shadow

Alagiri-295x200_alசில தீய சக்திகள் திமுகவை ஆட்டிப்படைக்கின்றது. அதிலிருந்து திமுக விடுபடவேண்டும் என்றால் இந்த தேர்தலில் திமுக தோற்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி பேசியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை காரைக்குடியில் ஒரு காதணி விழாவில் மு.க.அழகிரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: “தி.மு.க., நம் கட்சி. இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. கருணாநிதிதான் நம் ஒரே தலைவர் தலைவர். தீய சக்தி நம் திமு கழகத்தை ஆட்டி படைக்கிறது. நம்முடைய கட்சியை காப்பாற்ற வேண்டுமானால் என்ன செய்யவேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கட்சியை காப்பாற்ற ஒரே வழி கட்சிக்கு எதிராக ஓட்டு போட வேண்டும். அப்பொழுதுதான் நம் விரோதிகள் திருந்துவார்கள். புரிஞ்சிகிட்டீங்களா?. ஜெயலலிதா செய்வீங்களா, செய்வீங்களா, என்று கேட்கிறார். நான் புரிஞ்சிகிட்டீங்களா? புரிஞ்சிகிட்டீங்களா? என கேட்கிறேன். இவர்களுக்கு, அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் எனக் கூறவில்லை. மனச்சாட்சிப்படி ஓட்டு போடுங்கள்

திமுக கட்சிக்கு ஓட்டு போடாதீர்கள் என்று கூறியதோடு அல்லாமல் அவர் அதிமுகவுக்கு ஓட்டுபோடுங்கள் என மறைமுகமாக பிரச்சாரம் செய்வதால் திமுக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *