shadow

அஜித்தை தவிர வேறு யாராலும் இதை செய்ய முடியாது: விவேக் ஓபராய்

அஜித் நடித்து முடித்துள்ள ‘விவேகம்’ படத்தில் கிட்டத்தட்ட அவருக்கு சமமான ஒரு கேரக்டரில் நடித்துள்ளவர் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய். அஜித்துடன் படம் முழுவதும் டிராவல் செய்யும் கேரக்டரில் நடித்துள்ள விவேக், இந்த படத்தில் தனக்கு கிடைத்த அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதில் பல்கேரியாவில் படப்பிடிப்பு நடந்தபோது நான் உள்பட படக்குழுவினர் அனனவரும் சட்டை மேல் சட்டை போட்டும் குளிரில் நடுங்கி கொண்டிருந்தோம். ஆனால் அஜித், இயக்குனர் ஷாட் ஓகே என்று கூறியதும் கொஞ்சம் கூட யோசிக்காமல் சட்டையை கழட்டி வெற்றுடம்புடன் நடித்தார். இதை பார்த்து நான் அதிசயித்தேன்

இப்படி ஒரு தொழில்பக்தியுடன் கூடிய நடிகரை நான் இதுவரை பார்த்ததே இல்லை. அஜித்தை தவிர வேறு யாராலும் இப்படி ஒரு காட்சியில் நடிக்கவே முடியாது’ என்று அவர் கூறியுள்ளார்

Leave a Reply