shadow

wallmartஉலக அளவில் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்க நிறுவனமான ‘வால்மார்ட்’ இந்தியாவில் ஏற்கனவே 20 விற்பனை நிலையங்களை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது மேலும் இரண்டு விற்பனை நிலையங்களை தொடங்க வால்மார்ட் நிறுவனத்திற்கு இந்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.

எனவே வால்மார்ட் நிறுவனம் ஆந்திராவில் விசாகப்பட்டினத்திலும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானாவிலும் புதிய விற்பனை நிலையத்தை விரைவில் தொடங்க உள்ளது. பஞ்சாபில் ஏற்கனவே ஒரு வால்மார்ட் விற்பனை நிலையம் இயங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

விசாகப்பட்டணம், லூதியானா ஆகிய இரண்டு நகரங்களிலும் புதிய விற்பனை நிலையங்களை தொடங்கும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இந்த வருடத்திற்குள் ஆக்ரா நகரில் மேலும் ஒரு விற்பனை மையத்தை திறக்க அனுமதி கிடைக்கும் என நம்புவதாகவும் வால்மார்ட் நிறுவனத்தின் இந்திய தலைமை செயல் அதிகாரி க்ரிஷ் ஐயர் கூறியுள்ளார். மேலும் அடுத்த 5 வருடத்திற்குள் இந்தியாவில் 50 விற்பனை மையங்களை திறக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply