தவரை லல்லுபிரசாத் தான் தலைவர். இதில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார்.

நிதிஷ்குமாரை லல்லு கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருவதால் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் வெடிக்கும் நிலை உருவாகி உள்ளது.

Leave a Reply